ஜோதிடம்;மாணவர்களுக்கு ராசிபலன் பார்க்கலாமா?
என் மகன் ராசிக்கு குருபெயர்ச்சி எப்படி இருக்கு..அவனுக்கு சரியில்லாம போனா ரிசல்ட் சொதப்பிடுமே என பிளஸ் டூ ரிசல்டுக்கு காத்திருக்கும் பெற்றோர்களுக்கு பதட்டம் தொற்றிக்கொள்வது இயற்கை...
நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்குற பையனுக்கு குரு பெயர்ச்சி சாதகம இல்லைன்னா என்னாகும்..? ஒண்ணும் ஆகாது...அவன் மார்க் குறையுமா...குறையாது..என்ன சார் இப்படி சொல்றீங்கன்னு கேட்கிறிங்களா..?ஆமாங்க அதான் உண்மை..காரணம் என்னன்னா..வெறும் ராசிபலன் மட்டும் பார்த்து அவன் த்லைவிதியை நிர்ணயிக்க முடியாதுன்னு சொல்றேன்...
ஜாதகத்தில் கல்வி கிரகங்கள்..அதாவது நினைவாற்றல் கிரகம் புதன்...ஞானத்தை தரக்கூடிய குரு,மனபலத்தை ,மனத்தெளிவை தரக்கூடிய சந்திரன் கெடாமல் இருந்தால் லக்னத்துக்கு 2,3,4 ஆம் இடங்கள் கெடாமல் இருந்தால் நல்ல கல்வி அமையும்...அது ஜெயிக்கிற குதிரை..எந்த கோட்சாரத்துக்கும் கட்டுப்படாது..புதன் திசை அல்லது குரு திசை..அல்லது லக்னத்துக்கு சுபர்,யோகாதிபதி திசை நடந்தா படிப்பு ஜம்முன்னு இருக்கும்..புதனுடன் கேது இருந்தால் அவன் படிப்புக்காக பெற்றோர் படாதபாடு படணும்..எவ்வளவு படிச்சாலும் தலையில ஏறாது ...ன்னு நாடி ஜோதிடம் சொல்லுது....ராகு இருந்தாலும் இந்த சிக்கல் உண்டு...
நல்லா படிக்கிற பசங்களை உனக்கு டைம் சரியில்லை..பார்த்து படின்னு நீங்களும் பதட்டம் ஆகி,அவனையும் பதட்டம் அடைய வெச்சிடாதீங்க..குருப்பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி எதுவானாலும்..உங்கள் குழந்தைகளிடம் சொல்லி சோர்வடைய வைத்துவிடாதீர்கள்...உன் ராசிக்கு அஷ்டம சனி வேற ...குருபலமும் இல்லையாம்...பிளஸ்டூ ரிசல்ட் எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு...மார்க் குறையுமோ இல்ல..ஏதாவது பாடத்துல கோட்டை விட்ருவியோ தெரியலை என தன் மகனிடம் புலம்பிய ஒரு அப்பாவை பார்த்து கேட்டேன்..,
இன்னும் பாதி பரீட்சையை அவன் எழுதலை..அதுக்குள்ள அவனுக்கு சோர்வை உண்டாக்குற மாதிரி பேசுறீங்களே..இது அவனுக்கு மனரீதியா தெம்பு கொடுக்காது...படிப்புல சலிப்பை உண்டாக்கும் தெரியுமா என்றேன்...அவர் அப்போதும் ராசிபலன் கவலையிலேயே இருந்தார்....ஜாதக கட்டம் நல்லாருந்தா எந்த பாதிப்பும் கோட்சாரம் தரமுடியாது..அப்படி தந்தாலும் நல்லா படிக்கிற பையனுக்கு உடல்நலக்குறைவு அடிக்கடி வரலாம்...அவன் படிப்பை தலைகீழாக மாற்றிவிடும் என எண்ணாதீர்கள்..
1 கருத்து:
thevayana pathivu
கருத்துரையிடுக