சனி, 30 ஜூலை, 2016

சனியால் உண்டாகும் ராஜயோகம்

சனி ராசிக்கு 3,6,11 ல் சஞ்சரிக்கும் யோகம் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது..பிறக்கும்போது ஜாதகத்தில் 3,6,11ல் இருந்தாலும் ராஜயோகமான அமைப்பு என எடுத்துக்கொள்ளலாம்...சனி லக்னத்துக்கு எட்டில் இருந்தால் ஆயுள் பலம் கூடும்..நல்ல ராஜயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..

சனி பார்க்கும் இடம் அதிக சோதனைகளை உண்டாக்கும்...5ஆம் இடத்தை சனி பார்த்தால் எவ்வளவு வசதியானவராக இருப்பினும் நிம்மதி இருக்காது.லக்னத்தில் இருக்கும்போது நிறைய போராட்டங்களை வாழ்வில் உண்டாக்குகிறார் 
 
லக்னத்துக்கு 7ஆம் வீட்டை பார்க்கும்போது குடும்ப வாழ்வில் சோதனை ,விரும்பிய பெண் கிடைக்காமை,இல்வாழ்வில் நிம்மதி குறைவு ,10ஆம் இடத்தை சனி பார்க்கும்போது தொழிலில் போராட்டம்,அடிக்கடி இடமாறுதல்,பணப்பற்றாக்குறை ,தொழில் மந்தம் உண்டாக்குகிறார்
 
சனி 7ஆம் வீட்டில் இருக்கும்போது காலம் கடந்த திருமணம் ,கலப்பு திருமணம் போன்றவை நடக்கிரது.சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்யும் நிலையும் உண்டாகும்.
 
இந்த அமைப்பெல்லாம் சனி திசா புத்தி நடக்கும்போது அதிக சக்தியுடன் பலன் தருகிறது..10ல் சனி வேகமான வளர்ச்சியும் வேகமான வீழ்ச்சியும் உண்டாக்கும்.
 
9ஆம் இடத்தில் சனி இருந்தால் 5ல் சனி இருந்தால் பூர்வீக சொத்தை அனுபவிக்கும்பாக்யம் இருக்காது 5ல் சனி குழந்தைகளால் உண்டாகும் நிம்மதி குறைவை சொல்கிறது.
 
சனி 4ல் இருந்தால் தனிமையை அதிகம் விரும்புவர்.உடல் நலக்குறைபாடு அடிக்கடி உண்டாகும் சொத்து ,வீடு வாங்குவதில் தடை உண்டாகிறது.
 
2ல் சனி பண வரவு செலவு இடற்பாடு உண்டாக்குகிறது....பேச்சில் உறவு,நன்பர்களை பகையாக்கி விடுகிறது ..கண் ,பல் கோளாறுகளை உண்டாக்கும்.
 
11ல் சனி மூத்த சகோதர பகை ,சேமிப்புக்கு தடை உண்டாக்கும் 12ல் சனி நிம்மதியற்ற உறக்கம்...குடும்பத்தில் கலகத்தை குறிக்கிறது.
 
திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதால் தோசம் குறையும் சனிக்கிழமையில் விரதம் இருந்து நவகிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் நிம்மதி பெறலாம் 

செவ்வாய், 26 ஜூலை, 2016

குரு பெயர்ச்சி 2016-2017 -குருவால் அதிக பணவரவு எந்த ராசியினருக்கு கிடைக்கும்.?

குரு பெயர்ச்சி வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி அமைகிறது அன்று ஆடி 18 ..ஆடி அமாவாசையும் ஆன நாளில் குரு கன்னி ராசிக்கு மாறுகிறார்...

குரு செல்வாக்கு கொடுக்கும் கிரகம்.சொல்வாக்கு தவறாத கிரகம்.குரு கிரகத்தின் சக்தி அதிகம் பூமியில் வெளிப்பட்ட நாளில் பிறந்தவர்கள் குருபலம் நிறைந்தவர்கள் ..அவர்கள் எப்போதும் செல்வாக்குடன் வாழ்கிறார்கள்...குரு பார்க்க கோடி நன்மை.

குரு பகவான் ஆட்சி பெற்றோ உச்சம் பெற்றோ லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் அமையப்பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது.இந்த யோகத்தால் நல்ல உடல் அமைப்பு ,மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத நிலை ,ஒழுக்கமான வாழ்வு போன்ற ஏற்றமான பலன்கள் நடைபெறும்.இப்படி ஹம்ச யோகம் பெற்றவர்களில் ஒருவர் நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆவார்.அவருக்கு லக்னத்துக்கு 7ல் குரு இருக்கிறார்..இதனால் அரசியலில் உய்ர்ந்த பதவி வகிக்கும் யோகம் பலமுறை உண்டானது.

குருவும் கேதுவும் இணைந்து காணப்பட்டாலும் கேதுவை குரு பார்வை செய்தாலும் அம்சத்திலும் இது போன்ற குரு கேது சேர்க்கை இருப்பின் கோடீஸ்வர யோகம் உண்டாகிறது.இதனால் வாழ்வில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகி செல்வம் பலவிதத்திலும் வந்து சேரும்.இந்த யோகத்தால் சிவனருள் பெற்ற செல்வராக ஆன்மீக அன்பர்களால் இவர்கள் புகழப்படுவர்.ஆன்மீகத்திலும் இவர்கள் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாதகத்தில் இந்த கோடீஸ்வர யோகம் அமைப்பு இருக்கிறது.கோடிக்கணக்கான மக்களின் ஆதரவும்,திருப்பதி பெருமாளின் ஆசியும் இவர் பெற்றிருக்கிறார்..

