புதன், 21 பிப்ரவரி, 2018

ஜோதிடர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஜோதிட டிப்ஸ்

ஜோதிடர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஜோதிட டிப்ஸ் / ஜோதிடம்



லக்கனாதிபதி பலமாக இருக்கிறாரா என்பதை முதலில் அறிய வேண்டும் 

1.ஸ்தான பலத்தால் யோகம் பெறும் லக்கனாதிபதி.
2.சார பலத்தால் யோகம் பெறும்  லக்கனாதிபதி.
3. நீச பசங்க இராஜ யோகம் பெறும் லக்கனாதிபதி.
4.கிரக  பரிவத்தனையால் யோகம் பெறும் லக்கனாபதி.
5.யோக பாவங்களில் யோகம் பெறும் லக்கனாதிபதி.
6.கிரக  சேர்க்கையால் யோகம் பெறும் லக்கனாதிபதி.
7.கிரக பார்வையால் யோகம் பெறும் லக்கனாதிபதி.
8.லக்கனம் அம்சத்திலும் வர்த்தகோமம் பெறுவது.

9. லக்கனாதிபதி சுய சாரம் பெறுவது, 5க்கு உடையவன் சாரம், 9க்குடையவன் சாரம், கேந்திராபதி சாரம்  பெறுவது சிறப்பு.  

.10.லக்கனாதிபதி எந்த இராசியில் இருந்தாலும் தன் பார்வை பலத்தால்  லக்கனத்தைப் பார்ப்பது சிறப்பு.

11. ஜாதகத்தில் திரிகோணதிபதிகளில் ஒருவரவது கோணத்தில் () 1,4,7.10 ல் இருந்து லக்கனாதிபதி கேந்திரகோணத்தில் இருந்தால் ஜாதகர் எந்த பிரச்சனைகளும்  தீர்ப்பார்.

12.லக்கனத்திற்கு  இராசி  மறையக்கூடாது. அது போல்  ராசிக்கு  லக்கனம்  மறையாமல் இருப்பது சிறப்பு  தரும்

13. லக்கனாதிபதிக்கு இராசியாதிபதி மறைந்தவர்களும் , இராசியாபதிக்கு லக்கனாதிபதி மறைந்தவர்களும் வாழ்க்கையில் தன்னிறைவு  இல்லாமல்  இருக்கிறார்கள்.


பரிகாரம்;
லக்கனாதிபதி  தெய்வம்  , இராசியாதிபதி  தெய்வம் இரண்டையும்    அந்தந்த   கிழமைகளில்  வழிபட்டு  வந்தால் மிகவும்   சிறப்பு கொடுக்கும்.

14.எந்த வீட்டு  கிரகம்  எங்கு  நின்றாலும்  அந்த  வீட்டிற்கு மறையாமல் நின்றால்  மிகவும்   சிறப்பாகும்.

15.7.ல்   சுக்கிரன் ,குரு கூடியிருக்க அவரை சந்திரன்  பார்த்திட  அவளுக்கு வாலிப   வயதில்  திருமணம்.

16.உபயராசிக்கு  7 ல் 7க்குடையவன்   ஆட்சி  பெற்றல் காதல் திருமணம் ,தான்  விரும்பிய கணவனை  மணப்பாள்நல்ல  தொழில்  உடையவள்  ஆவாள்.

17.7 க்குடைவன் லக்கனத்தில் அமர்ந்தாலும் தான்  விரும்பிய கணவனை மணப்பாள்.

18.லக்கனாதிபதியும்  7 ம் இடதேனும் கூடி 6,8,12, ல் மறைந்தால் திருமணம் காலதாமாகும் .(ஏக்கம்)

19. லக்கனாதிபதியும் 6 ம்  இடத்து அதிபதியும் கூடினால் , இவள் போக  பாக்கியமற்றவள்  ஆவாள்.

20.நீச்சம்  பெற்ற கிரகத்திற்கு 1,4,7,10,ல் லக்கனம்  அமைந்தால்  நீச்ச பலம் குன்றி அந்த பாவத்தின்  பலன்  விருத்தியாகும்
.
21. 2 க்குடையவன் 8மிடம்  சென்றால் பணம் இழப்பு  ஏற்படும். 5 க்கு டையவன்   8 ல்  சேர்ந்தால்  புத்திர  சோகம்  ஏற்படும்.

22. ருதுவான லக்கனத்தை சூரியன் , செவ்வாய் , சந்திரன்  பார்க்க  வேண்டும், (ல்க்கனத்தில்  இருக்க  வேண்டும்.

23.இராசியில் கிரகங்கள்  உச்சம் பெற்று  வக்ரம் அமைந்தால் நீச்  நிலைக்கு  போய்  விடும்.

24.பிரதமை  திதி  பிறந்தாலும் சந்திரன் திசை பலன்  அளிக்காது. (அமாவாசைக்கு அடுத்த நாள்  பிரதமையில்  பிறந்தால்  மட்டும்)

25.குரு 12 . ல் இருந்தால்  காதல்  வரும் .  8 ல்  சந்திரன் இருந்தால் பெணகளால்  மன குழப்பம் வரும்.

26. 10 க்குடையவன் 4 க்குடையவன் பரிவர்த்தனை   பெற்றால்  புதையல்  கிடைக்கும்.


27. சந்திரன் ,சனி  சேர்க்கை புனர்பூ  தோஸ்மாகும்.ஏமாற்றம் ,தோல்வி,தாழ்வு மனப்பான்மை,அதிக பயத்தையும் இது ஜாதகருக்கும் தாய்க்கும் உண்டாகும் அவமானம் ,உடல் ஆரோக்ய குறைபாடுகளையும் தரும்...

(தொடரும் )

கருத்துகள் இல்லை: