tamilastrology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamilastrology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்


திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்


ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும்  ஜாதகத்தில் இரண்டாம் பாவமான குடும்ப ஸ்தானம் கெட்டு இருக்க வேண்டும். திருமணமே வேண்டாம் எனமன வைராக்கியத்துடன் இருப்பவர்கள் சனி அல்லது குருஆதிக்கம் கொண்டு இருக்க வேண்டும். இவை யோக திசா _ புக்திகள் சரியாக
அமையாமல் இருப்பதும் ஒரு  வகையில் காரணமாக இருக்க கூடும். 



பின்வரும் ஜாதகம்
பெயர்_ சுரேஷ் குமார் பிறந்த தேதி_ 19.3.1978 பிறந்த நேரம்._ 2.50


சூபு

ல/

செ கேது


   ராசி
குரு
சுக்
ராகு சனி


சந்


செவ்
கேது
சந்



   அம்சம்
ல/

குரு
சுக்
சனி
சூரி

ராகு
பு




















ஜாதகத்தை பார்க்கும் போது நமக்கு தெரிவது. இரண்டாம் பாவ அதிபதி புதன் நீசம் பெற்று 4 க்குடையவன் சேர்வது. இவர்க்கு 7 ம் பாவாதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து இருப்பது இல்லற பற்று இல்லாமல் தனிதேஇருக்க பிரியபட்டு தனித்து வாழ்க்கை நடத்துகிறார். ரிஷப லக்னத்திற்கு மகா பாவியான குரு உச்சம் பெற்று மன வைராக்கியத்தோடு ஒரு யோக சாமியார் மடத்தில் தங்கி ராகுவோடு இருப்பதும், 7ம் பாவாதிபதி செவ்வாய் _ சனி மக்கள், குடும்பம் என்று தேடிக் கொள்ளாமல் ஆன்மிக பாதையில் சென்று இருக்கிறார்.


ஜாதகர் பெயர்_ முத்துகுமார், பிறந்த தேதி_ 25.9.1976
காலை 8.00 மணிக்கு

சூ குரு


ம



  அம்சம்
கேது
பு சனி ராகு
சந்

ல/சுக்

செவ்


கேது
குரு




ராகு

சனி




ல/சுக் ராகு
செவ் சந் சூபு








செவ்வாய் திசை இருப்பு _ 5 வருடம் 3 மாதம் 30  
நடப்பு திசை இருப்பு _  குரு திசை . சுக்ர புக்தி 7.8. 2010 வரை.

 இவரது ஜாதகத்தில் 2 க்குடைய செவ்வாய் 12 ல் மறைவதும், 7 ல் கேது தனதுசுயசாரம் பெற்று வலுவாக இருப்பதும் இவருக்கு மணவாழ்க்கை கசந்து திருமணம்செய்யாமல் தனித்து இருந்து வருகிறார். பின்வரும் சனி திசையும், புதன் திசையும் திருமண யோகத்தை கொடுக்காமல் தொழில் யோகத்தை கொடுக்கலாம். மேலும் இவர் சிற்றின்ப பிரியராக இருப்பதால் இவரது இளமையை பல பெண்ணுடன் பகிர்ந்து கொள்கிறார். தவிர திருமண வாழ்க்கையில் வெறுப்பாக தான் இருக்கிறார்.


பெயர் _ செல்வ ராஜ் பிறந்த தேதி _ 12-3-1973
பிறந்த நேரம் _ 11. 15 இரவு


  

பு

ல/ சனி
சந் கேது
சூசு

   ராசி

குரு

செவ் ராகு



குரு
சு கேது
ல/
சூ


 அம்சம்
பு சனி



செவ்
சந் ராகு















செவ்வாய் திசை இருப்பு _ 2 வருடம் 1 மாதம் 23 நாள்.

தற்போது நடப்பு திசை இருப்பு ._ குரு திசை ராகு புக்தி 5.3.2010 வரை.
இவர் அரசு துறையில் காவலராக உயர்பதவியில் இருக்கிறார். போலீஸ்காரர் என்பதால் இவர்க்கு யாரும் பெண் கொடுக்கவில்லையோ என்னவோ இவரும் தனித்து வாழ்க்கை வாழ்ந்து விட்டார். இதற்கு கிரக காரணங்கள் . 2 ம் பாவத்தில் கேது, சந்திரன் இருப்பதும், 2 க்குடையவன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து 8 ல் மறைவதும் திருமணம் நடைபெறாமல் போய் விட்டது. சனி 7 ம் இடத்தை பார்ப்பதும் திருமண பந்தத்தில் விருப்பம் இல்லாமல் போய் விட்டது.



ஜாதகி பெயர் _ செல்வி பிறந்த தேதி _ 7_ 11_ 1976



சந் கேது
குரு



   ராசி

ல/
சனி

சுக்
சூ செ பு ராகு

சு
சூ பு

செ கேது
குரு

   அம்சம்

சனி

ராகு
சந்

ல/













சுக்ரன் திசை இருப்பு _ 2 வருடம் 0 மாதம் 14 நாள் தற்போது நடப்பு திசை _ ராகு திசை. சனி புக்தி 3- 11- 2009


      தன்னுடைதாய்,தந்தையின்கெட்டநடத்தைகளால்மனவிரக்தி அடைந்து இந்து மதத்திற்கு மாறி மதசேவைகள் செய்து வருகிறார். இவர்களது ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2 க்குடையவன் 7 ம் பாவத்தில் பகை பெற்று இருப்பதும் இருக்கிறார். 7 க்குடையவன் சந்திரன் 4 ம் பாவத்தில் கேதுவுடன் இருப்பதும் இருக்கிறார். மண வாழ்க்கையில் வெறுத்து மதசேவையே பெரிது என இருக்கிறார்.  பொதுவாக திருமண வாழ்க்கையை வெறுக்க செய்யும் சில பெற்றோர்கள் உண்டு. இவர்களது நடத்தைகளால் தினமும் வீட்டில் சண்டை சச்சரவுகள் கண்டு மனம் வெறுத்தார்.
ஜாதகர் பெயர் _ திருமூர்த்தி , பிறந்த தேதி _ 5.10. 1972
பிறந்த நேரம் _ 6.00 மாலை
  


ல/

சனி
கேது


ராசி



சந் சுக்
குரு
ராகு

பு
சூசெ

செவ்


சூ சுகே குரு


அம்சம்



ல/சந் ராகு

பு
சனி












ஜெனன கால திசை இருப்பு 5 வருடம் 3 மாதம் 30 நாள்
நடப்பு கால திசை இருப்பு _ ராகு திசை சுக்ரன் புக்தி _ 23. 8. 2009

இவரது ஜாதகத்தில் 2 க்குடையவன் 7 ல் சூரியனோடு சேர்க்கை. சூரியன் 6 க்குடையவனாக இருக்கிறார். 7 க்குடையவன் புதன் 8 ல் மறைவு பெறுகிறார். மன வைராக்கியத்தை தரக்கூடிய 3 ம் பாவத்தில் சனியே உள்ளார். இவர் இதுவரை திருமணத்தின் மீதுதோ குடும்ப வாழ்க்கையை பற்றியோ கவலையின்றி ஒண்டிக்குடித்தனம் செய்து வருகிறார்.
    இதுவரை பார்த்த வரையில் 2 ம் பாவம், அதன் அதிபதி , 7ம் பாவம் ,அதன் அதிபதி இவர்கள் கெடாமல் , கெட்ட கிரகங்களுடன் சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும். மனைவி அமைந்தால் தான் மண வாழ்க்கை. மனைவியின்றி மன வாழ்க்கை என்பது இருக்காது.



திங்கள், 15 மே, 2017

ஜோதிடம் சூட்சுமங்கள்- சுக்கிரன் தரும் சுகம்

ஜோதிடம் சுக்கிரனை நல்ல ஒளி கிரகம் என்கிறது..பிரகாசமான சுக்கிரனின் ஒளி மனிதனுக்கு சுகம் ,சந்தோசம்,மகிழ்ச்சி,ரசனையை தருகிறது இன்பத்தை,காதலை கொடுக்கிறது ..ஆணையோ பெண்ணையோ கவர சுக்கிர பலம் வேண்டும்..சுக்கிரனில்லையேல் சுகம் இல்லை...சொத்துக்கள் இல்லை வசதி வாய்ப்புகள் இல்லை.

லக்னத்துக்கு கேந்திரம் ,திரிகோணத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல வசதி ,பண வரவு ,சுகம்,அழகான மனைவி,பெரிய வீடு,கார் எல்லாம் அமையும்...சுக்கிரன் பாவருடன் சேராமல் பகை வீட்டில் இல்லாமல் இருக்கனும்...லக்னத்துக்கு சுபரா இருந்தா சூப்பரா அமையும்..லக்னத்துக்கு கேந்திரம் இன்னும் நல்ல பலத்தை சுக்கிரனுக்கு கொடுக்கும்...4ல் சுக்கிரன் சுகவாசி..நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி எதைப்பத்திய்டும் கவலைப்படாம வாழலாம் அப்பா மூலம் சொத்து கிடைச்சிடும் மாமனார் மூலமா சொத்து கிடைச்சிடும்..மாமனார் க்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் மாமனார் பணக்காரரா இருப்பார் நிறைய பண உதவி சங்கடமில்லாம செய்வார்..மனைவி அழகா அமைஞ்சிடும்..நச்சரிப்பு இருக்காது..ஊட்டி போகலாமான்னு கேட்டா..சுவிட்சர்லாந்து போகலாம் வாங்கன்னு சொல்லும் ஆளாக இருந்தா எப்படி இருக்கும்..அப்படி அமையும்.

7ல் சுக்கிரன் அழகு மங்கை மனைவியா வருமா என்பது விட மனைவி மையுமான்னு பல பேர்க்கு சந்தேகம்..சுக்கிரன் காரக நாஸ்தி ஆச்சேன்னுதான்..ஆனால் தாமதம் ஆனாலும் சொர்க்கம் காட்டும் மனைவி அமையும்...பங்காளி சொத்து எதிர்பாராம இவருக்கு கிடைக்கும் கூட்டாளி சம்பாஹிச்சு இந்தாப்பா உன் பங்குன்னு வீட்டுக்கே வந்து பெரிய அமவுண்டை கொடுப்பார்..

பத்தில் சுக்கிரன் தந்தை பணக்காரர் ..அப்பா சொத்தே பல கோடி மூணு தலைமுறை சாப்பிடலாம்னு ஊரார் சொல்லுமளவு வசதி இருக்குமான்னு கேட்டா சுக்கிரன் எந்தளவு வலிமையா இருக்கோ..9ஆம் அதிபதி வலிமையை பொறுத்து அப்படி அமையும்..மிதுன லக்னம் சனி 9ல் ஆட்சி..பத்தில் சுக்கிரன் உச்சம் என்றால் அவருக்கு இப்படி அமையும்.தந்தையால் பெரும் அனுகூலம்..ராஜாவீட்டு கன்னுக்குட்டி.

சுக்கிரனுடன் சேரும் கிரகம் சுப கிரகங்களாக இருந்தால் அதுவும் நிறைய அள்ளிக்கொடுக்கும்..4,5 ஆம் அதிபதிகள் சேர்க்கை 1,4 ஆம் அதிபதிகள் சேர்க்கை,1,9 அதிபதிகள் சேர்க்கை,10,11 ஆம் அதிபதிகள் சேர்க்கை,5,11 அதிபதிகள் சேர்க்கை,4,2 அதிபதிகள் சேர்க்கை ,2,5 அதிபதிகள் சேர்க்கை எல்லாம் மிக்கப்பெரிய யோகங்கள்..எக்காரணம் கொண்டும் இவர்களுடன் 6,8,12 ஆம் அதிபகள் கூடக்கூடாது எல்லாம் மொத்தமா போயிடும்..

சுக்கிரனுடன் பாம்பு கிரகங்கள் சேர்ந்தாலும் தவறு...பணம் கிடைப்பது கடினம்..சனி,செவ்வாய்,சூரியன், சேர்ந்தாலும் அவ்வளவு சிறப்பல்ல..ஆதிபத்தியம்,காரகத்துவம் நன்றாக இருந்தால் தவறில்லை..ஆனாலும் பாவ கிரகத்துடன் சிறுபாதிப்பை தராமல் இருக்காது..

சுக்கிரன் நீசமானாலும் ,சுக்கிரன் கேதுவுடன் இருந்தாலும் பணம் வருவதில் தடை இருக்கும்..சுக்கிரன் 6,8ல் இருந்தாலும் கடன் பிரச்சினை உண்டாக்கும்..

சுக்கிரன் கெடாமல் இருப்பதே சுகம் தரும் சொத்து தரும் இன்பம் தரும்.சுக்கிரன் வலுத்தவர் சுகவாசி..சுக்கிரன் கெட்டவர் சாமியார்.ரசனை இருக்காது எந்த சுகமும் அனுபவிக்க முடியாது..சதா நேரமும் அலைந்து கொண்டிருப்பர்.




செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மகாசிவராத்திரி மகிமை mahashivratri

தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாள் சிவராத்திரி. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.ஆயுள் தோசம் ஜாதகத்தில் இருப்போரும்,நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவோர் இன்று இரவு கண் விழித்து, 4 கால பூஜைகளையும் தரிசித்து, பட்டினி இருந்து சிவபெருமானை வழிபடுங்கள்.


