செவ்வாய், 26 நவம்பர், 2013

ஆவி,பேய் உண்மையா..? அதை கண்டறிவது எப்படி..? ghost story

அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டதி,ரேவதி இந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் ஒருவர் இறந்துவிட்டால் 6 மாதம் வரை பேயாக அலைவார்கள்...என் உறவினர் ..அவிட்டத்தில் இறந்தார்..அவர் இறந்து 6மாதத்தில் அந்த ஊரில் 10 பேரை 6 மாதத்தில் பயமுறுத்தி உயிரிழக்க செய்தார்..தன் பேரனையும் விட்டுவைக்கவில்லை..தாத்தா வர்றார் என்னைகூப்பிடுறார் என 8 வயது குழந்தை சொல்லிக்கொண்டே இறந்தது...அவர்கள் வீட்டு வேலைக்கார பெண்,இவர் ஆவி ரூபத்தில் வந்து பயமுறுத்துவதை தாங்க முடியாமல் தூக்கிலிட்டு கொண்டாள்..அவரது நெருங்கிய நண்பருக்கு அடிக்கடி காட்சி கொடுத்ததால் அவரும் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார்..தன் அப்பாவின் ஜிப்பாவை ஆசையாக அணிந்துகொண்ட மகனை விரட்டி விரட்டி மேலே ஏறி அமர்ந்து மூச்சுதிணறலை உண்டாக்கினார்..

தினமும் ஆவி ரூபத்தில் வீட்டுக்கு வந்து விடுவார் இவர் வருவதை சோதனை செய்ய வீட்டில் வாயிலில் மணல் பரப்பி வைத்தனர் அதில் லேசாக பாதமும் தெரிந்தது...சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் காலையில் அது குறைந்திருக்கும் .பூனைகள்,நாய்கள் தினமும் வீட்டை சுற்றி சுற்றி ஊளையிட்டன..அழுதன...

மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அக்காலத்தில் மீண்டும் இறந்தவர் வரக்கூடாது எனவும் மேலோகம் சென்றுவிடவேண்டும் எனவும் வீட்டு கூரையை பிரித்து அதன் வழியாக பிணத்தை வெளியேற்றி சுடுகாட்டுக்கு கொண்டு போவார்களாம்..சிலர் வீட்டுக்கு வரும் வாசல் மறக்கனும்னு சொல்லி வீட்டு பின்பக்க சுவரை உடைத்து அதன் வழியே கொண்டு செல்வார்களாம்..இப்போது 16ஆம் நாள் காரியம் மந்திரம் சொல்லி கெட்ட சக்தியை அடங்க்யிருக்கும்படி செய்வதால் பெரிய பாதிப்பு வருவதில்லை..எனினும் மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டிவிடுவது முடிந்தவரைக்கும் நல்லது!!

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி,6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். 
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். இதில் அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

உங்கள் ராசியும் அதற்க்குண்டான கோயிலும்;

உங்கள் ராசியும் அதற்க்குண்டான கோயிலும்;

மேசம்;ராமேஸ்வரம்
ரிசபம்;திருப்பதி
மிதுனம்;பழனி
கடகம்;ராமேஸ்வரம்
சிம்மம்;ஸ்ரீவாஞ்சியம்
கன்னி;திருக்கழுகுன்றம்
துலாம்;திருத்தணி
விருச்சிகம்;காஞ்சிபுரம்
தனுசு;மாயவரம்
மகரம்;சிதம்பரம்
கும்பம்;தேவிபட்டினம்
மீனம்;வைத்தீஸ்வரன் கோயில்

நீங்க பிறந்த நட்சத்திரம் வரும்போது இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க...நல்லது நடக்கும்!!

செவ்வாய், 19 நவம்பர், 2013

ஹோமம் வேள்வி பரிகாரம் பலன் தரும், ஆரோக்கியம் தரும், செல்வம் தரும்

உண்ண இயலா எல்லாப்பொருட்களையும் வேள்வியில் இட்டு புகையாக்கி நம் உடலுக்கு வழங்கி பல பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கின்றனர் நம் பாரத மகான்கள்...

உடல்பருமனால் அவதிபடுபவர்களுக்கு அப்பளப்பிரண்டை எனும் மூலிகையை வேள்வியில் இட்டு புகையை சுவாசிப்பதால் ஊளைசதை கரைகிறது..தாமரைப்பூவை தேனில் குழைத்து வேள்வியில் இடுவதால் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற முடியும்..செண்பகபூவை வேள்வியில் இடுவதால் கடன் பிரச்சினை அகலும்.,..புரசுப்பூவை வேள்வியில் இடுவதால் அரசு சம்பந்தமான பிரச்சினை வழக்குகள் சம்பந்தமான பிரச்சினை குறையும்..சிலோத்துமம் என்ப்படும் சளி மிக கொடியது நெஞ்சுசளியால் இறந்த பெரியோர்கள் அநேகம்...வேள்விகள் சிலோத்துமத்தை ஓட ஓட விரட்டுகின்றன..வாத நோய்க்கு வஜ்ரவல்லி வேள்வி நல்ல பலன் தரும்..விச ஒவ்வாமையால் அவதிப்படும் ராகு திசை நடப்பவர்களுக்கு அருகம்புல் வேள்வியில் இடுவதால் பிரச்சினை தீரும்...குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நாயுறுவியால் யாகம் வளர்க்கப்படுகிறது..


பாரத நாட்டுக்கே உரியதான வேள்வி எனும் யாகம் வளர்ப்பது சாதாரண புரோகிதர் சமாச்சாரம் அல்ல..அதில் நிறைய மருத்துவ குணம் உள்ளது..போபால் விஷ வாயு கசிவு உண்டாகி எல்லோரும் இறந்தபோது அக்னி ஹோத்திரம் பூஜை செய்து தப்பிய குடும்பம் பற்றி படித்திருப்பீர்கள்...இப்போது இந்த அக்னி ஹோதிரம் அமெரிக்கா இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது..தன்வந்திரி ஹோமம் வளர்ப்பதால் கடுமையான நோயும் கட்டுப்படுகிறது..வேள்வியில் இடப்படும் மூலிகைகளால் பலவிதமான பலன்கள் உண்டாகிறது..மழை வேண்டி செய்ய்ப்படும் வருண ஜபங்களில் தண்ணீர்விட்டான் கிழங்கு எனும் மூலிகையை அதிகளவில் இடுகின்றனர் இதனால் மழை அங்கு பெய்கிறது..வஜ்ரவல்லி எனும் மூலிகையை இட்டு வேள்வி செய்தால் பூப்படையாத பெண்ணும் பூப்படைவாள்..சோரியாசிஸ் எனும் வியாதியை தன்வந்திரி ஹோமம் சரி செய்கிறது..கல்யாண முருங்கை எனும் மூலிகையை வேள்வியில் இடுவதால் தோல்நோய்கள் குணமாகின்றன...

செவ்வாய், 12 நவம்பர், 2013

வீட்டில் செல்வவளம் உண்டாக..தொழில்,வியாபார நஷ்டம்,மந்தம் சரியாக அதிர்ஷ்டம் உண்டாக ஒரு வழி!

தொழில் தொடங்குகின்ற நேரத்தில் ஏழரை சனியோ பாதகம் தரக்கூடிய கிரகங்களின் திசா புக்தியோ, நடைபெறக் கூடாது. குறிப்பாக சுக்கிரனும், சனி பகவானும் ஜாதகத்தில் வலுவாக இருக்க வண்டும். சாதகமற்ற காலத்தில் தொழில் தொடங்கினால் கடன், வழக்கு, எதிரிகளின் தொல்லையால் கூட ஜாதகருக்கு வியாபாரம் நஷ்டத்தில் இயங்கும் அவல நிலை உண்டாகும். சுதர்ஷ்ண ஹோமம்,சத்ரு சம்ஹார பூஜை போன்றவர்றை வீட்டிலோ தொழில் செய்யுமிடத்திலோ செய்தால் நஷ்டம்,ஏமாற்றம்,தொழில் மந்தம் இவை அகலும்..

குரு பலம் பெற்றவர்களை வைத்துதான் இந்த பூஜை செய்யப்படவேண்டும்..குடும்பத்தில் நிம்மதி இன்மை,கஷ்டம்,தொடர் கெட்ட செலவு,சுபகாரியம் செய்ய முடியாமை போன்ற பிரச்சினைகள் வீட்டில் இருந்த கெட்ட சக்தி அந்த வீட்டில் இருக்கிறது என அர்த்தம்..அதை அழித்து தெய்வசக்தி மேலோங்க இந்த பூஜைகளை வீட்டில் செய்யலாம்..நல்ல ராசியான சிறப்பாக பூஜை நடத்தும் ஒருவர் இருக்கிறார்..தமிழகத்தில் நீங்க எங்கிருந்தாலும் இந்த பூஜை செய்ய விருப்பம் இருந்தா மெயில் பண்ணுங்க...வீட்டுக்கே வந்து சிறப்பாக பூஜை நடத்தி கொடுக்க தயாராக இருக்கிறோம்..sathishastro77@gmail.com

திங்கள், 11 நவம்பர், 2013

உங்கள் தட்டில் உணவா...விஷமா ? மட்ட அரிசியின் மதிப்பு!!

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?
 
ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.


சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.


இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!

நன்றி : அவள் விகடன் May 21, 2013

திங்கள், 4 நவம்பர், 2013

குரு வக்ர ராசிபலன் 2014 எந்த ராசிக்கு யோகம்..?ஜோதிடம்

குரு வக்ர ராசிபலன்கள் ஜோதிடம் 2014 astrology

ஐப்பசி 21 முதல் மாசி 22 வரை குரு வக்ரம் அடைகிறார்...இதனால் மிதுனத்தில் இப்போது இருக்கும் குரு ரிசபத்தில் இருப்பது போல கணக்கிட்டால் குருப்பெயர்ச்சியில் பாதிக்கப்பட்ட ராசிகளுக்கு எல்லாம் நல்ல பலன்கள் உண்டாகும்..என எடுத்துக்கொள்ளலாம்..அப்போ நல்ல பலன் நடக்கும் ராசிகளுக்கு பாதிக்குமா என கேட்டால் முழுமையா கெட்டது என சொல்ல முடியாது..

மகரம்,விருச்சிகம்,மேசம் ராசியினருக்கும் ரிசபம் ராசியினருக்கும் நல்ல பலன்கள் குரு வக்ர காலத்தில் உண்டாக்கும்..மிதனம் ராசியினருக்கும்நல்ல பலன்களே என சொல்லலாம்..வருமான தடை அகலும்..வருமானம் பெருகும் எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும்...எதிர்பார்த்த பண வரவு தடையின்றி கிடைக்கும் பகை விலகும்...வீட்டில் சுபகாரியங்கள் வேகமாக நடைபெறும்.

கன்னி,சிம்மம்,கடகம் ராசியினருக்கும் இந்த மாசி முடியும் வரை அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்லலாம்...இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில் வளரும்..செல்வாக்கு கூடும் கடன் அடையும்..பணம் வந்து சேரும்..

உங்க ரசி எதுவனாலும் ஜாதகத்தில் திசாபுக்தி எப்படி இருக்கிறது...என்பதன் அடிப்படையில் பலன்கள் மாறும் அதுபற்ரி அறிய மெயில் செய்யுங்கள் பலன்கள் அனுப்புகிறேன்.....பிறந்ததேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர் எழுதி அனுப்புங்கள்...கட்டணம் ரூ 500 மட்டும்..ஜாதகத்து ஏற்றவாறு ஐம்பொன் மோதிரம் செய்து பூஜித்து அனுப்பி வைக்கிறோம்..




சர்க்கரை நோய் ஒரு மாதத்தில் குணமாக சித்தர் சொன்ன மருத்துவம்

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்;

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.