ஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks
ஜோதிட பாடம் என எடுத்துக்கொண்டாலும் சரி..ஜோதிட குறிப்புகள் என எடுத்துக்கொண்டாலும் சரி..சில முக்கியமான ஜோதிட குறிப்புகளை அடிக்கடி எழுதலாம் என இருக்கிறேன்...அவை எல்லோருக்கும் பெரிதும் பயன்படக்கூடியதாகத்தான் இருக்கும்..சின்ன சின்ன குறிப்புகளையோ ,பரிகாரங்களையோ தனி பதிவாக எழுத முடியாது என்பதால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இதில் எழுதிவிட முயற்சிக்கிறேன்..
குரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க பிறந்தவர்,
சுக்கிரன் உச்சத்தில் இருக்க பிறந்தவர் என்றெல்லாம் ஒரு ஜாதகத்தை உயர்வாக சொல்வோம்..ஆனால் அதை எல்லாம் விட முக்கியம் நாம் பிறந்த தமிழ் மாதம் சிறப்பாக இருக்க வேண்டும்..ஏனெனில் அப்போதுதான் சூரியன் நல்ல நிலையில் இருப்பார்...சித்திரை,ஆனி,ஆடி,புரட்டாசி,மார்கழி,பங்குனி போன்றவை சுமாரான மாதங்கள்..இவற்றில் சூரியன் சிறப்பானவை அல்ல..என்பது காலம் காலமாக சொல்லப்படுகிறது இவற்றில் சுபகாரியமும் செய்வதில்லை..காரணம் அது நிலைத்து, நீடித்து பலன் தராது என்பதால்தான்..சூரியன் பிதுர்காரகன் என்பதால் தந்தையையும் அவர் வம்சத்தையும் குறிப்பதால் சூரியனின் பலம் அக்குழந்தையின் தந்தை வழி எப்படிப்பட்டது இனி அந்த வம்சம் எதை நோக்கி செல்லப்போகிறது என்பதை பிறந்த தமிழ் மாதம் நிர்ணயிக்கிறது...அதன்பிறகு ஜாதகத்தில் சூரியனின் நிலை அவருடன் சேர்ந்த கிரகம்,பார்த்த கிரகம் இவற்றையெல்லாம் ஆராய்ந்து அதற்கு மேலான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
.சூரியன் நமக்கு கண்ணுக்கு தெரிந்த முக்கியமான ஒளி கிரகம்..புதனையோ சுக்கிரனையோ நாம் பார்த்ததில்லை..ஆனால் சூரியனை தினமும் பர்க்கிறோம்..அவர் நம் ஜாதகத்தில் உயிருக்கு சமமானவர்...எனவே ஜதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பதில் நம் முன்னோர்கள் நிறைய முன்னெச்செரிக்கையுடன் இருந்திருக்கின்றனர்..ஆடி மாதம் புது தம்பதிகள் சேர்ந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்..அது சரராசியில் இருப்பதால் தந்தை குடும்பத்துடன் தங்காமல் ஊர் ஊராக அலைய நேரிடும் என யோசித்து புது தம்பதிகளை பிரித்து வைத்தனர். ஆனால் இப்போ ,அது எல்லாம் மூட நம்பிக்கை என்கின்றனர்...என்ன சொல்ல..?அனுபவப்பட்டால் தெரிந்துவிடப்போகிறது.
சந்திரன் இல்லாவிட்டால் அன்பு ஏது..? இரக்கம் ,அம்னிதாபிமானம்,சிந்தனை ,கவி,புலமை,ரசனை ஏது..? இதுதானே மனிதனை மனிதனாக இயங்க செய்கிறது..? அழகை கொடுக்கிறது..காதலை கொடுக்கிறது..ஜனன உற்பத்திக்கு சூரியனும்,குருவும் அடிப்படை என்றாலும் உற்பத்திக்கு தூண்டுதல் காமத்துக்கு முதல் படியான காதலுக்கு சந்திரன் தானே காரணம்...மிருகத்தனமான கமத்துக்கு சுக்கிரன் காரணம் என்றாலும் ரசித்து ,ருசிக்க சந்திரன் தான் காரணம் ...அத்தயக சந்திரன்...ஜாதகத்தில் முக்கிய சுப கோள்களுக்கு கெடாமல் இருப்பது வசதியாகவும்,சுகமாகவும் வாழ வழி வகுக்கும்...
சூரியன் நெருப்பு..சந்திரன் குளிர்ச்சி..நெருப்பிலிருந்து எவ்வளவு தூரம் விலகி சந்திரன் இருக்கிறாரோ அவ்வளவு சிறப்பு...வளர்பிறையில் பிறப்பு ஆஹா..வளர்ச்சிக்கும் ,அறிவுக்கும் எல்லை ஏது..? அசுப கிரகங்கள்..சேராமல் இருந்தால் பார்க்காமல், இருந்தால் இன்னும் அருமை...புதன்,சுக்கிரன்,குரு போன்ற சுபகிரகங்களுடன் சேர்ந்தால் அல்லது கோணங்களில் இருந்தால் அதைவிட அருமை...லக்னத்திற்கு சுபருமாகி கேந்திரம்,திரிகோணத்திலிருந்தால் ராஜயோகம்தான்...
சந்திரன் தாய்க்கு காரகம் வகிக்கிறார் ..சூரியன் தந்தைக்கு காரகம் வகிக்கிறார்...தாயும்,தந்தையும் இல்லாமல் நாம் பிறப்பதில்லை..சூரியன்,சந்திரன் கைகொடுக்காமல் வேறு எந்த கிரகம் கைகொடுத்தாலும் ஜாதகருக்கு பலம் இல்லை...புண்ணியமும் இல்லை...சூரியன் நீதி,நேர்மை,ஒழுக்கம்,கட்டுப்பாடு இவற்றை போதிக்கிறார் தந்தையின் கடமை அதுதானே....
சந்திரன் அன்பு,இரக்கம்,மனிதாபிமானம்,பாசத்தை ஊட்டுகிறார்..தாயின் இயல்பு அதுதானே..இயற்கையாகவே நம் இந்தியாவில்தான் சூரியன்,சந்திரன் உதயம்,மறைவு சமமாக இருக்கிறது...துலாம் ராசியில் தராசு சின்னம் படம் போட்டிருக்கும்..அதன் அர்த்தம் துலாம் ராசியில் சூரியன் வரும்போது இரவும் பகலும் சமமாக இருக்கும்..காலை 6 மணி உதயம் என்றால் மாலை 6 மணி சூரியன் மறைவு என இருக்கும்..
பருவநிலைகள் சமமாக இருக்கிறது..அதனால்தான் இங்கு அன்பும்,சமத்துவம்,பாச உணர்வு,குடும்ப அமைப்புகள்,தெய்வீக சக்தி,இயற்கை வைத்தியம்,தெய்வீக மூலிகைகள்,மகான்கள் ஆசி எல்லாம் அமைந்திருக்கிறது..உலகில் வேறு எங்கும் இவை கிடைக்காது...கிடைத்ததை உண்டு,மனம் போல வாழும் முறை கூடாது....காரணம் உலகிற்கே வழிகாட்டியாக திகழக்கூடிய கடமை இங்குள்ள மக்களுக்கு இருக்கிறது..அதுதான் இயற்கை நமக்கு இட்டிருக்கும் உத்தரவு..
(தொடரும்)
2 கருத்துகள்:
நல்ல பகிர்வு.
ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாமில் நீசம், இதன் பலன் ?
கருத்துரையிடுக