2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள்
நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி வருடம் ஐப்பசி 18 ஆம் நாள் 4.11.2019 நாள் மதியம் 1.09 க்கு விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்
கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு
நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி வருடம் ஐப்பசி 18 ஆம் நாள் 4.11.2019 நாள் மதியம் 1.09 க்கு விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்
வாக்கிய பஞ்சாங்கபடி (இதுதான் கோயில்களில் கடைபிடிக்கப்படுகிறது ) விகாரி வருடம் 29.10.2019 ஐப்பசி 11ஆம் நாள் விடியற்காலை 3.55க்கு விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்
கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு
இந்த வருட குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக இந்த பட்டியலில் கொடுத்திருக்கிறேன்.
ராசிகள்
|
குருவின் இடம்
|
குருவின் பார்வை பதியும் இடம்
|
பலன்கள்
|
மேஷம்
|
9
|
1-3-5
|
வெளிநாடுபயணம், புத்திரபாக்கியம், ஆலய தரிசனம்
|
ரிஷபம்
|
8
|
2-4-12
|
கல்வியின் மேன்மை, பதவி உயர்வு
|
மிதுனம்
|
7
|
1-3-11
|
திருமணம், தனலாபம், உத்தியோக உயர்வு
|
கடகம்
|
6
|
2-10-12
|
சம்பள உயர்வு, இடமாற்றம், தொழில் விருத்தி
|
சிம்மம்
|
5
|
1-9-11
|
சொத்துசேர்க்கை,திருமணம்,
வாகன சுகம்.
|
கன்னி
|
4
|
8-10-12
|
இடமாற்றம், பயணச் செலவு, ஆயுள் விருத்தி
|
துலாம்
|
3
|
7-9-11
|
திருமணம், புனிதயாத்திரை,தன லாபம்
|
விருச்சிகம்
|
2
|
6-8-10
|
பூரண சுகம், பதவி உயர்வு, அந்தஸ்து
|
தனுசு
|
1
|
5-7-9
|
திருமணம், புத்திரபாக்கியம், சுபம்,
|
மகரம்
|
12
|
4-6-8
|
வாகனசுகம், உயர்கல்வி, பூரண சுகம்.
|
கும்பம்
|
11
|
3-5-7
|
தனலாபம், திருமணம், அரசு மரியாதை
|
மீனம்
|
10
|
2-4-6
|
தனவரவு, வாகன சுகம்,கிரகபிரவேசம்
|
குரு பகவான்
கிரகம்- ஆண் கிரகம்
குணம் – சாத்வீகம்
திசை – வடக்கு
வாகனம் _ யானை
சுவை _ இனிப்பு
நிறம் _ மஞ்சள்
மலர் _ முல்லை
ரத்னம் _ புஷ்பரகம்
கிழமை – வியாழன்
குரு தனுசு ராசிக்கு இந்த வருடம் மாறுகிறார் இது குருவின் சொந்த ஆட்சி வீடு ஆண் ராசி வீடு என்பதால் நீதியும் தர்மமும் காப்பாற்றப்படும்... குருவின் காரகத்துவங்கள் சிறப்படையும்..
கல்வி,கோயில்,வங்கி,நீதி சம்பந்தமான துறைகளில் ஒழுங்கு உண்டாகும்..கல்வி சம்பந்தமான புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்...நீதி துறையில் நிறைய நல்ல மாற்றங்கள் சட்டங்களாகி அமுலுக்கு வரும்...
குருவக்ரம்ஆகக்கூடியகாலங்களில் 27.3.2020 முதல் 8.7.2020 வரை 102 நாட்கள் குரு, மகர ராசியில் பயணிக்கும் போது மாறுதலான பலன்கள் அமையும்.அச்சமயம் பொருளாதார விழ்ச்சி ,வங்கிகள் பிரச்சினை ,பங்கு வர்த்தக சரிவு உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறது காரணம் கடந்த 12 வருடங்களுக்கு இது போல குரு மகர ராசியில் நீசமாகும் போது இந்த சூழல் உண்டானது....எனவே இந்த காலகட்டமும் அடுத்து வரக்கூடிய குரு பெயர்ச்சி 2020 இறுதியிலும் இது போன்ற குரு நீசமாகி மகரத்தில் சஞ்சரிக்கும் போது எல்லாம் பொருளாதார தேக்க நிலை உண்டாகிறது...

