அகத்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகத்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 டிசம்பர், 2015

தமிழர்களின் வர்மக்கலை

வர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !!

இன்றைய இளம் தமிழ் தலைமுறையினர் தமிழ் மொழியை மட்டும் இழக்கவில்லை. நமது முன்னோர்களின் விளையாட்டு, நமது போர்முறை சாதனங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை, தற்காப்பு, கட்டிடக்கலை, மருத்துவம் மற்றும் உடல், உளவளக் கலைகளை மறந்து நிற்கின்றோம்.

இப்பொழுது ஒருபடி மேலே சென்று சாதாரணமான உடற்பயிற்சி முறைகளையும் செய்வதையே தவிர்த்து வருகிறார்கள் தமிழ் இளைய பிள்ளைகள். இன்று உடற்பயிற்சி, தற்காப்பு இரண்டையும் கற்கும் தமிழ்ப் பிள்ளைகள் சொற்பமே.

வர்மக்கலையில் சிறந்த விளங்கிய தமிழகம் :
வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்
"அகத்தியர் வர்ம திறவுகோல்"
"அகத்தியர் வர்ம கண்டி"
"அகத்தியர் ஊசி முறை வர்மம்"
"அகத்தியர் வசி வர்மம்"
"அகத்தியர் வர்ம கண்ணாடி"
"அகத்தியர் வர்ம வரிசை"
"அகத்தியர் மெய் தீண்டா கலை"
ஆகியவை குறிப்பிடத்தக்கவை

" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.
காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன.
உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது.

சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.
“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்.

2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்.

3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்.

4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.
உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

வர்மத்தின் அதிசயங்கள் !

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்கள்
இத்தகைய சிறப்பு மிக்க கலையை நாம் எப்போது மீட்டு எடுக்கப் போகிறோம்..?! இதற்கெல்லாம் காரணம் தமிழன் தமிழனாக இல்லாமல் மாறிப்போனதே..!!

சனி, 22 ஆகஸ்ட், 2015

சித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

சித்தர்கள் ஜீவ சமாதி செல்லும்போது, பெளர்ணமி அல்லது அமாவாசை நாளில் செல்லலாம் ...அங்கு சென்று ரோஜாப்பூ மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி,கல்கண்டு,பேரிச்சை ,பழங்கள் நிவேதனம் செய்து ,வழிபட்டு அதன் பின் அங்கு வழிபட வந்தவர்கள் நிவேதனத்தை பிரசாதமாக கொடுக்கலாம்..கீழே இருக்கும் மூல மந்திரங்களை அவர்களுக்கு நோட்டீஸ் போல வினியோகிக்கலாம்..நீங்களும் இதனை ஜீவ சமாதியில் உச்சாடனம் செய்யலாம். சித்தர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்...



நந்தீசர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!
 
அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!
 
திருமூலர் மூல மந்த்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!
 
போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!
 
கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!
 
தேரையர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!
 
சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!
 
புலிப்பாணி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!
 
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!
 
காக புசண்டர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!
 
இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!
 
சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!
 
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!
 
கொங்கணவர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!
 
சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!
 
உரோமரிஷி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!
 
குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!
 
கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!
இதை பௌர்ணமி தோறும் சித்தர் ஓன்றுக்கு மூல மந்திரம் 16 முறை விதம் கூறிவரவும் அனைத்து காரியம் சித்தி அடையும்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கைலாய மலைக்கு நிகரான பொதிகை மலை அகத்தியர் அதிசய அனுபவங்கள்

பொதிகை மலை -

ஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். சேர்மராஜ்...கம்ப்யூட்டரின் உதவியோடு மிக வித்தியாசமாக விளம்பரங்கள் வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

மூச்சுவிட நேரமில்லாத இவரது களப்பணியில் இவர் இளைப்பாறவும்,களைப்பை போக்கிக் கொள்ளவும் அவ்வப்போது செல்வது, மலைப்பிரதேசங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்குதான்.

அப்படிப்பட்ட இடம்தான் அகத்திய மாமுனி எழுந்தருளியிருக்கும் பொதிகைமலை. தமிழக கேரளா மாநிலங்களின் எல்லையில் இருந்தாலும் இப்போதைக்கு கேரளா வழியாகத்தான் செல்ல முடியும்.


பொதிகை மலையின் உச்சியில் உள்ள அகத்தியரை தரிசனம் செய்யவேண்டும் என்றால் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஒன்றரை மணிநேர வாகன பயணத்திற்கு பின், பொதிகை மலைக்கு செல்லும் மலைப்பாதையில் வனத்துறையின் சோதனைச் சாவடியை அடையலாம்.

சோதனைச் சாவடியில் ஒருவருக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய் வீதம் பணம் கட்டிவிட்டு, தங்கள் சொந்த பொறுப்பில் போய்வருவதாகவும், பயணத்தின் போது உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பு என்றும் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.

நான்கு பேர் கொண்ட குழு என்றால் ஒரு வழிகாட்டியை வனத்துறையே ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறது. அங்கு இருந்து காலையில் கிளம்பினால் சூரியனைக்கூட பார்க்கமுடியாத அடர்ந்த காட்டிற்குள் ஒன்றரை நாள் பயணத்திற்கு பிறகு அகத்தியரை தரிசித்துவிட்டு, மீண்டும் ஒன்றரை நாள் பயணம் செய்து திரும்பவேண்டும்.

அவரவருக்கான உணவுப்பொருள், இரவில் தூங்க தேவைப்படும் போர்வை, மழைவந்தால் பாதுகாத்துக் கொள்ள ரெயின்கோட், அட்டை கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மூக்குப்பொடி, வேப்பெண்ணெய், மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும், வழியில் யானை போன்ற காட்டினங்களை எதிர்கொண்டும் போய்வரவேண்டும்.

பல இடங்களில் காணப்படும் செங்குத்தான பாறைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கயிறை அல்லது கம்பியை பிடித்துக் கொண்டுதான் ஏற வேண்டும், அதே போல இறங்க வேண்டும், கொஞ்சம் கவனம் தவறினாலோ, கால் பிசகினாலோ பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மீள முடியாத பள்ளத்தில் விழவேண்டியிருக்கும்.

இதை படிக்கும் யாருக்கும் போகத் தைரியம் வராது தயக்கம்தான்வரும் ஆனால் இதைவிட அதிகமாகவே “ரிஸ்க்குகளை’ எதிர்பார்த்து சேர்மராஜ் கிளம்பிவிட்டார், காரணம் தனது ஞானகுருவான அகத்தியரை சந்திக்க போகிறோம் என்று மனதிற்குள் மழைபோல பெய்த சந்தோஷம், இவரது கருத்தையொத்த நண்பர்கள் பதினோரு பேர் சேர்ந்து கொள்ள பயணம் சிறப்பாக அமைந்துவிட்டது.

சிறப்பு என்று சொல்வதைவிட அளவில்லாத மனத்திருப்தி, ஆன்மிக மகிழ்ச்சி, உள்ளத்தினுள் ஒருவகை எழுச்சியை உணர்ந்தோம்.

காரணம் தொட்டு விளையாடும்படியான மேகக்கூட்டம், மூக்கினுள் நுழைந்து அடிவயிறு வரை ஆழப்பாயும் மூலிøக்காற்று, காட்டுக்குள் தூக்கம், கலவை உணவு, இப்படிக்கூட குடிநீருக்கு சுவை இருக்குமா என ஆச்சரியம் தரும் குடிநீர், பளிங்கு போன்ற தண்ணீரைக் கொண்டு வற்றாமல் ஒடும் காட்டாறு, அழகும், சுகமும்தரும் அருவிகள், இப்படி பசுமையும், இயற்கையும் பின்னிப் பிணைந்த அடர்ந்த வனம், விதவிதமான மலர்களின் மணம், ஆகா,ஆகா அது ஒரு அளவில்லாத ஆனந்தம்.

செல்போன் எடுக்காது, வாகன சத்தம் கேட்காது, அவசரமாய் செல்லும் மனிதர்கள் கிடையாது, அரக்கபரக்க சாப்பிட வேண்டியது இருக்காது, நவீனம் என்ற பெயரிலான எந்த எலக்ட்ரானிக் குப்பைகளும் கிடையாது, எங்கு பார்த்தாலும் இயற்கை அன்னை அள்ளித்தந்த பொக்கிஷமே. கைலாஷ் மலைக்கு போனவர் ஒருவர் எங்களுடன் வந்திருந்தார், அவர் இந்த பொதிகை மலையைப் பார்த்துவிட்டு, அதற்கு நிகரான பரவசத்தை, பிரமிப்பை இந்த மலை தனக்கு தருவதாக சொன்னார் என்றால் பாருங்களேன்.

அவ்வளவு கடுமையான மலைப்பாதையிலும் நாங்கள் மறக்காமல் கூடை, கூடையாக கொண்டு சென்ற மலர்களால் ஆராதித்து, தேன் முதல் சந்தனம் வரையிலான பொருட்களால் அபிஷேகம் செய்தபோது, அகத்தியரின் முகத்தில் மின்னல் கீற்றாய் வெளிப்பட்ட புன்னகையை பார்க்க, அந்த மாமுனியை தரிசிக்க, இன்னொரு முறை மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல முறை போய்பார்த்துவரவே ஆசை என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார் சேர்மராஜ்.
நன்றி -

வியாழன், 15 செப்டம்பர், 2011

சதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்


சதுரகிரி மலைக்கு ஏற்கனவே ஒரு முறை சென்று வந்திருக்கிறேன்.மீண்டும் ஒருமுறை சென்று வர ஆசை ஏற்பட்டதால் ,கடந்த வெள்ளியன்று என் நண்பருடன் சென்று வந்தேன்.சதுரகிரி மலை சித்தர் பூமி.18 சித்தர்களும் தவம் செய்த இடம்..உலாவும் இடம் என்று சொல்வார்கள்.அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள்,வியப்பு தரும் மரங்கள்,விலங்குகள் நிறைந்த வனம் நிறைந்த மலை சதுரகிரி.