ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

உங்கள் ஜாதகப்படி திதி சூனிய தோசம்

திதி சூன்ய தோசம்
                                
     திதி சூன்ய தோசம் - ஒரு ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால், ‘ஆஹா...யோக ஜாதகம், யோகதசை”  என்று சொல்பவர்கள் அந்த ஜாதகர், திதி சூன்யத்தில் பிறந்திருந்தால், யோக பலனைக் கெடுத்துவிடும் என்பதை ஆராய்ந்து பார்க்காமல் சொல்லிவிடுவார்கள்.

பொதுவாக சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் (வளர்பிறை,தேய்பிறை)என்பது அனைவரும் அறிந்ததே. ஜாதகம் எழுதுபவர்கள் நோட்டில் பட்சம் எழுத மறந்துவிடுவார்கள். சூரியன் - சந்திரன் இருவரும் அமாவாசை திதியில் இணைந்தும், பௌர்ணமி திதியில் எதிர் எதிரிலும் இருப்பது வழக்கம்.

சூரியனிலிருந்து 7ற்குள் சந்திரன் இருந்தால் சுக்ல பட்சம் ஆகும். 7ற்கு மேல் இருந்தால் கிருஷ்ண பட்சம் ஆகும். சுக்ல பட்சம் 14திதிகள், கிருஷ்ண பட்சம் 14 திதிகள்.. அமாவாசை பௌர்ணமி ஆகக் கூடுதல் 30 திதிகள்..

 ஜனனமாகும் குழந்தை, அமாவாசை அல்லது பௌர்ணமி யன்று பிறந்தால், அந்த ஜாதகம் திதி சூன்யம் அடையாத ஜாதகம் ஆகிவிடுகிறது. பிரதமை முதல் சதுர்த்தசி வரை உள்ள 14 திதிகளில் எந்த திதியில் ஜனித்தாலும், இரண்டு ராசி வீடுகளுக்கு திதி சூன்யம்
ஏற்பட்டு விடுகிறது. இதனால் அந்த ராசி அதிபதி திதி சூன்யம்  அடைகிறது. திதி சூன்யம் ஏற்பட்ட ராசி இல்லத்து அதிபதிகள் தங்களது சக்தியை இழக்கிறார்கள்.
    
     மறைவு ஸ்தானமாகிய 3,6-8-12ல் திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வக்ரம் ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்.

     திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள், பகையானாலும்: நீச்சம் பெற்றாலும், பாபிகளுடன் இருந்ததாலும், இயல்பான பலன்கள் அதாவது காரகப் பலன்கள் அதிகமாகவே கொடுக்கும். திதி சூன்யம் பெற்ற கிரஹங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது உடன் இருந்தாலும் தோசம் இல்லை.

 கிரஹம், அஸ்தங்கதம் அடைந்தாலும், வக்ரமாக இருந்தாலும்; பகை, நீச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திலிருந்து 3,6,8,12 இருந்தாலும் மேசம், விருச்சிகம், சிம்மம், கும்பம், ஆகிய
ராசி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.

     பாபருடன் கூடி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.

     எனவே திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.     

 எந்தெந்த திதிக்கு, சூன்ய தோஷ ராசிகள், கிரகங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

பிரதமை திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் சனி, சுக்கிரன், 

துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் -குரு. 

திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி- மகரம், சிம்மம், கிரகம்-சனி, சூரியன், 

சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசி- கும்பம், ரிஷபம், கிரகம் - சனி, சுக்கிரன். 

பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன், 

சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம் , கிரகம் -செவ்வாய், சூரியன், 

சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, கடகம், கிரகம் - குரு, சந்திரன். அஷ்டமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன், 

நவமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய், 

தசமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்.

ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் - குரு, 

துவாதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் - சனி, சுக்கிரன், 

திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - ரிஷபம், சிம்மம், கிரகம் - சுக்கிரன், சூரியன், 

சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்.

அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை. தோஷமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பரிகாரம் என்ன? 

பெளர்ணமி தோறும் திரிபுர சுந்தரி வழிபாடு செய்யலாம்..அருகில் இருக்கும் அம்பாள் சன்னதியில் பொங்கல் வைத்து 16 விதமான அபிசேகங்கள் செய்வித்து சுமங்கலிபெண்கள் 16 பேருக்கு மங்கலப்பொருட்கள் தானமாக கொடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: