வியாழன், 17 அக்டோபர், 2019

குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019

குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019





                    
               துலாம் சுக்கிரனின் ஆண் ராசி ...களத்திரகாரகன் சுக்கிரனின் ராசி என்பதால் அன்பும் காதலும் நேசமும் அதிகம் நிரம்பிய ராசிக்காரர்கள்..உல்லாசம்,கேளிக்கை,நீண்ட பயணத்திலும் நிறைய விருப்பம் கொண்டவர்கள்..ரசனை மிக அதிகம்...நண்பர்கள் என்றால் உயிர்..அழகாக பேசும் வசியம் நிறைந்தவர்கள்...அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்..


ஆடம்பர பொருட்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்கள் ..எதையும் நேர்த்தியாக செய்து முடிப்பதில் வல்லவர்கள் தங்கள் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள் ..
               
கடந்த குருபெயர்ச்சி உங்களுக்கு தன குருவாக இருந்து குருபலத்தைஉண்டாக்கினார்...ராசிக்கு இரண்டாம் இடத்தில்  அமர்ந்து குரு பல யோகங்களை வழங்கினார்தொழில் பெருகியதுபுதிய தொழில்கள் ஏற்பட்டது.  சிலருக்கு சுபகாரியம் நடந்தேறியது.

உத்தியோகத்தில் மதிப்பும்மரியாதையும் கூடியதுகணவன் , மனைவி உறவு நல்ல முறையில் அமைந்ததுசனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் கேதுவுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இது பெரிய நன்மை என சொல்லிவிட முடியாது..சுமாரான பலன்களையே தரும் ஆனால் குருபார்வை சிறப்பாக அமைந்துள்ளது...

7,9,11 ஆம் பார்வை லாபஸ்தானத்தையும் பாக்யஸ்தானத்தையும் பார்வை செய்வதால் பல நன்மைகளை ஏற்படுத்தி தரும் முக்கியமாக சேமிப்பு உயரும்...தொழில் லாபம் நன்ராக இருக்கும் விரய செலவுகள் அலைச்சலும் கூடவே அதிகரிக்கும் ஆடம்பர செலவுகளை தவிர்த்து விட்டால் நல்லது 

உங்கள் ராசிக்கு 3,6 க்குரிய குருபகவான் தனது சொந்த வீட்டில் 3 வது வீட்டில் அமர்கிறார்.
     
தொழில் முன்னேற்றம்லாபம் அதிகம் கிடைத்தல்அதிக லாபத்தை 
நல்ல முறையில் பயன்படுத்துதல்வாகனம் வாங்குதல்கணவன் மனைவி உறவு நல்ல நிலையில் இருக்கும்திருமணத்தடை நீங்கும்பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் நடைபெறும்சகோதர ஒற்றுமை உண்டாகும்கடன்  குறையும்

வரப்போகும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு பெரிய கெடுதல் இல்லை எனின்ம் நான்காம் இட சனி மூன்றாம் இட குரு இவைகள் நல்ல பலன்கள் என சொல்வதற்க்கில்லை சிலர் வீடு கட்ட காலி மனை வாங்க என அதிக பணம் முதலீடு செய்ய அதிகப்படியான கடன் வாங்கும் சூழல் உண்டாகிறது...40 வயது கடந்தவர்களுக்கும் முதியவர்களுக்கும் உடல் உபாதைகளால் மருத்துவ செலவினங்கள் காதிருக்கிறது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது..

திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை இருக்கிறது பணம் விரயம் ஆகனும் அது சுப செலவாக இருந்தால் நல்லதுதான்.வெளியூர் வெளி மாநிலம் வெளிமாநிலம் செல்ல முயற்சி செய்பவர்களுக்கும் தொலைவான ஊரில் தொழிலுக்காக முயற்சி செய்பவர்களுக்கும் இது நல்ல காலம் என்றே சொல்லலாம் அதற்கான வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது 

குழந்தைகள் உடல்நலனில் அதிக கவனம் தேவை...நாலில் சனி வந்தாலும் மூன்றில் குரு வந்தாலும் வாகனத்தில் செல்கையில் அதிக எச்சரிக்கை அவசியம் அதிக வேகம் நிச்சயம் ஆபத்தானது சுவாதி நட்சத்திரக்காரர்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சித்திரை நட்சத்திரத்தார் பேச்சில் அதிக நிதானம் அவசியம் வீண் பஞ்சாயத்துக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்...

