வெள்ளி, 5 ஜூலை, 2019

மேசம் லக்னம் விரிவான பலன்கள்


மேஷம் செவ்வாய் கிரகத்தின் ஆட்சி, மூலத்திரிகோண வீடு ஆகும். செவ்வாய் போர் குணம் கொண்ட கிரகம். குமறிடும் எரிமலை ஆகும். எனவே இவர்கள் போராடப் பிறந்தவர்கள். அறிவு மிகுந்தவர்கள். மனப் போராட்டத்தில் அதிகம் ஈடுபடுவார்கள்.

      இவர்கள் தேசப்பற்றும் இனப்பற்றும் மிக்கவர்கள். சாஸ்த்திரங்களையும்,  தெய்வீக ரகசியங்களையும் அறிந்து உலகிற்கு வழிகாட்டுபவர்களாக இருப்பார்கள். மேஷ ராசியின் சின்னம் ஆடு. ஆடு எப்போதும் கூட்டம் கூட்டமாகவே இருக்கச் செய்யும். ஆடு இரையைத் தேடி செடிகளிலும், குன்று பாறைகளிலும் மேலும் மேலும் தாவும்.
      அதுபோல இவர்கள் வாழ்வில் மேலும் மேலும் உயர வேண்டும் என்று நினைப்பார்கள்

 பிடிவாத குணம் விரும்பதக்கதல்ல என்றாலும் இந்த லக்கினத்திற்கு  அத்தகைய குணமும் கம்பீரமும் அவசியம் தேவை. தர்மத்துவ ராசியாக இருப்பதால் தர்மத்தின் மீது. நீதியின் மீதும் நம்பிக்கையுள்ளவர் களாகவும் இருப்பார்கள்.
    
     லக்கினத்திற்கு தனித்த யோக்காரகன் ஒருவரும் இல்லை. 5 , 9 க்குரிய சூரியனையும் குருமே யோக்காரகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேஷ லக்கினத்திற்கு சூரியனும், குருவும் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். லக்கினாதிபதி செவ்வாய்க்கு சூரியன் நட்பு, ஆதிபத்திய அழைப்பிலும் பஞ்சமாதிபதி, எனவே கெடுதல் செய்வதற்கு வழியில்லை. பாவகிரகங்களுடன் சேர்ந்தோ, 6,8,12 ல் நின்றோ கெட்டுவிடக்கூடாது. அதே போல் குரு பாக்கியாதிபதியாகவும் விரையாதிபதியாகவும் வருகிறார். விரையாதி என்ற முறையில் பாதிப்பு தராதா என்றால் பாக்கியாதிபத்தியம் ஏற்படுவதால் விரையாதிபத்தியம் அடிபட்டு போகிறது. எனவே பாக்கியாதிபதி குரு கெட்டு விடாமல் இருக்க வேண்டும்.


      ஒவ்வொரு லக்கினத்திற்கும் 9, 10 க்குரியவர் சேர்க்கை தர்மகர்மாதிபதி யோகம் தரும். மேஷ லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதி யோகம் இல்லை. இந்த சேர்க்கை பெரும் இராஜ யோகத்தைத் தருவதில்லை. குருவுக்கு விரையபத்தியமும் சனிக்கு பாதகாதி பத்தியமும் இருப்பதால் யோகம் தராது. அதே சமயம் குரு _ சனியின் பரிவர்த்தனை யோகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.  குரு கும்பத்தில் நிற்கும் போது சனி மீனத்தில் நின்றால் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டு நல்லா பலனைத் தரும். ஆனால் குரு மகரத்தில் நின்று தனுசில் சனி நின்றால் பரிவர்த்தனை ஏற்பட்டால்  யோகம் தராது. காரணம் மகரத்தில் குரு நீசமடைகிறார்.


        எந்த ஜாதகத்திலும் செ + சனி சேர்க்கை அவயோகத்தை ஏற்படுத்தும். விருணயோகம் என்று கூறுவர்.   மேஷ  லக்கினத்திற்கு 10 மிட அதிபதி சனியாகவும் 10 மிட உச்சாதிபதி செவ்வாயாகவும் வருவதால் இவர்கள் சேர்க்கை, சப்தமபார்வை, பரிவர்த்தனை போன்றவை மேஷ லக்கினத்தார்க்கு தொழில் வழியில் நல்ல உயர்வு, மேன்மையை ஏற்படுத்திவிடும்.


