செவ்வாய், 16 ஜூன், 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 ரிசபம்

குருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 ரிசபம்

கிருத்திகை2,3,4 ஆம் பாதம்,ரோகிணி,மிருகசிரீடம் 1,2 பாதங்களை சேர்ந்த ரிசப ராசி நண்பர்களே...

கடந்த ஒருவருடமாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் வரும் 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி மாறுகிறார்...இதன் பலன்கள் எப்படி இருக்கும் என பார்ப்போம்..

ரிசபம் ராசிக்கு குரு பகைவர் என்றாலும் அவர் முழுமையான சுபக்கோள் என்பதால் தள்ளிவைத்து விட முடியாது..அவர் மறைந்தால் நல்லதுதான் என்றாலும்,போன வருடம் பல சிக்கல்களையும் இழுபறிகளையும் உண்டாக்கிவிட்டார்...சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை,வரவேண்டிய பணம் இழுபறி,சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு,சேமிப்பு கரைதல்,புதிய கடன் உண்டாகுதல்,அவமானம்,மன உளைச்சல் ,மருத்துவ செலவினம் என பலரும் சந்தித்திருப்பர்.

இப்போ வரும் குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு மாருகிறது..நான்காம் இடம் சுக ஸ்தானம்,சொந்த வீடு,தாயை குறிக்கும் இடம் ...உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்,இடம் வீடு வாங்கும் யோசனை செய்வீர்கள் ,குழந்தைகள் எதிர்காலத்துக்காக பெரும் தொகை ஒதுக்கவோ செலவு செய்யவோ செய்வீர்கள்,..அம்மா சம்பந்தமான ஆரோக்கியம் சம்பந்தமான செலவுகள் செய்ய நேரும்...இளைய சகோதரன் மூலமும்,..மாமனார் வழியிலும்  ஆதாயம் உண்டு... வெளிநாடு பயணம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும்...அலைச்சல் ,ஏமாற்றம் என கடந்த ஒரு வருடமாக அவதிப்பட்ட உங்களுக்கு சுகமும் நிம்மதியும் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும்..சேமிப்பு உயர்ந்தால் புதிய சொத்துக்கள் வாங்கும் நிலையும் உண்டாகும் ..சிலருக்கு கடன் அடையும் ..ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்..உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள்..

14.7.2015 முதல் 7.1.2016 வரை உங்களுக்கு பெரிய பாதிப்பு தராத அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்லலாம்...நாலாம் இட குரு உங்க ராசிக்கு எட்டாம் இடம் பார்வை செய்வதால் அதிர்ஷ்டத்தால் பெரும் பணம் கிடைக்க வாய்ப்புண்டு..ஆயுள் ஸ்தானத்துக்கு பலம் கிடைக்கிறது விபத்துக்கள் தவிர்க்கப்படும்..மனைவியால் ஆதாயம் கிடைக்கும்..கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்...

ராசிக்கு பத்தாம் இடத்தை குரு பார்வை செய்வதால் தொழில் சிறப்பாக நடக்கும் பணிபுரியும் இடத்தில் மதிப்பும் செல்வாக்கும் உயரும்...சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்...12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வங்கி இருப்பு அதிகரிக்கும் கடன் குறையும்...விரயங்கள் கட்டுப்படும்...வீண் செலவுகள் கெட்ட செலவுகள் கட்டுப்பட்டால் சேமிப்பு அதிகரிக்கத்தானே செய்யும்...

8.1.2016 முதல் 8.6.2016 வரை குரு வக்ரமாகி மூன்ராம் இட பலன்களே மறுபடி கொடுத்து சிக்கல் தருவார் அந்த காலம் மட்டும் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நல்லது....பண விரயம்,மருத்துவ செலவு,அலைச்சல்,நஷ்டம் உண்டாக்குவார்...அதன் பின் எல்லாம் சுகமே..

பரிகாரம் -திருப்பதி போயிட்டு வந்து ரொம்ப நாளாச்சுன்னு சொல்றவங்க அங்கு போயிட்டு வருவது ரொம்ப நல்லது....மகாலட்சுமி கோயில் தேடி சென்று வழிபட்டு வருவது திருநாகேஸ்வரம் சென்று வருவது நல்லது ..ஊட்டி,கொடைக்கானல் போறது மட்டுமே யோசிக்காம இப்படி ஆன்மீக டூரும் போயிட்டு வாங்க..குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்..

ஸ்ரீமகாலட்சுமி கலசம் ;

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி ஆகியவற்றை பல நண்பர்கள் நம்மிடம் பெற்றனர் அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும் நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.

இப்போது உண்மையாகவே உங்கள் வீட்டுக்கும்,தொழில் செய்யும் இடத்திற்கும் கவசம் போல திகழக்கூடிய ஸ்ரீ மகாலட்சுமி கலசம் உருவாக்கி இருக்கிறோம்..பல கேரள  வீடுகளில் பார்த்து இருப்பீர்கள் வீட்டு முன் மஞ்சள் துணியில் பல மூலிகைகளை ஒன்றாக கட்டி வீட்டு முன் கட்டி திங்க விட்டிருப்பர்..அதே போல செல்வவளம் உண்டாகவும்,தொழில் முடக்கம் நீங்கவும்,வருமானம் அதிகரிக்கவும்,வீட்டில் நிம்மதி உண்டாகவும்,கடன் தீரவுய்ம்,செய்வினை,பில்லி சூனியம் விலகவும் ஸ்ரீ மகாலட்சுமி கலசம் உருவாக்கி இருக்கிறோம்...



பல அரிய மூலிகைகள்,வேர் ரட்சைகள்,சத்ரு சம்ஹார அட்சரம்,தெய்வீக அருள் நிரம்பிய பட்டைகள்,வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேர்,மருதாணி வேர் என அதிர்ஷ்டமான மூலிகைப்பொருட்கள் அடங்கிய மஞ்சள் துணியில் கட்டப்பட்ட இதனை வீடு,தொழில் செய்யும் முன் வாசலில் கட்டி தொங்க விடலாம்..கெட்ட சக்திகள் அண்டாது..நல்ல சக்திகள் வீட்டில் குடியேறும்...ஈசானிய மூலையில் தொங்க விடும்போது தெய்வ அருள் அந்த இடத்தில் நல்ல பலன் தரத்துவங்கும்.

இதன் விலை 700 மட்டும்.சர்வ ஜன வசிய எந்திரம் விலை ரூ 700..மூலிகை சம்பிராணி அரை கிலோ ரூ 500 மட்டும்..தேவைப்படுவோர் போன் செய்யவும். முகவரி எஸ்.எம்.எஸ் செய்யவும்... 9443499003 sathishastro77@gmail.com

வங்கி கணக்கு விபரம் ;
k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971


கருத்துகள் இல்லை: