குருபெயர்ச்சி 2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருபெயர்ச்சி 2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 மே, 2012

குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராசிபலன்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராசிபலன்

எதையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக பேசிவிடும் விருச்சிக ராசி அன்பர்களே....செவ்வாய் வீடு ராசிக்காரர் என்பதால் கொஞ்சம் துடுக்கென பேசிவிடுவீர்கள்..சந்திரன் அங்கே நீசம் என்பதால் பேசியதற்காக வருத்தம் அடைவீர்கள்..மனதில் அன்பும்,பாசமும் பொங்கி வழியும் அதை உங்களுடன் இருப்பவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்..அதை வெளிப்படுத்தவும் தெரியாமல் தவிப்பீர்கள்..பல சமயம் உங்கள் முன்கோபமே பிறருக்கு பெரியதாக தெரிவதால் உங்கள் அன்புள்ளம் பலருக்கு புரியாமலே போய்விடுகிறது..பலாப்பழம் மேலே முள்ளாகத்தானே இருக்கும்...

ஏழரை சனி வேறு ஆரம்பிச்சிருச்சி..குருப்பெயர்ச்சியும் நமக்கு சாதகமா இருக்குமா..இல்லை காலை வாரி விட்ருமா என நீங்கள் கவலைப்படுவது புரிகிறது...17.5.2012 முதல் குரு உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்....இது சுமாரான இடம்தான் என்றாலும் பாதகமில்லை...

குரு உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் உங்கள் முகம் மலர்ச்சியடையும்..உங்கள் குணாதிசயத்தில் மாற்றம் உண்டாகும்..இதனால் உறவினர்கள் உங்களை நாடி வருவர்..பழைய நண்பர்களும் நட்பு பாராட்டுவர்..தொட்டதெல்லாம் நினைத்ததெல்லாம் நிறைவேறும்..கணவன் மனைவிக்குள் இருந்த ஈகோ மோதல்கள்,தீரும்..அன்பு,மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வழியும்....

வீடு,சொத்துக்கள் சன்பந்தமான வில்லங்கள் அகலும்..திருமண முயற்சிகளில் இனியும் தாமதம்,தடங்கல் நேராது....மனதுக்கு பிடித்தார்போல வாழ்க்கை துணை அமையும்....

மருத்துவ செலவுகள் கட்டுபடும்..குழந்தைகளின் கல்வி சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...கடன் பிரச்சினை அகலும்...அலைச்சல்,திரிச்சல்,வேலைபளு சற்று அதிகமாகத்தான் இருக்கும்....

பெரியோர்களை வணங்கி குருவருள் பெறுங்கள்!!!

வியாழன், 19 ஏப்ரல், 2012

குரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மேசம் ராசியினருக்கு என்ன செய்யும்..?



வரும் 17.5.2012 அன்று குரு மேஷம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்...இதனால் 12 ராசியினருக்கும் என்ன மாதிரியான பலன்களை குரு தருவார் என்பதை பார்ப்போம்...!!

அசுவினி,பரணி,கார்த்திகை 1 ஆம் பாதம்..

வைகாசி மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சி யால் அதிக நன்மைகள் மேஷம் ராசியினர் பெறுவார்கள்...ராசிக்கு,இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்திற்கு மாறும் குருவால்,தனலாபம் உண்டாகும்..பண வரவு தாராளமாக இருக்கும் நீண்ட நாள் எதிர்பார்த்த நல்லது ஒன்றும் நடக்கும்..வீட்டுஇல் சுபகாரியங்கள் நடைபெரும்...அலுவலகத்தில் நெருக்கடி கொடுத்து வந்த பிரச்சினைகள் தீரும்..

உங்கள் ராசிக்கு 6,8,10 ஆம் இடங்களை குரு பார்ப்பதால் பண நெருக்கடிகள் தீரும்,,நஷ்டம்,காரிய தடை என சங்கடத்தில் இருந்து வந்த நீங்கள் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்..இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில் இனி சுறு சுறுப்படையும்..

பதவி உயர்வு கிடைக்கும்...குடும்ப பிரச்சினைகள் தீரும்.மருத்துவ செலவுகள்,கடன் பிரச்சினை தீரும்...திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடச் செய்யும், குருபலம் வந்துவிட்டது..உங்கள் ராசிக்கு வசியமான நட்பான ராசியினரை திருமணம் செய்துகொள்ளுங்கள்..உங்கள் பிறன்ப்த தேதிக்கு நியூமராலஜி படி அமையும் திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்யுங்கள்...பெண்களுக்கு நிறைய நகைகள் சேரும்...வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்கள் பேச்சில் இனிமை கூடும்..உங்கள் திறமையால் சாதூர்யத்தால் நிறைய சம்பாதிப்பீர்கள்..மகான்களின் ஆசி கிடைக்கும்...இதுவரை நிலவிய இறுக்கம் தளர்ந்து உங்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சி உண்டாகும்!!!

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்று உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் சிவனுக்கு 5 விதமான அபிஷேகம் செய்தால் சொந்த வீடு அமையும்..எவ்வளவு நாள் தடையான கல்யாண தோசமும் நீங்கும்.தொழில் அமையும்...கோபம்,பிடிவ்பாதத்தை விடுங்கள்.உறவினர் நண்பர்களிடம் அன்பாக பழகுங்கள்...


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர் பாலினரிடம் கவனமாக பழகுங்கள்..அதாவது ஆன்களாக இருப்பின் பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை..எதையும் உடனே செய்து முடிக்கும் அவசரம் உங்களின் கூட பிறந்தது..பொறுமையும்,விடா முயற்சியும் வெற்றியை தரும்...அம்பாள் சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி பரணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடவும்...


கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகன் அருள் பெற்றவர்கள்....பலருக்கும் நன்மை செய்யக்கூடியவர்கள்...27 அல்லது 108 பேர்க்கு முருகன் சன்னதியில் அன்னதானம் செய்தால் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்..மலைமேல் இருக்கும் வெற்றிவேலனை வழிபடுங்கள்..பழனி,திருத்தணி,மருதமலை,திருப்பரங்குன்றம் போன்ற முருகன் ஆலயங்களில் ஒன்றில் வழிபடலாம்...சனி பெயர்ச்சியும் சாதகமாக இருப்பதால்; பிரச்சினை இல்லை..