medicine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
medicine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூலை, 2014

மூட்டுவலி நீங்க முதுகுவலி நீங்க அருமையான மருந்து

மூட்டுவலி என்பது இன்று 50 வயதை கடந்த பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் முக்கியபிரச்சினை எலும்பு ஜவ்வு தேய்மானத்தாலும்,மலச்சிக்கலாலும் கூட உண்டாகும்...மனித உடலானது எண்ணற்ற  தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும்.  உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது.  இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது.  இதற்கு ஆதாரமாக செயல்படுபவை தச வாயுக்கள்தான்.  இவற்றின் செயல்பாடுகளில் சீற்றம் கண்டால் அவை உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும்...

உட்கார்ந்தால் எழ முடியாமல்,எழுந்தால் உட்கார முடியாமல் அவதிப்படுபவர் பலர்.மாடிப்படி ஏற முடியாது....பஸ்ஸில் கூட ஏற முடியாமல் தடுமாறி விழுபவர்களும் உண்டு...இதனால் நல்லது கெட்டது என ஊறவினர் வீடுகளுக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுபவர்கள் பலர் பார்த்திருக்கிறேன்...

இதற்காக ஹோமியாபதி,அலோபதி,ஆங்கில மருத்துவம் என அடிக்கடி போய் பார்ப்பார்கள்  ..தினம் நிறைய மாத்திரை சாப்பிடுவார்கள் ஆனால் மாத்திரை சாப்பிட்டால் கொஞ்ச நேரம் நன்றாக இருக்கும். பிறகு மீண்டும் வலி ஆரம்பித்துவிடும்.....மாத்திரை அதிகளவில் சாப்பிடுவதால் குடலில் இரைப்பையில் புண் உண்டாவதும்,வயிற்று எரிச்சல் உண்டாவதும்,சிறுநீரக பாதிப்பு அடைவது என பக்க விளைவுகளும் உண்டாகிவிடும் 

இயற்கையான மூலிகை மருந்துகளும் எண்ணெய்களும் மட்டுமே வலியை குறைக்கும் நிரந்தரமாக தீர்க்கும்...இதற்காக வேப்ப எண்ணெய் ,விளக்கெண்ணெய்,நல்லெண்ணெய் சம அளவு எடுத்து நொச்சி இலை,முடக்கத்தான் இலை சாறும் இன்னும் சில மூலிகை சாறுகளும் கலந்து,இத்துடன் பச்சைக்கற்பூரம் மற்றும் புதினா உப்பு போன்ற சில இயற்கை உப்புகளும் கலந்து இந்த வலி நிவாரண எண்ணெய் தயாரிக்கப்பட்டுள்ளது..இதனை வலி உள்ள இடத்தில் தடவினால் சிறிது நேரத்தில் வலி குறையும் ..சில தினங்களில் நிரந்தர குணமும் உண்டாகும்..கடைகளில் கிடைக்கும் எண்ணெய்கள் பெரும்பாலும் நல்லெண்ணெயில் பச்சைக்கற்பூரம் மட்டும் கலந்து விற்பார்கள்...அது வாசனையாக இருக்குமே தவிர பலன் தராது..ஆனால் இது முழுக்க வீரியமானது..வலியை உடனே நிறுத்த செய்யும்..நிரந்தர குணத்தை உண்டாக்கும்..முதுகுவலி,கழுத்துவலி,இடுப்புவலி,மூட்டுவலி,தோள்பட்டை வலி என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்..!!

இதன் விலை 100 மில்லி கிராம் 300 ரூபாய் மட்டும்.வங்கி கணக்கு விபரம் வலது பக்க மேல்புறம் இருக்கிறது..தேவைப்படுபவர்கள் 
மெயில் மூலம் முகவரி அனுப்பி 
பெற்றுக்கொள்ளலாம்....sathishastro77@gmail.com 
cell;9443499003

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்


சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

நன்றி: சித்தாந்தம்