தமிழ் புத்தாண்டு காலை 7.35 மணிக்கு மேசம் ராசியில் சூரியன் இரவேசித்தது முதல் தொடங்கியது...ஜெய வருடம் தொடங்கியது...இந்த இனிய நன்னாளில் நம் வாசக நண்பர்கள் அனைவரும் பூரண உடல்நலம் ,மனநலம்,செல்வவளம் பெற்று சிறப்புடன் வாழ தமிழ் கடவுள் முருகனை பிரார்த்திக்கின்றேன்..செல்வவளத்துடன் வாழ லட்சுமி நராயணனை துதிக்கின்றேன்...
இன்று காலை கண் பார்வையற்றோர் மற்ரும் ஆதரவற்ற பெரியோர் மற்ரும் குழந்தைகள் இல்லம் சென்று 108 பேருக்கு அன்னதானம் செய்து புதிய வருடத்தை தொடங்கினேன்...நண்பர்கள் உதவியால் சாப்பாடு ,இனிப்பு,வடையுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது....உதவியாக இருந்த நண்பர்கள் அனைவரது குடும்பத்தார் பெயரிலும் முருகன் கோயில் மற்றும் லட்சுமி நாராயணன் கோயிலில் அர்ச்சனை, வழிபாடு செய்யப்பட்டது..என்றும் பூரண உடல் நலத்துடன் செல்வவளத்துடன் வாழ்க...!!
ஜெய வருடம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் திங்கள் கிழமையில் பிறந்திருக்கிறது ராஜா சந்திரன்...அறிவாற்றல் பெருகட்டும்...அன்பு தழைத்தோங்கட்டும் தாய்மையின் அன்பை சந்திரன் குறிக்கும்..அத்தயக தாயன்புள்ளத்துடன் மக்களின் குறைகளை தீர்க்கும் நல்ல அரசாங்கம் அமையட்டும்...ராசிகள் 12 ஐயும் வலம் வந்து சூரியன் மேசம் ராசியில் மீண்டும் தன் சுற்றை தொடங்குகிறார் இதுவே முதல் ராசி என்பதால் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறோம்..சூரியன் மேசத்தில் உச்சமாகி இருப்பார்...இந்த காலத்தில் தேர்தலும் நடப்பதால் சூரியன் உலகிற்கே சகல ஜீவராசிகளுக்கும் தலைவன் என்பதாலும் வாழ வைப்பதாலும்...கண்டிப்புக்கும்,நேர்மைக்கும் பெயர் எடுத்தவர் என்பதாலும் நல்ல நேர்மையான ,கண்டிப்பான அரசு மத்தியில் அமையும் என்பதில் சந்தேகமில்லை!!
1 கருத்து:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக