செல்வவளம் பெருக்கும் அற்புத நாள்
ஆன்மீக சூட்சும வழிபாடு செய்து வரும் பெரியவரின் நட்பு கிடைத்தது .முறையான வழிபாடு இல்லாததால் நம் வேண்டுதல்கள் கோயில்களில் நிறைவேறுவதில்லை..கோயிலுக்கு செல்வதில் திதி ,நட்சத்திரம் மிக முக்கியம் என சொல்லி பல விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..அதில் முக்கியமான ஒன்று வளர்பிறை சஷ்டி வழிபாடு ..
செல்வம் பெருகவும் கடன் தீரும் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்து முன்னேற்றம் உண்டாகவும் இந்த வழிபாட்டை முறையாக செய்ய வேண்டும்
நாளை 23.3.2018 முக்கியமான நாள்..செல்வபெருக்கு நட்சத்திரமான ரோகிணி....சுக்கிரன் வீட்டில் உச்சம் ஆகும் சந்திரன் நாளாகும் ..மகாலட்சுமி அனுகிரகம் நிறைந்த நாளாகும்..அந்நாளில் வளர்பிறை சஷ்டி அமைவது மிக அபூர்வம்.இந்நாளில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் முருகன் சன்னதிக்கு காலை 6.30 முதல் 7.30க்குள் சுக்கிரன் ஓரையில் சென்று முருகனை வழிபட வேண்டும்..
முதல் தரமான நெய் மண் செட்டி விளக்கில் விட்டு தீபம் 6 ஏற்றி முருகனுக்கு முல்லை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ பெருக்கு உண்டாகும்....கடன் பிரச்சினைகள் குறையும்..சித்தர்கள் ஜீவ சமாதியில் இதனை செய்து ரோஜாமாலை அணிவித்து கல்கண்டு படைத்து வழிபட்டால் இரு மடங்கு பலன் கிடைக்கும்..!!