புதன், 26 ஜூன், 2019

ஜாதகத்தில் நோய் பற்றி கண்டறியும் சூட்சுமம்


குழந்தைப்பேறும் சூரியன் சனிச் சேர்க்கையும்
சூரியன், சனி சேர்க்கை பார்வை பரிவர்த்தனை என்பது தகப்பன் மகன் சண்டையை மட்டும் குறிப்பதில்லை.
ஜாதகன் செய்கின்றதொழிலில் ஒருமிக்க நேர்மை இருப்பதும் நாணயமான தன்மையும் காட்டுகிறது.

   சூரியன் சனியின் சேர்க்கையோ, பரிவர்த்தனையோ, பார்வை புத்திரபேறு ஏற்பட தாமதமாகிறது. அல்லது புத்திர பேற்றை தடை செய்கிறது. கவனம்
    குறிப்பாக இக்கிரகச் சேர்க்கை கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் இருக்கக் கூடாது.
      சூரியன் சனி சேர்க்கையும் , நோயும்
 சூரியன் _  கண்ணொளி, எலும்பு, இருதயதசைகள், உயிரோட்ட மின் காந்தம்.
 சனி _   கால், மந்தம், மெதுவான இயக்கம், பழுது.
மேற்கண்ட காரத்துவங்களைப் பார்த்தால்
1.      சூரியன் + சனி  = கண்ணொளி, மந்தம், கண் பார்வை குறைவு.
2.      சூரியன் + சனி  = எலும்பு பழுதான நிலை
3.      சூரியன்  + சனி = கால் எலும்பு _ கால் எலும்பு பலவீனம்
4.      சூரியன்+ சனி   = இருதயம் பழுது _ பலவீனமான இதயம்.
போன்ற பல நிலைகள் உள்ளன. 
குறிப்பு
காரணமான வீடுகள் 1,2,6,8,12
திடீர் அடைப்பு             _ செவ்வாய்
கால் வாதம்               _  சனி
முகவாதம்               _   சுக்ரன்
முடக்கு வாதம்           _    சூரியன்
நரம்பு வாதம்              _    புதன்

திடீர், திடீர் என வருதல்    _   சந்திரன்
 தசை வாதம்               _  குரு
     இவற்றில் ராகு நோயை வெளியே தெரியும் படி அமையும். அதனை பெரிதுபடுத்திக் கொண்டே போகும்.
விதி
   இருவேறு பகை கிரகங்கள் நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது அவ்விரு கிரகங்களில் பலம் குறைந்த கிரகத்தின் காரகத்துவ உறுப்பு பாதிப்பு அடைந்து நோயாகிறது.     
  மேலும் நோய அதிகமாவாது அல்லது தீவிரமடைவது என்பது அக்கிரக கூட்டுக்குள் ராகு _ கேதுக்களுக்கும் தொடர்பாகும் போதுதான் தீவிரமடைகிறசூரியன் + சனி ஒரு குறிப்பு
சூரியன்  _ சனி இவ்விருவரும் தங்கள் வீடுகளுக்கு  பாதக ஸ்தானங்களில் உச்சமடைகின்றன.
 சிம்மத்திற்கு ( ஸ்திரத்திற்கு _ 9 ) பாதகம் _ மேஷம்  மேஷத்தில் சூரியன் உச்சம் சூரியன் சனி நீசம்.
கும்பத்திற்கு _ ஸ்திர ராசிக்கு 9 மிடம் பாதகம் _ துலாம் பாதகம் துலாத்தில் சனி உச்சம் சூரியன் நீசம்.
மேற்கண்ட சிம்ம _ கும்ப லக்ன ராசிக்கார்களுக்கு ஒரே நேரத்தில் தாய் தந்தையைப் பிரியதும் இழப்பதும் நடக்கிறது.
சிம்ம லக்கினத்திற்கு 4, 9 க்குடையவர் செவ்வாய் _ செவ்வாய்பாதித்தாலும் கும்ப லக்னத்திற்கு 4, 9 க்குடையவர் சுக்ரன். சுக்ரன் பாதித்தால் பெற்றோர்கள் இழப்பு நடக்கிறது. அல்லது சிம்ம, கும்ப லக்ன ராசிக்காரர்கள் தத்து போய்விடுகிறார்கள்.