ராசிகளில் முதல் ராசியில் பிறந்த நீங்கள் எதிலும் முதன்மையானவராக இருக்கவே விரும்புவீர்கள் வேகம்தான் உங்கள் பலம்..கடுமையான உழைப்பும்,சீற்றமும்,பிறருக்கு உதவுவதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள் நீங்கள்..
கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசிக்கு 8 ம் இடத்தில் அமர்ந்து, மிகுந்த சோதனைகளைக் கொடுத்தார். தொழில் முடக்கம், கடன் பிரச்சினைகள், அனைவரிடமும் கெட்டபெயர் வாங்குதல், பொருள் விரையம், திருடு போதல், அலட்சியம், சோம்பல், மந்த புத்தி, உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகள், பிடிக்காத ஊருக்கு இடமாற்றம், மேலாதிகாரிகளின் தொந்தரவு, நகைகளை அடகு வைத்தல், படிப்பில் ஆர்வமின்மை, தோல்வி பயம், மேலும் வாகன விபத்து, போன்ற கெட்ட பலன்களை சிலருக்கு அஷ்டமக் குரு வழங்கினார்.
இந்த வருடம் குருபகவான் உங்கள் ராசிக்கு 9 ம் இடத்திற்கு வருகிறார். இது பாக்ய குருவாகும்...ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு ...வறுமையை ஓட்டியவனுக்கு ஒன்பதுல குரு என்று வருகிறது...பாக்யாதிபதி வலுத்தா அதிர்ஷ்டத்துக்கு குறைவில்லை...லட்சுமி வாசல் கதவை தட்டும் நேரம் வந்து விட்டது...
தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு வருகிறார். தொழில் பெருகும், லாபம் அதிகரிக்கும். உத்யோக வாய்ப்புகள் அமையும், குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை சிலருக்கு அமையும். ஆனால் அது நன்மைகே.
தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு வருகிறார். தொழில் பெருகும், லாபம் அதிகரிக்கும். உத்யோக வாய்ப்புகள் அமையும், குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை சிலருக்கு அமையும். ஆனால் அது நன்மைகே.
குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்.கணவன், மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். கடன் தீரும், பழைய பாக்கிகள் வசூலாகும். நோய் நொடி நீங்கும், ஆடை, ஆபரணமும் சேரும். சிலருக்கு புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். நேர்த்திகடன், தீர்த்த யாத்திரை போன்றவை அமையும்.
பெரிய மனிதர்களின் ஆதரவும், மகான்களின் தரிசனமும் கிடைக்கும். திருமணம் கைக்கூடும். புத்திர பாக்கியம் கிட்டும். வழக்கு பிரச்சினைகளில் வெற்றி ஆகும். சிலர் வெளி நாடு செல்வீர்கள்.
27.3.2020 முதல் 8.7.2020 வரை 102 நாட்கள் குரு, மகர ராசியில் பயணிக்கும் போது மாறுதலான பலன்கள் அமையும்.இது கொஞ்சம் சுமாரான காலமாகவே இருக்கும்.
குரு பார்வை லக்னத்தை பார்வை செய்வதால் தன்னம்பிக்கை பிறக்கும் உங்களின் உண்மையான அன்பும் குணமும் குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் இனி புரிய வரும்..ஆயுள் பலம் உண்டாகும் சகோதர சகோதரி நட்பு பலமடையும் அவர்களால் ஆதாயம் உண்டாகும் பூர்வ புண்ணியத்தை பார்வை செய்வதால் பூர்விக வழி ஆதாயம் கிடைக்கும் முன்னோர்கள் குலதெய்வம் ஆசி கிடைக்கும்
பரிகாரம் :
ஒரு முறை குரு ஸ்தலமான திருச்செந்தூர் சென்று வந்தால், நன்மைகள் ஏற்படும். வியாழன் தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்லது.செவ்வாய் தோறும் முருகனை வழிபடலாம் இதனால் திசாபுத்தி மோசமாக இருப்பவருக்கு நன்மைகள் நடக்கும்

ரிசபத்தானோடு தோரேல் ..ரிசபம் ராசிக்காரர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள் என ஜோதிட பழமொழியே இருக்கிறது...பக்குவமான ஆட்களிடம் மட்டுமே பழக விரும்பும் பக்குவமான ஆட்கள்தான் ரிசபம் ராசியினர்.
