புதன், 26 ஜூன், 2019

ஜாதகத்தில் நோய் பற்றி கண்டறியும் சூட்சுமம்


குழந்தைப்பேறும் சூரியன் சனிச் சேர்க்கையும்
சூரியன், சனி சேர்க்கை பார்வை பரிவர்த்தனை என்பது தகப்பன் மகன் சண்டையை மட்டும் குறிப்பதில்லை.
ஜாதகன் செய்கின்றதொழிலில் ஒருமிக்க நேர்மை இருப்பதும் நாணயமான தன்மையும் காட்டுகிறது.

   சூரியன் சனியின் சேர்க்கையோ, பரிவர்த்தனையோ, பார்வை புத்திரபேறு ஏற்பட தாமதமாகிறது. அல்லது புத்திர பேற்றை தடை செய்கிறது. கவனம்
    குறிப்பாக இக்கிரகச் சேர்க்கை கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் இருக்கக் கூடாது.
      சூரியன் சனி சேர்க்கையும் , நோயும்
 சூரியன் _  கண்ணொளி, எலும்பு, இருதயதசைகள், உயிரோட்ட மின் காந்தம்.
 சனி _   கால், மந்தம், மெதுவான இயக்கம், பழுது.
மேற்கண்ட காரத்துவங்களைப் பார்த்தால்
1.      சூரியன் + சனி  = கண்ணொளி, மந்தம், கண் பார்வை குறைவு.
2.      சூரியன் + சனி  = எலும்பு பழுதான நிலை
3.      சூரியன்  + சனி = கால் எலும்பு _ கால் எலும்பு பலவீனம்
4.      சூரியன்+ சனி   = இருதயம் பழுது _ பலவீனமான இதயம்.
போன்ற பல நிலைகள் உள்ளன. 
குறிப்பு
காரணமான வீடுகள் 1,2,6,8,12
திடீர் அடைப்பு             _ செவ்வாய்
கால் வாதம்               _  சனி
முகவாதம்               _   சுக்ரன்
முடக்கு வாதம்           _    சூரியன்
நரம்பு வாதம்              _    புதன்

திடீர், திடீர் என வருதல்    _   சந்திரன்
 தசை வாதம்               _  குரு
     இவற்றில் ராகு நோயை வெளியே தெரியும் படி அமையும். அதனை பெரிதுபடுத்திக் கொண்டே போகும்.
விதி
   இருவேறு பகை கிரகங்கள் நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது அவ்விரு கிரகங்களில் பலம் குறைந்த கிரகத்தின் காரகத்துவ உறுப்பு பாதிப்பு அடைந்து நோயாகிறது.     
  மேலும் நோய அதிகமாவாது அல்லது தீவிரமடைவது என்பது அக்கிரக கூட்டுக்குள் ராகு _ கேதுக்களுக்கும் தொடர்பாகும் போதுதான் தீவிரமடைகிறசூரியன் + சனி ஒரு குறிப்பு
சூரியன்  _ சனி இவ்விருவரும் தங்கள் வீடுகளுக்கு  பாதக ஸ்தானங்களில் உச்சமடைகின்றன.
 சிம்மத்திற்கு ( ஸ்திரத்திற்கு _ 9 ) பாதகம் _ மேஷம்  மேஷத்தில் சூரியன் உச்சம் சூரியன் சனி நீசம்.
கும்பத்திற்கு _ ஸ்திர ராசிக்கு 9 மிடம் பாதகம் _ துலாம் பாதகம் துலாத்தில் சனி உச்சம் சூரியன் நீசம்.
மேற்கண்ட சிம்ம _ கும்ப லக்ன ராசிக்கார்களுக்கு ஒரே நேரத்தில் தாய் தந்தையைப் பிரியதும் இழப்பதும் நடக்கிறது.
சிம்ம லக்கினத்திற்கு 4, 9 க்குடையவர் செவ்வாய் _ செவ்வாய்பாதித்தாலும் கும்ப லக்னத்திற்கு 4, 9 க்குடையவர் சுக்ரன். சுக்ரன் பாதித்தால் பெற்றோர்கள் இழப்பு நடக்கிறது. அல்லது சிம்ம, கும்ப லக்ன ராசிக்காரர்கள் தத்து போய்விடுகிறார்கள்.


ஜாதகத்தில் சூரியனுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் பலன்கள்


     கடகத்தில் சூரியனுடன் சேர்க்கை
சூரியன் + சந்திரன்
பண வரவான நபர்
இருதய தொந்தரவு
சூரியன் + செவ்வாய்
 ஏதேனும் ஒரு வகையில் தொழில் முறை எதிரிகள், ஆபரேசன்கள், வெப்பம் தொடர்பான நோய், இருதய வால்வுகள் தொடர்பான நோய் ஏற்படலாம். பூச நட்சத்திரத்தில் இந்த இனிப்பு ஏற்படும் போது கூட்டாளிகளை எதிரிகளாகி அவமானப்படுத்தலாம். ஆயில்ய நட்சத்திரத்தில் இக்கிரக சேர்க்கை ஏற்படும் போது நிர்வாகம் நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது.
சூரியன் + புதன்
   நல்ல அறிவாளி, மதியுகி, உடனே பிரபலமாகி விடுவார். எதிலும் எளிதில் பெயர் பெற்று விடுவார்.
சூரியன் + குரு
 அரசாங்க வகையில் நன்மை, வாழ்க்கை படிபடியாக நன்கு முன்னேறும். ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் வாழ்வின் தரம் உயரம், சுய நலத்தோடு முன்னேறுவார். நேர்மைவாதி, தன்னடக்கம் உடையவர்.
சூரியன் + சுக்ரன்
பெண்களால் லாபம் அடைபவர். இனிமையான பேச்சாளி.
சூரியன் + சனி

சுய நலவாதி, தந்தைக்கு எதிரான செயல்களைச் செய்பவர்.
தந்தையிடம் விரோதம் பாராட்டக்கூடியவர், வயதான நண்பர்களை உடையவர். இருதய நோயாளி அல்லது நுரையீரல் நோய்களை உடையவர். பூசத்தில் இக்கிரகச் சேர்க்கை ஏற்படும் போது தந்தைக்கு எதிராக வழக்கு கொடுத்து விரையத்தை ஏற்படுத்துவார். ஆயில்யத்தில் ஏற்படும் போது தேவையில்லாத வைத்திய செலவுகளை ஏற்படுத்துவார். தாயாருக்கு கட்டுபட்ட சோம்பேறி.
    சிம்மத்தில் சூரியனுடன் சேர்க்கை
    சூரியன் + சந்திரன்
அரசாங்கத்தின் பயனை அடைவார். நாணயவாதி. தாயாரை நிர்வாகியாகப் பெற்றவர்.
        சூரியன் + செவ்வாய்
 இயந்திர பணி மற்றும் இயந்திர நிர்வாகி, நிர்வாகத்திறனும் அடக்குமுறையும் அதிகம் கொண்டும் இரும்பு மனம் பெற்றவர். நாணயமான நிர்வாகி. வீட்டில் நான்கு கால் பிராணிகள் வளர்ப்பவர். மிக்க தைரியசாலி.
   சூரியன் + புதன்
மறைமுக அறிவு கொண்டவர். பிரபஞ்ச ரகசியகங்களை அறியப் போராடும் அறிவாளிகள் தவறான கட்டமைப்பை நிர்வாகிக்க கூடியவர்கள். நண்பர்களே இல்லாதவர்கள். நல்ல கணித அறிவு.
    சூரியன் + குரு


பொது சேவையில் பலரையும் சந்தோஷப்படுத்துவர்கள். கோவில் கட்டமைப்புகளை நிர்வாகிப்பவர்கள். மத நிர்வாகி, வெளியில் பாசம் காட்டமாட்டார்.
  சூரியன் + சுக்ரன்
ரகசியமான காதலர்களைக் கொண்டவர்கள், வெக்கப்பட வேண்டிய செயல்களை ஆடம்பரமாகச் செய்பவர்கள். ஆடம்பரமான நிர்வாகி.
    சூரியன் + சனி
தகப்பனார் அருகில் உள்ள போது சம்பாதிக்காத நபர். இருவரும் விரோதம் பாராட்டிக் கொள்வார்கள். சனி அஸ்தமனாகிப் போனால் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காது. எதுவும் துன்பப்பட்ட நன்மையும் உடனே கிடைக்காது. எதுவும் துன்பப்பட்ட பிறகே கிடைக்கும். பூர்வீகச் சொத்து கரையும்.