ஆரம்ப கால ஜோதிடனாய் இருந்தபோது 10ல் குரு வந்தால் பதவி பறிபோகும் என
ஒரு முட்டை வியாபாரிக்கு பலன் சொல்லி திகில் கிளப்பிவிட்டுவிட்டேன்.அவர்
என் குருவிடம் போய் ,இப்படி உங்க சிஷ்யன் சொல்லிட்டார் என புலம்பிட்டார்.
குருவிடம் இருந்து அழைப்பு வந்தது.அவரோ கோபக்காரர் பயந்துகொண்டுதான்
போனேன்.10ல குரு வந்தா தொழில் போயிடும் என சொன்னியா என்றார். நான் மெளனமாக
இருந்தேன்.10ல் குரு வந்தாலும் இவருக்கு சுக்கிரனை குரு பார்க்கிறார்
ஜாதகத்தை பார்த்தியா இல்லையா...என்றார். நான் இதை கவனிக்கலையே என
யோசித்தேன்.குரு மாறியதும் இவர் வண்டி வாங்கி தொழிலை விரிவுபடுத்த போகிறார்
பாரு.என்றார் அதன்படியே குருப்பெயர்ச்சி ஆனதும்,அவருக்கு போட்டியாக இருந்த
இன்னொரு முட்டை வியாபாரி தொழிலை விட்டுப்போக இவருக்கு இன்னும் அதிக மளிகை
கடைகள் கிடைக்க தொழிலை விரிவுபடுத்தி மினி ஆட்டோ வாங்கி அதிக கடைகளுக்கு
சப்ளை செய்தார்..
குரு சொன்னது பலித்தது..அதன்பின் நான் ராசிபலன்
அப்படியே சொல்லக்கூடாது என புரிந்துகொண்டேன். குரு வாழ்க என சொல்லி அன்று
ஒரு பாடம் அவரிடம் கற்றேன். இது 7 வருடத்துக்கு முன் நடந்தது.உங்கள்
பிறப்பு ஜாதகத்தில் குரு எங்கே வந்தாலும் செவ்வாயை,சுக்கிரனை பார்த்தால்
அதிர்ஷ்டம் உண்டு.சுபகாரியம் நடக்கும் சொத்து சேர்க்கையோ, அல்லது
திருமணமோ,குழந்தை பாக்யமோ உண்டாகும். அவரவர் வயதுக்கு தகுந்தாற்போல இது
மாறுபடும்.குரு இன்று இல்லை..ஆனால்
அவர் ஒவ்வொரு சொல்லும் இன்று என்னை வழி நடத்துகிறது!!
அவர் ஒவ்வொரு சொல்லும் இன்று என்னை வழி நடத்துகிறது!!
குரு வாழ்க ,குருவே துணை ,குருவே சரணம்!
1 கருத்து:
Hi sir please help me abt guru payirchi this is venkat rasi simham lagna is dhanur mars in 4th,guru and venus in 6th,mercury in7th,sun in 8th,moon in 9th,sani in 12th,rahu in 3rd and kethu in 9th pleasr tell my palan
கருத்துரையிடுக