கடந்த குருப்பெயர்ச்சியினால் சில இடைஞ்சல்கள். எதிரி பயம், சிறு கடன் போன்றவற்றை சந்தித்தாலும், அவற்றில் வெற்றிதான். வியாபார முன்னேற்றம், எதிர்பாராத பண உதவி, உத்யோகத்தில், சம்பள உயர்வு, நன்மைகள் இருந்தன, திருமணம், சிலருக்கு புது வீடு, மனைவாங்குதல், புதிய கட்டிடம் கட்டிக் குடியேறுதல், புது வாகன லாபம், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டானது. பூர்வீக சொத்தில் வில்லங்கம் நீங்கியது. சகோதரர்களுக்குள் ஒற்றுமையும் ஏற்பட்டது.
சிலருக்கு ஜாதகத்தில் திசா புத்தி சரியில்லாமல் இருந்தாலோ அஷ்டம சனி நடந்ததாலோ அவமானம் ,மருத்துவ செலவு ,குடும்பத்தில் பல பிரச்சினைகள் உண்டாகி இருக்கும்...கடன் சுமை அதிகமாகி இருக்கும் ..வரும் பிப்ரவரியில் அஷ்டம சனி முடிய இருப்பதால் குரு அஷ்டமத்துக்கு போவதை பற்றி கவலை இன்றி சனி விலகுவதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம்..ரிசபத்துக்கு குரு கெடுவது ஓரளவு நன்மையே.குரு பார்வை நன்றாக இருப்பதால் வருமானம் குறையாது.குடும்பத்தினரிடம் மட்டும் வீன் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நன்மை தரும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 8 ம் இடத்தில் வருகிறார். குரு தன் சொந்த வீட்டில் அமர்வதால் தீர்க்க ஆயுளும், நல்ல உடல் நலமும் ஏற்படும். மிதுன ராசியை தனது 7 வது பார்வையால் குரு பகவான் பார்வையிடுவதாலும் சனி மற்றும் கேதுவுடன் சேர்ந்தாலும் அஷ்டமச் சனியினால் உங்களுக்கு ஏற்ப்பட்டு வந்த பாதிப்புகளும் குறையும். ராகு – கேதுவால் ஏற்படும் பாதிப்புகளும், நீங்கி நல்ல கல்வி, மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெருகும். வாக்கு ஸ்தானத்தை பார்வையிடுவதால் வாக்கு, நாணயம் பாதிக்காது. எட்டாமிடத்து குருவால் எந்த தொல்லையும் இருக்காது.
27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு அதிசாரம் பெற்று மகர ராசியில் நுழையும் போது, அந்த 102 நாட்கள் மிகவும் அற்புதமான காலமாக இருக்கும். அதில் ஒன்பதாம் இடத்து குருவாக மாறி நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பார் புகழ் செல்வாக்கை தருவார்
பரிகாரம் :
வாரந்தோறும் வியாழக்கிழமை அருகிலுள்ள சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி, கொண்டைக் கடலை படைத்து, மஞ்சள் அல்லது பொன்னிற வஸ்திரம் சாற்றி, முல்லை மலரால் வழிபட உத்தமம்.சனிக்கிழமை பெருமாள் கோயில் தரிசனம் செய்வது மிகுந்த நன்மை தரும்...

மிதுனம் ஒரு இரட்டை ராசி..எதிலும் இரட்டை பலன்களை அடைய கூடியவர் நீங்கள்தான்...அறிவுகிரகமான புதனை ராசி அதிபதியாக கொண்டவர் நீங்கள் என்பதால் உங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் பெற்றவர்கள் ஏராளம்..அந்த அறிவு அளவுக்கதிகமாக போனால் யாரையும் எதையும், நம்பாமல் மனதை போட்டுக்குழப்பி கொள்வீர்கள் .
....
கடந்த வரும் ஆறாம் இடத்து ருணரோக குருவால் வீண் பிரச்சினைகள், சிறு விபத்து, தேவையில்லாத ஆடம்பரச் செலவு, பணம், பொருள், திருடு போகுதல், வருமானப் பற்றாக்குறை, குடும்பத்தில் குழப்பம் போன்ற பலன்களை அடைந்தீர்கள்.
இந்த வருடம் குரு 7 ம் வீட்டிற்கு செல்கிறார். சனி, கேதுவுடன் சேர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம், குருவுக்கு ஏற்படாது. குரு பகவான் 7 ம் வீட்டில் அமர்வது சிறப்பானது. சனி மற்றும் கேதுவுடன் அமர்ந்தால், சனி, கேது மற்றும் ராகுவால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். திருமண குருபலமாக வந்திருக்கிறது திருமணம் ஆகாதவர்க்கு திருமணம் கூடி வரும்.மற்றவருக்கு பண பலம் உண்டாக்கும் செல்வாக்கு அதிகரிக்கும்
தொழிலில் உள்ள பிரச்சினைகள் நீங்கி, தொழில் புது பொழிவுடன்துவங்கும். புதிய தொழில் செய்யும் வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பாராத பண உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியம் நடக்கும். திருமண வாய்ப்பு கைக்கூடி வரும். கணவன், மனைவி உறவு ஒற்றுமையாக இருக்கும். புது வீடு கட்டுதல், மனை வாங்குதல், புது வாகன யோகம் தெய்வ வழிபாடு, நல்ல முறையில் நடைபெறும்.
நோய் நொடிகள் குணமாகும். பூர்விக சொத்தில் வில்லங்கம் நீங்கும். 27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு, மகர ராசியில் பயணிக்கும் போது 102 நாட்கள் கவனம் தேவை.அந்த சமயம் அஷ்டம சனியும் சேர்ந்து இருக்கும் குருவும் சாதகமாக இருக்க மாட்டார் அச்சமயம் முத்லீடுகள் கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றிலும் அதிக எச்சரிக்கை அவசியம்.
பரிகாரம் :
வாரந்தோறும் வியாழக்கிழமை அருகிலுள்ள சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி, முல்லை மலரால் வழிபட உத்தமம். திருச்செந்தூர் சென்று வருவதும் சிறப்பு.சனிக்கிழமை பெருமாள் கோயிலில் தீபம் ஏற்றி வழிபடவும்....

உலகில் தாய் அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை..அத்தயக தாய் அன்புக்கு அதிபதி சந்திரன்..இவர்தான் உலகில் இருக்கும் தாய்க்கெல்லாம் அதிபதி.அன்பு என்றால் கடக ராசி...தாய் மீதும் குழந்தைகள் மீதும் அதிக அன்பும் பாசமும் கொண்டவர் நீங்கள்..அவர்களுக்காக எந்த தியாகமும் செய்வீர்கள்...மனிதாபிமானம்,இரக்க சுபாவம் அதிகம் இருப்பதால் உங்களை பயன்படுத்தி காரியம் சாதித்து கொண்டவர்கள் பலர் உண்டு.
இதுவரை பஞ்சம குருவினால் மிகுந்த நன்மையான பலன்கள் அடைந்து வந்தீர்கள்இப்போது மாறும் குருவால் குருபலம் முடிந்து ருண ரோக குரு தொடங்குகிறது... ஆறாமிடத்து குரு நன்மை செய்பவர் அல்ல. குரு தன் சொந்த வீட்டில் அமர்வதால் பயம் தேவையில்லை. குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறில் அமர்ந்து, தன்னுடைய ஏழாம் பார்வையால் , மிதுனராசியிலுள்ள ராகுவை பார்ப்பதால், உங்களுக்கு ராகுவால் ஏற்படப் போகும் எந்த விதமான பாதிப்பும் அதிகம் இராமல் குருபகவான் நன்மையைச் செய்யப் போகின்றார்.
ருண ரோக குரு என்பது கடன் மற்றும் நோயை குறிக்கும்..ஆறில் குரு ஆறாத புண் மற்றும் ஆறாத மன வலியை அதாவது அவமானத்தை குறிக்கும் அடுத்தவருக்கு நன்மை செய்யலாம் என்று போய் வலிய வம்பை விலைக்கு வாங்காமல் இருப்பது அவசியம்.
ஆறாமிடத்து குரு அரசாங்க சிக்கல்களை உண்டாக்கும் என்பதால் அரசு வேலையில் இருப்போர் ,வரி கட்டுவோர் நேர்மையாக நடந்து கொள்வது அவசியம்.
இடம் நிலம் வாங்க சுப செலவுகள் செய்தால் அதன் மூலம் கடன் வாங்கினால் நல்லது அது சுப விரயமாக இருக்கும் இல்லையேல் கெட்ட செலவுகள் (உதாரணம் மருத்துவ செலவினங்கள்) உண்டாக்கும்.
பழைய தொழில் நல்ல முறையில் நடக்கும். சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புது வீடு, மனை வாகன லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். தெய்வ வழிபாடு சிறப்பாக இருக்கும்.
பழைய கடனை அடைக்க புது கடன் வாங்க வேண்டி வரும். மூத்த சகோதரருடன் கருத்து வேறுபாடு இருக்கும். அரசாங்கத் தொந்தரவுகள், வீண் பிரச்சினைகள், வாகனத்தில் சிறு விபத்து போன்றவையும், பணம் , பொருள் திருடு போக வாய்ப்புள்ளது. கடன் முழுமையாக தீரா விட்டாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
இந்த குருப் பெயர்ச்சியானது யோகத்தை தரா விட்டாலும் கஷ்டத்தை தராது. பார்வை பலம் நன்றாக இருப்பதாலும் கடக ராசியினர் மன பலம் இயற்கையாக அதிகம் கொண்டவர் என்பதாலும் சோதனைகளை சாதனைகளாக்கி கொள்வீர்கள்...
27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு பகவான் அதிசாரம் பெற்று மகர் ராசியில் சஞ்சரிக்கும் 102 நாட்கள் மிகுந்த யோகமும் , நல்ல பலன் தரும், சுப காரியங்களும் நடைபெறும், அக்காலம் குருபலம் போல செயல்படுவதால் சுபகாரியங்கள் நடைபெறும் கடன்கள் அடைபடும்.வருமானம் பெருகும்...சனி சாதகமாக இருப்பதால் கவலை வேண்டியதில்லை
பரிகாரம்:
சிவன் கோவிலுக்கு சென்று குரு பகவானை வழிபடுங்கள். கொண்டைக் கடலை படைத்து. நெய் தீபமேற்றி, முல்லை மலரால் குருவை வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுங்கள்

உலகிற்கெல்லாம் ஒளி வழங்கும் சூரியனின் சொந்த ராசியில் பிறந்த சிம்ம ராசி நண்பர்களே...உங்கள் பலமே உங்கள் உழைப்புதான்.நேர்மை,நியாயம்,தர்மபடி வாழவே விரும்புவீர்கள் எதையும் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் நீங்கள் ...தொழிலை தெய்வமாக மதிப்பீர்கள்..மனதில் அன்பு நிறைய இருந்தாலும் அதை சரியானபடி வெளிக்காட்ட மாட்டீர்கள்..இதனால் முன்கோபகாரர் போலவும்..கறாரானவர் போலவும் பிறருக்கு தோற்றமளிப்பீர்கள் ...
