திருவண்ணாமலை ; thiruvannamalai
பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.இங்கு மலையே இறைவனின் சொரூபம்.இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது.
25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன்
இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தார். அந்த
நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும். குறிப்பாக
திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய
பலனைத் தரவல்லது.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,
துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம்
கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள்
புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கிரிவலம் மகிமை
புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின்
இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை
நட்சத்திரத்தில் மலையை வலம் வந்தார். அப்போது சிவன்
காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள்,
ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம்
வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்)
காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில்
கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான்.
இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால்
போற்றப்பட்டது.
ஜாதகத்தில் சூரியன் பலம் இழந்தவர்கள்
,சந்திரன் பலம் இழந்தவர்கள்,விருச்சிகம் ,சிம்மம் ராசியினர்,ஐப்பசி மாதம்
பிறந்தவர்கள்,சித்திரை மாதம் பிறந்தவர்கள் ,சூரிய கிரகணம்,சந்திர
கிரகணத்தில் பிறந்தவர்களுக்கான முக்கியமான பரிகாரம் திருவண்ணாமலை மகா தீபம்
தரிசனம் செய்வதாகும்...ஐப்பசியில் சூரியன் பலம் இழக்கிறார்..அதனால் நம்
முன்னோர்கள் தீப ஒளி நாள் என கொண்டாடினர்...சந்திரன் விருச்சிகத்தில் பலம்
இழக்கிறார் அதனால் சூரியன் விருச்சிகத்துக்கு வரும் மதமான கார்த்திகையில்
மகாதீபம் ஏற்றி கர்த்திகை தீபம் கொண்டாடினர்...ஒளிகிரகங்கள் ஒளி இழக்கும்
மதங்களில் ஒளி தீபம் ஏற்றி வழிபட்டு தோசம் நீக்கும் திருவிழாக்கள்
இவை..முன்னோர்களின் வழிபாட்டின் சூட்சுமம் இவை.
5–ந் தேதி மகாதீபம்
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 5–ந் தேதி
(வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதி
முன்புள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6
மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம்
ஏற்றப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக