கிராமங்களில் பச்சை வைத்தல் எனும் சம்பிரதாயம் உண்டு...அதாவது ஒருவருக்கு வீட்டில் உடல்நலம் சரியில்லாமல் மோசமாக இருந்தால் ஆட்டையோ கோழியையோ அந்த ஊர் எல்லையில் இருக்கும் தெய்வத்துக்கு பழி கொடுத்து ஊரில் இருக்கும் எல்லோருக்கும் சாப்பாடு போடுவது ஆகும்...பசியோடு இருப்பவருக்கு சாப்பாடு போடுவது போன்ற உன்னதமான பரிகாரத்துக்கு நிகர் எதுவும் இல்லை..
அமெரிக்காவின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றவர் ராக் பெல்லர்.இவர் மகா கஞ்சன்.பணத்தை பெருக்குவதில் திறமைசாலி இவர் ஒருமுறை நடக்க முடியாமல் உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் இருந்தார். உலகின் புகழ்பெற்ற மருத்துவர்கள் எல்லோரும் பார்த்துவிட்டார்கள் ஒன்றும் பலன் இல்லை..
அப்போது அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் யதார்த்தமாக யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள்..கஞ்சன்..யாருக்கும் காசு கொடுக்காம இவனும் திங்காம இருந்தான் இப்படி கிடக்கிரான் என சொல்ல ராக் பெல்லர் மனதில் அது இடி போல இறங்கியது உடனே தன் செயலாளர்களை அழைத்து பல கோடி டாலர்களை ஏழைகளின் நலனுக்காக செலவிட உத்தரவிட்டார்...அடுத்த நாளே படுக்கையில் இருந்து எழுந்தார் முன் போல சுறுசுறுப்பாக செயல்பட்டார் ..அப்போது அவர் ஆரம்பித்ததுதான் உலகின் மிகப்பெரிய எழைகளின் தொண்டு நிறுவனமான ,ராக்பெல்லர் பவுண்டேசன்.
உலகின் கோடீஸ்வரர்கள் எல்லோரும் இதர்கு நிதி உதவி செய்கிறார்கள் உலகில் இருக்கும் அடித்தட்டு மக்களை எல்லாம் தேடி சென்று இந்த பவுண்டேசன் உதவி செய்வதாக சொல்கிறார்கள்..அக்காலத்தில் நம் தமிழர்களில் பெரும் செல்வந்தர்களாக இருந்தவர்கள் எல்லாம் இறுதி காலத்தில் தர்ம சத்திரம் கட்டிதான் தங்கள் மன இறுக்கத்தை போக்கிக்கொண்டார்கள்...
பெரிய கோடீஸ்வரர்கள் எல்லோருக்கும் இறுதி காலத்தில் ஒரு பெரும் குழப்பம் வரும்..இவ்வளவு சம்பாதித்தோம்..எதற்காக ..இனி இவை என்ன ஆகும் என்ன இதனால் சாதித்தோம் என நினைக்க வைக்கும்..அதற்கு ஒரே வழி நம் தமிழ் செல்வந்தர்கள் கன்னியாகுமரி முதல் காசி வரை கட்டி வைத்த தர்ம சத்திரங்கள் அன்னதான கூடங்கள் வழி காட்டும்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக