வியாழன், 26 ஜூலை, 2018

ஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்?

ஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனாலும் சரி.உன் கருத்தை நீ சொல்ல உரிமை இருக்கு...ஆனா என் கருத்தில் மாற்றம் இல்லை என நிலையாக இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகியவை ஸ்திரம் எனப்படும்.

குடும்பத்துல மிலிட்ரி கண்டிசன் தான் எல்லாம்...இதை எப்படி தெளிவாக செய்வது என ஒரு வாரம் ப்ளான் செய்வது...யார்கிட்ட பேசினாலும் தெளிவா பிசிறு இல்லாம பேசுவது ..கொஞ்சம் பேச்சு சுத்தம் இல்லாத ஆள் எனில் அந்த ஆள் பக்கமே அண்டாம இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..இவன் ஆகாது என முடிவு செஞ்சிட்டா கதம்..கதம்..

.தான் உண்டு தன் வேலை உண்டு வருமானம் ,குடும்பம் உண்டு என ஒரு பாதையில் ஒரே மாதிரி போய்க்கொண்டிருக்கும் ராசிகள்....ராசிநாதன் நல்லா இருந்தா நான் சொன்னதில் துளியில் மாற்றம் இருக்காது.ராசிநாதன் என்றால் ரிசப ராசியினருக்கு சுக்கிரன் கெடாமல் இருக்கனும்...சுருக்கமா சொல்லனுமா ..இவங்க பிடிவாதக்காரங்க..தான் நினைத்த மாதிரிதான் எல்லாம் நடக்கனும் என நினைக்கிற க்ரூப்....

உபய ராசிகள் ,சர ராசிகள் எல்லாம் இவங்க பார்வையில் பிழைக்க தெரியாத க்ரூப்....எல்லாம் தெரிந்த ஆசாமிகள் சர ராசிகள் என்றால் எல்லாம் தெரிந்து அதை காசாக்கும் வித்தை தெரிந்தவர்கள் ஸ்திர ராசியினர்..இவங்க கிட்ட பேசும்போது நிதானமா பேசனும்..இவங்க உங்க பேச்சை மட்டும் கவனிப்பதில்லை...உங்களை ஸ்கேன் செய்து கொண்டிருக்கிறார்கள்...வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்...காசுனு வந்துட்டா கொள்ளைக்காரன்...பாசம்னு வந்துட்டா .....தோளில் சாய்ந்து கண்ணீர் விடுவாங்கன்னு நினைச்சீகளா....இரண்டு வார்த்தை பதமா பேசிட்டு கிளம்பிட்டே இருப்பாக...

சுயநலம் என சொல்லிட்டா கொஞ்சம் ஓவரா இருக்கும்...தன் பணியில் கவனமா இருப்பாங்கன்னு சொன்னா நல்லாருக்கும்..மைனஸ் ப்ளஸ் எல்லாம் கலந்து சொல்லிருக்கேன்...ராசிக்கு சொந்தக்காரக கோவிச்சுக்காதீக..வாட்சப்பில் பகிர்ந்தா ஈரோடு சதீஷ்குமார் ஜோசியர் சொன்னதுனு சேர்த்துக்குங்க..!!

புதன், 18 ஜூலை, 2018

வியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்


.  

வியாபார
  தொழில்

சூரியன்  சனியுஞ்சேர  சுகமொடு  வுதித்த பாலன்
பாரினில் வியாபாரத்தில்  பண்டிதன் சமர்த்து ளோனாய் 
தேரிய தாதுவர்க்கம்  செம்பு  பொன் வெள்ளிலோகம்
கூரது  பரிஷை செய்து  குறைவிலா   தனத்தைச் சேர்ப்பன்

விளக்கம்
சூரியனும்  சனியும்  கூடி  ஒரு  வீட்டில்   நிற்கபிறந்த  ஜாதகர் வியாபாரம்
செய்வதிலும்  பொன் , வெள்ளி , செம்பு , பித்தளை போன்ற  தாது  வர்க
உலோகங்களை   பரிசோதித்து   அதனாலேயே   அதிக  தனத்தை
சேர்ப்பவனாவான்   .கணக்கு  முதலானவைகளில்   மிகவும்   சமர்த்தனம்




  பெரிய  பூமிக்கு  அதிபதி

அறிஞனும்  புகரும் கூட  வவனியிலுதித்த  பாலன்
பெரிய பூமிகள்  சபைக்கும்  பிரபல  வதபனாகி
மருவிய  வார்த்தை  கூறி   மாற்றலர்  தாமொடுங்க
சரிவர  வெல்லு மிக   சமர்த்துளானென்னலாமே

விளக்கம்
புதனும்  சுக்கிரனும் கூடி இருக்க பிறந்தவன்  பூமிக்கும் பெரிய
சபைக்கும்  அதிபதியாயிருந்து   வார்த்தைகளால் மெய்பித்து எதிரிகளை
ஜெயிக்கும்  வல்லமையுடைய  சமர்த்துடையவன்  ஆவான் .

