சனி, 27 ஜூன், 2020

திருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?

நான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? இதற்கு பரிகாரம் ஏதேனும் உண்டா?
அத்தை மகள் மாமன் மகளை திருமணம் செய்தாலும் சரி காதலித்தாலும் சரி.திருமணத்துக்கு நாள் குறிக்க ஜோசியரிடம் போகலாம் ஆனால் பொருத்தம் பார்க்க போக தேவையில்லை.காதலிப்பவர்களை பிரிக்கனுமா…அப்போ ஜோசியரிடம் போகலாம் ஏனெனில் இன்றைய புத்திசாலி பெற்றோர் காதலை பிரிக்க இந்த வழியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த பொண்ணை கட்டுனா மாமியார் செத்துடும்.மாமனார் செத்துடுவார்.கணவனுக்கு அற்பாயுள் என சொல்லிவிட்டால் முடிந்தது காதல்.யார்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.அந்த பொன்ணை கட்டுனா நான் செத்துருவேன்னு ஜோசியர் சொல்கிறார் தம்பி நான் செத்தா பரவாயில்லையா என அம்மா கேட்டால் பையன் என்ன சொல்வான்…
மாங்கல்ய பலம் இல்லை என சொல்லிவிட்டால் என்ன செய்ய முடியும்.ஜோசியம் ஒன்றுதான் ஆனா ஜோதிடர்கள் பல வகை.நான் பொருத்தம் இருக்குன்னு கணிச்சு கொடுத்தா இன்னொருத்தர் இல்லைன்னு சொல்றார் விதி ஒன்றுதான் ஆனா வாக்குவாதம்.
காதலிச்சா ஆராய்ச்சி செய்யாதீங்க..கல்யாண,ம் செய்து சந்தோசமாக இருங்க எல்லோரையும் திருப்தி செய்து கல்யாணம் செய்வது கடினம்.
ஏனெனில் காதலிக்குரவங்க செவ்வாய் தோசம் நாகதோசம் பார்த்து காதலிக்குறதில்ல.யோகமான திசை நடக்குதா அற்பாயுளான்னு பார்த்து ரொமான்ஸ் செய்வதில்லை.இவனை கட்டுனா நல்லாருப்போம்னு உறுதியா மனசுக்கு திருப்தி ஆகிடுச்சு.ஜோசியர் முடியாதுன்னு சொன்னாலும் கல்யாணம் செய்யத்தான் போறீங்க..அப்புறம் எதுக்கு ஜாதக பொருத்தம் பார்த்து குழப்பிக்கிறீங்க.பொருத்தம் பார்க்கும் போது நீங்க நூறு ஜாதகம் கொடுத்தாலே நாலு ஜாதகம் தான் பொருத்தம் வரும்.இதுல ஒரு ஜாதகம் கொடுத்து பொருத்தம் பார்க்க சொன்னா பொருத்தம் வருவது நூத்துக்கு 90 சதவீதம் கடினம்.
எட்டாம் இடம் என்பது கணவனுக்கு வருமான ஸ்தானம். பெண்ணுக்கு கர்ப்பபை ஸ்தானம் மாமியார்க்கு லாப ஸ்தானம்.மாமனாருக்கு தொழில் ஸ்தானம் என அதில் நிறைய சூட்சுமங்கள் இருக்கு…அதனால் பெண்ணுக்கு 8 வலு இல்லைன்னா அந்த குடும்பத்தில் பலருக்கும் பாதிக்கும்.இது அந்த காலத்தில் கூட்டு குடும்பத்தில் இருக்கும் போது நுணுக்கமா பார்ப்ப்பாங்க இது தனிக்குடித்தன காலம்.அதனால் அதை பற்றி குழப்பிக்க வேண்டாம்.
சரி.8ல் பாவ கிரகங்கள் இருந்தாலும் எட்டம் அதிபதி கேந்திரம் திரிகோணம் ஏறியிருந்தால் பாதிக்காது 6,8,12ல் இல்லாமல் இருந்தால் பாதிக்காது.
எட்டாம் இடத்தை குரு,சுக்கிரன்,புதன்,வளர்பிறை சந்திரன் பார்த்தால் பாதிக்காது.
அப்படியே எட்டில் பாவர் இருந்து எட்டாம் அதிபதி கெட்டாலும் எட்டுக்குடையன் திசை வ்ந்தால்தான் மொத்தமாக அழிக்கும்.
இது பெண் ஜாதகத்துக்கு ..ஆண் ஜாதகத்துக்கு பார்க்கும்போது எட்டாம் இடம் என்பது ஆணின் ஆயுள் ஸ்தானத்தையும் மனைவியின் வருமானத்தையும் குறிக்கும்.எட்டாம் இடம் கெட்டாலும் லக்னம் நன்றாக இருந்தாலும் எட்டுக்குடையவன் திசை வராமல் இருந்தாலும் ஆயுளை கெடுக்காது.மாரகாதிபதி பாதகாதிபதி திசை வந்தாலும் அவர்கள் வலுவை பொறுத்துதான் முடிவு செய்யனும்.
மனைவி ஜாதகம் வலு குறைவாக இருந்தால்தான் மோசமான திசை நடந்தால்தான் மனைவி இறக்க வாய்ப்புண்டு.அதையும் மனைவி ஜாதகம் பார்க்காமல் சொல்வது தவறு,