சனி, 5 அக்டோபர், 2013

நண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்

காலை 6 மணிக்கெல்லாம் பவானி கூடுதுறை கோயிலில் ஒரு லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்..கோயிலுக்கு செல்லும் பெரிய பாதையெங்கும் சிறிதும் இடமில்லாமல் மக்கள் நெருக்கமாக வந்துக்கிட்டே இருந்தனர்...போன வருசத்தை விட இந்த வருடம் கூட்டம் இரு மடங்கு அதிகம் இருந்தது..மீடியாக்களுக்கு நன்றி...

200 க்கும் மேற்பட்ட பிராமணர்கள் தர்ப்பணம் செய்து கொடுத்துக்கொண்டே இருந்தனர்...நான்,என் அப்பாவை கூட்டிட்டு போயிருந்தேன்..அவர் எங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தார்...வீட்டில் தயார் செய்து கொண்டு போயிருந்த எலுமிச்சை சாதம் அன்னதானம் பாக்கெட் 100 இருந்தது..கோயிலுக்குள் சிலருக்கு கொடுத்தேன் ஒவ்வொருத்தரும் 50 பாக்கெட் சாதம் வெச்சிருந்தாங்க..சிலர் அதை வாங்கி பாதி விலைக்கும் விற்கவும் ஆரம்பிச்சிருந்தாங்க...கஷ்டப்பட்டு செஞ்சு கொண்டு போன சாதத்தை இவங்கக்கிட்ட கொடுத்து வீணாக்க கூடாது என நண்பர் மூலம் அப்படியே முதியோர் இல்லத்துக்கு கொடுத்து அனுப்பினேன்.

இரண்டு நாளைக்கு அந்த சாதத்தை வைத்து சாப்பிடலாம்..எலுமிச்சை,புளிசாதம் மகிமை அதுதான்..பிறகு மதியம் காதுகேளாத,வாய்பேசாத குழந்தைகள் பள்ளிக்கு அன்னதான உணவை தயார் செய்யும் வேலை..குடும்பத்துடன் செய்தோம்..சப்பாத்தி 300 இட்லி 400 ,குருமா என அந்த வேலை தொடங்கியது..மாலை நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்ய மறுபடி கோயிலுக்கு பயணம் ....

அதை முடித்து இரவு வந்து தயார் ஆகியிருந்த உணவை ஆட்டோவில் கொண்டு சென்று,80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிமாறிவிட்டும் வந்தேன்..காதும் கேட்காது வாயும் பேச முடியாது..ஆனா அந்த குழந்தைகளுக்கு அன்பும்,அறிவும் ஆண்டவன் நிறைய கொடுத்திருக்கான்..பக்கத்து இலை பையனுக்கு இன்னும் இரண்டு இட்லி வைங்க..அவனுக்கு இட்லின்னா பிடிக்கும்னு ஜாடையில் சொல்கிறான் ஒரு பையன்..சப்பாத்தி என் தோழிக்கு வேண்டாம் அவள் சாப்பிட மாட்டாள் என இன்னொரு பொண்ணு ஜாடையில் சொல்லுது..ஒவ்வொரு முறை உணவு வைக்கும்போது அந்த குழந்தைங்க கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்றாங்க...அவங்க ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்காங்க..சின்னப்பசங்க மேல பெரிய பொண்ணுங்க எல்லாம் அம்மா மாதிரி அக்கறையா இருக்காங்க..ஒரு பொண்ணு சின்னப்பையனுக்கு அன்பா,அக்கறையாஇட்லி ஊட்டிய காட்சி நெகிழ்ச்சியா இருந்தது..இவங்களுக்கு உறவுன்னு சொல்லிக்க உறவா இருக்குறது அவங்களேதான்!! உணவுக்கு நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு மிக்க நன்றி..அவர்களுக்கு சங்கமேஸ்வரரின் அருள் கிடைக்க எப்போதும் பிரார்த்திக்கின்றேன்..!!

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல விசயம் செய்த உங்களுக்கும் உதவிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.