எம்.ஜி.ஆர் ஜாதகம் -ஒரு விளக்கம்
எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும், கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக விளக்கம் எதற்கு என்றால் புகழ்பெற்றவர்களின் ஜாதகத்தில் இருக்கும் சில நல்ல அம்சங்களை வைத்துதான் சில ஆய்வுகளை மேற்கொண்டால்தான் பல ஜோதிட புதிர்களை அறிய முடியும்...இது ஜோதிடம் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ;பிறந்த தேதி;28.1.1917
பிறந்த நேரம்;6.30 a.m
பிறந்த ஊர்;இலங்கை கண்டி
ராசி;மீனம்
நட்சத்திரம்;ரேவதி
எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17 என்பதுதான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது..ஆனால் இந்த பிறந்த தேதி குறிப்புகள்தான் சரி என பல வருடங்களுக்கு முன்,ஒரு ஜோதிடர் பத்திரிக்கையில் எழுதியிருந்தார்...இது சரியாக பொருந்தி வருகிறது...
அரசியலில் புகழ்பெற்றவர்கள் ஜாதகம் என்றாலே நாம் செவ்வாய் அவர்களுக்கு எப்படி என்பதைத்தான் பார்ப்போம்.அந்த வகையில் எம்.ஜி.ஆர் தமிழ்கத்தின் அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அல்லவா..? 1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள் தமிழக அரசியலில் இருந்தார்.அவர் ஜாதகத்திலும் ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றும், நவாம்சத்தில் பத்துக்குடைய சுக்கிரனை செவ்வாய் பார்வை செய்தும் பலம் நிறைந்து இருப்பதை அரசியல் பலத்தை குறிக்கிறது..அம்சத்தில் செவ்வாய்,சந்திரன் பார்வை....சசிமங்கள யோகத்தை ஏற்படுத்தி சந்திர திசையில் சரித்திர புகழை கொடுத்தது.
புத்திர ஸ்தானம்,5 ஆம் அதிபதி சுக்கிரன்,பாக்யாதிபதி புதன் 12 ல் மறைந்து,அவர்களுடன் பாம்பு கிரகம் ராகு கூடியதால் புத்திர தோசம்.அம்சத்திலும் 5 க்குடைய புதன் எட்டில் மறைந்திருப்பதை காணலாம்...
புதன்,சுக்கிரன் இணைவு ஸ்ரீ வித்யா யோகம் ஏற்பட்டு,9,10 க்குடையவன் சேர்க்கையும் ஏற்பட்டு ராஜயோகம் அமையப்பெற்றுள்ளது...கலைத்துறையில் அவர் சாதிக்க இந்த கிரக சேர்க்கைகள் முக்கிய காரணி எனலாம்.
சனி 7ல் அமர்ந்து அவர் குடும்ப வாழ்வில் பல சோதனைகளை தந்தது...
நவாம்சத்தில் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்த சந்திர திசை அவருக்கு பெரும்புகழை கொடுத்தது ..சந்திர திசை கேது புக்தியில் முதல்வர் ஆனார் (30.6.1977)அடுத்து வந்த செவ்வாய் திசை அவரை அரசியலில் அழியா புகழை கொடுத்தது.....
அரசில் உயர் பதவி வகிக்கவும்,அரசியலில் புகழ் பெறவும்,சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் பலம் அவசியம்...1,4,7,10 ஆம் இடங்களுடன் இந்த கிரகங்கள் சம்பந்தம் பெற வேண்டும்...
எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் 1ல் சூரியன் ,செவ்வாய் அமர்ந்தனர்..4 ல் குரு அமர்ந்தார்.7மிடத்தை சூரியன்,செவ்வாய் பார்த்தனர்.10 ஆம் இடத்தை குரு 7 ஆம் பார்வையாக பார்த்தார்.
எதிரிகளையும் பணிய வைத்த எம்.ஜி.ஆர்
ஆறாமிடத்தில் தீயக்கோள்கள் இருந்தால் ஜாதகர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவர்.தீமை செய்வோருக்கு தீமையும் நன்மை செய்வோருக்கு நன்மையும் ,தனக்கு பகைவராக இருப்பவரை எல்லாம் தனக்கு பயந்து யாவரும் தன்னை வந்து வணங்கதக்கதாய் மேன்மை அடைவார்கள் என ஒரு ஜோதிட பாடல் சொல்கிறது..எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் ஆறாமிடத்தில் கேது அமர்ந்து அநிலையை அவ்ருக்கு தருகிறது. காள சர்ப்ப யோகமும் 30 வயதுக்கு மேல் அவருக்கு பெரும்புகழ்,செல்வம்,அழிவில்லாத மக்கள் செல்வாக்கை தர முக்கிய காரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக