செவ்வாய், 7 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016 மகரம்

குரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016 மகரம்

உத்திராடம் 2ஆம் பாதம் முதல்,திருவோணம்,அவிட்டம் 2ஆம் பாதம் முடிய ,இருக்கும் மகர ராசி நண்பர்களே..கடுமையான உழைப்பால் தானும் முன்னேறி தான் பிறந்த குடும்பத்தையும் உறவுகளையும் முன்னேற்ற துடிக்கும் நல்ல மனம் கொண்டவர் நீங்கள்...பிறந்த போது பல துன்பங்களை அனுபவித்திருந்தாலும் பிற்காலத்தில் நல்ல நிலையை அடைந்தே தீர்வீர்கள்...நேர்மை,நியாயம்,உழைப்பு ஒன்றே உங்களுக்கு தெரிந்தது என வாழ்வில் போராடி கொண்டிருப்பவர்..அதிர்ஷ்டத்தை நம்பாமல் தன்னம்பிக்கையுடன் சாதிப்பீர்கள்..

குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்துக்கு 14.7.2015 முதல் பெயர்ச்சியாகிறார்... இதுவரை உங்கள் ராசிக்கு 7ல் உச்ச குருவாக இருந்த குருபகவான் ,உங்கள் மனைவிக்கு அல்லது கணவருக்கு நல்லவை நடத்தி கொடுத்தது உங்களுக்கும் பல வகையில் ஆதாயம் கொடுத்தது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறின..அதே சமயம் வர வேண்டிய லாபம் எல்லாம் எங்கு போனது என தெரியாமல் குழம்பவும் வைத்தது அதற்கு காரணம் லாபத்தில் இருந்த சனிதான்...அந்த இடம் சனிக்கு பாதக ஸ்தானம் என்பதால் லாபத்தையும் கொடுத்து அதற்கேற்ற செலவையும் கொடுத்து கொடுத்தவனே பறித்துக்கொண்டார்....

குரு எட்டாமிடத்துக்கு வருவது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல..அதே சமயம் உங்களுக்கு விரயாதிபதி குரு மறைந்து விடுவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் அடிப்படையில் கெட்டதிலும் ஒரு நல்லது கலந்திருக்கிறது...

2ஆம் இடம் வலிமை பெற்றால் தன வரவு அதிகரிப்பதை போல 8ஆம் இடத்தில் மாறியிருக்கும் குரு வழ்க்கை துணைவரின் செல்வவளத்தை அதிகரிக்க செய்வார்..உயில்கள் மூலம் முன்னோர்களின் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு...எப்போதோ கிடைக்க வேண்டிய லாபம் இப்போது வந்து சந்தோசப்பட வைக்கும்..உங்கள் ராசிக்கு 3,12க்குடைய குரு எட்டில் மறைவதால் விபரீத ரஜயோகம் செயல்படும்....தன லாபம் உண்டாகும்..

குருவின் பார்வை தன குடும்ப ஸ்தாமமாகிய 2ஆம் இடத்தில் பதிகிறது இதனால் தன லாபம் அதிகரிக்கும்..உங்கள் ராசிக்கு குருபகவானின் 5,7,9 ஆம் பார்வை 12ஆம் இடமான அயன சயன போக ஸ்தானத்திலும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் 4ஆம் இடமான வாகனம்,வீடு,மனை சுக ஸ்தானத்திலும் பதிவதால் குருபகவானே பணத்திற்கான ஆதிபத்தியம் பெற்று தன காரகன் ஆகிவிடுகிறான்...அதனால் கோட்சாரப்படி மற்றவருக்கு கெடுதல் தரும் அஷ்டம குரு உங்களுக்கு எந்த பாதகத்தையும் பெரிதாக செய்யாது..வம்பு வழக்கு வரும் எனில் சிறிய பிரச்சினைக்கு அபராதத்துடன் முடிந்துவிடும்..

சிலருக்கு பொதுத்தொண்டு ,கோயில் பணிகள் சம்பந்தமான பொறுப்புகள் வந்து ந்சேரும்..வீடு மாறுவ்து ,புதுப்பிப்பது,புதிய வீடு கட்டுவது,வகனம் வாங்குவது,சீரமைப்பது என சுப செலவுகள் அதிகரிக்கும்..கடன் வாங்கி நல்லது செய்தாலும் பிரச்சினையில்லை ஆனால் அந்த கடன் கெட்ட விசயத்துக்காக செலவாகிவிடக்கூடாதே அதர்காக சுபகாரியத்தை இழுத்து போட்டு செய்யலாம்..சில விசயங்கள் தடங்கலாகி கொண்டே இருக்கும்...அவை குரு வக்ர காலம் வரும்போது சரியாகிவிடும்.8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ரமாகிறார் அச்சமயம் உங்களுக்கு குருவால் ஏதேனும் கெடுதல் உண்டானாலும் அவை சரியாகிவிடும்..

பரிகாரம் -செவ்வாய்,வியாழக்கிழமையில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்...

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!



1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க...