புதன், 17 ஜூலை, 2013

ஆடி மாசத்தில் செய்யக்கூடாதவை ..ஜோதிடம்


ஆடி மாசம் பொறந்துடுச்சி..சூரியன் கடக ராசிக்கு போகிறார் அது சந்திரன் ராசி...சந்திரன் உடல் மனக்காரகன் அங்கு நெருப்பு கிரகம் சூரியன் போவது ...என்றால் தண்ணீருக்குள் நெருப்பை போட்டா என்னாகும்..?கொதிக்கும்...ஆவியாகும்..நெருப்பும் அணையும்..அதனால் இந்த மாசம் சுப காரியத்துக்கு ஆகாது...நோய்கள் பெருகும் மாசம்..அதனால் நோய் எதிர்ப்பு சக்திகளான இயற்கை கொடுத்த மருந்துகள் வேப்பிலையும் ,மஞ்சளையும்..அதிகம் உபயோகித்து அம்மன் திருவிழாக்கள் தொடங்கும்..காதல் ராசியான கடகத்தில் நெருப்பு கிரகம் புகுந்தா காதல் விளங்குமா..? அதான் இந்த மாசத்துல கல்யாணம் வேண்டாம்னு பெரியவங்க சொன்னாங்க..கருவும் தங்காத மாசம் என்றுதான் புது ஜோடிகளையும் பிரிச்சு வெச்சாங்க அப்படி உருவாகும் கரு சித்திரையில் பிறந்து கொடூர எண்ணங்களும்,கோபமும் நிறைந்த குணவானாகவும்,அனைவரிடமும் பகை உண்டாக்கி கொள்கிறவனாகவும் இருப்பான்..!!

இன்னிக்கு தலையாடி...தேங்கா சுடுற நோன்பின்னு சின்னக்குழந்தைகள் சந்தோசமா சொல்வாங்க..பள்ளிக்கூடம் 3 மணிக்கே விட்ருவாங்க...இளம் தேங்காயை பாறையில் தேய்த்து மொழு மொழுன்னு செஞ்சி,அதோட கண்ணுக்குள்ள ஓட்டை போட்டு ஊற வெச்ச பச்சரிசி,வெல்லம்,எல்லாம் போட்டு குச்சியால குத்தி அதை நெருப்பில் சுடுவோம்...தேங்காய் ஓடு வெடிக்கும் வரை சுட்டு ,சாப்பிடும்போது ரொம்ப ருசியாக இருக்கும்...சின்ன வயசு சந்தோசம் தனி..இந்த வருசம் ஆடி 18க்கு காவிரி கரை புரண்டு ஓடும் என்பதை நினைத்தால் சந்தோசமா இருக்கு..ஆடி அமாவாசை,ஆடி வெள்ளி,அம்மன் ,கூழ்,மஞ்சள் காப்பு என கிராமங்கள் களைகட்டும்....!!! அனைவருக்கும் அம்மன் அருள் உண்டாகட்டும்..!!!

வெள்ளி, 12 ஜூலை, 2013

இரண்டு தார தோசம்; ஜோதிடம் பலன்

இருதார தோசம் என்பது முதல் கல்யாணம் முடிந்து இருவருக்கும் ஒத்து வராமல் பிரியும் நிலை உண்டாகி வேறு திருமணம் செய்யும் அமைப்பு எனலாம்...கல்யாணமாகி குடும்பம் நல்லா போய்க்கிட்டு இருக்கும்போதே சந்தர்ப்ப சூழ்நிலையால இன்னொருத்தருடன் பழக்கம் உண்டாகி தாலி கட்டாம குடும்பம் நடத்துறதையும் சொல்லலாம்..இப்படி இருதார தோசம் இருவகைப்படும்..இருதார தோசம் என்பதே பிறர் மயங்கும்படி கவர்ச்சியாக இருத்தல்,எதிர்பாலினரை தூண்டும் அழகு,காதலில் பலவீனமாக இருத்தல்தான்..சின்னக்குறைன்னாலும் மத்தவங்கக்கிட்ட ஆறுதல் தேடும் பலவீன மன்சு மட்டுமல்ல..அழகா பேசக்கூடியவங்க..சுலபமா மத்தவங்களை கவர்ந்துடுவாங்க...

உணர்வுகளையும் ஆசைகளையும் தூண்டி விடுவதும் அதை அனுபவைக்க தைரியம் கொடுப்பதும் கவர்ச்சி,அழகு அள்ளி வழங்குவதும் சுக்கிரன்,குரு,சந்திரன்,புதன் தான்...

ஒரு ஜாதகத்தில் குருவுக்கு மேற்க்கண்ட சுபர்கள் லிங்க் கொடுத்தால் இவங்க மத்தவங்களுக்கு லிங்க் வைக்கப்போறாங்கன்னு அர்த்தம்...குருவுக்கு 12,1,2,5,7,9,11 ல் சந்திரன் இருந்தா மூத்த பெண்களுடனும்,சுக்கிரன் இருந்தா இளம்பெண்களுடனும்,புதன் இருந்தா வயது குறைந்த சிறிய பெண்களுடனும் உறவு உண்டாகும்...மேற்க்கண்ட மூன்று கிரகங்களில் இரண்டு கிரகங்கள் குருவுடம் சம்பந்தம் பெற்றாலே போதும்..இருதார அமைப்பு உண்டாகிவிடும்..

உதாரணமாக ஒருவருக்கு குருவுக்கு இரண்டில் புதனும் சந்திரனும் இருந்தாங்க..குருவுக்கு 12ல் சுக்கிரனும் இருந்தது...இவருக்கு இரண்டு மனைவிகள்....முதல் மனைவியின் அக்காவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்...

திருமண பொருத்தம் பார்க்கும்போது கிரக சேர்க்கைகளை கவனமாக பார்த்தால் மட்டுமே இது போன்ற சிக்கலான பிரச்சினைகளை சமாளிக்க முடியும்...இந்த கிரக அமைப்பு இருப்பவர்கள் சரியான முறையில் பரிகாரம் செய்துகொண்டால்,பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்..

புதன், 10 ஜூலை, 2013

சினிமாவில் புகழ் பெற வைக்கும் ஜாதகம் அமைப்பு - சினிமா துறையில் முன்னேற வைக்கும் கடவுள்

சினிமாவில் புகழ் பெற வைக்கும் ஜாதகம் அமைப்பு எது..? சினிமா துறையில் முன்னேற வைக்கும் கடவுள் எது..?

எனது நண்பர் பாலு,ஒரு இயக்குனரை அழைச்சிட்டு வந்தார் ஏம்பா உனக்குத்தான் பெரிய ஆளுங்களையெல்லாம் தெரியுமே ..அப்படியே இவருக்கு ஒரு தயாரிப்பாளர் இருந்தா சொல்லு என்றார்...அவரும் என்னை வி.ஐ.பி ரேஞ்சிக்கு நினைச்சுக்கிட்டார் சார், என்கிட்ட ஒரு கதை இருக்கு ஒரு கோடி பட்ஜெட் .என ஆர்வமாக சொல்ல துவங்க,நான் உடனே மைனா மாதிரி இருக்குமா..அதுவும் ஒரு கோடி பட்ஜெட் தான் ..சூது கவ்வும் மாதிரி இருக்குமா..எனக்கு ரொம்ப பிடிக்கும்..என்றேன் அவர் கதை சொல்றதுக்கு முன்னாடியே நான் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்ததால் அவர் தலையை சொறிந்துகொண்டே கதை சொல்ல வேண்டியதாயிற்று..(என்னமோ நாந்தான் தயாரிப்பாளர் மாதிரி)படம் ஓபனிங் சீன் ஆத்தங்கரை....( அட...நிஜத்திலும் இப்படித்தான் கதை சொல்ல ஆரம்பிக்கிறாங்க..)அங்க நம்ம ஹீரோயின் மனநிலை சரியில்லாத பொண்ணு துணி துவைக்கிறாங்க...நான் உடனே சலிப்பாக சார் இதெல்லாம் மணிவண்ணன் முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை படத்துகியே பார்த்துட்டோம் அதுல இதான் ஓபனிங் சீன்..என்ன சார் பழைய ஸ்க்ரீன் ப்ளே கொண்டாந்துருக்கீங்க..உங்கள நம்பி ஒரு கோடி எப்படி போடுறது என தயாரிப்பாளர் சார்பில் நானே நெட்டி முறித்தேன் நண்பருக்கு ஏண்டா கூட்டிட்டு வந்தோம்னு ஆகியிருக்கும்..

சரி விசயத்துக்கு வருவோம்... சினிமா துறையில் புகழ் பெறனும் என்றால் நடிகைன்னா சந்திரன்,சுக்கிரன் 1,7 சம்பந்தம் பெறனும்..அப்போதான் அழகும், கவர்ச்சியும் போட்டி போடும்..அப்புறம் இயக்குனர் ,நடிகர் ஆகனும்னா 7ஆம் இடத்தில் புதன்,சுக்கிரன்,சந்திரன் தனித்தோ இணைந்தோ இருக்கனும்...

சினிமா துறையில் முன்னேற உதவும் கடவுள் குருவாயூர் கிருஷ்ணர் தான்..அப்புறம்  திருப்பதி பெருமாள்...

வளர்பிறை ஏகாதசி திதியில் தங்கள் குலதெய்வத்துக்கு காணிக்கை எடுத்து வைத்துவிட்டு ,கிருஷ்ணர் அல்லது பெருமாள் ஆலயம் சென்று நெய்தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து வணங்கவேண்டும்

உங்க ஜாதகத்தை ஆய்வு செய்து சினிமா துறைக்கு போவீங்கலான்னு சொல்றேன் பிறந்த குறிப்புகளை மெயில் பண்ணுங்க..அப்புறம் ஐம்பொன்ல ராசிக்கல் மோதிரம் போட விரும்புறவங்களும் மெயில் பண்ணலாம்..sathishastro77@gmai.com

..இதனால் சினிமா துறையில் விரைவில் இடம் கிடைக்கும்!!

வெள்ளி, 7 ஜூன், 2013

குருப்பெயர்ச்சி எந்த ராசியினருக்கு நல்ல நேரம்..? 2013-2014

குருப்பெயர்ச்சி ராசிபலன் பொறுத்தவரை ராசிக்கு 2,5,7,9,11 ல் குரு வரும்போது நல்ல யோகம் உண்டாகிறது அதாவது குருபலம் வந்து சேர்கிறது அந்த குருபலம் இருந்தால் பண பலம் உண்டாகும் செய்யும் காரியம் தடையின்றி நடைபெறும்...கல்யாணம் விரைந்து நடக்கும் குழந்தை பாக்யம் உண்டாக்கும்..நிலம்,வீடு வாங்கும் யோகம் உண்டாக்கும்...பணம் சரளமாக வந்து சேரும் இதனால்தான் மக்கள் குருப்பெயர்ச்சியை ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்..குருப்பெயர்ச்சி சாதகமாக இல்லாவிட்டாலும் என்னென்ன செய்யுமோ என்ற பதட்டமாக படிப்பார்கள் திசா புத்தி ஜாதகத்தில் வலுவாக இருப்பினும் ஜனன் ஜாதகம் சிறப்பாக இருந்தாலும் இது அவ்வளவாக பாதிக்காது..இருப்பினும் குருபலம் முக்கிய காரியங்களுக்கும் சுபகாரியங்களுக்கும் அவசியம்...ஜாதகத்தில் சுக்கிர புத்தி,செவ்வாய் புத்தி,7க்குடையவன்,9க்குடையவன் புத்தி எல்லாம் நடைபெறும்போது கல்யாணம் குருபலம் இல்லாதபோதும் நடக்கும்...

இப்போது மிதுனத்தில் குரு சஞ்சரிக்கிறார்....யாருக்கெல்லாம் இது சாதகமாக இருக்கிறது என்று பார்த்சபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ,ராசியினருக்கு மிகவும் சாதகமாதால் ரிக அதிர்ஷ்டமாக இருக்கிறது இதுவரை அவர்கள் பட்ட துன்பம் குறையும்....பணக்கஷ்டம் தீரும்....நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும் தொழில் பிரச்சினை தீரும்...மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும்..சரி இதிலும் யாருக்கு இன்னும் யோகமாக இருக்கிறது குருபலம் இருக்கு சனி பலம் யாருக்கு இருக்கு..ரிசபத்துக்குத்தான் சனி 6ல் யோகமாக இருக்கிறார் எனவே அவர்களுக்கு முதல்தரமாக இருக்கிறது சிம்ம ராசியினருக்கு ஏழரை சனி முடிந்துவிட்டதால் அவர்களுக்கும் சிறப்பாக இருக்கிறது..துலாம் ராசியினருக்கு ஜென்ம சனி நடப்பதால் அவர்களுக்கு பாதி யோகமாக இருக்கிறது...தனுசும்,கும்பமும் சனி பெருசா பாதிக்கல...சனி வக்ரமாக இருப்பதால் விருச்சிக ராசிக்கு ஏழரை சனி பாதிப்பு இப்போ தெரியாது....அஷ்டம குரு அவர்களுக்கு பாதிப்புதான் அதிக கவனமாக இருக்க வேண்டியது விருச்சிக ராசிக்காரங்கதான்..!!!

செவ்வாய், 14 மே, 2013

இடம்,நிலம் வாங்க போராட்டமா..? இதோ சுலபமான பரிகாரம் பூமி வசிய நாள்..!! ஜோதிடம்

மண்ணை தின்றால் பூமி யோகம் கிடைக்கும்...!!!

ஆமாங்க..ஒரு பழைய ஜோதிட பாடல் சொல்லுது...குறிப்பிட்ட  நாள் நட்சத்திரம் வரும் நாளில் கொஞ்சம் மண் அள்ளி சாப்பிட்டால் பூமி வசியம் உண்டாகுமாம்...சொந்தமாக இடம்,வீடு வாங்க போராடுபவர்களும்,ரியல் எஸ்டேட் தொழில் நஷ்டம் அடைந்தவர்களும் இதை முற்சித்து பார்க்கலாம்..!!

’’வித்துவான் பரணி யோனம் விசாகமோடத்த நாளில்
கருத்துட நாலங்காலில் கடகம் வந்துற்றபோது
திருத்திய சேய்நாள் மண்ணைத் தின்றிடச் செல் வழிஞ்சிப்
பொருத்தமும் புகழு முண்டாய்ப் பூமியுந் தன்னதாமே’’

பரணி,திருவோணம்,விசாகம்,அஸ்தம்,இந்த நட்சத்திரங்களில் 4 ஆம் பாதமும் ,கடக லக்னமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாளில் மண்ணைத் தின்றால் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்..என்பது இந்த பாடலின் பொருளாகும்..இதன்படி இந்த ஆண்டு பூமி வசிய நாள் வரும் நாள்,நேரம்..விபரம்...

2013 ஜூன் மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.15 முதல் 10.10 வரை..

சுத்தமான இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு கீழே இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து மனதில் அறுவெறுப்பு இல்லாமல் புனிதமான பிரசாதம் சாப்பிடுவது போல சாப்பிட வேண்டும்..சொந்த வீட்டு மனை இருந்தும்  வீடு கட்ட முடியாமல் இருந்தால் அந்த மனையின் வடகிழக்கு மூலையில் மேல் மண்ணை நீக்கி விட்டு கீழ் மண்னில் ஒரு பிள்ளையார் செய்து அதற்கு பூஜை செய்து  தீப தூபங்காட்டி வணங்கி அந்த பிள்ளையார் பிடித்த மண்ணை கொஞ்சம் சாப்பிட்டால் வீடு கட்டும் யோகம் உண்டாகும்...

நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பார்க்கலாம்!!!