குருப் பெயர்ச்சி பலன்கள் 2012 -2013 ;ரிசபம் ராசியினருக்கு நன்மை செய்யுமா..?
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள்,ரோகிணி,மிருகசிரீடம் 1,2
வரும் வைகாசி மாதம் 4 ஆம் தேதி மாலை 6.24க்கு மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்..17.5.2012 முதல் 31.5.2013 வரை.
கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள்,ரோகிணி,மிருகசிரீடம் 1,2
வரும் வைகாசி மாதம் 4 ஆம் தேதி மாலை 6.24க்கு மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்..17.5.2012 முதல் 31.5.2013 வரை.
.இதனால் 12 ராசியினருக்கும்
வாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் எழுதுகிறேன்..அதன் வரிசையில் இன்று
ரிசபம்....ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடப்பின் பாதிப்பு அதிகம் இருக்காது...செவ்வாய்,ராகு,கேது,சனி,சூரியன்,ச ந்திரன்,திசா ந்டப்பவர்களுக்கும் லக்னத்துக்கு பாவிகள் திசா நடப்பவர்களுக்கும் குரு
பெயர்ச்சி,சனி பெயர்ச்சி யோகமாக இல்லாவிடில் துன்பம்
உண்டாகும்...
ரிசப ராசிக்கு சுக்கிரன் ராசி என்பதாலும்,சந்திரன் அங்கு உச்சம் ஆவதாலும் இவர்களுக்கு குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்துவதில்லை..இவர்கள் எப்போதும்
ஃபீல் பண்ணும் ஆள் இல்லை..எதையும் சுலபமாக கையாளும் சாமர்த்தியம்
கொண்டவர்கள்..வரும்முன் காப்போம் என்பதுபோல மிக எச்சரிக்கையாக இருப்பவர்கள்
என்பதால் ,பணம் சம்பாதிப்பதிலும் அதை சேமிப்பதிலும்
கெட்டிக்காரர்கள் என்பதால் வாழ்வில் எப்போதும் சக்ஸஸ்தான்...இருப்பினும்
எதிர்பாராத தொழில் நெருக்கடி,மனைவி,குழந்தைகளா ல் பிரச்சினை,போன்றவற்றில்தான் அதிகம்
குழம்பிவிடுவர்...
வைகாசி மாதம் குரு உங்கள் ராசிக்கு விரயத்தில்
இருந்து ஜென்மத்துக்கு வருகிறார்..அதாவது ராசிக்கு ஜென்ம ராசியில் வரும் குரு
இடப்பெயர்ச்சியை ஏற்படுத்தலாம்..வீடு,தொழில் செய்யும் இடம்
ஆகியவற்றை இடம் மாறுதல் செய்தல்..ஆகியவை வரலாம்..அப்படி எண்ணம் இருந்தாலும் அதை
உடனே செய்யுங்கள்..இதுவரை விரய ஸ்தானத்தில் குரு இருந்ததால் அதிக பணம் விரயமாகி
கொண்டே வந்தது..சிலருக்கு கடன் கூட ஏற்பட்டிருக்கலாம்..இனி அது
குறையும்...ராசிக்கு 5,7,9 ஆம் ஸ்தானங்களை குரு பார்ப்பதால் குழந்தைகள்,மனைவி,பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள்
தீரும்..திருமணம் கைகூடும்..இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் தடை நீங்கி
வெற்றியாகும்..தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்...
திருப்பதி,ஒப்பிலியப்பன்
கோயில்,திருச்செந்தூர் போன்ற தலங்களில் ஏதேனும்,ஒன்றிற்கு
குடும்பத்துடன் சென்று வாருங்கள்!!!
கார்த்திகை,மிருகசிரீடம் நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகனையும்,ரோகிணியில் பிறந்தவர்கள் திருப்பதியும் சென்று வருவது நல்ல பலன் தரும்..
கார்த்திகை,மிருகசிரீடம் நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகனையும்,ரோகிணியில் பிறந்தவர்கள் திருப்பதியும் சென்று வருவது நல்ல பலன் தரும்..
1 கருத்து:
தகவலுக்கு நன்றி நண்பா
கருத்துரையிடுக