வியாழன், 14 ஜூன், 2012

நித்யானந்தா ஜாதகம்


நித்யானந்தா ஜாதகம்

பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான சேஸிங்க் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது...வெகுவேகமாக வளர்ச்சியடைந்து,ஒரு கார்ப்பரேட் சாமியாராக பல லட்சம் பக்தர்களை கொண்டாட வைத்து,திடீரென மதுரை ஆதீனமாக பரபரப்பு காட்டிக்கொண்டே இருக்கும் நித்தி ஜாதகம் எப்படியிருக்கும் என பார்ப்போம்..

நித்யானந்தா பிறந்ததேதி;1.1.1978
பிறந்தநேரம்;12.32 இரவு
ராசி;சிம்மம்
நட்சத்திரம்;பூரம்

ஜாதகத்தில் 3 கிரகங்கள் வக்ரம்...3 கிரகங்கள் வாக்கு ஸ்தானமாகிய ,தன ஸ்தானத்தை பார்வை செய்கின்றன....அந்த இடமே கண்ணையும் குறிக்கும்...இவர் மிகச்சிறந்த பேச்சாளர்...செவ்வாய் பார்வை செய்வதால் அதிகாரமுள்ள பேச்சு...குரு பார்ப்பதால் ஆன்மீக உபதேசம்...சனி பார்ப்பதால் பலமான ஏமாற்றும் பேச்சு...குரு பார்வை வாக்கு பலமும் தரும்..3 கிரகங்கள் பார்ப்பதால் வாக்கு வாதத்தில் யாரும் இவரை வெல்ல இயலாது...சட்டத்தை வளைப்பதில்,உடைப்பதில் கில்லாடி...

6 ஆம் அதிபதி 6ஆம் இடத்தை பார்வை செய்வதால் எதிரிகளும் அதிகளும் அதிகம்..அந்த எதிரிகளை சமாளிப்பதிலும் இவர் வல்லவர்..இவருக்கு அரசியல் சட்டம் நண்பன்...அரசியல்வாதிகள் எதிரிகள் எதிரிகள்..அதனால்தான் போலீஸிடம் சிக்காமல் கோர்ட்டில் சரண் அடைந்தார்....

சுகாதிபதி குரு தன் ஸ்தானத்தை பார்வை செய்வதால் அதிக சுகமும்,வசதி வாய்ப்புகளும் உண்டானது....4ல் சுக்கிரன் வேறு..வருவது எல்லாம் பெண்கள் பிரச்சினைதான்....
லக்னத்தில் ராகு இருப்பதால் செவ்வாய் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அதிக தன்னம்பிக்கையும் தன்னால் எதுவும் முடியும் என்ற கர்வத்தாலும் வேகமான முன்னேற்றமும்,வேகமாக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதும் நடக்கிறது.....

6.4.2013 வரை கேது புத்தி என்பதால் கோர்ட் வழக்கு என அலைய நேர்கிறது..முடக்கம் ,கெட்ட பெயர்,அவமானம் உண்டாகிறது...தலைமறைவாகவோ அல்லது அமைதியாகவோ இக்காலத்தில் இருக்கவேண்டும் அதை விடுத்து மதுரை ஆதீனம் பதவியை பிடித்து தலைப்பு செய்தியானார்..கேது பகவான் மறுபடி முடக்கி வைத்துவிட்டார்....

சனி வக்ரம் ஆனி 11 வரை உள்ளது...அதுவரை இவருக்கு கேது புத்தியில் மோசமான காலகட்டம் சனி வக்ரம் முடிந்தால் சிம்மராசியினருக்கு நல்லது...இவர் பலமுறை பிரச்சினைகளில் சிக்கினாலும் மீண்டும் மீண்டும் வெளியே வருவார்...இவர் பரபரப்பு உண்டாக்கியபடியே இருப்பார்..முழுதாக இவரை முடக்க இயலாது...விரைவில் அரசியல் சக்தியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது....(சனி,குரு,செவ்வாய் ராசியிலும் வக்ரம்..அம்சத்திலும் வக்ரம்...)

நித்யானந்தா தனது புத்தகத்தில் எழுதியிருந்த குறிப்பை வைத்து எழுதப்பட்ட ஜாதகம் இது...ஜோதிடம்,ராசிபலன் ரீதியாக இல்லாமல் திசாபுத்தி அடிப்படையில் பார்த்தால் இவருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் விளங்கும்...ராசிபலன் அடிப்படையில் ஆனி 11 சனி வக்ரம் நிவர்த்தி ஆகும்வரை கடும் சிக்கலே உள்ளது