மகா சிவராத்திரி என்பது ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கி கொண்டு ,கூட்டத்தில் இடிபடாமல், சுகமாக போய் சிவன் கோயிலில் தரிசனம் செய்வது இல்லை.வியர்த்து விறுவிறுக்க ,முட்டி மோதி எப்படியாவது அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்வதும் அல்ல.

சிவன் எனும் எழாபிறவியின் அடையாள சின்னத்தை மனதில் நிறுத்தி ,மாயைகளில் இருந்து விடுபட ஒருநாளாவது எல்லாவற்றையும் மறந்து,இனி எனக்கு பிறவி துன்பமே வேண்டாம்..என சிவபூஜை செய்து தனிமையில் தியானிப்பது ஆகும்..அதுவும் மாலை 6 மணி முதல் மறுநாள் சூரிய உதயம் வரை என்பது ஒரு கணக்கு.அத்ற்கு ஏன் இந்த நாள்...? குறிப்பிட்ட இந்த நாளில் உங்கள் மனம் வேகமாக ஒடுங்கும்..அதாவது ஒருநிலைப்படும்.பல லட்சம் பேர் கூட்டுப்பிரார்த்தனை செய்யும்போது அதன் சக்தி மிக மிக அதிகம்.அதன் மூலம் பல சூட்சும நன்மைகள் கிடைக்கும்.நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு கண் விழித்து பாராயணம் செய்வதால் மனபலம்,ஆத்ம பலம் பெருகும்.


மகா சிவராத்திரி நாளில்தான் புனிதமான கங்கை நதி பூமிக்கு வந்த நாள் ஆகும்.மகசிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பாக வழிபடப்பட்டாலும்..தமிழகத்தில் புராண காலம் தொட்டு மிக முக்கியமாக போற்றி வணங்கப்படும் சிவ ஆலயங்கள் இவைகள்தான்..அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்கள்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்கள்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகைப்பட்டினம், கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி மிக விசேஷமாக போற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் சிவபக்தர்கள் சிவராத்திரியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில் களுக்குச் செல்வார்கள். திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமு மாகச் செல்வார்கள். இவர்கள் அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும் போது "கோவிந்தா கோவிந்தா' என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவர். இது சைவ- வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் என்பர்

 பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் மகா சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.


ஸ்ரீ மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர். சிவன் அபிஷேகப் பிரியர் என்பது முன்னோர் வாக்கு. பால் பாவம் நீக்கும், தயிர் நோய் நீக்கும். தேன் இல்லத்திற்கு இனிமை சேர்க்கும்,
இளநீர் பகைமை நீக்கும், மஞ்சள் மங்கலம் சேர்க்கும், சந்தனம் குடும்ப ஒற்றுமை ஏற்படுத்தும். பழரசம் தொழில் மேன்மை தரும். கரும்புச் சாறு பித்ருக்கள் சாபம் நீக்கும், எலுமிச்சம் பழச்சாறு சத்ரு சம்ஹாரம், பஞ்சாமிர்தம் கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படுத்தும். நெய் சிவனருள் கிட்டும். அரிசி மாவு கடன் நீக்கும், நல்லெண்ணெய் புத்திரபேறு அளிக்கும்.
புனிதநதி தீர்த்தம் நாம், நம் முன்னோர்கள் அனைவரின் பாவம் நீங்கி இப்பிறவியிலேயே எல்லா நலனையும் அளிக்கும். தாழம்பூ இன்று ஒரு நாள் மட்டும் சிவகதி அளிக்கும்.

மேற்கண்ட 16 வகை பொருட்களை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய அல்லது சிவ ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய அளிக்க 16 வகை சம்பத்துகளையும் பெறலாம். இவையே 16 பேறு என்கிறது லிங்க புராணம். 

 மனிதர்களாக பிறந்த நாம் வாழ்வில் ஒரு முறையேனும் நமக்காக மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும், நம்முடைய சந்ததிகளுக்கும் எல்லாம் நலமும், புண்ணியமும் பெற வேண்டி ஒரு முறை மகா சிவராத்திரி விரதம் இருந்து நான்கு கால பூஜையில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி சிவால யத்திற்கு அளித்து தொண்டு செய்தால், நூறு ஏகாதசி விரத மிருந்த பலன் கிட்டு வதுடன், சிவன் அருளுடன் நாராயணின் பேரருளும் பெற்று குபேர சம்பத்துடன் வாழ லாம் என்று சிவகாமம் கூறுகிறது.