சனி, 25 ஏப்ரல், 2020

அழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..? ஜோதிடம்


நல்ல மனைவி /கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும்,
ஏழாமிட அதிபதியும் கேந்திரம்(1,4,7,10)  மற்றும் கோணமேறி(1,5,9) ஆட்சி,உச்சம் பெற்று பாவிகள் பார்வையற்று சுப நட்சத்திரசாரம் பெற வேண்டும்.


( இதில் சில விதிவிலக்கு: மீனம்,மிதுனம்,கன்னி மற்றும் தனுசு ராசிகளான உபயராசிகளில் ஏழாம் அதிபதி  ஆட்சி,உச்சம் பெறாமல் வேறு மாதிரியான சூட்சும வலு பெறுதல் சுகம்.ஏனெனில் இந்ராசிகாரர்களுக்கு பாதகாதிபதியாகவும், அதேநேரத்தில்
கேந்திராதிபத்திய தோஷமும் பெற்றுவிடுகிறது.

உதாரணமாக
மீன ராசிக்கு ஏழாமிடத்தில் புதன்
ஆட்சி உச்சம் பெற்றாலும் திருமணவாழ்வில் சில பாதிப்பு இருக்கவே செய்கிறது)

அதேபோல் இரண்டாமிடத்திலும்,ஏழாமிடத்திலும் மற்றும் சுக்கிரனுடனும் பாவிகள் இணைவு,சேர்க்கை அற்று இருக்க வேண்டும்.
பெண்ணாக இருப்பின் செவ்வாயும்
பாவிகள் சேர்க்கை அற்றும் இருக்க
வேண்டும்.

                      அழகுடைய மனைவி  அமைய:


ஓருவர்  எவ்வளவுதான் அழகற்றவராகவும் இருந்தாலும்
தனக்கு வரும் மனைவி /கணவன் மட்டும் அழகுடையவராக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அழகற்றவர்களுக்கு அழகான மனைவி அமைவதும்,அழகானவர்களுக்கு அழகற்ற மனைவி அமைவதும் ஜாதகத்தில்
உள்ளபடியே நடக்கிறது.

ஒருவரின் முகதோற்றம், அழகு,நிறம்  இவற்றை நிர்ணயிப்பது
லக்கனம்,ராசி மற்றும் இரண்டாம்
பாவம்  அதில்  இருக்கும் கிரகம்,
அதன் அதிபதி  அந்த இடத்தை பார்க்கும்  கிரகம்.

8-ம் பாவத்தில் ஆட்சி,உச்சம் பெற்ற

கிரகம் ,8-ம்  அதிபதி ஆட்சி,உச்சம்
பெற்றாலும்,எட்டாமிடத்தை ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம் பார்த்தாலும்
அழகான மனைவி அமைவாள்.

ஏழாம் வீடு சுப கிரகத்தின் வீடாகவும்,
1,4,7,10,5,9  வீடுகளில் சுப கிரகமாகிய சுக்கிரன்,புதன்,குரு,வளர்பிறை சந்திரன்  அமர்ந்து காணப்பட்டால் அழகுடைய மனைவி
அமைவாள்.
  
                     




அழகற்ற மனைவி அமையக்காரணம்;

*******************

சுக்கிரனுடன் பாவ கிரகம் சேர்ந்தாலும்,அவை நிற்கும் ராசிக்கு
ஏழாமிடத்தில் பாவிகள் நின்றாலும்
அழகற்ற மனைவி அமைவாள்.

அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்யும் யோகம்
+++++++++++++++++++++++++++++

  மூன்றாம் அதிபதி லக்கனத்திற்கு
6 அல்லது 8 அல்லது அதன் அதிபதிகளுடன் இணைந்தாலும்,6,8-ம் பாவங்களை பார்த்தாலும்
அயல்நாட்டு பிரஜையை திருமணம்
செய்துகொள்ளும் யோகமாகும்.
          
                       

திருமணத்திற்கு பிறகு அயல்நாடு

செல்லும் யோகம்:

************************"*"**""*
 
திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்பட காரணம்
2-ம் அதிபதி  11- மிடத்திலும்,
11 ம் அதிபதி 2-ல் இருந்தாலும்,8-ம் அதிபதி 2-ல் இருந்தாலும் ,பார்த்தாலும்
எட்டாம்  அதிபதி  ஏழில் இருந்தாலும்,பார்த்தாலும்  ஏற்படுகிறது.

                  

ஊனமுற்ற மனைவி வாழ்க்கை துணையாக காரணம்

+++++++++++++++++++++++++++
   ஓரு பெண்  அல்லது ஆண் ஜாதகத்தில் 5,7,9  ம் வீடுகளில் சூரியன்,சுக்கிரன் அமர்ந்து காணப்பட்டாலும் அல்லது சுக்கிரன்,செவ்வாய் அமர்ந்து காணப்பட்டாலும் வாழ்க்கை துணை ஊனமாக அமைய வாய்ப்பு அமைகிறது.


செல்வந்தர் வீட்டுப்பெண் அல்லது ஏழை வீட்டுப்பெண் மருமகளாக வரக்காரணம்:

ஏழாம் வீட்டு அதிபதி  மிகவும் பலம் பெற்று காணப்பட்டால் தன்னிலும்
அதிக செல்வாக்கு பணமுடைய பெண் மனைவியாக அமைவாள்.
அதேநேரத்தில் ஏழாம் வீட்டு அதிபதி
பலம் குறைந்து காணப்பட்டால்
தனக்கு அமையும் மனைவியானவள்
தன்னை விட கீழ் நிலையில் உள்ளவளாகவும்,அதேநேரத்தில் ஏழையாகவும் இருப்பாள்.

                விதவையை திருமணம் செய்யும் யோகம்

ஏழில் செவ்வாய்,சுக்கிரன் அமர்ந்து
காணப்பட்டாலும்,ஏழாம் வீட்டு அதிபதி சனியாகி 6,8,12 ல் அமர்ந்தாலும் விதவையையோ அல்லது பிறரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மனைவியாக
அமைவாள்.

பரிவர்த்தனை யோகம் ஜோதிடம்


பரிவர்த்தனை யோகம்


ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான யோகங்கள் இருக்கின்றன. பொதுவாக, இரண்டு கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தாலே அந்த ஜாதகர் புகழ்பெற்று செல்வாக்குடன் விளங்குவார். குறிப்பாக, லக்னாதிபதி, பூர்வ புண்ணியஸ்தானாதிபதி, பாக்கியஸ்தானாதிபதி ஆகியோர் பலம் பெற்று உச்சநிலையில் இருந்தால், அவர்களுக்கு நல்ல நல்ல பலன்கள் நாளும் நடக்கும்.  இவை தவிர,  கஜகேசரி யோகம், நீச பங்க ராஜயோகம்,  தர்மகர்மாதி யோகம், பரிவர்த்தனை யோகம் என்று பலவிதமான யோகங்கள் சொல்லப்படுகின்றன. 'பரிவர்த்தனை யோகம்' பற்றி இப்போது பார்ப்போம்.


பரிவர்த்தனை யோகம் என்றால்,  இரண்டு கிரகங்கள் பரஸ்பரம் இடம் மாறி இருப்பதாகும். இரண்டு கிரகங்கள் ராசி மாறி அமர்ந்திருந்தால், அது பரிவர்த்தனை யோகமாகும். உதாரணமாக, மேஷத்துக்குரிய கிரகமான செவ்வாய்  மகரத்திலும்,  மகரத்துக்குரிய கிரகமான சனி மேஷத்திலும் இருந்தால் பரிவர்த்தனை.



இப்படி கிரகங்கள்  மாறி அமையும்போதுஅவற்றின் சக்தியும் வலிமையும்  கூடும். அப்படி மாறி அமைந்த கிரகங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தும் வலிமை வாய்ந்தவை. சுபகிரகங்கள் பரிவர்த்தனைப் பெற்று இருந்தால் சுபயோகத்தையும், அசுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவதால் அசுப பலன்களையும் தரும்.

பரிவர்த்தனை  யோகம் மூன்று வகைப்படும்.
1) சுப பரிவர்த்தனை யோகம்:  1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்கு உரிய அதிபதிகளில் எவரேனும் இருவர் இடம் மாறி இருந்தால்ஜாதகருக்கு சொந்த வீடு, நிலபுலன்கள் அமையப்பெற்று செல்வாக்கோடு திகழ்வார்.

2) தைன்ய பரிவர்த்தனை: தைன்ய பரிவர்த்தனை என்பது ஜாதகக் கட்டத்தில் மறைவு பிரதேசங்களான 6, 8, 12-ம் இடங்களுக்குரிய ஆட்சி கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால், கிரகம் பாதிப்புக்குள்ளாகி ஜாதகருக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்

 3) கஹல பரிவர்த்தனை: கஹல பரிவர்த்தனை என்பது மூன்றாம் இடத்துக்குடைய கிரகம் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ம் இடத்தில் இருந்து, அந்த இடங்களுக்கு உரிய கிரகம் 3-ம் இடத்தில் இருந்தால், அது சுப பலனாக அமையும். உப ஜெயஸ்தானமான 3-ம் இடத்தின் தைரியம், சம்பந்தப்பட்ட அந்தக் கிரகத்துக்குக் கிடைக்கும். இதனால், ஜாதகர் பல வெற்றிகளை அடைவார்.

பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள், ஒன்றை ஒன்று பார்க்கும்போது சுபகிரகங்களான  குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் சுப பலனைத் தரும். அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய்
சனி, ராகு, கேது, தேய்பிறை சந்திரன் ஆகியோர் ஒன்றை ஒன்று பார்க்கும்போது அசுப பலன்களையே தருவார்கள். குறிப்பாக செவ்வாய்,  சனி  ஒன்றையொன்று பார்ப்பது, சூரியன், சனி ஒன்றையொன்று பார்ப்பது ஆகிய தீய கிரகங்கள் பார்க்கும்போது அளவு கடந்த கோபமும் ஆத்திரமும் மிகுந்து மனம் தவறான வழிகளில் செல்லும்.



சில வித்தியாசமான பரிவர்த்தனைகளைப் பார்ப்போம்.

 2-ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்கு பல வழிகளிலும் பணம். வரும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் செலவழிப்பார்.

6 - ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகர் தனது செல்வத்தையெல்லாம் இழக்கவேண்டிய நிலை வரும்.

2-ம் இடத்தின் அதிபதியும் 9-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகரை அதிர்ஷ்டம் தேடி வரும். சகல சௌபாக்கியங்களையும் அனுபவிப்பார். மிகுந்த புத்திசாலியாக இருப்பார். இவருக்கு நிறைய பேர் அபிமானிகளாக இருப்பார்கள்.

லக்னாதிபதியும்  5 -ம் இடத்துக்கு உடையவனும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்குப் பெயரும் புகழும் நிலைத்திருக்கும்.

லக்னாதிபதியும் 10 -ம் இடத்துக்கு உடையவனும் பரிவர்த்தனை பெற்றால்அரசியலில் புகழ் பெற்றுத் திகழ்வார்