     சனியை பொறுத்த வரியில் 10, 11 க்குடையவர். 10 மிடம் ஜீவன ஸ்தானம், 11 மிடம் லாப ஸ்தானம். அதே சமயம் சர லக்கினத்திற்கு 11

மிடம் பாதகஸ்தானமும் ஆகும். சனி பாதகாதிபதியும் கூட, மேலும் லக்கின பாவி, லக்கினத்தில் நீசமாககூடிய கிரகம். நன்மை, தீமை இரண்டும் கலந்துதான் இருக்கிறது. ஆக சனி 10 ல் நிற்கும் போது ஜீவனகாரகனாக செயல்படுகிறார்.

      தொழில் உயர்வை தருகிறா. பாதகாதிபத்திய தோஷம் ஏற்படுவதில்லை.  11 ல் நிற்கும் போது தன் இரண்டு ஆதிபத்திய வேலைகளையும் சரியாகவே செய்வார். லாப ஸ்தானமாக இருப்பதால் லாபம் தருவதை தடை செய்ய மாட்டார். அதே சமயம் பாதகாதிபத்திய தோஷம் இருப்பதால் பாதகத்தையும் செய்ய தயங்க மாட்டார்.
    சனி லக்கினத்திற்கு வருவது நல்லதல்ல. லக்கினத்தில் நிற்கும் போது தொழில் ஸ்தானாதிபதி என்ற முறையில் தொழில் ஒரு சத்தற்ற நிலையை ஏற்படுத்தி விடும். பாதகாதிபதி என்ற முறையில் ஜாதகருக்கு மனசங்கடங்களை ஏற்படுத்தி முன்னேற்றத்தை தடை செய்வார். ஆனால் அதே சமயம் லக்கினத்தில் சூரியனோ, வியாழனோ, செவ்வாயோ இருந்து விட்டால் மாறாக நன்மை ஏற்படும்.

    சுக்கிரனை பொறுத்த வரையில் மேஷ லக்கினத்திற்கு 2,7 க்குடையவராக வருகிறார்.

மேஷ லக்கினத்தைப் பொறுத்தவரை 2மிட குடும்பாதிபதி சுக்கிரன்,  7 மிட களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன், களத்திரகாரகன் சுக்கிரன். இப்படி குடும்பம், களத்திரம், காரகன் ஆகிய மூன்றிற்குமே சுக்கிரன் பொறுப்பாகிறான். மேஷ லக்கினத்திலும் சுக்கிரனுடைய நட்சத்திரம் உள்ளது.

    மேஷ லக்கினத்தாரின் திருமண வாழ்க்கைச் சிறப்பு என்பது சுக்கிரனைப் பொறுத்தே அமைகிறது. மேலும் சுக்கிரனுக்கு கேந்திராதிபத்ய தோஷமும் உண்டு. மேஷ லக்கினத்தாருக்கு பெரும்பாலோருக்கு இருதார வாய்ப்பு ஏற்பட்டு எப்படியும் ஏற்பட்டு விடும். பெண், புத்தகம், தொழில், சினிமா, கலை, விளையாட்டு இப்படி ஏதாவது ஒன்றைக் கட்டிக் கொண்டு அதில் அதிக நேரத்தைச் செலவழிப்பார்கள்.


    மேஷ லக்கினத்தார்ருக்கு தனநிலை, பொருளாதார நிலை உயர்வு என்பது மனைவியின் சிரிப்பிலும், சந்தோஷத்திலும் தான் அடங்கியுள்ளது. இதே சுக்கிரனுக்கு மாரக தோஷம் இருப்பதால் புதன் சுக்கிரனுடன் இணையாமல் இருப்பது நல்லது.
      மேஷ லக்கினத்தாருக்கு சுக்கிரன் 12 ல் நிற்பதும் நல்ல யோகம் தரும். எந்த ஒரு காரகன் லக்கினத்திற்கு 12 ல் இருந்தால் அந்த பாவகத்தின் காரகத்துவம் பாக்கியம் பெறும்.  காரகனுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

    சுக்கிரனுடைய காரகத்துவம் வலுக்கும்.  அதாவது நல்ல மனைவி, நல்ல வாகனம், நல்ல நாகரீகம், நல்ல பொருளதாரம், நல்ல வீடு அமையும். அதே  சமயம் கிரக ஸ்தானாதிபதி வலு இழந்தால் யோகம் செயல்படாது.

    தனாதிபதி 12 ல் உச்சம் பெறுகிறார். இப்படி 12 ல் உச்சம் பெறும் சுக்கிரனுடன் வேறு தீய கிரகங்கள் சேர்ந்து யோகத்தை கெடுத்து விடக்கூடாது. பாவகிரக சேர்க்கையோ பார்வையோ இருந்தால் யோகம் சரியாக பலன் தராது.

     மேஷ லக்கினத்தாருக்கு 3, 6 க்குடைய புதன் பாவி. மேலும் லக்கினாதிபதி செவ்வாய்க்கு புதன் பகை கிரகம். வேதகன் கூட ஆக புதன் பலம் பெறக்கூடாது. புதன் கெடுதல் செய்வார் என்பது பொது விதி. நவகிரகங்கள் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளுகின்றன.

    புதனால் மேஷ லக்கினத்தார்ருக்கு இருக்கும் இடம், நிலையைப் பொறுத்து பலனில் நல்ல மாற்றமும் ஏற்படுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு நுணுக்கம் உண்டு. புதன் 3,5, 6 மிடங்களில் நிற்கும் போது நன்மையே தருவார். 3 மிடம் ஆட்சி வீடு, சகாய ஸ்தானம், முயற்சி ஸ்தானம் பலம் பெறுவதால் தன் சுயமுயற்சியால் ஜாதகர் உயர்ந்து விடுகிறார். அடுத்து 3 க்கு 3 ஆக சிம்மத்தில் நிற்கும் போது புதன் கெடவில்லை. நன்மை தருவார்

  புதனின் காரத்துவங்களில் நல்ல யோகப் பலன் ஏற்படும். இப்படி பல நன்மைகளைச் செய்தாலும் இந்த புதன் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்று திசை நடத்தினால் புதன் திசை மாரகம் அல்லது மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தையும் நிச்சயம் தரும்.

        மேஷ லக்கினத்திற்க்கு சந்திரன் 4 க்குடையவன். 4 மிடம் என்பது வீடு, மனை, வித்தை, வாகனம் தாயார், பட்டபடிப்பு இப்படி முக்கியக் குறிக்க கூடியது. சந்திரன் பலமுடன் இருக்க வேண்டியது அவசியம். சந்திரன் நீசம்.

    சந்திரனை ஆட்சி பெற்ற குரு 5 ம் பார்வையாகப் பார்த்தார். இந்த யோகம் அமைந்த இடமோ 4,10 மிடங்கள். அஷ்ட வர்க்கத்திலும் 4 மிடத்தில்  மிக உயர்ந்த அளவு 16 பரல்கள் விழுதுள்ளன. 3 மகன்களுக்கும் சேர்த்து ஒரே வீடாக பெரிய அளவில் பங்களா போன்று கட்டினார்.

     12 ல் குரு ஆட்சி எந்தகாரகம் லக்கினத்திற்கு 12 ல் நிற்கிறானோ அந்தக் காரகத்துவம் வலுக்கும்.

      இந்த குருவுக்கு வேறு தீய கிரகச் சேர்க்கை, பார்வை இல்லை, மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். அவர் இறக்கும் வரை மகன்கள் தந்தை சொல்லை தட்டமாட்டார்கள்.  தந்தை மேல் பாசம் அதிகம்.

      மேஷ லக்கினத்திற்கு செவ்வாயும் சுக்கிரனும் கூடி 2,7 ஐத் தவிர மீதி இடங்களில் இருந்தால் நல்ல பலன்கள் தருவார். 9 ல் நின்று நற்பலன் தந்தார்கள். சனி 8 மிடத்தில் இருப்பது  நன்மைதான். 8 ல் சனி நின்றால் ஆயுள் கெட்டி.

 அம்சத்திலும் யோககாரகன் சூரியன் ஆட்சி பெறுவது சிறப்பான யோகமாகும். இவருக்கு திருமணம் நடந்தது 1960 ல் சூரிய திசையில் .யோக்காரகன் திசை. சூரியன் சந்திரனுக்கு 7 ல் இருக்கிறார்.  7 ம் அதிபதியும் லக்கனாதிபதியும் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில்  இருப்பது மிகச் சிறப்பு.
   