உங்கள் ராசிக்கு 4 இடத்தில் அமர்ந்து இது வரை சுக குருவாக இருந்த குரு பகவான், உங்களுக்கு வீண் அலைச்சல், வீண் பழி, தாய்க்கு பீடை, தன்னுடைய உடல், வீடு, நிலம், போன்றவற்றால் பிரச்சினைகள், அடகு வைத்தல், அல்லது விற்பனை செய்தல், சிறு வாகன விபத்து, அல்லது வாகனத்தில் செலவுகள். கால் நடைகள் சேதம், செய்வினை, போன்றவை ஏற்படுத்தி கொடுத்தார் சிலர் இடம் நிலம் வாகனம் வாங்கியிருப்பர்..சிலருக்கு கடன் மூலம் வீடு வாங்கி இருப்பார்கள்
இப்போது உங்கள் ராசிக்கு குரு பலத்துடன் குரு சொந்த வீட்டிற்குச் செல்கிறார். 5 ம் இடம். பூர்வ புண்ணிய குருவாக வருகிறார் ..இது ஜெய குருவாகும்..நினைத்தவை நீண்ட கால கனவுகள் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. பூர்வீக வழி ஆதாயம் குலதெய்வ அருள் ,குழந்தைகலால் பெருமை,தாயாரால் வருமானம் மற்றும் ஆதாயம்,சொத்துக்களால் லாபம் உண்டாகும் .தங்கம் வாங்குவீர்கள் இழந்த சொத்துக்களை மீட்கலாம்..சிலர் புதிய தொழில் அமைப்பார்கள். பதவி உயர்வு, திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டு.
உடல் உபாதைகள் நீங்கும். பூர்வீகச் சொத்துக்களில் பிரச்சினைகள் நீங்கும். தெய்வ வழிபாடு செய்வீர்கள்.
27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு மகர ராசியில் 6ம் இடத்துக்குச் செல்வது சுமாரான காலமே.சனி பெயர்ச்சி பாதகமாக இல்லாமல் இருப்பதால் பெரிய கெடுதல் இருக்காது...
ராசியை குரு பார்வை செய்வதால் தன்னம்பிக்கை பெருகும் உங்கள் அன்பும் பாசமும் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் குடும்பத்தாருக்கும் புரியும்.புகழ் செல்வாக்கு அதிகரிக்கும் சேமிப்பு முன்பை விட அதிகரிக்கும் ஐந்தாம் இட குரு பலருக்கு நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி கொடுத்திருக்கிறது இது 12 வருடத்துக்கு ஒருமுறை வரும் அரிய ஜெய குரு என்பதால் இன்னும் 12 வருடங்களுக்கு நினைவில் வைத்துக்கொள்ளும்படி உறவுகள் வியக்கும்படி வாழ்வில் முன்னேறும் காலகட்டம்.அவரவர் ஜாதகம் கர்மா திசாபுத்தி அடிப்படையில் இது அமையும்.சிலருக்கு ஆயிரங்களில் வருமானம் பெருகும் சிலருக்கு லட்சங்களில் சேமிப்பு உயரும்.புதிய ஆடம்பர பொருட்கள் ,குடும்ப சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்

வியாழன் தோறும் சிவன் கோவிலில் உள்ள தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சிம்ம ராசியினர் தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வருவது நல்லது...

கன்னி மகனை கைவிடேல் என ஒரு பழமொழி இருக்கு..இதுக்கு என்ன அர்த்தம்..கன்னி ராசிக்காரங்க நட்பு மற்ற எல்லா ராசிக்காரங்க நட்பை விட உயர்வானது எனமுன்னோர்கள் சொல்லி வெச்சிருக்காங்க...அத்தயக நல்ல மனசுக்கு சொந்த காரங்க கன்னி ராசியினர்..புதனை ராசி அதிபதியாக கொண்டிருப்பதால் நல்ல அறிவாற்றல் நிரம்பியவர்கள் ..புதனை உச்ச வீடாக கொண்டவர்கள் சுக்கிரன் இந்த ராசியில் நீசம் அடைவதால் சுயநலம் இல்லாதவர்கள் ...
கடந்த ஒரு வருடம் குரு பகவான் ராசிக்கு 3 ல் மறைந்ததால் பொருளாதார ரீதியாக ஏற்றத் தாழ்வான சூழ்நிலை ஏற்பட்டது. உடல் உபாதை கூடியது. தொழிலில் போட்டியும், எதிரிகள் கை ஓங்கவும் செய்தது.
கடந்த ஒரு வருடம் குரு பகவான் ராசிக்கு 3 ல் மறைந்ததால் பொருளாதார ரீதியாக ஏற்றத் தாழ்வான சூழ்நிலை ஏற்பட்டது. உடல் உபாதை கூடியது. தொழிலில் போட்டியும், எதிரிகள் கை ஓங்கவும் செய்தது.
மன அமைதி குறைந்தது. தொழில் நல்ல முறையில் நடைபெற்று லாபம் கிடைத்தாலும், எதிரிகளின் சூழ்ச்சியினால் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடனும் ஏற்பட்டது. சனி பகவான் நல்ல இடத்தில் அமர்ந்ததால், எதையும் சமாளித்து வெற்றி பெற்றீர்கள். வருமானம் உயர்ந்தது. பேரும் புகழும் கிடைத்தது.
குரு நான்காம் வீட்டில் அமர்வது சிறப்பல்ல. இருந்தாலும் தன் சொந்த வீட்டிற்கு வருகிறார். போன குரு பெயர்ச்சிக்கு இந்த குரு பெயர்ச்சி எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
குரு பகவான் நான்காமிடத்தில் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றாலும். சனி கேதுவுடன் சேர்ந்ததால் ஆட்சி வீடான தனுசில் அமர்வதால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படாது. சொந்த வீடு, மனை, வாகனம், கல்வி போன்றவை வாய்க்கும். தொழில்ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், தொழில் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
தாயாரை நன்கு கவனித்து க்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உங்கள் வீடு அல்லது சொத்து சம்பந்தமாக புதிய எதிரிகள் உருவாகுவார்கள் அல்லது அரசாங்க சிக்கல்கள் உண்டாகலாம் பூர்வீக சொத்து சம்பந்தமாக பங்காளிகள் பிரச்சினை செய்யும் காலமாக இருக்கிறது.
பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குதல், அவசரத் தேவைக்கு அடகு வைத்தல், கடன் வாங்கி திருமணம், போன்ற சுப காரியங்கள் செய்தல் போன்ற பலன்களை அடைய வேண்டி வரும். சுப செலவுகள் செய்து அதன் மூலம் கடன் வாங்கினால் நல்லதுதான்.
27.3.2020 முதல் 8.7. 2020 வரை குரு பகவான் மகர ராசியில் பயணிக்கும் 102 நாட்கள் உங்களுக்கு பல விதமான நன்மை தரும். சுப காரியமும் முன்னேற்றமும் ஏற்படும்.இந்த சமயம் உங்களுக்கு குருபலமாக மாரிவிடுவதால் அதிர்ஷ்டமான காலம் என்றே இதனை சொல்லலாம் ..
ராசிக்கு 8ஆம் இடத்தை குரு பார்வை செய்வதால் கணன் அல்லது மனைவி வழி வருமானம் பெருகும்...இதுவரை இருந்து வந்த அவமானம் கெட்ட பெயர் விலகும்.உடலை சிரமப்படுத்தி வந்த நோய்கள் தாக்கம் குறையும்.பத்தாமிடமாகிய தொழில் ஸ்தனத்தை குரு பார்வை செய்வதால் உத்யோக உயர்வு நீண்ட நாளாக எதிர்பார்த்தது கிடைக்கும்.தந்தை வழி ஆதாயம் கிடைக்கும் சிலருக்கு மாமியார் வீடு மூலமாகவும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சகோதர சகோதரி வழி மனக்கசப்புகள் விலகி ஒற்றுமை உண்டாகும்.

வாராவாரம் வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தி சந்நிதியில், நெய் தீபமேற்றி, கொண்டைக் கடலை படைத்து, முல்லை மலரால் வழிபட உத்தமம்.சனிக்கிழமை பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக