வியாழன், 8 பிப்ரவரி, 2018

கடகம்,சிம்மம் ராசிக்காரர் பலம் ,பலவீனம் என்ன தெரியுமா

கடகம் ,சிம்மம் சந்திரன் ,சூரியன் ராசிகள் ...வலது கண் ,இடது கண்ணை குறிக்கும்.சூரியன் ஆண் அதாவது தந்தை சந்திரன் தாய் பெண் ராசி....தாய் என்றால் அன்பு ,இரக்கம் ,மனிதாபிமானம், பாசம்,நேசம் இதுவெல்லாம் கடக ராசிக்காரங்க கிட்ட அதிகம்..உலகிற்கு எல்லாம் அன்பு பாசம் காதல் உணர்வை தூண்டுவது சந்திரனில் இருந்து வெளிப்படும் ஒளிதான் காரணம் அந்த சந்திரனின் சொந்த ராசிக்காரர்களுக்கு கூடுதலாக இந்த உணர்வுகள் இருக்கும்.பிறரை வசீகரிப்பது அனுசுரனையான பேச்சு கபடம் இல்லா குணம் எளிமை இவர்களிடம் அதிகம்.
ம்மா வுக்கு நேர் எதிர் அப்பா...கண்டிப்பு கறார் அதிகம்...சிம்ம ராசி எல்லாம் அப்பா ராசி..சூரியன் நெருப்பு கிரகம் சந்திரன் நீர் கிரகம்.தண்ணீரில் குளிக்க எல்லோருக்கும் பிடிக்கும் ..நெருப்பை கிட்டே நெருங்கவே முடியாது..ஆனால் உணவு தயாரிப்பது முதல் உயிர் உருவாகுவது வரை வெப்பம் இல்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை..சிம்ம ராசி என்பது குடும்பத்துக்காக உழைக்கும்..ஆனால் அன்பை வெளிப்படுத்த தெரியாது.நேர்மையாக நியாயமாக எல்லோரும் நடந்துக்கனும்..நியாயமா நடந்துக்கலைன்னா அவங்க சகவாசமே ஆகாது கட் ஆகிடும்.கடகம் ராசிக்கு வசியம் அதிகம்.அதனால் எல்லோரும் இவர்களிடம் பழக ஆசைப்படுவர் உறவுகள்,நட்புகள் இவர்களுக்கு அதிகம்..சிம்மம் ராசியை பொறுத்தவரை அது சிங்கம்..சிங்கத்தை தூரத்துல இருந்து பார்த்துக்கலாம் கிட்ட நெருங்க முடியாது..கடிச்சு வெச்சிடும் என எல்லோரும் ஒதுங்கியே இருப்பர்.
தொழிலை சிறப்பாக நிர்வகிப்பதில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை.ஒரு அலுவலகத்தில் மேனேஜர் உயர் அதிகரி என்றல் அவர் பெரும்பாலும் சிம்ம ராசிகாரராக இருப்பர் எரிந்து எரிந்து பேசும் ஹெச் ஆராக இருக்கட்டும் ஹெச் எம்மாக இருக்கட்டும் போலீஸ் ஆபீசராக இருக்கட்டும் ராணுவ கமாண்டராக இருந்தாலும் ஸ்கூல் பி.டி வாத்தியாராக இருப்பினும் அவர் சிம்ம ராசிகாரரே...ரூல்ஸ் என்றால் ரூல்ஸ்தான் என பேசுபவர்கள் சிம்ம ராசி..நான் பார்த்துக்கிறேன் கவலைப்படாதீங்க என ஆறுதல் சொல்பவர்கள் கடகம் ராசி.

கருத்துகள் இல்லை: