புதன், 22 ஜூலை, 2020

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021
புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார்கள் .கொரானா அப்போது தன் முழு பலத்தை இழக்கும்.
ரிசபம் ராசிக்கு ராகு ராகு வருகிறாரே அதனால் ரிசபத்துக்கு கெடுதலா? இல்லை.ரிசபத்துக்கு இதுவரை இரண்டில் இருந்தார் அதுதான் கெடுதல்.கூடுதல் கடன்,தொழில் முடக்கம்,பண முடக்கம்,குடும்பத்தில் அமைதி குறைவு ,கண்,பல் சார்ந்த பிரச்சினை ,கொடுத்து வந்தார் இப்போது ராசிக்கு வருவதால் அதிக தைரியம் தன்னம்பிக்கை கொடுப்பார் அப்போ விருச்சிகத்துக்கு அதே பலன் தான் கேது ராசிக்கு இரண்டில் இருந்தார் குடும்ப பிரிவு அவமானம் நட்டம்,தோல்வி,பேச்சால் பகை ,கணவன் மனைவி உறவு பாதிப்பு இருந்து வந்தது இனி அமைதியும் ஞானமும் கிடைக்கும் உண்மை புலப்படும்.பிரச்சினைக்கு எது காரணம் என்பது புரிய வரும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ராசிக்கு எட்டில்,நான்கில் ,இரண்டில், ராகு கேது வருவது சிறப்பான பலன்களை தருவதில்லை.எட்டில் ராகு வருவது விசப்பூச்சிகள் விசக்கடி கெட்டுப்போன உணவால் அரோக்கியம் கெடுதல் முறையான கணக்கு வழக்கு இல்லாது அரசாங்கத்தால் சிக்கல், லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்வது, பேப்பரில் பெயர் வருவது எல்லாம் எட்டில் ராகுதான் .எட்டுல ராகு பொட்டுல அடிபடும் வாகன கண்டம் ...எனவே கூடுதல் கவனம் தேவைப்படும் ராசி துலாம் .இது வாகன ராசி என்பதால் வாகனத்தாலும் ஆண் பெண்ணாலும் அவமானம் உண்டாகும் ..மேசத்துக்கு எட்டில் கேது கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவினம் எட்டுல ராகு போனால் எட்டாமிடம் பாதிக்கும் உடல் உறுப்பில் எட்டாமிடம் பெண்களுக்கு கர்ப்பபை.ஆண்களுக்கு சிறுநீரகம் இருவருக்கும் பொதுவான உறுப்பு முதுகுஎலும்பின் கீழ் முடிச்சு.அதாவது இடுப்பு பகுதி.இவை சார்ந்த பகுதிகள் எட்டில் ராகு போகும்போது பாதிக்கவே செய்யும்
ராகு திசை ஜாதகத்தில் நடந்தால் பாதிப்பை தராமல் செல்லாது.உங்களுக்கு ஏற்கனவே ரிசபம் ராசியில் சனி,செவ்வாய்,சூரியன் இருப்பின் பாதகம் அதிகமாக கூடும்.எட்டுல ராகு வந்தாலும் இரண்டில் கேது வருகிறார் வருமானம் கொடுப்பார்.கேது கொஞ்சம் வெளிச்சம் தருவார்.இது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவே சொல்லப்படுவதாகும் அரசு பதவில் இருக்கும் துலாம் ராசியினர் தொழில் துறையில் புகழ் பெற்றவர்களாக இருப்பவர்கள் கணக்கு வழக்குகளை சரியாக வெச்சுக்குங்க..அவ்ளோதான்..காடு ,நீர்நிலை ஓரங்களில் குடியிருப்போர் சுற்றுப்புறத்தை நல்லா சுத்தமா வெச்சுக்குங்க...விசப்பூச்சிகள் உங்களை பார்க்க வீடுதேடி வரும்.
மகரம் -கும்பம் எப்படி இருக்கும்..?
மகரம் ராசிக்கு ராகு 5ஆம் இடத்துக்கு வருகிறார்.ஏழரை சனியில் துவள வைத்துக்கொண்டிருக்கும் நிலையில் குருவும் ராசிக்கு ஜென்மத்திலும் விரயத்திலும் மாறி மாறி சோதனை கொடுத்து வரும் நிலையில் ராகுவும் சிறப்பான இடத்துக்கு மாறவில்லை.இதுவரை 6ல் இருந்து நன்மைகளை தந்து வந்த ராகு இப்போது பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் குழந்தைகள் ஸ்தானத்துக்கு வருவதால் பூர்வீக இடம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவார் அத்தை மாமன் வழியில் மருத்துவ செலவினம் அவர்கள் வழி பகை ,தாத்தா சொத்து சார்ந்த பிரச்சினைகள் உண்டாக்கும் .
கும்பம் ராசிக்கு நான்கில் ராகு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை சிலர் இடமாறுதல் அடைவர்.விடு வாஸ்து கோளாறு இருக்கும் அதை சரி செய்து கொள்வது நல்லது வீடு சம்பந்தமான வேலைகளை செய்வீர்கள் தாயாருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும் .சிலர் சுகர் பிரசர் சம்பந்தமான சிகிச்சைக்குள் செல்ல வேண்டி இருக்கும் .வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை விலை உயர்ந்த பொருட்கள் தொலைவதற்கு வாய்ப்பிருப்பதால் செல்போன் மற்றும் நகைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும்
இரண்டில் ராகு மேசம் ..அதிக செலவினம் பண முடக்கம் ,கோபப்பட்டு வார்த்தையை விட்டு உறவு பகை ,இது துலாம் ராசிக்கும் பொருந்தும் அவர்களுக்கு இரண்டில் கேது .
ராகு கேதுக்கள் எப்போதும் மறைவிடத்தில் நல்ல பலன்களை தருகிறது சுபர் பார்வையுடன் கேந்திரங்களில் இருக்கும்போதும் நல்ல பலன்களை தந்து விடுகிறது.
தான் அமரும் பாவத்தைக் கெடுத்து பலன்களை ராகு செய்வதைப் போல இருக்கும் வீட்டைக் கேது கெடுப்பது இல்லை. அமரும் வீட்டை பலவீனமாக்கும் அளவிற்கு அதிகமான பாபத்தன்மையும் கேதுவிற்குக் கிடையாது. ஆகவே திருமணம் மற்றும் புத்திரதோஷங்களைக் கொடுக்கக் கூடிய 2, 5, 7, 8 மிடங்களில் ராகு இருப்பது போன்று கேது கெடுபலன்களைச் செய்வது இல்லை.
ஆயினும் கேது ஒரு பாபக்கிரகம் எனும் அடிப்படையில் மேற்கண்ட பாவங்களில் கேது இருப்பது நல்லநிலை அல்ல. ராகுவைப் போல ஒரு கடுமையான தோஷத்தைக் கேதுவால் தர இயலாது என்ற அர்த்தத்தில் மட்டுமே இது சொல்லப்படுகிறது. செவ்வாயைப் போல கேது பலன் தருபவர். இதன்படி செவ்வாய் யோகம் தரும் லக்னங்களான கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய சூரிய, சந்திர, குருவின் லக்னங்களுக்கு சுப, சூட்சுமவலுவுடன், லக்னச்சுபர்களின் தொடர்பு இருக்கும் நிலையில் கேது மிகப்பெரிய நன்மைகளைச் செய்வார்.
ராசிக்கு 3,6,10,11,12 ல் ராகு கேதுக்கள் வரும் போது நல்ல யோகமான பலன்கள் தருகிறது இப்படி சொல்லும்போது கெட்ட பலன்களை தருவதில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். மிதுனம் ராசிக்கு 12ல் ராகு நல்ல பலனை தரும்.விரய ஸ்தானம் கெடுவது நல்லது.
அஷ்டம சனியால் சிரமத்தில் இருக்கும் உங்களுக்கு ராகு கேயர்ச்சி சாதகமாகவே இருக்கிறது.தனுசு ராசிக்கு 12ல் கேது நல்ல பலன் தரும்.நல்ல அறிவாற்றல் உண்டாகும் ஆன்மீகம் பக்தியில் மனம் செல்லும்
தனுசு ராசிக்கு ராகு ஆறாம் இடத்துக்கு வந்திருக்கிறார்.ருண ரோக ஸ்தானத்துக்கு சுபர் வந்தால் கெடுதல்.பாவர் வந்தால் நல்லதுதான்.மறைவிடத்துக்கு ராகு வந்தால் யோகம் என்றுதான் ஜோதிடம் சொல்கிறது.மறைவிடத்துக்கு வரும் ராகு அற்புத பலன்களை கொடுப்பார்.
இதுவரை ஏழரை சனியால் பலவித துன்பத்தை அனுபவித்து வந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி ஆறுதல் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.ராசிக்கு 12ல் செல்லும் கேதுவும் சிறப்பான யோகத்தை செய்கிறார்.தொழில் சிறப்படையும் வருமானம் பெருகும்
கடகம் ,கன்னி ராசிக்கு எப்படி இருக்கு..?
ராசிக்கு 11 ல் ராகு வருவது மிக சிறப்பான யோகம்.லாபத்தில் பாவ கிரகம் வருவது சேமிப்பை வலுப்படுத்தும் ஆசைகளை குறைத்து பணத்தை சேமிப்பதில் ஆர்வத்தை உண்டாக்கும்.பொறுப்பாக செயல்பட ஊக்குவிக்கும்.தொழிலுக்கு இரண்டில் ராகு வருவதால் தொழில் அபிவிருத்தி,குடும்ப ஸ்தானத்துக்கு தன ஸ்தானத்துக்கு பத்தில் ராகு வருவதால் பல வழிகளிலும் பணம் வந்து சேரும்.கடன் தீரும்.பண முடக்கம் நீங்கும்.
கன்னிராசிக்குஒன்பதாம்இடத்துக்குராகுவருகிறார்..ராகுவை பத்தி ஏன் அதிகம் பேசுகிறோம் என்றால் ராகு அந்த ஸ்தானத்தை அதிகமாக பூஸ்ட் செய்யும்.பெரும் அதிர்வை உண்டாக்கும்.தோசை போல திருப்பி போட்டு விடும்.தந்தை மகன் உறவு ஏற்கனவே நன்றாக இருந்தால் இனி நல்லாருக்காது.ஏற்கனவே தந்தை மகன் பகையாக பிரிந்து இருந்தால் இனி ஒன்று சேர்வார்கள்
தந்தை மற்றும் தந்தை வர்க்கம் கொஞ்சம் பாதிக்கும் சிலர் தந்தைக்கு மருத்துவ செலவினம் உண்டாகும்.சமூகத்தில் உறவினர் விசயங்களில் தேவையில்லாமல் தலையிடுவது வேண்டாம்.3ல் இருக்கும் கேது உங்களுக்கு பலவித நன்மைகளையும் வருமானத்தையும் கொடுக்கப்போகிறார்.
9ஆம் இடத்து ராகு என்பதால் தந்தையுடன் நல்ல உறவை கடைபிடிப்பது அவசியம் நீண்ட தூர பயணங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி அதில் தடையாகும் நீண்ட தூர பயணத்துக்காக தடையாகி கொண்டு இருந்தவர்களுக்கு இனி வெளிநாடு வெளிமாநிலம் செல்வதில் தடை இருக்காது.
சிம்ம ராசிக்கு நான்கில் கேது வருகிறார் சுகம்,தாய்,வீடு இதெல்லாம் பாதிக்கும்னு சொல்லிட்டீங்க ராகுவை சொல்லாம விட்டுட்டீங்க என்றார் ஒரு நண்பர் உண்மைதான்.சிம்மம் ராசிக்கு நான்கில் கேது பெரிய கெடுதல் இல்லை...
சிம்மத்துக்கு பத்தில் ராகு ராஜயோகம்.10ல் ராகு தொழில் வளர்ச்சி அடையும்.பத்தில் பாம்பு வந்தால் பணம் பறந்து வரும் என்பார்கள்..வெளிநாட்டு தொடர்புகள் உள்ளவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டு.தூரமாக தொழில் தொடர்பு உள்ளவர்கள் வெளியூர் ஆர்டர் பெறுபவர்கள் நல்ல ஆதாயம் அடைவார்கள் .10ல் ராகு பல தொழில் பல வழிகளில் வருமானத்தை கொடுக்க கூடியதாகும்.
மீனம் ராசியினருக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருவது யோகமானது மறைந்த ராகு நிறைந்த பலன்களை தருவார் தைரியம் துணிச்சல் தரும் அதிர்ஷ்டமான ராகு பெயர்ச்சி என்று சொல்லலாம் ..