சொந்த தொழில் செய்ய வேண்டுமெனில் லக்னத்துக்கு தொழில் ஸ்தானமாகிய 10 ஆம்
இடத்து அதிபதி,லக்னத்துக்கு வரவு செலவு ஸ்தானமாகிய 2ஆம் இடம்,லக்னத்திற்கு
சேமிப்பு ஸ்தானமாகிய 11 ஆம் இட அதிபதி இவர்கள் லக்னத்திற்கு 3,6,8,12ல்
மறையாமல் பாம்பு கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.அப்படி
மறைந்திருந்தால் முதலீடு போட்ட பணம் எல்லாம் கடலில் கரைத்த
பெருங்காயம்தான்..கூட்டு தொழில் செய்ய வேண்டும் எனில் லக்னத்துக்கு 7ஆம்
அதிபதி 6,8 ,12ல் மறையாமலிருக்க வேண்டும் இல்லையெனில் நம் பார்ட்னர் நமக்கு
பட்டை நாமம் சார்த்திவிடுவார்....
மிதுன லக்னமாக இருப்பின் அவருக்கு குரு பத்தாம் அதிபதியாக வருவார்...குரு செவ்வாய்,சனியுடன் சேராமல் இருப்பது நல்லது.செவ்வாய் 6ஆம் அதிபதி...தொழில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கும்.தொழில் மூலம் கடன் உண்டாகும்.குரு சனியுடன் சேர்ந்தால் அவர் எட்டுக்கும் ஒன்பதுக்கும் அதிபதி.அவர் பாக்யாதிபதி ஆச்சே என்று நினைக்கலாம்..9,10 ஆம் அதிபதி சேர்ந்தால் தரமகர்மாதிபதி யோகம் ஆச்சே என நினைக்கலாம்..ஆனால் சனி எட்டுக்கும் அதிபதி ஆச்சே அதனால் முதலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து நல்ல உயரத்துக்கு கொண்டு போய் அப்புறம் குப்புற தள்ளுவார்.குரு சுக்கிரனுடன் சேராமல் இருக்க வேண்டும்.சுக்கிரன் 5ஆம் அதிபதி பூர்வபுண்ணியாதிபதி ஆச்சே அவருமா அப்படி பண்ணுவார்..ஆம் .அவர் விரயதிபதியும் ஆச்சே தொழில் மூலம் பல வேற்றிகளை கொடுத்து அகலக்கால் வைக்க வைத்து ,பெரும் கடனாளி ஆக்குவார்.
குரு கேதுவுடன் சேர்ந்தால் ,தொழில் அமையாமல் சிரமப்படுவார்கள்..ராகுவுடன் சேர்ந்தால் மோசமான ஆட்களால் நஷ்டத்தை சந்திப்பர்.குரு 1,4,7,10,11ல் இருந்தால் நன்மையை செய்யும்.கேந்திராதிபத்திய தோசத்தை குரு கொடுப்பார் என்றால் தொழிலில் பிரச்சினை இல்லை.அடுத்தது வரவு செலவுக்கு அதிபதி மிதுன லக்னத்துக்கு யார் என பார்த்தால் சந்திரன்.அவர்3, 6,8,12ல் மறையாமல் இருக்க வேண்டும். 6ல் இருந்தால் தொழில் மூலம் வந்த பணம் வட்டி கட்டவே சரியாக இருக்கும்.12ல் இருந்தால் ஓட்டைப்பானைக்குள் தண்ணீர் ஊற்றியது போல ஆகிவிடும்.8ல் இருந்தால் தொடர்ச்சியாக வீண் செலவுகளாலும் தண்டச்செலவுகளாலும் நஷ்டத்தை சந்திக்க நேரும்.
11 ஆம் திபதியாக செவ்வாய்தான் வருகிறார் அவரே கடனை நோயை உண்டாக்கும் 6ஆம் அதிபதியாக இருக்கிறார் என்பதால் மிதுன லக்னத்தாருக்கு சேமிப்பு என்பது குதிரைக்கொம்புதான்..மனைவியே எல்லா வரவு செலவையும் பார்த்துக்கொண்டால் நல்லது.11ஆம் அதிபதி செவ்வாய் கெட்டவர் என்பதால் மூத்தவராக இவரே வீட்டில் இருப்பார்.இவருக்கு மூத்தவர் இருந்தால் பகை ஆவார்.பணம் கொஞ்சம் இருந்தால் அதை எப்படி செலவழிப்பது என்பதில்தான் கவனம் இருக்கும்.11 ஆம் அதிபதிதான் சேமிப்பை குறிக்கும்.2க்கு எட்டாம் அதிபதி வலுத்தால் வரவு செலவு நிரந்தரமாக பலன் தரும்.
10க்கு எட்டாம் அதிபதியாக பாக்யஸ்தானம் வலுத்தால்தன் தொழில் நிரந்தரமாக இருக்கும்...பாக்யாதிபதி மிதுன லக்னத்துக்கு சனியாக வருவதால் அவர் 6,8ல் மறையாமல் இருந்தால் தொழில் நிரந்தரமாக இருக்கும் இல்லையெனில் தொழில் மாறிக்கொண்டே இருக்கும்.
10 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் 10ஆம் இடத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லையெனில் சம்பளத்துக்கு வேலைக்கு போவதே நல்லது.சனி வக்ரமாக இருந்தால் சனி கெட்டிருந்தால் வெளிநாடு சென்று விடுவதே சிறப்பு.
தொழிலில் முன்னேற்றம் அடைய நடப்பு திசையும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறதோ,அந்ததிசை அதிபதி லக்னத்தில் எத்தனாம்
இடத்தில் இருக்கிறாரோ அதை பொறுத்து வாழ்வில் மாற்றமும், முன்னேற்றமும்
உண்டாகும்.லக்னத்திற்கு அவர் நல்லவராகவும் இருக்க வேண்டும்.3,6,8,12ல்
மறையாதவராகவும் இருக்க வேண்டும்...அப்போதுதன் அவர் ஊரும்,உறவும்
வியக்கும்படி முன்னேறுகிறார்
2 கருத்துகள்:
Super..Advise for Dhanur lagna
MithunaLaguna guru 7 place suran surya puthan raghu 12 place
கருத்துரையிடுக