வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்....கையே இல்லாதவனுக்கு எதிர்காலம் இல்லையா என்பது போன்ற வரிகளை நானும் ரசித்தும் இருக்கிறேன்..ஆனால் கைரேகை என்பது உண்மை...அதை நான் நம்புகிறேன்..காரணம் அதை சொல்லி சம்பாதிக்கும் நோக்கமல்ல...அதை நான் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள பல ஊர் சுற்றியிருக்கிறேன்..பல நிபுணர்களை சந்தித்து இருக்கிறேன்...
நாம் சிறு வயதில் இருந்து கைகளை மடக்குவதினால்தா இந்த ரேகைகள் தோன்றுகின்றன..இதில் ஒன்றுமில்லை..என்பது சிலர் கருத்து..ஆனால் உண்மை என்னவென்றால் ஒருவர் ரேகை போல இன்னொருவருக்கு இருப்பதில்லை...ஒருவர் ஜாதகம் போல இன்னொருவருக்கு இருக்காது என்பது போல...காவல்துறையிலும் கைவிரல் ரேகைக்கு என்று தனிப்பிரிவே இயங்குகிறது....
இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த சீரோ என்னும் கைரேகை கலைஞர்தான் இக்கலைக்கு மிகப்பெரிய புகழை கொடுத்தவர்..அவரும் இக்கலையை இந்திய குரு மூலம்தான் கற்று சென்றார்...
ஒருவரது கைகளை பார்த்தவுடன் எப்போது எப்படி இறப்பார்,வாழ்வில் உயர்வு உண்டா..இல்லையா.. என்பது முதல் அவர் ஆரூடம் சொல்வதில் கைதேர்ந்தவர்..
ஜாதக கட்டத்தில் பலம்,பலவீனமாக இருக்கும் கிரக அமைப்புகளை கைரேகை மூலமாகவும் அறியலாம்..ஒருவர் 35 வயதகியும் திருமணம் ஆகாமல் இர்ந்தார்..அவர் ரேகையை பார்த்தவுடன் சுக்கிரன் கெட்டு இருக்கிறது...சனியும் கெட்டு இருக்கிறது..கல்யாணம் செய்துகொள்வதில் உங்களுக்கு பயம்..மனைவியுடன் தாம்பத்யம் செய்ய முடியாது என நீங்களே உங்களை சந்தேகப்பட்டுக்கொண்டு,தாழ் வு மனப்பானமையை வ்சளர்த்துக்கொண்டு, பயந்து போய் திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு கொண்டு இருக்கிறீர்கள் என சொன்னேன்..அவர் ஆமாம் சார் அதுதான் உண்மை என ஒப்புக்கொண்டார்..
வசதி வாய்ப்புகளுடன் சொகுசாக வாழ்பவர்கள் கையில் பெருவிரலில் கீழ் மேடாகவும் நிறைய கோடுகள்,குறுக்கு கோடுகள் இல்லாமலும் இருக்கும்...அப்படியிருந்து ம் அவர்களுக்கு வசதி இருப்பின்,அதை அனுபவிக்க இயலாது...இதை சுக்கிரமேடு என கைரேகை சாஸ்திரம் சொல்கிறது!!
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் உள்ளங்கையில் தொடர்பு உண்டு என விளக்கும் படம்தான் அருகில் பார்க்கிறீர்கள்!!
2 கருத்துகள்:
படத்துடன் விளக்கமும் அருமை !
ப்யனுள்ள பகிர்வுகள்..
கருத்துரையிடுக