கடகத்தில் சூரியனுடன் சேர்க்கை
சூரியன் + சந்திரன்
பண வரவான நபர்
இருதய தொந்தரவு
சூரியன் + செவ்வாய்
ஏதேனும் ஒரு வகையில் தொழில் முறை எதிரிகள்,
ஆபரேசன்கள், வெப்பம் தொடர்பான நோய், இருதய வால்வுகள் தொடர்பான நோய் ஏற்படலாம். பூச நட்சத்திரத்தில்
இந்த இனிப்பு ஏற்படும் போது கூட்டாளிகளை எதிரிகளாகி அவமானப்படுத்தலாம். ஆயில்ய நட்சத்திரத்தில் இக்கிரக சேர்க்கை ஏற்படும் போது நிர்வாகம் நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது.
சூரியன் + புதன்
நல்ல அறிவாளி, மதியுகி, உடனே பிரபலமாகி விடுவார். எதிலும் எளிதில் பெயர் பெற்று
விடுவார்.
சூரியன் + குரு
அரசாங்க வகையில் நன்மை, வாழ்க்கை படிபடியாக நன்கு முன்னேறும். ஒவ்வொரு
12 ஆண்டுகளுக்கும் வாழ்வின் தரம் உயரம், சுய நலத்தோடு
முன்னேறுவார். நேர்மைவாதி, தன்னடக்கம் உடையவர்.
சூரியன் + சுக்ரன்
பெண்களால் லாபம் அடைபவர். இனிமையான பேச்சாளி.
சூரியன் + சனி
சுய நலவாதி, தந்தைக்கு எதிரான செயல்களைச்
செய்பவர்.
தந்தையிடம் விரோதம் பாராட்டக்கூடியவர், வயதான நண்பர்களை உடையவர்.
இருதய நோயாளி அல்லது நுரையீரல் நோய்களை உடையவர். பூசத்தில் இக்கிரகச் சேர்க்கை ஏற்படும் போது தந்தைக்கு எதிராக வழக்கு கொடுத்து
விரையத்தை ஏற்படுத்துவார். ஆயில்யத்தில் ஏற்படும் போது தேவையில்லாத
வைத்திய செலவுகளை ஏற்படுத்துவார். தாயாருக்கு கட்டுபட்ட சோம்பேறி.
சிம்மத்தில்
சூரியனுடன் சேர்க்கை
சூரியன் + சந்திரன்
அரசாங்கத்தின் பயனை அடைவார். நாணயவாதி. தாயாரை நிர்வாகியாகப் பெற்றவர்.
சூரியன் + செவ்வாய்
இயந்திர பணி மற்றும் இயந்திர நிர்வாகி,
நிர்வாகத்திறனும் அடக்குமுறையும் அதிகம் கொண்டும் இரும்பு மனம் பெற்றவர்.
நாணயமான நிர்வாகி. வீட்டில் நான்கு கால் பிராணிகள்
வளர்ப்பவர். மிக்க தைரியசாலி.
சூரியன் + புதன்
மறைமுக அறிவு கொண்டவர். பிரபஞ்ச ரகசியகங்களை அறியப்
போராடும் அறிவாளிகள் தவறான கட்டமைப்பை நிர்வாகிக்க கூடியவர்கள். நண்பர்களே இல்லாதவர்கள். நல்ல கணித அறிவு.
சூரியன் + குரு
பொது சேவையில் பலரையும் சந்தோஷப்படுத்துவர்கள். கோவில் கட்டமைப்புகளை நிர்வாகிப்பவர்கள்.
மத நிர்வாகி, வெளியில் பாசம் காட்டமாட்டார்.
சூரியன் + சுக்ரன்
ரகசியமான காதலர்களைக் கொண்டவர்கள், வெக்கப்பட வேண்டிய செயல்களை
ஆடம்பரமாகச் செய்பவர்கள். ஆடம்பரமான நிர்வாகி.
சூரியன் + சனி
தகப்பனார் அருகில் உள்ள போது சம்பாதிக்காத
நபர். இருவரும் விரோதம் பாராட்டிக் கொள்வார்கள். சனி அஸ்தமனாகிப்
போனால் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காது. எதுவும் துன்பப்பட்ட
நன்மையும் உடனே கிடைக்காது. எதுவும் துன்பப்பட்ட பிறகே கிடைக்கும்.
பூர்வீகச் சொத்து கரையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக