திருமூலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமூலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஆகஸ்ட், 2015

சித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

சித்தர்கள் ஜீவ சமாதி செல்லும்போது, பெளர்ணமி அல்லது அமாவாசை நாளில் செல்லலாம் ...அங்கு சென்று ரோஜாப்பூ மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி,கல்கண்டு,பேரிச்சை ,பழங்கள் நிவேதனம் செய்து ,வழிபட்டு அதன் பின் அங்கு வழிபட வந்தவர்கள் நிவேதனத்தை பிரசாதமாக கொடுக்கலாம்..கீழே இருக்கும் மூல மந்திரங்களை அவர்களுக்கு நோட்டீஸ் போல வினியோகிக்கலாம்..நீங்களும் இதனை ஜீவ சமாதியில் உச்சாடனம் செய்யலாம். சித்தர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்...



நந்தீசர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!
 
அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!
 
திருமூலர் மூல மந்த்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!
 
போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!
 
கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!
 
தேரையர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!
 
சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!
 
புலிப்பாணி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!
 
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!
 
காக புசண்டர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!
 
இடைக்காடர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!
 
சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!
 
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!
 
கொங்கணவர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!
 
சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!
 
உரோமரிஷி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!
 
குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!
 
கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!
இதை பௌர்ணமி தோறும் சித்தர் ஓன்றுக்கு மூல மந்திரம் 16 முறை விதம் கூறிவரவும் அனைத்து காரியம் சித்தி அடையும்.

ஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி யோகம்

★பதஞ்சலி மாமுனிவரைப் போலவே திருமூலரும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார். அவர் மேலும் நான்கு உன்னதமான யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார். அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால் இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம். மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம் எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.

★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம் , அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும். முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

கேசரி யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆

★கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே. திருமந்திரம் - 779.

★அண்ணாக்கை ஊடே அடைத்து அமுதுண்ணேன்
அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.

★சூல் கொண்ட மேகம் என ஊமை நின்று சொறிவதைப்
பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவேனே. - தாயுமானவர்.

★கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம் கூடிய
முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு
கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் - அருணகிரிநாதர்.

★மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப் பற்றி பாடியுள்ளார்கள்.

★கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன் கண்நரம்புகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும் நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து வரவேண்டும். நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல் நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற் கொள்ள வேண்டும். வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்துவர வேண்டும். பார்வையை புருவ மத்தியில் குவிக்க வேண்டும். பெருவிரலை உட்பக்கமாக வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில் தொடும்படி வைத்துக் கொண்டு சுழுமுனை தியானம் செய்து வரவேண்டும்.

★நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம் சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம் சித்திக்கும். தொலைவில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர் சொல்கிறார்.

★நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை செல்லுமானால் நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு
அண்ணாக்கின் மேல் துவாரத்தில் நாக்கை நுழைத்தவுடன் உடல் மறதி ஏற்பட்டுவிடும். மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும்
உடல் அழியாது, உயிரும் பிரியாது. இயற்கை சீற்றங்களினால் அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க முடியாது. நகமும், முடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள் ஜீவசமாதியில் இருப்பது இவ்வாறே என்று சொல்லப் படுகிறது. தேரை, கருநாகம், நல்லபாம்பு போன்ற உயிரினங்களும் உணவு கிடைக்காத போது இந்த பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப் பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல் உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு கிடைக்கும் போது நாவை எடுத்து புசிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

★அனுபவம் உள்ள சித்தர்கள் தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக் கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர் உதவியோடு மெதுவாக வாயைத் திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை கால்கள் முடங்கி இருப்பதை மெதுவாகத் தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.

சந்திர யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆

★காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் கால் வலத்திட்டு
பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே. திருமந்திரம் - 866.

சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம். மூலத்தில் உள்ள மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள சூரியனோடு இணைத்து, அந்த சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர வைத்து, அந்த ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும். சூரியனும், அக்கினியும் உஷணமானவை. சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம் குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம் உண்டால் காலத்தை வெல்லலாம், சிவகதி அடையலாம். சந்திர யோகத்தை பிழையில்லாமல் செய்தால் ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல் விளங்கும்.

★சந்திர யோகி காமத்தை வெல்வார். அவரது விந்து விரையமாகாமல் மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால் எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில் ஒளியேற்றும்.


★ ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும் இருநாடி வழியாக பிராணன் இயங்குவது போல, சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவே சந்திரயோகம்.சந்திர யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று திருமூலர் சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர யோகத்தில் திளைத்தவர்கள்தான். விஸ்வாமித்திரர் சூரிய கலையையும், வசிஷ்டர் சந்திரகலையையும் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.

★சந்திர யோகத்தில் அமரும் விதம்.
வலது காலை அடியில் வைத்து, இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு நேரே இருக்கும்படியாக அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும் போது சுவாசம் இடது பக்கமாக ஓட ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உடல் குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம் சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய கலையில் அமர்வது எப்படி என்றால், வலது காலை மேலே வைத்து, இடது காலை கீழே வைத்து பருவ மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது. வலது மூக்கில் சுவாசம் வரும் வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம் ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக் கொள்ளலாம்.

★ பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில் இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும் எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திர கலை பயிற்சியை யார் வேண்டுமானாலும் தினமும்இருவேளை அதாவது சுமார் ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ, ஞானியாகவோ விரும்புபவர்கள் 24 மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம் எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக நீண்ட பதிவு தேவைப்படும், எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

★ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல்லார் இச் சசிவன்னராமே. திருமந்திரம் - 874.

சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள் ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திருமூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர யோகம் பற்றி விளக்குகிறது. படித்து உணர்ந்து பயனடையுங்கள்.

★குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே விந்து விரையமாகாமல் சிவநிலை அடைய பரியங்க யோகம் உதவும். இல்வாழ்வையும், யோகவாழ்வையும் இணைக்கும் அற்புதமான யோகம் பரியங்க யோகம். யோகம் என்றால் ஐக்கியம் என்பர். ஆத்மா சிவனோடு ஐக்கியமாவது போல, ஆணும் பெண்ணும் விந்து விரையமாகாமல் ஐக்கியமாவதே பரியங்க யோகம். இதைக்குறித்து திருமந்திரம் - 825- 844 வரையுள்ள மந்திரங்கள் விளக்குகின்றன.

★அமுரி தாரணை என்றால்சிறுநீர் வைத்தியம் என்றும், சுக்கில சுரோணிதத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு ஏற்றும் பயிற்சி என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. பெண்களுக்கும் யோகமார்க்கம் சித்திக்கும் என்பதை தெளிவு படுத்தவே சுரோணிதமும் சொல்லப் பட்டுள்ளது. திருமந்திரம் -845-850 வரை இதைக்குறித்த விளக்கங்களைக் காணலாம்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்




சித்தர் திருமூலர் அவர்கள் தான் எழுதிய திருமந்திரத்தில் செம்பினைப் பொன்னாக்கும் வழிமுறையினை எளிதாக, தெளிவாக எழுதியுள்ளார்.
திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் 903ஆம் பாடலைக் காண்போம்.
        செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச் 
செம்புபொன் னான திருவம் பலமே.
இப்பாடலில் திருமூலர் சிவாயநம என்று செபிக்க செம்பு பொன்னாகும் என்று சொல்கிறார். அதாவது சிவாயநம என்று சிவ சிந்தனையில் இருப்பவர்களால் செம்பினைத்தங்கமாக மாற்ற இயலும் என்கிறார். இறைசிந்தனை தவிர மனத்தில் வேறெதுவும் இல்லாமல் சிவசிந்தனையில் சிவாயநம சிவாயநம என சிந்தித்து இருப்பவர்கள் செம்பை பொன்னாக்க முடியும் என்கிறார்.

இங்கே செம்பு பொன்னாகுதல் என்றால் என்ன என்பதையும் சற்று சிந்திப்போம். செம்பு என்பது களிம்பு உண்டாகும் உலோகமாகும். களிம்பு உருவாகாத அளவுக்கு செம்பினை சுத்திப்படுத்திவிட்டால் அது தங்கமாக ஆகிவிடும்.

இப்பாடலில் வெளிப்படையாக செம்பைப் பொன்னாக்குதல் என்னும் (உலோக) இரசவாதம் தெரிகிறது. அதே சமயம் இப்பாடலில் மறைபொருளாக உள்ள ஓர் உயரிய இரகசியம் என்னவென்றால் செம்புபோல களிம்பேறி நோய்நொடிக்கு உள்ளாகி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிடும் உடம்பினை தங்கமாக்கி, இறவா நிலைக்கு, பேரின்ப நிலைக்கு உயர்த்துவது சிவாயநம எனும் சிவ பஞ்சாட்சரமே என்பதாகும். இது உடலின் இரசவாதம், உயிரின் இரசவாதமாகும்.

905 ஆம் பாடலிலும் இதனை மீண்டும் வலியுறுத்தி எழுதுகிறார்.
வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.
சிவாயநம என செபித்துவர பிறப்பில்லை. சிவனின் நடனத்தைக் (தரிசனத்தைக்) காணலாம். செம்புநிலையிலுள்ள உயிரானது குற்றங்கள் நீங்கி தங்கத்தின் நிலைக்கு உயரும் என்று எழுதுகிறார்.

அதாவது செம்பினைப் பொன்னாக்கினால் அதனால் என்ன பயன் ஒருவர்க்கு உண்டாகுமோ அத்தகைய பயனைப் பெற சிவாயநம என ஓதுவது போதுமானதாகும். அவ்வாறு தினமும் சிவசிந்தனையிலிருந்து சிவாயநம என ஓதி வந்தால் நிச்சயம் பொன்கிடைக்கும். பொன்னுக்கு நிகரான நன்மைகள் உங்களைவ வந்து சேரும். உங்கள் உடலும் பொன் உடம்பென ஆரோக்கியமான, பலமான உடலாக மாறும். உடலின் குற்றங்கள் நீங்கி நலம்பெறும்.

சனி, 24 செப்டம்பர், 2011

திருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்


திருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்


  • திருமூலர்,
  •  
  • பிராணாயாமம்
  •  ,
  • அட்டாங்க யோகம்
  •  ,
  • மூச்சுப்பயிற்சி பற்றி மிக அருமையாக விளக்கும் வீடியோ புத்தகம் இது..பொறுமையாக பாருங்கள்..ஸாரி படியுங்கள்.