 எந்த ஒரு ஜாதகத்திலும் லக்கினாதிபதியும்  7 ம் அதிபதியும் சேர்ந்து இருந்தால் அந்த தம்பதியர் ஒற்றுமையாக இருப்பார்கள்திருமணப் பொருத்ததில் இது சிறப்பான பொருத்தம்

பொதுவாக ஜாதகம் சூரியனும் சந்திரனும் கேந்திரத்தில் நின்று உயர்வடைந்த ஜாதகம்.
பிறந்த தேதி _ 26.5.1992
பிறந்த நேரம் _ காலை4,45தசா இருப்பு _ குரு திசை 8 வருடம் 11 மா 27 நாள்


செ
/
சூ சு
பு
கே
சந்
  
   ராசி

சனி(
குரு
ராகு
மா





சூரி
சந்
ரா
புத
சுக்

   அம்சம்
குரு
மா
செ
சனி
கே

/











ஜாதகன் 15 வயது ஆகும் போது ஜாதகனுக்கு சரியான மூளை வளர்ச்சி இல்லை. வாய் பேச முடியாது. சோறு ஊட்டி விட வேண்டும். வீட்டுக்கும் வாசலுக்கும் நடக்கிறான். தொலைவான இடங்களுக்கு போக முடியாது. இவன் உடல் நிலையில், மன நிலையில் மாற்றம் வருமா?
          
     ஜாதகத்தில் சந்திரன் பாவகர்த்தாரி தோஷத்தில் உள்ள. அடுத்து  லக்கினாதிபதி 12ல் மறைந்து சனி பார்வை பெறுகிறார். சந்திரனுக்கு குரு பார்வை உண்டு. சற்று காலம் தள்ளி ஆயுள் முடியும். பாவகர்த்தாரி தோஷம் என்பது தோஷங்களிள் மிக கொடுமையானது. ஒரு பாவகத்திற்கோ, கிரகத்திற்கோ இரண்டு பக்கமும் பாவகிரகம் நிற்பது பாவகர்த்தாரி தோஷம்.

    அதன் பாதிப்பு அந்த பாவகத்தையோ கிரகத்தையோ நசித்து விடும். ஒரு பக்கம்  மட்டும் பாவகிரகம் இருந்து இன்னொரு பக்கம் பாவகிரகம் இல்லா விட்டால் அதில் பாதி பாதிப்புதான் இருக்கும். லக்கினம் உயிர். ராசி என்பதி உடல்.

     லக்கினத்திற்கு மட்டும் பாவகர்த்தாரி தோஷம் இருந்தால் வாழ்வு போரட்டமாக இருக்கும். சந்திரனுக்கு மட்டும் பாவகர்த்தாரி தோஷம் இருந்தால் உடல், மனம், புத்தி, தாயார் இந்த நான்குமே பாதிக்கும். இது சனி வீடுகளில் அமையுமானால் பாதிப்பு கடுமையானதாக இருக்கும்.
     ஊமை ஜாதகத்திற்கான ஜோதிட விதிகள்.

  வாக்கு ஸ்தானாதிபதியும், வாக்கு காராதிபதியும் சேர்ந்து லக்கினத்திற்கு ரோக ஸ்தானமாகிய 6 ல் நிற்க ஜாதகன் ஊமையாய் பிறப்பான்.

     3 ம் அதிபதியும் ஜெனன ராசிக்குடையோனும் சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் .
     முதல் விதிபடி 2 மாதி + புதன் சேர்ந்து 1,3,6,8 ல் நின்றாலும் ஊமையாவான். அவர்களுடன் எந்த கிரகம் சேர்ந்தோ, அந்த காரகரு ஊமையாவார். அவருடன் சேரும் கிரகம் உச்சம் பெற்றால் வாக்கு ஊனமின்றி சுத்தமாகப் பேசுவான்.

   2 ல் ராகு, கேது நின்றால் விஷவாக்கு உள்ளவன்.
    

    சுக்கிரன் ஜெனன ராசி அதிபதியோடு சேர்ந்து 6, 8,12 ல் நின்றால் ஊமையாவான்.

     மேஷ லக்கினத்தைப் பொறுத்த வரையில் செவ்வாய், சூரியன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் பாதிக்கப்படாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.  சுக்கிரன் + புதன் சேர்க்கை பெறாமல் இருப்பது நல்லது. லக்கினாதிபதி 6 மிடத்திலோ,  12 மிடத்திலோ மறையாமல் இருக்க வேண்டும். 

ஆடி அமாவாசை அன்னதானம் 2019

ஆடி அமாவாசை அன்னதானம் 2019
கடந்த ஐந்து வருடங்களாக ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்களுக்கு ஆடி அமாவாசை  தினத்தில் அன்னதானம் ,ஆடை தானம் செய்து வருகிறோம் ஆறாம் ஆண்டாக இந்த ஆண்டும் வருகிற ஆடி அமாவாசை 31.7.2019 அன்று நண்பர்களின் பங்களிப்புடன் உதவிகள் செய்ய இருக்கிறோம் பங்களிப்பு செய்ய விரும்புவோர் 9443499003 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளவும் நன்றி
-ஆர்.கே.சதீஷ்குமார் ஜோதிடர் ஈரோடு