சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அற்புதம்;
சதுரகிரி சித்தர்கள் வாழும் பூமி.தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம்.இக்கோயில்
பற்றி நான் நேற்று எழுதியதை படித்த கோவை மணிகண்டன் என்னிடம் செல்போனில்
தொடர்புகொண்டார்..என்ன சார்..முக்கியமான நிறைய விசயம் எழுதாம விட்டுட்டீங்க..அங்க
எவ்ளோ அற்புதங்கள் இருக்கு தெரியுமா..என்றார்..எனக்கு தெரிஞ்சத மட்டும்
எழுதினேன்...எனக்கு வழிகாட்டி யாரும் இல்லாம தான் போனேன்..அதனால நிறைய எழுத
முடியல..உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க என்றேன்...அவர் சொல்ல ஆரம்பித்தார்.நான்
சின்ன வயசுல இருந்து அங்க அடிக்கடி போய்கிட்டு இருக்கேன்..மலையை சுத்தி ஜோதி
விருட்சம் மரங்கள் நிறைய இருக்கு...இந்த இலைகளை பறித்து திரிக்கு பதிலாக தீபம்
போடலாம்...கல்தாமரை எனும் இலைகள் இங்கு நிறைய இருக்கு.இது சர்க்கரை நோயை
முற்றிலும் குணமாக்கும்..நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகம் தரும்..இதை
வெளியூர் வைத்தியர்கள் நிறைய பறித்து செல்வார்கள்..இது தாமரை இலை போல
இருக்கும்..இது 10 இலை சேர்ந்தாலே ஒரு கிலோ வரும்...இது மார்க்கெட்டில் 350 விலை மதிப்பு
இருக்கு..குங்கிலியம் மரம் அதிகம் இருக்கு.அந்த மரத்தின் அடியில் இருக்கும் மண்
அவ்வளவு மணமாக இருக்கும்.இந்த மரத்தின் பிசிந்தான் சாம்பிராணி தூள்
ஆக்குகிறார்கள்...இந்த மரத்தின் அடியில் இருக்கும் மண் மதிப்பு மட்டும் கிலோ 150 ரூபாய்.இங்குள்ள மக்கள்
இதைதான் அதிகம் விற்று பிழைக்கிறார்கள்...பெரியாநங்கை செடி இங்கு அதிகம்
உண்டு..இதன் வேரை 48 நாட்கள் ஊற வைத்து அருந்தி வந்தால் பாம்பின் விஷம் கூட உடலில் ஏறாமல்
முறியும்...பாம்பு இந்த செடியை கண்டால் நடுங்கும்..இதைபோலவே நாகதாளி
வேரும்...பாம்பு அஞ்சும் மூலிகை....செந்நாயுருவி இங்கு நிறைய இருக்கு..இதை மென்று
சிலர் வசியமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...செங்குமரி,கருப்பு மஞ்சள் போன்றவையும் இங்கு
உண்டு..இது இரும்பை தங்கமாக்கும் மூலிகயில் முக்கியமானவை ....
நாங்கு குன்றுகளிலும் நான்கு காவல் தெய்வங்கள் இருந்து காவல்
காக்கின்றனர்...நடுவில் சுந்தரமகாலிங்கம்,சந்தன மகாலிங்கம்
இருக்கின்றனர்..வெள்ளைப்பிள்ளையார்...தவசிப்பாறை..குகை மகாலிங்கம் சிவனை அவசியம்
தரிசிக்கணும்..மலையின் உச்சியில்,சிறிய குகை இருக்கும்..இங்கு ஒரு புலி செல்லும் அளவுக்கு
குகை வாசல் இருக்கும்.இதனுள் சிறிது தூரம்..தவழ்ந்து சென்று..சிறிது
தூரம்..ஊர்ந்து சென்று,நுழைந்தால் நின்று கொள்ளும் அளவு இடம் இருக்கும்.அங்கு பெரிய மகாலிங்கம்
தரிசனம் செய்யலாம் என்றார்..இன்னும் பல அற்புதங்கள் சொன்னார்..எழுதுகிறேன்..!!!
10 கருத்துகள்:
உங்கள் கட்டுரையை படிக்க, படிக்க சதுர கிரிக்கு போக ஆசை அதிகரிக்கிறது! நன்றி!!
சதுரகிரி எங்க இருக்கு பாஸ்...
naanum angu sendruLLaen. powrnami-il eravu naerathil kaattukkuL selvathu tani aanantham. moolikai kaatru , thrndral veesum vanachooLal, appappaa enna inmam- anupavithaalthaan theiyum. ellorum paarkka vaedniya idam.
அருமையான பயனுள்ள தகவல்கள்.. பாராட்டுக்கள்..
அருமையான பயனுள்ள தகவல்கள்.. பாராட்டுக்கள்..
தொடருங்கள் நண்பரே !
way to SATHURAGIRI...by bus.... srivilliputhur-watrap (wathirayakudiyiruppu )- then by auto or van or town bus to Thaniparai. then you enter the FOREST CHECK POST. by normal walk , you can reach SATHURAGIRI IN 3 HOURS &,30 MINUTES.
நன்றி
எந்த மாத்தில் செல்வது நல்லது
எந்த மாத்தில் செல்வது நல்லது
கருத்துரையிடுக