குரு ஜாதகத்தில் எந்த ராசியில் இருப்பது மிக சிறப்பு என ஜோதிடம் சொல்கிறது..? 

லக்னத்தில் குரு இருப்பதுதான் மிக சிறப்பானதாக சொல்கிறது குரு லக்னத்தில் இருந்தால் 5,7,9 ஆம் இடங்களை பார்வை செய்வார் இதனால் புண்ணிய செயல்கள் அதிகம் செய்வர்...நல்ல மனைவி நல்ல புத்திரன் அமையும்...சொத்துக்கள் சேர்க்கை உண்டாக்கும்.லக்னத்தில் குரு இருப்பது எந்த லக்னத்துக்கும் கேந்திராதிபத்திய தோசம் இல்லை.

ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு அமையப்பெற்றால் தீர்க்க ஆயுள்,நல்ல செல்வம்,செல்வாக்கு ,சிறப்பான புத்திர பாக்யம்,அரசு வழியில் அனுகூலம்,தெய்வீக ஆன்மீக துறையில் நாட்டம் உண்டாகும்.

குருவால் உண்டாகும் யோகங்களில் முக்கியமானது கெஜகேசரி யோகம்.சந்திரனுக்கு கேந்திர ஸ்தானமாகிய 4,7,10ல் குரு அமையப்பெற்றால் கெஜகேசரி யோகம் உண்டாகிறது..கஜம் எனில் யானை கேசரி எனில் சிங்கம்.பல யானைகளுக்கு மத்தியில் சிங்கம் போல இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் வலிமை உள்ளவர்களாக திகழ்வார்கள்..இதனால் ஜாதகத்தில் உள்ள மற்ற தோசங்கள் விலகி வழிவிடுமாம்.

2016-2017 குரு பெயர்ச்சியால் அதிக பண வரவு யாருக்கு கிடைக்கும் எனில் ,
குரு பார்வை யார் ராசிக்கெல்லாம் தன ஸ்தானம்,பாக்யஸ்தானத்தை பார்க்கிறது என பார்ப்போம்...

குரு கன்னியில் இருந்து 5ஆம் பார்வையாக மகரம் ராசியை பார்க்கிறது.அது தனுசு ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்.

ஏழாம் பார்வையாக மீனம் ராசியை பார்க்கிறது அது கும்ப ராசியினருக்கு தன ஸ்தானம் ஆகும்...

ஒன்பதாம் பார்வையாக ரிசபம் ராசியை பார்க்கிறது அது மேசம் ராசியினருக்கு தன ஸ்தானமாகும்.

ஆக,குரு பார்வை பெறும் தனுசு ,கும்பம்,மேசம் ராசியினருக்கு நல்ல தன வரவு இருக்கும்.

லாபஸ்தானத்தை குரு பார்வை செய்யும் ராசியினர் யார் என பார்ப்போம்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபத்தை குரு பார்க்கிறார்
ரிசபம் ராசியினரின் லாபத்தை குரு பார்வை செய்கிறார்..

கடகம் ராசியினரின் லாபஸ்தானத்தை குரு பார்வை செய்கிறார்...

ஆகவே மேற்க்கண்ட ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்....

குரு பலம் பெறும் ராசியினர் யார்..?
சிம்மம்,ரிசபம்,மீனம்,மகரம் ,விருச்சிகம் இவர்கள் ராசியினருக்கு 2,5,7,9,11 ல் குரு வந்திருப்பதால் இவர்களுக்கும் பணம் சரளமாக வந்து சேரும்.

மத்த ராசிக்காரங்க எல்லாம் சோர்ந்து போயிட வேண்டாம்...திசா புத்தி நல்லாருந்தா ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தா நல்லதே நடக்கும்..



உங்கள் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானது. உங்கள் ஜாதகத்தை பார்த்து திசாபுத்தி என்ன நடக்கிறது என பார்த்து அதற்கேற்றார்போல நடந்துகொண்டால் இன்னும் சிறப்பு.உங்கள் ஜாதக பலனை அறிய மெயில் செய்யவும். ஜோதிடர் நல்ல நேரம் சதீஷ்குமார் கணித்த சிறப்பு ஜாதக பலன் மெயில் மூலம் அனுப்பப்படும்..உங்கள் ஜாதகம் அனுப்பி 5 கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ 500.

தொடர்புக்கு sathishastro77@gmail.com

k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971

வெள்ளி, 15 ஜூலை, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்


விருச்சிகம் ;விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு 11ஆம் இடம் லாபஸ்தானத்துக்கு வருகிறார்..இதுவரை குரு 10ல் இருந்து தொழிலை ஆட்டம் காண வைத்தார் ..ஜென்ம சனியும் உடன் சேர்ந்து படுத்தியது.இப்போது ஆற்றில் அடித்து செல்வோருக்கு பிடிக்க ஒரு மரக்கிளை போல குருபலம் வந்து அமைந்திருக்கிறது ..லாபத்தில் வரும் குரு ,உங்கள் பிரச்சினைகளை பெருமளவில் குறைப்பார்...மருத்துவ செலவுகள் குறையும் நோய் தீரும்.நன்பர்களால் ,மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்,

புகழ்,செல்வாக்கு அதிகரிக்கும் உறவுகள்,நண்பர்கள் பகை விலகும்.சந்தோசமான செய்தி தேடி வரும்.நீண்ட நாள் ஆசைகள் நிரைவேறும்.ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்சினை கட்டுக்குள் வரும்.இளைய சகோதர வகையில் நல்ல செய்தி கிடைக்கும்.மாமனார் வழி ஆதாயம் கிடைக்கும்.வீட்டை புதுப்பிப்பீர்கள் சிலர் இடம்,வீடு வாங்குவார்கள்.ராசிக்கு 5ஆம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைகளால் உண்டான கவலைகள் நீங்கும் சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்..ராசிக்கு 7ஆம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும் கூட்டு தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.

திருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வரவும்.

தனுசு;மூலம்,பூராடம்,உத்திராடம் சார்ந்த உங்களுக்கு ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு வருகிறார் ராசிக்கு 10ல் குரு வந்தால் தொழில் சார்ந்த மன உளைச்சல்கள் அதிகரிக்கும் காலம் ...சிலர் இடமாறுதல்கள் அடைவர். சிலர் வேறு பணிக்கு செல்ல முயற்சிப்பர்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்..வேலைப்பளு அதிகரிக்கும் காலம் என்பதால் ,ஏழரை சனிருப்பதால் கூடுதல் அலைச்சலும் இருக்கும்..

குரு ராசிக்கு தனஸ்தானத்தை பார்ப்பதால் வருமானத்துக்கு பங்கம் வராது...பணம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும் அதே அளவில் செலவுகளும் இருக்கும்...ராசிக்கு நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு,வாகனம் சார்ந்த செலவுகள் உண்டாகும் சிலர் புதுப்பிப்பார்கள். சிலர் வாங்குவார்கள் அதன் மூலம் எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை தந்தாலும் தாயார் வழி ஆதரவு இருப்பதால் சமாளிக்கலாம்..உடல்நிலையில் பாதிப்பு இருந்தாலும் 4ல் குரு பார்வை இருப்பதால் சுகம் உண்டாகும்..உறவினர்களுடன் விருந்து ,சுப நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள்..

கடன் நெருக்கடி இருப்போருக்கு குரு ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன் நெருக்கடி குறையும்...கடன் சுமை குறையும்..புதிதாக கடன் வாங்க வேண்டாம்...ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள் .நிறைவேற்ற இயலாது.கூட்டாளிகளால் லாபம் உண்டு தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்..

குலதெய்வம் கோயிலில் 16 விதமான அபிசேகம் செய்து வழிபட்டு வரவும்..


மகரம்;உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்துக்கு குரு வருகிறார்....இதுவரை ராசிக்கு எட்டில் அமர்ந்து பல எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வந்த குரு ராசிக்கு பாக்யத்தில் அமர்ந்து இன்பம் தரப்போகிறார் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பார்கள் ..காரணம் ,பலரும் ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும் ஒன்பதுல குரு இருப்பவர் மட்டும் தப்பி விடுவர் என்பதுதான் அந்தளவு சிறப்பு பெற்றது. ஒன்பதாம் இடத்து குரு.பல பிரச்சினைகள் ,நெருக்கடிகளில் இருந்து விடுபடப்போகிறீர்கள்...

ராசிக்கு குருபலம் வந்துவிட்டதால் பண பலமும் வந்து விடும்..செல்வாக்கு,புகழ் கூடும்...பகையாகிப்போன உறவுகள்,நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும். நோய் தீரும், கடன் சுமை குறையும். தொழிலில் சுறுசுறுப்பு உண்டாகும்....பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்..

குரு ராசியை பார்ப்பதால் மன இறுக்கம் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குரு ராசிக்கு 3ஆம் வீட்டை பார்ப்பதால் தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கும்..இளைய சகோதரரால் ஆதரவு கிடைக்கும்..வீடு,நிலம் வாங்குவீர்கள்..

ராசிக்கு 5ஆம் இடத்தை பார்ப்பதால் முன்னோர் வழி சொத்து பிரச்சினை தீரும் குலதெய்வ ஆசி உண்டாகும்...தடைகள் எல்லாம் நீங்கி எதிலும் வெற்றி பெறுவீர்கள்...திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்லபடியாக முடியும்..

ராசிக்கு 8ல் ராகு இருப்பதால் விஷப்பூச்சிகளால் கண்டம் உண்டாகாமல் இருக்க,புற்றுக்கண் கோயில் வழிபாடு அமாவாசை தோறும் செய்து வருவது நல்ல பலனை அளிக்கும்..

கும்பம் ;அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு மறைகிறார்.ராசிக்கு குரு மறைவது நல்ல பலன் தர வாய்ப்பில்லை...சில குழப்பங்களை தந்து விட்டே செல்வார்.அஷ்டமத்தில் குரு வர அவதிகள் நிரைய வந்து சேரும் என்ற முது மொழிக்கு ஏற்ப,காரிய தடைகள் நிறைய உண்டாகும்., புதிதாக எதையும் முயற்சிக்க வேண்டாம்..முதலீடுகள் ஆகாது...

நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது தொழில் காரணமாக குடும்பத்தை அடிக்கடி பிரிய நேரும்..பண நெருக்கடி அதிகரிக்கும் காலமாக இருக்கிறது தண்ட செலவுகள் அடிக்கடி வந்து பயமுறுத்தும்..வாகனங்களில் செல்கையில் அதிக எச்சரிக்கை ,மித வேகம் தேவை.

.ராசிக்கு 12ஆம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும்...விரய செலவுகள் கட்டுப்படும்..ராசிக்கு 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ,வீடு சார்ந்த சுப செலவுகள் உண்டாகும்..ராசிக்கு 2ஆம் விட்டை பார்ப்பதால் பண வரவு நன்ராக இருக்கும்...செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும்.. பயம்,கவலை,தாழ்வு மனப்பான்மை வேண்டாம்...வியாழன் தோறும் விரதம் இருந்து அருகில் உள்ள கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..

மீனம் ;பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஏழாம் ராசிக்கு குரு வருகிறார் இது குரு பலம் .இதுவரை பண சிக்கல்,தொழில் சிக்கல் என அவதிப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிரது.திருமணம் தடையாகி கொண்டிருந்தவர்களுக்கு அருமையான குரு பலம் பிறக்கிறது..தொழில் அபிவிருத்தி ஆகும்..புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும் பல வழிகளிலும் லாபம் வந்து சேரும் கடன்கள் முற்றிலும் அடையும்.கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் தங்கம் சேரும்.கல்வியில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர்.பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும்.சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவர்,

ராசிக்கு 11 ஆம் இடம் லாபத்தை குரு பார்ப்பதால் பங்கு வர்த்தகம்,நகைதொழில்,கல்வி துறை,வங்கி துறையில் இருப்போருக்கு நல்ல லாபம், முன்னேற்றம் உண்டு.சேமிப்பு அதிகரிக்கும்.மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்.தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்.பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.

ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .ஆரோக்கியம் உண்டாகும்..ராசியை குரு பார்ப்பதால் உற்சாகம் கூடும்.வேகம்,விவேகத்துடன் செயல்படுவீர்கள்...அஷ்டம சனியும் முடிஞ்சு ,குருபலமும் இருப்பதால் இனி தடையேதும் இல்லை...

மேசம் முதல் துலாம் வரை குருபெயர்ச்சி ராசிபலன் 

திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து வந்தால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் புதிய பாக்யம் கிடைக்கும்.


உங்கள் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானது. உங்கள் ஜாதகத்தை பார்த்து திசாபுத்தி என்ன நடக்கிறது என பார்த்து அதற்கேற்றார்போல நடந்துகொண்டால் இன்னும் சிறப்பு.உங்கள் ஜாதக பலனை அறிய மெயில் செய்யவும். ஜோதிடர் நல்ல நேரம் சதீஷ்குமார் கணித்த சிறப்பு ஜாதக பலன் மெயில் மூலம் அனுப்பப்படும்..உங்கள் ஜாதகம் அனுப்பி 5 கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ 500.

தொடர்புக்கு sathishastro77@gmail.com


வியாழன், 14 ஜூலை, 2016

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்

குரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்..

கன்னி ராசிக்கு மாறும் குரு உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் இருக்கிறார் அதனால் உங்கள் ராசிப்படி உங்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பார்ப்போம்...

அதிக ஆதாயம் அடையும் ராசியினர் -ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம் இவர்கள் ராசிக்கு குரு 2,5,7,9,11 என முழு சுப பார்வை செலுத்துவதால் இந்த ராசியினருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்...

மேசம் ;அசுவினி,பரணி,கிருத்திக நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு ஆறாம் இடம் ருண ,ரோக ,சத்ரு ஸ்தானத்தில் மாறுகிறார் ..இது நோய்,கடன் குறிக்கும் இடம்.ராசிக்கு 6ல் குரு செல்வது மறைவு ஸ்தானமாகும்..குரு என்பது செல்வாக்கை மதிப்பு ,மரியாதையை குறிக்கும்..

செல்வாக்கு மறைந்தாலும்,10 ஆம் இடம் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..தொழிலில் இதுவரை இருந்த சிக்கல்கள் குறையும்..ராசிக்கு இரண்டாமிடமாகிய தன ஸ்தானத்தை பார்வையிடுவதால் வருமானம் குறையாது..அதே சமயம் செலவுகள் அதிகமாகவே காணப்படும்.மருத்துவ செலவுகள் அதிகம் காணப்படும்.

வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை..பிறர் விசயங்களில் தலையிடுவதால் வீண் பகை உண்டாகும் காலம் இது..சிறு குழந்தைகள் மேச ராசியாக இருப்பின் கீழே விழுதல் ,அடிபடுதல் உண்டாக்கும்.திக பிடிவாதம் செய்வார்கள் ...படிப்பில் நாட்டம் குறைக்கும்.பெற்றோர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்..செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடவும்...புதிய முய்ற்சிகளை ,முதலீடுகளை தவிர்க்கவும்,கடன் வாங்குதலை முடிந்தளவு தவிர்க்கவும்.

ரிசபம் ;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.சேமிப்பு உயரும்,தங்கம் சேரும்.கடன் அடைபடும்.

கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.திருமண தடைகள் விலகும்.ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும்..வசீகரம் உண்டாகும்...5ஆம் பார்வையால் பாக்யத்தை பார்ப்பதால் குலதெய்வம் அருள் உண்டாகும்..குலதெய்வ கோயிலில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.தந்தையால் லாபம் கிடைக்கும்..நீண்ட நாள் அசைகள் நிறைவேறும்.லாபத்தை குரு பார்க்கும்போது நஷ்டம் உண்டாக வாய்ப்பே இல்லை.

திருப்பதி போய் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என திருப்பதி பெருமாளே உங்களை ஏதேனும் ரூபத்தில் திருப்பதி தரிசனம் காண வைப்பார்.

மிதுனம்;மிருகசிரீடம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களை சார்ந்த மிதுனம் ராசி நண்பர்களே...

இதுவரை உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தில் மறைந்து இருந்த குரு பகவான் இப்போது சுகஸ்தானத்திற்கு வந்திருக்கிறார்..சுகத்திற்காக செலவு வைக்கப்போகிறார்....மருத்துவ செலவு வைப்பாரா அல்லது வாகனம்,நிலம்,சொத்து வாங்க வைத்து சுப செலவாக வைப்பாரா என்பது திசாபுத்தி அடைப்படையில் மாறும் என்றாலும்...உங்க ராசிக்கும் கன்னி ராசிக்கும் ஒரே அதிபதி புதன் தான் என்பதால் நல்ல செலவையே வைப்பார்...

வாகனம் வாங்க யோசித்து கொண்டிருந்தவர்கள் வாகனம் வாங்குவார்கள் வீடு கட்டலாமா வேண்டாமா என குழம்பி கொண்டிருந்தவர்கள் தெளிவான முடிவுக்கு வந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு உண்டாகும் அதன் மூலம் அலைச்சல்,மன உளைச்சலை தவிர்க்க முடியாது இளைஞர்கள் வேறு ஊர்,நகரம்,மாநிலம் தொழிலுக்காக இடம் விட்டு இடம் மாறுவார்கள்

10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தொழிலில் நிரைய நல்ல மாறுதல்கள் உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும்.மதுரை மீனாட்சி வழிபாடு சிறப்பு.

கடகம் ;புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்களை சார்ந்த உங்களுக்கு இதுவரை இரண்டில் குரு பகவான் குரு பலமாக இருந்து வந்தார் .இப்போது ராசிக்கு மூன்றாவது வீட்டில் மறைகிறார்..இது நல்ல பலன் கொடுக்கும் ஸ்தானம் அல்ல.குரு மறைவது செல்வாக்கை குறைக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது..அதிக விரய செலவுகள் உண்டாக்கும்.பண முடக்கம் உண்டாகும் காலம் என்பதால் வருமானத்தை சிக்கனமாக செலவழிப்பது நல்லது.

பேச்சில் நிதானம் அவசியம்.தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நீங்கள் சில அசமயம் அதிகாரமாக பேசுவது உங்களை சுற்றி இருப்பவரை விலக செய்யும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.கடன் கொடுத்தாலும் சிக்கல் கடன் வாங்கினாலும் சிக்கல்.தொழிலில் முக்கிய முடிவு எடுக்கும்போது நன்கு யோசித்து செயல்படவும். மருத்துவ செலவு உண்டாகும் காலம் என்பதால் வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.தாய்க்கு மருத்துவ செலவு உண்டு..இட மாறுதல் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழியில் வர வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.தந்தையால் வருமானம் .

ராசிக்கு லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் விரய செலவுகள் இருந்தாலும் வருமானத்துக்கு தடையில்லை.ஏதேனும் ஒரு வழியில் வருமானம் வந்து சேரும்.திருச்செந்தூர் ஒரு முறை சென்று முருகனை வழிபட்டு வரவும்.

சிம்மம் ;மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரங்களை கொண்ட சிம்ம ராசியினருக்கு இதுவரை ஜென்மத்தில் குரு இருந்து படாத பாடு படுத்தினார் குரு ஜென்மத்தில் இருந்தபோது ராமர் வனவாசம் சென்றார்.அது மட்டும்தான் போகலை என புலம்பி வந்த உங்களுக்கு இனிய செய்தியாக குருபலம் கனிந்திருக்கிறது.

ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு வந்தால் பணம் பெருகும்.லாபம் குவியும்..வருமானம் பல மடங்காகும்..நல்லதெல்லாம் நடக்கும் கெட்டதெல்லாம் ஒழியும்...ஆசைப்பட்டது தானாக நடக்கும்.மதிப்பும்,மரியாதையும்,செல்வாக்கும் உயரும்.திருமண முயற்சிகள் கைகூடும்..தங்கம் சேரும்,.கடன்கள் அடையும்..பிரிந்தவர் ஒன்று சேர்வர். பதவி உயர்வு கிடைக்கும்.வீடு கட்டலாம்..வழக்கு சாதகமாக முடியும்.குழந்தை பாக்யம் உண்டாகும்.

ராசிக்கு 6ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன்கள் குறையும்.ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் தண்ட செலவுகள் வராது வட்டி கட்டும் நிலை இனி இருக்காது.அதிர்ஷ்டம் உண்டாகி, எதிர்பாராத வசூலாகாத பணம் வசூல் ஆகும்..பழனி முருகனை தரிசனம் செய்து வரவும்..

கன்னி ;உத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் குரு வருகிறார் ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே என அதிர்ச்சியாக வேண்டாம்..ஏழரை சனி முடிந்து விட்டது இந்த ஜென்ம குரு அதை விட பெருசா பாதிக்காது...ராசிக்கு ஜென்மத்தில் வந்து உட்காரும்போது தலையில் பாரம் இருப்பது போல அதிக சுமை உங்களை அழுத்தும்.பண நெருக்கடி,தொழில் நெருக்கடி,குடும்ப நெருக்கடி மூன்றும அதிக மன உளைச்சலை கொடுக்கும் காலம் என்பதால் ஜென்ம குரு பற்றி கெடுதலாக சொல்லப்பட்டிருக்கிறது...

ராசியில் குரு அமர்ந்தால் ராஜயோகம் என ஜோதிட விதி சொல்கிறது செல்வாக்கு உயர்ந்து அதன் மூலம் வரும் நெருக்கடி யாகவும் இருக்கலாம்...பெரிய பதவி கொடுத்து அதிக வேலைப்பளு கொடுப்பது போல இருக்கும்.வருமானமும் உண்டு. அதிக செலவினமும் உண்டு.குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும்..கோபம்,பிடிவாதம் விசயத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பகையை விலக்கலாம்..வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.புதிய முதலீடு செய்கையில் ஜாதகத்தை ஒரு முறை முழுமையாக ஜோதிடரிடம் ஆய்வு செய்த பின் முடிவு எடுக்கவும்..

ராசிக்கு 5,7,9ஆம் இடங்களை குரு பார்வை செய்வது நன்மையை வாரி வழங்கும் கடும் நெருக்கடிகள் ஏற்படாது அப்படி ஏற்படினும் பிப்ரவர் 2017 முதல் நான்கு மாதங்களுக்கு வக்ர குரு உங்கள் சோதனைகளை நிவர்த்தி செய்து வெற்றி தரும்..வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று வழிபட்டு வரவும்.

துலாம் ;சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரங்களை கொண்ட துலாம் ராசியினருக்கு இதுவரை லாபத்தில் இருந்து வந்த குரு ராசிக்கு 12ல் மறைகிறார்....துலாம் ராசிக்கு குரு கெட்டவர் அவர் மறைந்தால் நல்ல பலனையே கொடுப்பார் என சில நூல்கள் சொல்கின்றன...இருப்பினும் செல்வாக்கு,சொல்வாக்கு,பெரிய மனிதர்கள் ஆதரவு பெற்ற குரு மறைவது சுமாரான பலனையே கொடுக்க செய்யும் அதிக விரய செலவுகளை கொடுப்பார்.பாத சனி சில மருத்துவ செலவுகளை கொடுக்கும் வேளையில் அதற்கு குருவும் துணை புரிவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..முதலீடுகளை தவிர்க்க வேண்டும்..கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்க்க வேண்டும்.

வாகனத்தில் செல்கையில் எச்சரிக்கை தேவை உறவுகளிடம் கருத்து வேறுபாடு உண்டாக்கும்.. அதிக மனக்குழப்பம் காணப்படும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டை பார்ப்பதால் சொத்து பிரச்சினை தீரும்..தாய் வழி ஆதரவு உறவுகள் ஆதரவு கிடைக்கும்.

ராசிக்கு 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன்கள் அடைபடும்.வெளிநாடு முயற்சிகள் கைகூடும்..

ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.அது 2017 பிப்ரவரிக்கு மேல் அதிர்ஷ்டமான கலமாக இருக்கும்.

நாமக்கல் ஆஞ்சநேயரை சனிக்கிழமை நாளில் சென்று வழிபட்டு வரவும்.

விருச்சிகம்,தனுசு,மகரம் ,கும்பம்,மீனம் ராசியினருக்கான பலன்கள் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

உங்கள் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானது. உங்கள் ஜாதகத்தை பார்த்து திசாபுத்தி என்ன நடக்கிறது என பார்த்து அதற்கேற்றார்போல நடந்துகொண்டால் இன்னும் சிறப்பு.உங்கள் ஜாதக பலனை அறிய மெயில் செய்யவும். ஜோதிடர் நல்ல நேரம் சதீஷ்குமார் கணித்த சிறப்பு ஜாதக பலன் மெயில் மூலம் அனுப்பப்படும்..உங்கள் ஜாதகம் அனுப்பி 5 கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ 500.

தொடர்புக்கு sathishastro77@gmail.com



2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017

குரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று  காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவாசை அன்று குருப்பெயர்ச்சி நடக்கிறது...முப்பெரும் சிறப்பு பெறும் நாளாக ஆகஸ்ட் 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அமைகிறது..அதுவும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாளில் அமைவதால் கூடுதல் நன்மை..குருப்பெயர்ச்சி 2016-2017  எல்லோரும் நன்மைகள் வாரி வழங்கிட பிரார்த்திக்கிறேன்..
குரு முழுமையான சுப கிரகம்...குரு மஞ்சள் நிற ஒளியை அதிகம் பூமியில் செலுத்துகிறது....மனிதனுக்கு நுணுக்கமான சிந்தனை ஆற்றலை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது குரு கிரகத்தில் இருந்து வரும் மஞ்சல் நிறக்கதிர்களும்,சூரியனில் இருந்து வெளிப்படும் சில கதிர்வீச்சுகளும் இனைந்துதான் பூமியில் உயிர்களின் பிறப்பு நிகழ்கிறது..அது வளர்வதற்கான சக்தியை சந்திரனும்,சூரியனும் தருகிறார்கள்...மனித மூளையின் நுட்பமான அறிவாற்றல் செயல்பட குரு முக்கிய காரணம்..குரு வானில் நல்ல நிலையில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் ஆன்மீகவாதிகளாகவும்,மகான்களாகவும்,அதிமேதாவிகளாகவும் ,புத்திசாலிகளாகவும் இருக்கிறார்கள்..

குருவின் அதிக கதிர்வீச்சு பெறுவது மஞ்சள்...அதை நாம் புனிதமான கிழங்காக பார்க்கிறோம்..பெண்களுக்கு குருவின் சக்தி கிடைக்க வேண்டும் நல்ல தெளிந்த அறிவை பெற வெண்டும் என மஞ்சளை அதிகம் உபயோகிக்கிறோம்...குரு அருள் கிடைக்கும்,இஷ்டதெய்வ அருளாசி கிடைக்க மஞ்சள் நிறத்தை அதிகம் உபயோகிக்றோம்..

குரு ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் நல்ல மேன்மையான குழந்தைகள் கிடைப்பர்...குழந்தைகள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவர் முரட்டுத்தனம் இல்லாமல் இரக்க குணத்துடன் இருப்பர்.எல்லோருக்கும் உபகாரமாக இருப்பர்.

குரு வின் மனிதர்களுக்கு தரும் முக்கியமான குணம் அன்பு,அமைதி,இரக்கக்குணம்,மனிதாபிமானம்,நல் சிந்தனை ,நுணுக்கமான பார்வை ,நல்ல குழந்தைகள்,சமூகத்தில் அந்தஸ்து ஆகியவை ஆகும்...நம்ம ராசிக்கு குரு வானில் எங்கு இருக்கிறாரோ அப்போதெல்லாம் நமக்கு மேற்க்கண்ட பலன்கள் கிடைக்கும் என்றும் நம்பலாம்..பிறப்பு ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலும் கோட்சாரத்தில் குரு ராசிக்கு நல்ல நிலையில் வரும்போது நிச்சயம் நல்ல பலனை தருவார் அதனால்தான் எல்லோரும் ஆர்வமாக குருப்பெயர்ச்சி பலன்களை எதிர்பார்க்கின்றனர்,.

குரு பகவான் கன்னி ராசிக்கு புதன் வீட்டிற்கு செல்வதால் கல்வி ,வியாபாரம்,கலைத்துறையில் இருப்போருக்கு இது பொன்னான காலம் என்றே சொல்ல வேண்டும்....கல்வித்துறையில் நிறைய நல்ல மாற்றங்கள் உண்டாகும்..கலைத்துறையில்  உலகம் வியக்கும் வண்ணம் புதிய கலைஞர்கள் தோன்றுவார்கள்...பாடத்திட்டங்களில் எல்லோரும் எதிர்பார்க்கும் மாறுதல்கள் அரசால் மேற்கொள்ளப்படும்..ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி செல்வை ஏற்பதும்,அவர்களுக்கு கல்விக்கு உதவி செய்வதும் மாபெரும் புண்ணியமாக பலன்கள் தரும்.

கன்னி ராசிக்கு மாறும் குரு வால் அதிகம் ஆதாயம் அடையும் ராசியினர் யார்..? 

குருபலம் பெறும் ராசியினர் யார்..?


ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம்


 ரிசபம் ராசியினருக்கு ராசிக்கு ஐந்தாம் ராசிக்கு குரு வருகிறார்...இது குருபலமாகும்...-எங்கும் எதிலும் வெற்றி,நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்..

சிம்மம் ராசியினருக்கு தன குடும்ப ஸ்தானத்தில் குரு வருகிறார்...கடன் பிரச்சினைகள் தீர்க்கும் வருமானம் அதிகரிக்கும்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபஸ்தானத்தில் குரு வருகிறார் லாபம் அதிகரிக்கும் வருமானம் உயரும்,.கடன்கள் அடைபடும்...தொழில் சிக்கல் தீரும்.

மகரம் ராசியினருக்கு பாக்யஸ்தானத்தில் குரு வருகிறார் இதுவரை அமையாத பாக்யம் ஒன்று அமையும்...கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று கிடைக்கும்...தெய்வ அருள் உண்டாகும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிந்த பின்னர் வரும் நல்ல காலம்.7ல் வரும் குரு பகவான் தொழில் சிக்கல்களை நீக்கி உயர்வை கொடுப்பார்..

மேற்க்கண்ட ராசியினர் தொழில் தொடங்க தடையில்லை..ஜாதகத்தில் திசாபுத்தி எப்படி இருக்கிரது என பார்த்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது..திருமணம் ஆகாத மெற்க்கண்ட ராசியினருக்கு திருமண முயற்சிகள் கைகூடி வரும்..பதிவு பெரிதாக போய்க்கொண்டிருப்பதால் இன்னொரு பதிவில் இன்னும் விளக்கமாக எழுதுகிறேன் இது குருப்பெயர்ச்சிக்கான முன்னுரை என எடுத்துக்கொள்ளுங்கள்.

இதன் தொடர்ச்சி கீழே உள்ள லிங்கில் உள்ளது..

மேசம் முதல் துலாம் ராசி வரை விரிவான பலன்கள்

மற்ற ராசியினர் அனைவருக்கும் விரிவான பலன்கள் விரைவில் எழுதுகிறேன்...அதனால் நமக்கு அதிக கெடுபலன் என எந்த ராசியினரும் நினைக்க வேண்டாம்...தனித்தனி ராசிபலன்கள் விரைவில் வெளியாகும்..குரு அதிலும் சில நன்மைகளை குருபலம் இல்லாதவருக்கு கொடுப்பார் அதன் சூட்சுமங்களை விளக்கி எழுதுகிறேன்...

ஆடி அமாவாசை ஆகஸ்ட் 2ஆம் நாள் வருகிறது..அன்றே குருப்பெயர்ச்சி அன்றைய நாள் வழக்கம்போல ஆதரவற்ற குழந்தைகள்,முதியோர்களுக்கு அன்னதானம் ,மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குகிறோம்..வழக்கம் போல இந்தாண்டும் உங்கள் ஆதரவை வழங்கிட நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...மெயில் அனுப்புங்கள் அல்லது என் செல்லில் தொடர்பு கொள்ளுங்கள்.நன்றி..

கண் திருஷ்டியை விரட்டக்கூடிய,செல்வவளம் தரும் மூலிகை சாம்பிராணி புதிதாக தயாரிக்கப்பட்டு நண்பர்களுக்கு அனுப்பி வருகிறேன்..தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்...


புதன், 13 ஜூலை, 2016

ஆடி மாசம் என்ன விசேஷம்..? இதுவரை அறியப்படாத தகவல்கள்

 வரும் சனிக்கிழமை ஆடி மாசம் பிறக்குது...ஆடி 1 தலையாடி என சொல்வாங்க...ஆடி மாசம் சூரியன் கடகம் ராசியில் நிற்கும்...அது சந்திரனின் ராசி...தாயும் தந்தையும் ஒண்ணா இருப்பது போல...ஆனாலும் சந்திரன் நீர் கிரகம்,மென்மையான கிரகம் ஆச்சே..சூரியனின் வெப்பம் தாங்குமா...தண்ணீருக்குள் நெருப்பை போட்டால் கொதிக்குமே...


ஆடி மாசத்தில் தொற்று நோய்கள் நிறைய உருவாகும்...சின்ன பூச்சிகள் ,எறும்புகள் தொல்லை அதிகம் காணப்படும்..பூமிக்குள் இருக்க முடியாமலோ என்னவோ.நுண் கிருமிகள் காற்றில் அதிகம் பரவும்.அதனால் அம்மன் அவதாரம் எடுக்க வேண்டிய காலமாகிறது....

அம்மனுக்கு வேப்பிலை சாற்றி ,மஞ்சளால் குளிப்பாட்டி பூஜை செய்கிறோம்..இவையெல்லாம் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகள் என அறியவும்., அம்மனை வழிபட உகந்த மாதம் ஆடி மாதம்.

 ஒரே நாளில் 3 விசே‌ஷங்கள்:

ஆகஸ்டு 2–ந்தேதி
ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி
இந்த வருடம் ஆகஸ்டு 2–ந்தேதி அன்று ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி போன்ற முக்கிய 3 விசேஷங்களும் சேர்ந்து வருகிறது.

ஓவ்வொரு மாதமும் அமாவாசை வருவது இயல்பு. இதேசமயம் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையை சிறப்பாக போற்றுகிறார்கள்.
இந்த நாளில் சிவலாயங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சதுரகிரிமலை, ராமேசுவரம், அழகர் கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் குவிவார்கள். மேலும் மறைந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்பணம் செய்யக் கூடிய நாளாகவும் ஆடி அமாவாசை திகழ்கிறது.

ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசே‌ஷத்திலும் விசே‌ஷமாகும். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிக்கு ஏற்ப இந்த நன்நாளில் கிராமங்களில் பெரும்பாலோனோர் தங்களது வீடுகள் முன்பு உள்ள காலி இடங்களில் விதைபோட்டு (பயிர்குழிஅமைத்து) வீட்டு தோட்டம் போடுவார்கள். மேலும் விவசாயத்திற்கு உகந்த நாளாகவும் போற்றப்படுகிறது.

இதே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த கள்ளழகருக்கு தீர்த்த உற்சவம் நடைபெறுவதும் தனி சிறப்பு. இதோடு சாமியாடிகள் மற்றும் பக்தர்கள் அழகர்கோவிலில் நூபுரகங்கையில் தீர்த்தமாடி வீடுகளுக்கு புனித தீர்த்தம் எடுத்து செல்வார்கள்.

 --------------------------------------------
 
 நம் உடல் செல்கள் சிதையாமல் பாதுகாப்புடன் இருக்க ,ஆடி மாதத்தில் சீதோஸ்ண நிலை மாறுவதால் ,நெஞ்சுசளி ,காய்ச்சல் போன்ற அவதிகளில் இருந்து தப்பிக்க ஒரு வழி...

காபி,டீ குடிப்பதற்கு பதிலாக இதை பயன்படுத்தவும்...

கொத்தமல்லி யை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.காய்ந்த இஞ்சியை சுக்கு தோலை நீக்கி விட்டு தட்டி பொடியாக்கிக்கொள்ளவும்...பனை வெல்லம் வாங்கி வைத்துக்கொள்ளவும்..மூண்றையும் தன்னீரில் போட்டு கொதிக்க வைத்து அதை காலை மாலை அருந்தவும்..வாசனைக்காக ஏலக்காய் சேர்க்கலாம்...இவற்றை பொடியாக்கி வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்..

காபி,டீ குடிக்கும்போது நல்லாருக்கும்.ஆனால் விரைவில் நரம்புகள் தளர்ந்து விடும்....செல்கள் சிதையும் .செல்கள் சிதைந்தால் முதுமை தோற்றம் விரைவில் வந்து விடும்..

பால் சேர்க்காமல் குடிப்பது நல்லது...வர சுக்குமல்லி காபி இதுதான்...

-நல்ல நேரம் சதீஷ்குமார்