செவ்வாய், 24 ஜனவரி, 2017

தை அமாவாசை அன்னதானமும்,வஸ்திரதானமும் 27.1.2017


தை அமாவாசை அன்னதானம் 2017

நணபர்களே வணக்கம் ,

முன்னோர்களுக்குரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை. இந்தநாளில் முன்னோர்களை நினைத்து புனித நீர் நிலையில் தர்ப்பணங்கள் செய்தால் பிதுர்தோஷம் நிவர்த்தியாவதுடன், முன்னோரின் ஆசியும் கிட்டுமென்று தர்மநூல்கள் கூறுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் மிகவும் சிறப்பானவை. இதில் மகாளயபட்ச அமாவாசையென்று சொல்லப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கு கூடுதல் சிறப்புண்டு.
அது என்னவென்றால், அமாவாசை திதியில் மட்டுமின்றி, அதற்கு முன்னுள் தேய்பிறை நாட்கள் அனைத்திலுமே முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த பூர்வபட்ச நாட்களில் நம் மூதாதையர் பூமியை மிக நெருங்கி வருவதாக ஐதீகம்..



அன்றைய நாளில் நம் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்..நம் துன்பங்கள் தீரும்..இத்தயக புண்ணிய நாளில் தான தர்மம் செய்வதும் அன்னதானம் செய்வதும் அளவில்லாத நன்மைகளை வாரிவழங்கும் பல மடங்கு புண்ணியத்தை தரும்...அன்னதானம்,வஸ்திரதானம் மட்டுமே நம் உயிரை காக்கும்.

அன்றைய நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் ,உடல் ஊனமுற்றோர்களுக்கும் அன்னதானம்,ஆடை தானம் 5 வது ஆண்டாக இந்த ஆண்டும் செய்ய இருக்கிறோம்..நண்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம் உங்களால் முடிந்தளவு அவர்களுக்கு உதவி செய்யலாம்...நமது பழைய பதிவுகளை பாருங்கள்..போன வருட தை அமாவாசை அன்னதானம் படங்கள்,செய்திகள் கிடைக்கும்..

கலந்து கொள்ள விரும்புவோர் மெயில் அனுப்ப sathishastro77@gmail.com

நன்கொடை அனுப்ப;

k.sathishkumar 20010801181 State bank of India ,chithode,Ifsc;sbin0000971

தை அமாவாசை அன்னதானம் அப்டேட்;

தை அமாவாசை அன்று ஆதரவற்ற முதியோர்கள் ,குழந்தைகள்,ஊனமுற்றோர் 200 பேருக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் வழங்கப்பட்டது ஒத்துழைப்பு நல்கிய பங்களிப்பு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...நண்பர்கள் குடும்பத்தார் பெயரில் சங்கமேஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சனை அபிசேகம் வழிபாடு செய்யப்பட்டது..









கருத்துகள் இல்லை: