திங்கள், 8 பிப்ரவரி, 2016

தை அமாவாசை அன்னதானம் 2016

வருடம் தோறும் முக்கியமான புனித அமாவாசை தினங்களில் நாம் நண்பர்கள் பங்களிப்புடன் அன்னதானம் செய்து வருகிறோம்.இன்று தை அமாவாசை.ஆதரவற்ற ,குழந்தைகள் முதியோர் இல்லங்களில் வழக்கம்போல அன்னதானம், உடைகள் தானம் செய்தோம்.

பங்களிப்பு செய்த நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் பூரண உடல்நலம்,மனநலம் செல்வவளம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க வாழ்க என சங்கமேஸ்வரரையும் வேதநாயகி அம்மனையும் பிரார்த்தித்து வழிபாடு,அர்ச்சனை செய்துகொண்டோம்..!!


ஈரோடு காது கேளோதோர் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு ,பேனாக்கள் வழங்கப்பட்டது.இந்த குழந்தைகளுக்கு காது கேட்காது வாய் பேச முடியாது.இதனால் மனப்பாடம் செய்ய எல்லாமே எழுதித்தான் மனப்பாடம் செய்யனும் கை ஒடிய எழுதுவர்.நோட்டுக்கள் நிறைய தேவைப்படும்.எல்லாவற்றுக்கும் அரசு உதவி கிடைக்காது. 

 இந்த அரசு பள்ளி அதுவும் ஊட்டிக்கு பிறகு இங்குதான் இந்த பள்ளி செயல்படுகிறது ..இதனை திரம்பட  நடத்துவதே பெரிது ....நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோட்டு பேனா வழங்கினேன் தீர்ந்தவுடன் தகவல் தர சொல்லியிருக்கிறேன் நன்றி பாசூர் காளான் சுப்ரமணியம் அவர்கள்..

எப்போதும் போல வரும் புனித நாட்களிலும் அன்னதானம்,நலத்திட்ட உதவிகள் தொடரும்.நல்ல நேரம் வாசகர்களுக்கும், நமது தமிழ் ஜோதிடம் பேஸ்புக் பக்கம் நண்பர்களுக்கும் நன்றி.

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நற்செயலுக்கு வாழ்த்துக்கள்.