சனி, 25 ஏப்ரல், 2020

பரிவர்த்தனை யோகம் ஜோதிடம்


பரிவர்த்தனை யோகம்


ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான யோகங்கள் இருக்கின்றன. பொதுவாக, இரண்டு கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தாலே அந்த ஜாதகர் புகழ்பெற்று செல்வாக்குடன் விளங்குவார். குறிப்பாக, லக்னாதிபதி, பூர்வ புண்ணியஸ்தானாதிபதி, பாக்கியஸ்தானாதிபதி ஆகியோர் பலம் பெற்று உச்சநிலையில் இருந்தால், அவர்களுக்கு நல்ல நல்ல பலன்கள் நாளும் நடக்கும்.  இவை தவிர,  கஜகேசரி யோகம், நீச பங்க ராஜயோகம்,  தர்மகர்மாதி யோகம், பரிவர்த்தனை யோகம் என்று பலவிதமான யோகங்கள் சொல்லப்படுகின்றன. 'பரிவர்த்தனை யோகம்' பற்றி இப்போது பார்ப்போம்.


பரிவர்த்தனை யோகம் என்றால்,  இரண்டு கிரகங்கள் பரஸ்பரம் இடம் மாறி இருப்பதாகும். இரண்டு கிரகங்கள் ராசி மாறி அமர்ந்திருந்தால், அது பரிவர்த்தனை யோகமாகும். உதாரணமாக, மேஷத்துக்குரிய கிரகமான செவ்வாய்  மகரத்திலும்,  மகரத்துக்குரிய கிரகமான சனி மேஷத்திலும் இருந்தால் பரிவர்த்தனை.



இப்படி கிரகங்கள்  மாறி அமையும்போது,  அவற்றின் சக்தியும் வலிமையும்  கூடும். அப்படி மாறி அமைந்த கிரகங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தும் வலிமை வாய்ந்தவை. சுபகிரகங்கள் பரிவர்த்தனைப் பெற்று இருந்தால் சுபயோகத்தையும், அசுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவதால் அசுப பலன்களையும் தரும்.

பரிவர்த்தனை  யோகம் மூன்று வகைப்படும்.
1) சுப பரிவர்த்தனை யோகம்:  1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்கு உரிய அதிபதிகளில் எவரேனும் இருவர் இடம் மாறி இருந்தால்,  ஜாதகருக்கு சொந்த வீடு, நிலபுலன்கள் அமையப்பெற்று செல்வாக்கோடு திகழ்வார்.

2) தைன்ய பரிவர்த்தனை: தைன்ய பரிவர்த்தனை என்பது ஜாதகக் கட்டத்தில் மறைவு பிரதேசங்களான 6, 8, 12-ம் இடங்களுக்குரிய ஆட்சி கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால், கிரகம் பாதிப்புக்குள்ளாகி ஜாதகருக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்

 3) கஹல பரிவர்த்தனை: கஹல பரிவர்த்தனை என்பது மூன்றாம் இடத்துக்குடைய கிரகம் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ம் இடத்தில் இருந்து, அந்த இடங்களுக்கு உரிய கிரகம் 3-ம் இடத்தில் இருந்தால், அது சுப பலனாக அமையும். உப ஜெயஸ்தானமான 3-ம் இடத்தின் தைரியம், சம்பந்தப்பட்ட அந்தக் கிரகத்துக்குக் கிடைக்கும். இதனால், ஜாதகர் பல வெற்றிகளை அடைவார்.

பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள், ஒன்றை ஒன்று பார்க்கும்போது சுபகிரகங்களான  குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் சுப பலனைத் தரும். அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், 
சனி, ராகு, கேது, தேய்பிறை சந்திரன் ஆகியோர் ஒன்றை ஒன்று பார்க்கும்போது அசுப பலன்களையே தருவார்கள். குறிப்பாக செவ்வாய்,  சனி  ஒன்றையொன்று பார்ப்பது, சூரியன், சனி ஒன்றையொன்று பார்ப்பது ஆகிய தீய கிரகங்கள் பார்க்கும்போது அளவு கடந்த கோபமும் ஆத்திரமும் மிகுந்து மனம் தவறான வழிகளில் செல்லும்.



சில வித்தியாசமான பரிவர்த்தனைகளைப் பார்ப்போம்.

 2-ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்கு பல வழிகளிலும் பணம். வரும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் செலவழிப்பார்.

6 - ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகர் தனது செல்வத்தையெல்லாம் இழக்கவேண்டிய நிலை வரும்.

2-ம் இடத்தின் அதிபதியும் 9-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகரை அதிர்ஷ்டம் தேடி வரும். சகல சௌபாக்கியங்களையும் அனுபவிப்பார். மிகுந்த புத்திசாலியாக இருப்பார். இவருக்கு நிறைய பேர் அபிமானிகளாக இருப்பார்கள்.

லக்னாதிபதியும்  5 -ம் இடத்துக்கு உடையவனும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்குப் பெயரும் புகழும் நிலைத்திருக்கும்.

லக்னாதிபதியும் 10 -ம் இடத்துக்கு உடையவனும் பரிவர்த்தனை பெற்றால்,  அரசியலில் புகழ் பெற்றுத் திகழ்வார்

கூட்டு கிரகம் தரும் ஜாதக பலன்கள்


வணக்கம் நண்பர்களே..ஒரு ஜாதகம் பார்க்கும் போது இரு கிரக இணைவு கூட்டு பார்க்கும்போது குழப்பம் வரும்..ஒரு கிரகமாக இருந்தால் எதையாவது சொல்லிடலாம் 4ல் ராகு உன் வீடு வாஸ்து சரியில்லை.வீடு கட்டுவதில் தடை இப்படி ஏதாவது சொல்லிடலாம் ஆனா இரண்டு கிரகம் இருந்தா மூன்று கிரகம் இருந்தா அதை பிரிச்சு பார்த்து பலன் சொல்ல தடுமாற்றம் வரும்.அதை கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் சரி செய்யலாம் இப்போது இரு கிரக கூட்டில் சில தகவல்கள் பார்ப்போம்…
ஒரு கிரகம் இன்னொரு கிரகத்துடன் சேரும் அதன் தன்மைகளை யோசித்தாலே பலன் சொல்லிடலாம்..சந்திரன் சனி..இருந்தா..? சந்திரன் மனசு உடம்பு…சனி முடக்கும் கிரகம் இருள் கிரகம் அப்போ அடிக்கடி உடம்பும் மனசும் பாதிக்கும் இப்படி புரிஞ்சுக்கிட்டா பலன் சொல்வது சுலபம்.

சூரியன்+சந்திரன்
ஜாதகரின் தந்தையார் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு இடத்தில் குடியேறுவார். ஜாதகரின் தந்தையார் சலன புத்தியுடையவர்,பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். ஜாதகருடைய தாய் தந்தையினிடையே ஒற்றுமை நிலவும்.
சூரியன்+செவ்வாய்
ஜாதகரின் தந்தையார் ஆணவமிக்கவர், தான் என்ற கர்வமுடையவர், அதிகார தோரணையுடையவர்.யாருக்கும் அடங்கிப்போகமாட்டார். சொந்தமாக நிலபுலன் உடையவர்.
சூரியன்+புதன்
ஜாதகரின் தந்தையார் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர்.
சூரியன்+குரு
ஜாதகரின் தந்தையார் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர்.
சூரியன்+சுக்கிரன்
ஜாதகரின் தந்தையார் செல்வந்தராக இருப்பார். பெண்கள் மீது மோகமுள்ளவர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகருக்கு புத்திர தோசம் உண்டு.
சூரியன்+சனி
ஜாதகரின் தந்தையார் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார். ஜாதகருக்கும் அவருடைய தந்தையாருக்கும் ஒத்துப்போகாது.
சூரியன்+ராகு
ஜாதகரின் தந்தையார் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு.ஜாதகருக்கு கண் நோய் வரும்.
சூரியன்+கேது
ஜாதகரின் தந்தையார் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகருக்கு கண் நோய் வரும்.

சந்திரன் + சூரியன்
ஜாதகரின் தாயார் நிர்வாகத்திறமை உள்ளவர். தியாக மனப்பான்மை உள்ளவர். பிறர் நலம் காப்பதில் விருப்பம் உடையவர். ஜாதகருடைய தாய் தந்தையினிடையே ஒற்றுமை நிலவும்.
சந்திரன் +செவ்வாய்
ஜாதகரின் தாயார் ஆணவமிக்கவர், தான் என்ற கர்வமுடையவர், அதிகார தோரணையுடையவர்.யாருக்கும் அடங்கிப்போகமாட்டார். சொந்தமாக நிலபுலன் உடையவர்.
சந்திரன் +புதன்
ஜாதகரின் தாயார் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர். ஜாதகருக்கு தோல் வியாதி வரும்.
சந்திரன் +குரு
ஜாதகரின் தாயார் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர். ஜாதகர் அனைவரையும் வசீகரிப்பார்.
சந்திரன் +சுக்கிரன்
ஜாதகரின் தாயார் செல்வந்தராக இருப்பார். சொகுசு விரும்பி. ஆடம்பர பிரியர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகர் காம உணர்ச்சி அதிகம் உள்ளவர். ஜாதகருக்கு நீரழிவு வியாதி வரும். ஜாதகர் பெண்ணானால் அவருக்கு கருச்சிதைவு உண்டாகும்.
சந்திரன் +சனி
ஜாதகரின் தாயார் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார். ஜாதகருக்கு அஜீரண கோளாரு உண்டு.மனக்குழப்பம்,பயத்துடன் இருப்பார்.உடல் சோர்வு மன சோர்வு இருக்கும்.
சந்திரன் +ராகு
ஜாதகரின் தாயார் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு. ஜாதகருக்கு கண் நோய் வரும்.
சந்திரன் +கேது
ஜாதகரின் தாயார் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகருக்கு கண் நோய் வரும்.

செவ்வாய்+ சூரியன்
ஜாதகரின் இளைய சகோதரர் நிர்வாகத்திறமை உள்ளவர். தியாக மனப்பான்மை உள்ளவர். பிறர் நலம் காப்பதில் விருப்பம் உடையவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சந்திரன்
ஜாதகரின் இளைய சகோதரர் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு இடத்தில் குடியேறுவார். ஜாதகரின் இளைய சகோதரர் சலன புத்தியுடையவர்,பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +புதன்
ஜாதகரின் இளைய சகோதரர் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +குரு
ஜாதகரின் இளைய சகோதரர் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சுக்கிரன்
ஜாதகரின் இளைய சகோதரர் செல்வந்தராக இருப்பார். சொகுசு விரும்பி. ஆடம்பர பிரியர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சனி
ஜாதகரின் இளைய சகோதரர் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார்.
செவ்வாய் +ராகு
ஜாதகரின் இளைய சகோதரர் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு. ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +கேது
ஜாதகரின் இளைய சகோதரர் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும். ஜாதகருக்கு மூலம் வியாதி,குடலிறக்கம்,குடல் வால் வெடிப்பு போன்ற நோய்கள் வரும். ஜாதகர் ஆணானால் ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.