    யந்திர  கருவி   தொழில்

கதிரொடு  மதியுங்கூடி   கலந்தொரு  ராசி நிற்க
துதி பெறு   பலவாயெந்திரம்   சூட்சுமக்  கருவியாலும்
அதவித பாஷான்ங்க   ளமைத்திடும்  வல்லோனாகி
விதியுடனிருபனின்னோன்  மேன்மையாமறிவுள்ளோனே



விளக்கம்
சூரியனும்  சந்திரனும் எந்த  ராசியிலாவது  கூடியிருக்க  பிறந்தவன்
பலவிதமான  யந்திரக்  கருவிகள்  செய்பவன்  ஆகவும்  பாஷாணம்
வைப்பு சரக்கு முதலியவைகளை உற்பத்தி செய்பவனாகவும்  மிகவும்
புத்தி கூர்மை உள்ளவனாகவும்  இருப்பான் என்பதாம் .

 பல பேரை   மோசம்  செய்வான்
என்னுமால்  சனியைக்கூடி  யிருந்திடமகமாய்  வந்தோன்
மன்னுலகதிற்   பல பேரை   மயக்கியே   மோசம்  செய்து
துன்னுமா   பொருள்கைக் கொண்டே  சுகமடைந்திடுவானாகும்
உன்னித   குருவின்   வார்த்தை   யுட்கொள்ளான்   கர்வியமே

விளக்கம்
புதன் சனி  கூடியிருக்க   பிறந்தவன் உலகத்திலுள்ள  பல பேரை  மயக்கி
மோசம் செய்து  அவர்கள்  கையில் உள்ள     பொருட்களை   எடுத்துக்  கொள்வதில்   கை  தேர்ந்தவனம் . குரு  வார்த்தையை   தள்ளி  விட்டு   தன்மனம் போல  நடப்பவன்  என்பதாம் .






அரசன் யோகம் பற்றிய ஜோதிட பாடல் விளக்கம்



   அரச யோகம்

கதிரவன் சிங்கதங்க  கரியவன் குடத்திலாஷி
மதியவன் மீனம்   நிற்க மங்கலனுச்சம் சென்மப்
பதியதும்   கயலதாகப் பாரதிலுத்தித்த  செல்வன்
நிதியுடன்   செங்கோற்றாங்கும்   நிருபனுமாவான்றானே

விளக்கம்
சூரியன்   சிங்கத்திலும்  , சனி கும்பத்திலும்   ஆட்சியாயிருக்க
சந்திரன் மீன  ராசியில்   கேந்திரமாயிருக்க  செவ்வாய்  மகர  ராசியில்
உச்சமாயிருக்க  மீனத்தில்   ஜெனனமானால்   சம்பத்துடைய  செங்கோல்
அரசனாவான்   என்பதாம் .



  அரசனுக்கு  அரசனாவான்

சொல்லிட   ஜென்ம   நாதன் சோரிய  பஞ்சமத்தில்
வல்லவன்   றனக்கேசேயர்  வரசனுக்கர சேயாவர்
பல்லவர்   புகழத்தானே   பாரினில்   பிறக்க   வாழ்வான்
துல்லிய   தவத்தின் மிக்க   தூய  மாமுனியேகூறாய்

விளக்கம்
லக்கனாதிபதி   ஐந்தாமிடத்தில்  இருக்க  அரசனுக்கு  அரசனாவான்
மற்றவர்கள்  புகழத்தானேயுலகத்தில் பிறந்து  வாழ்வான் .


   மன்னனாவான்

கூட்டமாயைந்துபேரும் கூடி  யோரிடத்தினிற்கத்
தேற்றமாய்  மற்றோரெல்லாம்   தனித்தனி வரிசையாகில்
மூட்டிய உலகமெல்லா மொருவர்  யாளத்தக்க
நீட்டியல்   மன்னனாவான் என்பதாம் .


 விளக்கம்
கூட்டமாய்  ஐந்து  கிரகங்கள்  கூடியே   ஓரிடத்தில்   நிற்க
மற்றவர்க்க ளெல்லாம் தனித்தனியே வரிசையாய் இருப்பார்களானால்
உலகத்தையே  ஆளக்கூடிய  ஒரு  மன்னனாவான்  என்பதாம் .