ஃபேஸ்புக்கில் நான் எழுதிய ஜோதிட குறிப்புகள்;
எனது ஃபேஸ்புக் ஐடி...சதீஷ்குமார்ஜோதிடர்
நடப்பு டிசம்பர் கடைசியில் வால் நட்சத்திரம் தோன்ற போகிறது இது 60,70
ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அதிசயம்...வால் நட்சத்திரம் தோன்றினால்
நாட்டின் அரசியல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்ற நம்பிக்கை பல முறை
நிஜமாகி இருக்கிறது...லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் வால் நட்சத்திரம்
தோன்றிய காலம்தாம்..மூத்த அரசியல் வாதிகளில் தென்னகத்தை
சேர்ந்தவர்கள்,மற்றும் தேசிய அரசியல் தலைவர்களில் ஒரு சிலருக்கு இது
கண்டமான காலம் என சொல்லலாம்...இன்னும் சில குறிப்புகள் நாளை
மற்றும்,திங்கள்கிழமை விரிவாக பார்ப்போம்
உங்கள்
ஜென்ம நட்சத்திரத்துக்கு யோகமான நட்சத்திர காலில் நின்று திசை ஜாதகத்தில்
நடப்பவர்கள்தான் வேகமான முன்னேற்றத்தை அடைகிறார்கள்..மிதுன லக்னம்..குரு
பாவி ஆச்சே...குரு திசை நடக்குது..உனக்கு மரண கண்டம் வாசல்ல நிற்குது..ன்னு
ஒரு ஜோசியர் சொன்னார்..ன்னு ஒருவர் கலக்கமுடன் வந்தார்...பூசத்தில் நின்று
குரு திசை நடக்குது..நீங்க வீடு கட்டுவீங்கன்னு சொன்னேன்...கண்டம்
இல்லைன்னு சொன்னேன்...ஒரு வருசத்துக்கு முன்னாடி
சொன்னது..இன்னிக்கு பழத்தட்டுகளுடன் வந்து சந்தோசமாக நீங்க சொன்ன மாதிரியே
நடந்துச்சி..வீடு கட்டிட்டேன் என்றார்...ஜாதகத்தில் கிரகம் எப்படி
இருப்பினும் திசை யோகமாக இருந்தால் சிறப்பு...எம்.ஜி.ஆர்..ரஜினிக்க ெல்லாம் யோகமான ஜாதகம்தான்..ஆனா 30 வயது வரை கஷ்டம்தான்..யோகமான திசை வந்தபின் தான் வேகமான முன்னேற்றம் அடைந்தார்கள்...
கோயிலுக்கு
போனால் நட்சத்திரம் பெயர் சொல்லிதான் அர்ச்சனை செய்து கொள்கிறோம் ஒரு
ராசிக்கு மூன்று நட்சத்திரங்கள் வருவதால் ஜென்ம நட்சத்திரம்
முக்கியம்..மிருகசிரீடமும் ரிசபம் ராசிதான்..ரோகிணியும் ரிசப ராசிதான்
ஆனால் இருவருக்கும் வித்தியாசம் உண்டு..ஜென்ம நட்சத்திரம் அடிப்படையில்
யோகமான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம்..இதைதான் நம் முன்னோர்கள்
கடைபிடித்தனர்..ராமாயணத்தில் ராமரே தனது புனர்பூசம் நட்சத்திரத்துக்கு நல்ல
நாள் தேர்ந்தெடுத்துதான் போரும் புரிந்திருக்கிறார்....இப்போது எல்லாம்
முகூர்த்தம் வளர்பிறையில் அமைந்தால் போதும் என முடிவு செய்கிறார்கள்..ஜென்ம
நட்சத்திரத்துக்கு அது உகந்ததாக இல்லாவிட்டால்தான் கஷ்டமும் நஷ்டமும் தான்
வந்து சேரும்...!!
1 கருத்து:
எங்களுக்கும் சொல்லுங்க... எப்படியிருக்கும்ன்னு....
கருத்துரையிடுக