மேசம் -ராசியினருக்கு இரண்டில் உச்சம் பெற்ற சந்திரனால் நல்ல தன லாபம் உண்டு..தைரியம்,துணிச்சலால் பல காரியங்களை சாதிப்பீர்கள்...நாளை முதல் குரு உங்கள் ராசிக்கு ஐந்தில் மாறுவது நல்ல காலம் பிறப்பதற்கான அறிகுறி..அஷ்டம சனி கண்டு துவள வேண்டாம்..குரு பார்வை கோடி புண்ணியம் தருகிறதோ இல்லையோ , உங்களுக்கு நிம்மதியை தரப்போகிறது
ரிசபம் -ராசியினருக்கு தனாதிபதி பலம் பெற்று தன ஸ்தானத்திலியே இருப்பதால்
எதிர்பாராத பண வரவுகளை இந்த வாரம் சம்பாதிப்பீர்கள்..அதை பயனுள்ள வகையில்
செலவழிக்கவும்..வழக்கம்போல ஆடம்பர செலவு வேண்டாம் .அதன் மூலம் உங்கள்
பிரச்சினைகளை சமாளிப்பீர்..பேச்சில் நிதானம் தேவை..
மிதுனம் -.அலைச்சல்,டென்சன் அதிகம் இருக்கும்..கோபத்தால் குடும்பத்தில் சங்கடம் உண்டாகும்..வீண் செலவுகள் காணப்படுகிறது ..சுக்கிரன் குரு ராசிக்கு மறைந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு கிடைக்காமல் தடுமாறுவீர்கள்...வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டகும்..முடிந்தவரை அமைதியாக போய்விடுவது நல்லது..சொத்து வில்லங்கம் ,வாகனத்தால் நஷ்டம்,விண் செலவு வைத்தல் காணப்படும் உடல்நலனில் அதிக கவனம் தேவை...இடுப்பு,முதுகு சம்பந்தமான வலிகள் பிரச்சினைகள் உண்டாககுடும்..
கடகம் -நல்ல பண வரவு உண்டு ..மகிழ்ச்சியும் சந்தோசமும் உண்டாகும்...தந்தை வழியில் சில சிக்கல்கள் காணப்படும்...2ல் சுக்கிரன் இருப்பதால் பேச்சில் இனிமை கூடும் அதன் மூலம் நிரைய சாதிப்பீர்கள்..பெண்கள் விசயத்தில் வீண் சங்கடங்கள் உண்டாகலாம் கவனம் தேவை..பாதங்கள் சம்பந்தமான வலிகள் உண்டாகும்..ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்..
சிம்மம்-எதிர்பாராத பயணம்..சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் பணவரவு உண்டு..2ல் ராகு இருப்பதால் அதற்கேற்ற செலவுகளும் காத்திருக்கும்...உடல்நலனில் கவனம் தேவை..அடிவயிறு சார்ந்த பிரச்சினைகள் சிலருக்கு மூலம் சம்பந்தமான பிரச்சினைகளும் வர வாய்ப்பிருப்பதால் முன் கூட்டி கவனமாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்...தாயாருடன் கருத்து வேறுபாடு..வாகனத்தால் வீண் செலவு..அதிக அலைச்சல் காணப்படும்..முடிந்தவரை இரவு நேரம் தனியாக பயணம் செய்வதை தவிர்க்கவும்.
கன்னி-தொழில் ஸ்தானத்தில் ராசி அதிபதி இருப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டு...வருமானம் மட்டும் தடங்கலாகிட்டே இருக்கே என கவலையில் இருப்பீர்...நீண்ட நாளாக வழிபடவெண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் கோயிலுக்கு சென்று வரவும்..
துலாம்-நாக்குல சனி உங்களுக்கு இருப்பதை மறக்க வேண்டாம்..இன்று சந்திராஷ்டமம் வேற சொல்லவே தேவையில்லை..பேசினாலும் பிரச்சினை பேசலைன்னாலும் பிரச்சினை..செலவு நிறைய இருக்கு வருமானம் இல்லை..தந்தை மற்றும் மூத்த சகோதர வகையில் சில சிக்கல்களையும் சங்கடங்களையும் சந்திப்பீர்கள்..அதன் மூலம் வீண் விரயங்களும் உண்டாகும்..நெருங்கிய உறவினர் இழப்பு உண்டாகும்..
விருச்சிகம் -மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என புதுசு புதுசா பிரச்சினைகள் அணிவகுத்தாலும் குழந்தைகளை பார்த்து மனம் ஆறுதல் அடையலாம்....எட்டில் சூரியன்,செவ்வாய் இருப்பதால் வாகன பயணம் அதிக கவனம் தேவை...தொழில் மந்தம்,வரவேண்டிய பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டா நிலை இருக்கிறது..இந்த வார கடைசியில் நல்ல செய்தி வரும்.
தனுசு- ராசிநாதன் குரு நாளை முதல் ராசிக்கு ஒன்பதில் வருவதால் சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் பெரிய தன வரவை அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம்...வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டக்கும்..4ல் கேது இருப்பதால் தாய்க்கு மருத்துவ செலவு,வீடு,வாகனம் சம்பந்தமான செலவுகள் இருக்கும்...வாழ்க்கை துணை உறவுகளிடம் கவனமாக இருக்கவும் இல்லையெனில் சிறிய பிரச்சினை பெரிதாகிவிடும்..தொழில் ரீதியாக நிறைய யோசிப்பீர்கள்..பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம்
மகரம்-காரிய வெற்றி நினைத்தை முடிக்கலாம்...பயணத்தால் வெற்றி உண்டு..தன லாபம் உண்டு..செவ்வாய்,சூரியன்,சுக்கிரன் எல்லாம் உங்க ராசிக்கு மறைவில் இருப்பதால் இந்த மாதம் தொழில்,வருமானம் அவ்வளவு சிறப்பில்லை...வழக்கமான முயற்சிகள் செய்யுங்க..
கும்பம்-பயணம் வெற்றி தரும்..சலிச்சுக்கிட்டே போனாலும் ஒரு ஆதாயத்துடன் திரும்பி வருவீங்க..சுக்கிரன் ராசிக்கு 7ல் இருப்பதால் பண வரவு திருப்தி தரும்..தொழில் சிறப்பாகவே இருக்கும்...நெருங்கிய உறவினரின் இழப்பு அல்லது அறுவை சிகிச்சைக்காக அலைய நேரிடும்..
மீனம் -பண வரவு உண்டு...சுக்கிரன் 6ல் இருப்பதால் பெரிய பண வரவு இல்லை..குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு..அலைச்சல் அதிகமாக காணப்படும்..தாய்க்கு உடல்பாதிப்பு,சொத்து வில்லங்கம் காணப்படுகிறது...வாகனத்தால் துரதிர்ஷ்டம் கவனம் தேவை..ராகு கேது பெயர்ச்சி வரைக்கும் அதிக மனக்குழப்பத்துடன் இருப்பீங்க இதனால எல்லோரையும் பகைச்சுக்குவீங்க..மனம் தோணுகிறபடியெல்லாம் பேசாமல் அமைதி காக்கவும்..
1 கருத்து:
சரியாத்தான் இருக்கு...
கருத்துரையிடுக