குருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம்;
தன்மானமும்,வேகமும்,விவேகமும் நிறைந்த சிம்ம ராசிக்கார நண்பர்களெ...ஏழரை சனி எனும் துன்பக்கடலை நெருப்பாற்றில் நீந்துவது போல நீந்தி வந்தவரே...ஏழரை சனி முடிஞ்சிருச்சி..அது போதும் என நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருளால் இனி வெற்றி மேல் வெற்றி பெறும்..ஜெகத்தை ஆளும் மகம் நட்சத்திரத்தில் பிறந்து சிம்ம ராசியில் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு கண் முன் உதாரணமாக திகழ்கிறார்..
வரும் 17.5.2012 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 9ல் இருந்து 10 ஆம் இடத்திற்கு மாறுகிறார்...பத்தில் குரு வர பதவி பறிபோகும் என்ற ஜோதிட பாடலை நினைத்து வருந்தாதீர்கள்..சனி சாதகமக இருப்பதால் குரு உங்கள் பதவிக்கு பாதகம் செய்துவிடாது....
குரு உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தை பார்ப்பதால் பேச்சு சாதூர்யத்தால் பல வெற்றிகளை பெறுவீர்கள்...தனலாபம் உண்டாகும்...உறவினர்களால் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்..வேலைப்பளு கொஞ்சம் அதிகரிக்கும்..சொந்த தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள்...மனைவியால் லாபம் உண்டாகும்...
நீங்கள் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரனை குரு பார்த்தால் திருமண முயற்சிகள் கைகூடும்...அனுஷ்கா,அஞ்சலி போல மனைவி வேண்டும் என அடம் செய்யாமல் சூர்யா,விஜய் போல அழகான பையனைத்தான் கட்டிக்குவேன் என வாக்குவாதம் செய்யாமல் மனசுதான் முக்கியம்..நல்ல குணம் தான் முக்கியம்...நிறைய பணம் சம்பாதிக்கும் ஆடவன் வேண்டாம்..நம்மை விரும்பும் கணவன் தான் வேண்டும் என முடிவு செய்து திருமணத்தை முடியுங்கள்...பல சிம்மம் ராசியினருக்கு இந்த பிடிவாதம்தான் திருமண தாமதத்தை உண்டாக்குகிறது..
10 ல் குரு வருவதால் தொழிலில் போட்டி பொறாமை,மேலதிகாரிகளால் அதிக பணி சுமை உண்டானலும்..அதை சுலபமாக சமாளிப்பீர்கள்..அதற்கேற்ற வருமானமும் பெற்றுவிடுவீர்கள்..ஆனி 11 சனி வக்ரத்துக்கு பின் இன்னும் சிறப்பான முன்னேற்றம் உண்டு..எனவே முடிந்த பொழுது குன்றில் இருக்கும் குமரனை வணங்கி வாருங்கள்...! குறையிலா வாழ்வு தருவார்!!
2 கருத்துகள்:
Thanks Sathish.
sir, வணக்கம்
எனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் ?
சிம்ம ராசியில் 10ல் குரு வருவதால்
இருக்கும் வேலையை விட்டு விட்டு நான் வெளிநாடு வேலைக்கு போகலாமா? இல்லை தற்போதைய வேலையை பார்ப்பது நல்லதா ?
கருத்துரையிடுக