குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி
உத்திரம் 2,3,4 ஆம் பாதம்,அஸ்தம் 4ஆம் பாதம்,சித்திரை 1,2 பாதங்கள்
அன்பான ,கலகலப்பான கன்னி ராசி நண்பர்களே..புதனின் ராசியில் பிறந்ததால் அறிவும்,அன்பும்,நிரம்ப பெற்றவர்கள்..தானும் சந்தோசமாக இருக்க வேண்டும் மற்றவர்களையும் சந்தோசப்படுத்த வேண்டும்..என நினைக்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர் நீங்கள்..எதற்கும் அலட்டிகொள்ளாமல் ,மற்றவர் பிரச்சினைக்கும் நல்ல ஆலோசனை சொல்வதி கெட்டிக்காரர் நீங்கள்..உங்களுக்கு இப்போது வரப்போகும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்..? என பார்ப்போம்..
வாக்கிய பஞ்சாங்கப்படி 5.7.2015 அன்றும் திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 அன்றும் கடக ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..உங்கள் ராசிக்கு இதுவரை 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்து சென்ற குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமாகிய 12 ஆம் இடத்துக்கு வருகிறார்...எது கிடைக்க வேண்டும் என் எதிர்பார்க்கிறீர்களோ அது கிடைக்காது ..யாரை நம்பி இருக்கிறீர்களோ அவரால் நல்ல பலன்கள் கிடைக்காது....வருமானம் குறையும்...கெட்ட பெயர் உண்டாக நிறைய வாய்ப்பிருப்பதால் கொஞ்சம் கவனமா இருந்துகிட்டா தப்பில்லை என்கிறார் குரு.
சென்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு லாபத்தில் அமர்ந்து சிலருக்கு புது வாகனம்,இடம்,வீடு கட்டுதல் வாங்குதல் போன்ற சந்தோசமான அனுபவங்களை கொடுத்திருப்பார்...இந்த வருடம் அது சம்பந்தமான செலவுகளை,பிரச்சினைகளை உண்டாக்குவார்...12 ஆம் இடத்து குரு அலைச்சல் அதிகம்..பலன் குறைவு...உழைப்பு அதிகம்..நல்ல பெயர் வருமானம் குறைவு...உங்க ராசிக்கு சனியால் எந்த தொந்தரவும் இல்லை..ஏழரை சனியும் எப்பவோ முடிஞ்சிருச்சி...ராசிக்கு குரு அவ்வளவு யோகம் தரக்கூடியவர் இல்லை..அவர் மறைவது ஒரு விதத்தில் நல்லதுதான் என்றாலும் மருத்துவ செலவினங்களை உண்டாக்குவார் என்பதும்,தொழில் நிலையில் ம்ந்தத்தை உண்டாக்குவார் சேமிப்பை கரைப்பார் என்பது ம் கவலை தரும் விசயம்தான்..
ஜாதகத்தில் பாவகிரகங்களின் திசாபுத்தி நடப்போருக்கு போன தடவை என்னத்த லாபகுரு மட்டும் கொடுத்தார்..பின்னி பெடல் எடுத்தார் என புலம்பினால் ,லாபகுருவே ஒன்றும் செய்யாத போது,12ஆம் இடத்து குரு இருமடங்கு மோசமான பலன்களையே தரும்...
ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் மட்டும் சமாளிக்கலாம்..இருப்பினும் 12ஆம் இடத்து குரு சுபகாரியங்கள் செய்ய தடங்கல்கள்,தாமதத்தை உண்டாக்கினாலும் 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலன காலகட்டம் குரு வக்கிரம் என்பதால் அப்போது உங்களுக்கு லாபஸ்தான குரு செயல்படுவார் அது உங்களுக்கு அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்லலாம்..வருமனம் அதிகம் உண்டாகும் தடைகள்,தாமதம் எல்லாம் உடையும்,சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.தொழில் சிறப்பாக நடக்கும்.
முதல் 6 மாத காலங்கள் மட்டும் இந்த குரு பெயர்ச்சி பாதகமாக செயல்படும் எனவே செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் முருகன் கோயிலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும் நல்லதே நடக்கட்டும்..
செல்வவளம் உண்டாக
2 கருத்துகள்:
>>> புதன் ராசிக்கு குரு அவ்வளவு யோகபலன்கள் தருபவர் இல்லை <<<
குரு எங்கிருந்தாலும் சரி..
நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும்.. குடும்பம் உற்றார் உறவினர் நண்பர்கள் என எல்லாரும் மகிழ்ந்திருக்க வேண்டும்..
அவ்வளவு தான் பிரார்த்தனை..
தேவகுருவாகிய பிரகஸ்பதியே -
1)சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை - தென்குடித் திட்டையிலும் திருவலிதாயத்திலும்,
2)சிவஷண்முகப்பெருமானை திருச்செந்தூரிலும் வணங்கி நிற்கின்றார்..
அப்படியிருக்க - நாம் ஏன் - குருபெயர்ச்சி என பிரகஸ்பதியைத் தொந்தரவு செய்ய வேண்டும்?..
சிவமும் சிவஷண்முகமும் சிந்தையில் இருக்க
சிறுமைகள் ஏது மனமே..
நன்றி அண்ணே
கருத்துரையிடுக