புதன், 3 ஆகஸ்ட், 2016

ஆடி அமாவாசை அன்னதானம் 2016

ஆடி அமாவாசை அன்னதானம் 2016

நேற்று முப்பெரும் திருவிழாவாக அமைந்து விட்டது....ஆடி 18க்கு நிறைய பெண்கள் ஆற்று மணலில் கன்னிமார் பொம்மைகள் செய்து காதோலை கருகமணி வைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்...அம்பிகை கருவுற்றிருப்பதாக ஐதீகம் என்பதால் ஆடி 18 ஐ,காவிரிப்பெண்ணுக்கு பூஜித்து வழிபட்டனர் இன்னும் பல பெண்கள் ..புதுத்தாலி கட்டிக்கொண்ட புதுத்தம்பதிகள் இன்னொரு பக்கம் என ஆடி 18 காவிரி,தாமிரபரணி ,பவானி நதிக்கரைகளில் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது..

குருப்பெயர்ச்சி என்பதால் காலை முதல் யாகங்களும்,வழிபாடுகளும் என சிவ ஆலயங்கள் அமர்க்களப்பட்டன...நான் நமது நண்பர்கள் அவர்கள் குடும்பத்தார் உட்பட அனைவரும் நலம் வாழ சிறப்பு அர்ச்சனை வழிபாட்டுக்கு இரண்டு கோயில்களில் பெரிய பெயர் லிஸ்ட் கொடுத்து ,மலர் மாலைகள் கொடுத்து பூஜைக்கு ஏற்பாடு செய்தேன்.பாவம் ஐயர்கள் கூட்டத்தில் யாரை கவனிப்பது என திணறிக்கொண்டிருந்தனர்.

ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பனம் புஜை பவானி ,கொடுமுடி ,திருச்சி அம்மா மண்டபத்தில் மக்கள் வரிசை கட்டி அமர்ந்திருந்தனர்...பிராமணர்கள் முறைப்படி மந்திரம் சொல்லி திதி கொடுக்க முடியாத அளவு திதி நெரிசல் அதிகம் இருந்தது....









ஒவ்வொரு முக்கிய கோயில்கலிலும் லட்சக்கணக்கான மக்கள் என தமிழகம் முழுக்க எல்லா கோயில்களிலும் மக்கள் வெள்ளம்தான்..நிம்மதியாக தரிசனம் செய்வது அரிது என்றாலும் ,நல்ல நாளில் கோயிலுக்கு போகாமல் இருந்து நமக்கு பழக்கமில்லையே ...கோயிலில் கால் வைத்து விட்டு வந்தால் போதும் என்ற மனநிலைதான் நேற்று எல்லோருக்கும் இருந்திருக்கும்...
காவிரி போன்ற புனித நதிகளில் நீராடினாலே பெரும் புண்ணியம் என்பதால் நேற்று அதிகாலையில் காவிரியில் குளித்து சூரியனை சிவமாக பாவித்து வந்தாலே மிக சிறப்பு.

அன்னதானம் செய்வதாக நாம் சொன்னதும் வழக்கமாக அன்னதானம் செய்ய நன்கொடை அளித்து உதவும் நண்பர்கள் ,இந்த முறையும் நன்கொடை அனுப்பி நன்றாக செய்யுங்கள் என ஊக்கமளித்தனர்.புதிய நண்பர்களும் இணைந்து கொண்டனர்.

ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் இரண்டு ,ஊனமுற்ற குழந்தைகள் ,கண் பார்வையற்றோர் க்கு ஆடி அமாவாசை அன்று அன்னதானம் செய்யப்பட்டது..

நன்கொடை வழங்கிய நண்பர்கள் அவர்களது குடும்பத்தினர் பெயரில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபவான் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை வழிபாடு பிரார்த்தனை செய்யப்பட்டது...அடுத்த அன்னதானம்,ஆடைதானம் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்று நடைபெறும்.

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Good!! Nice Thing to do on the auspicious days. May God Bless you all
Jupiter Transit Homam