விசாகம் நட்சத்திரத்தார் தன் கெளரவத்துக்காக கடன் வாங்கி தாராளமாக செலவு செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வருடமாக 2020 இருப்பதால் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம் முக்கியமாக யாருக்கும் சிபாரிசு செய்தல் ஜாமீன் கையெழுத்து போடுதலை முற்றிலும் கைவிட வேண்டும்....

27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு மகர
ராசியில் பயணிக்கும் போது 102 நாட்கள் கவனம் தேவைஉடல் நலம் பாதிக்கும்.  சிலர் அகலக்கால் வைத்து அதிக கடன் வாங்கும் சூழல் உண்டாகும் என்பதால் வரவு செலவில் அதிக கவனம் தேவை.   இது நான்காம் இடத்துக்கு குருவாக மாறும் இது மூன்றை விட நல்லதுதான் எனினும் பெரிய கெடுதல் இல்லை என்பதாலும் ஆறுதலாக இந்த காலம் இருக்கும்       

பரிகாரம் ;வெள்ளிக்கிழமையில் ஸ்ரீரங்கம் சென்று பெருமாளை வழிபட்டு வருவது நன்மை தரும்...                   

      

                        
               
செவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிகம் ராசி நண்பர்களே...நீங்கள் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு ஆற்றலுடன் செயல்படக்கூடியவர்கள்...தவறு நடந்தா அது யார் எவர் என பார்க்காமல் உடனே தட்டிக்கேட்கும் குணம் உங்கள் பலவீனம்..

பேச்சில் பல சமயம் கடுமை காட்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்


கடந்த வருடம் குரு பகவான் ஜென்ம ராசியில் இருந்து  படாய் படுத்தினார். அரசாங்கப் பிரச்சினைகள், அதிகமான செலவுகள், வீண் விரயம்,  சகோதர பகை, பெண்களால் அவச் சொல். மனைவி மக்களிடம் தகராறு,  மருத்துவச் செலவுகள், தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகுதல், பிள்ளைகளால் மன அமைதி கெடுதல் போன்ற தீய  பலன்கள் அடைந்தீர்கள். 7 ½ சனியும், 2, 8 ல் இருந்து கேதுவும், ராகுவும் கூடவே கஷ்டப்படுத்தினார்கள்.


             ஆனால் இந்த வருசம் ராசிகளில் உங்க ராசிக்குத்தான் குருவும் சனியும் நன்மைகளை வாரி வழங்க காத்திருக்கிறார்கள் 2020ல் உங்க ராசிக்கு சனிபெயர்ச்சி ,குரு பெயர்ச்சி இரண்டுமே அதிக சாதகமாக இருக்கின்றன....ஏழரை சனி முடியும் பொன்னான ஆண்டாக 2020 துவங்குகிறது....இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் தடங்கல்களும் விலகுகின்றன.

 குரு தன் சொந்த வீடான  2ம் இடத்திற்கு தன குருவாக குருபலத்துடன் வருகிறார்...  குருபலம் வந்தால் பண பலம் உண்டாகும்..குருபலம் வந்தால் புகழ் செல்வாக்கு உயரும்.சுபகாரிய தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்...நோய்கள் விலகி உடல் ஆரோக்கியம் மன தெம்பு உண்டாகும்...

தொழிலில் இருந்த சிக்கல்கள் சீராகும். புதிய தொழில் செய்ய உதவிகள் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். புதுவீடு, மனை வாங்குவீர்கள்

பதவி உயர்வு இல்லையே என ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு என இரட்டிப்பு பலன்களை அனுபவிப்பார்கள் கணவன் மனைவி ஒற்றுமை மகிழ்ச்சி உண்டாகும்..

உறவினர்கள் நண்பர்கள் இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும் 

நினைத்த காரியங்கள் தடையின்றி முடியும்..வர வேண்டிய கடன் தொகை வசூல் ஆகும்..கொடுக்க வேண்டிய கடனை சிரமம் இன்றி கட்டி முடிப்பீர்கள் ..சிலர் வீடு மனை வாங்குவர்.ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும்..

பொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.அந்த குருபலம் இப்போது வந்திருக்கிறது குருபலம் இருக்கும்போது பிள்ளைகள் கல்வி நன்றாக இருக்கும் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் பெண்கள் ஆடை ஆபரணங்கள் விலை உயர்ந்ததாக வாங்குவார்கள்..

கேட்டை நட்சத்திரத்தார் தொழிலில் புதிய முதலிடு செய்து தொழிலை விரிவு படுத்துவர்...அனுசம் நட்சத்திரத்தார் செய்யும் பணியில் பதவி உயர்வு அடைவார்கள் விசாகத்தார் சுபகாரியங்களை முன்னின்று செய்வார்கள் 

27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு,   மகர ராசியில் பயணிக்கு காலம் அந்த 102 நாட்களுக்கு மட்டும் கவனமாக செயல் படவும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்படவும்..7 ½ சனியின் பாதிப்பு நீங்கி விடும். ராகு,கேது கெடுதல் செய்ய முடியாது.
   பரிகாரம் :
          பிரதோஷ வேலையில் சிவ பெருமானை வணங்கி வருவது நலம், வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.  குலதெய்வத்தை தவறாமல்  வழிபடவும்.
     
          

       குருவின் ராசியை கொண்ட நீங்கள் அன்பு,அமைதி,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி என சாத்வீக குணத்தை கொண்டவர்.சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.ஒரு வில் ஒரு சொல் என சொல்வார்கள் அது போல வெச்ச குறி தப்பாது என காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் என வில் அம்பை சின்னமாக கொடுத்திருக்கின்றனர்..


வில்லுக்கு அரசன் அர்ஜுனன் பிறந்த ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரை சனி வந்ததும் கொஞ்சம் ஆடிப்போக வைத்திருக்கலாம் ,.அதே சமயம் குரு பெயர்ச்சியும் நம்மை கதற வைத்து விடும் போலிருக்கிறதே என கலங்க வேண்டாம்...

ஏழரை சனியும் நடந்துட்டு இருக்கு இதுவரை ராசிக்கு 12 ம் இடத்தில் அமர்ந்திருந்தார். சிலர் விலை உயர்ந்த பொருளை தொலைத்து இருப்பர் நெருங்கிய உறவுகள் சிலரை இழந்திருப்பீர்கள்...புதிய கடன் மனதை வாட்டி எடுத்துக்கொண்டிருக்கும்...

போன வருடம் எடுத்ததெல்லாம் தண்டச்செலவுகள், காரிய முடக்கம், சிறு விபத்துக்கள் திருடு போதல், உடல் நலக்குறைவு, சிறு ஆப்ரேசன், பொருளாதார நெருக்கடி, நகைகளை அடகு வைத்தல், வீண் விரயங்கள், தேவையில்லாத பிரயாணங்கள் போன்ற அசுப விரயங்களும்,   திருமணம் போன்ற சுப விரயங்களும்  செய்ய வேண்டி வந்தது. சனியும்  கேதுவும் உங்கள் ராசியில் அமர்ந்தும், ராகுவில் அமர்ந்தும் கெடுபலன் செய்தார்கள்.

       இந்த வருடம் குரு பகவான் தன் சொந்த வீட்டில் அமர்கிறார்.  குருபகவானுக்கு ஜென்ம ராசியில் திக் பலம் அதிகம்.  கேந்திராதிபத்ய தோஷம் ஒன்றும் செய்யாது, போன குருபெயர்ச்சியோடு ஒப்பிட்டால் இந்த குரு பெயர்ச்சி எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

ராசிக்கு 5,7,9 ஆம் இடங்களை குரு பார்வை செய்வதால் தொழில் பெருகும். லாபம் அதிகரிக்கும். கடன் தீரும். இடமாற்றம் உண்டாகும், சிலர் வெளி நாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு ,வெலிமாநிலம் தொழில் காரணமாக செல்பவர்களுக்கு அதுவே பரிகாரமாக ஆகிவிடுவதால் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி அதிக பாதகங்களை செய்யாது...வாரம் ஒருமுறை ,மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்பவர்களுக்கும் இது பொருந்தும்...

சிலருக்கு இந்த ஏழரை சனியில் ஜென்ம குருவில் குரு பாக்யத்தை பார்ப்பதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும், பூர்விக சொத்தில் வில்லங்கம் நீங்கும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். 7 ½ சனி , ராகு, கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்

இவ்வளவு கடுமையா சனியும் குருவும் கை விட்டு விட்டதே என சோர்வு அடைய வேண்டாம் ஜென்ம குரு நிறைய அலைச்சலையும் விரயத்தையும் உண்டாக்கும் என பழைய ஜோதிட நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் குரு வக்ரம் அகும் காலங்களில் நேர்மாறான பலன்களை செய்யும் அப்படி அவர் உங்கள் ராசிக்கு அதிக நன்மைகளை தரும் காலமும் இருக்கு...

27.3.2020 முதல்  8.7.2020 வரை குரு பகவான் மகர ராசியில்   அமரும் காலம் பொற் காலம் ஆகும். அந்த சமயத்தில் சன்,குரு பாதிப்புகள் உங்கலை ஒன்றும் செய்யாது மாறாக தன குருவாக மாறி பெரிய வருமானத்தை அப்போது தர இருக்கிறார்....அச்சமயம் சேமிப்பு அவசியம்...

பூராடம்,மூலம்  நட்சத்திரத்தார் ஆண்கள் பெண்களிடம் பழகும் போது அதிக கவனமும் எச்சரிக்கையும் அவசியம் கெட்ட பெயர் அவமானம் உண்டாக்க சனியும் ,குருவும் காத்திருக்கின்றனர்.குடும்பத்தில் இதன் மூலம் பிரச்சினைகள் உண்டாக்கும் முக்கியமாக உறவுகள் உங்களை முதுகில் குத்தும் காலம் என்பதால் எதையும் வெளிப்படையாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தார் முதலீடு பணம் கொடுக்கல் வாங்கல் பைனான்ஸ் செய்பவராக இருப்பின் இன்னும் எச்சரிக்கை அவசியம்.முடிந்தவரை அளவுக்கதிகமாக யாரையும் நம்பாமல் இருப்பது இப்போதைய காலகட்டத்துக்கு நல்லது.
       பரிகாரம்  ;
                 வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு சிறப்பு.செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடவும்.
       
               

சனியை அதிபதியாக கொண்ட ராசி மகரம்.சர ராசி என்பதால் எப்போதும் துள்ளும் வேகத்துடன் இருப்பீர்கள் என்பதால் ஆடு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது...கடுமையான உழைப்பினை கொண்ட ராசி உங்களுடையது .அடுத்தவருக்காக உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்..சின்ன பிரச்சினையும் தாங்க முடியாமல் நண்பர்களிடம் பகிரும்  அளவு மென்மையான மனம் கொண்டவர்...வேலை என்று வந்துவிட்டால் உங்களை யாரும் முந்த முடியாது..பயணத்தில் அதிக விருப்பம் கொண்டவர்...காலில் சக்கரமா எனும் அளவு பரபரப்பாக செயல்படுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் 


கடந்த  வருடம் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 ம் இடத்தில் அமர்ந்து யோகங்களைச் செய்திருக்க வேண்டும். ஆனால் 7 ½ சனியின் தாக்கத்தாலும் மிகப்பெரிய யோகங்களை தரவில்லை. சரி இந்த குரு பெயர்ச்சி சாதகமக இருக்குமா என பார்த்தால் இதுவும் விரய குருவாகத்தான் இருக்கிறது..விரயத்தில் ஆட்சியும் அடைகிறார்...விரய குருவும் வரப்போகும் ஜென்ம சனியும் வரப்போகும் வருடத்தை கஷ்டப்பட்டுத்தான் தள்ளியாக வேண்டும் என்ற சூழலை உண்டாக்கி இருக்கிறது...
       குரு  தன் சொந்த வீட்டில் உங்கள் ராசிக்கு 12 ல் அமர்கிறார். எனவே அதிகமான சுப விரயங்கள் தான் நடைபெறும், ஜாதகத்தில் திசாபுத்தி வலுத்தவர்களுக்கு தொழில் பெருகும்.  சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். கடன் தீரும், சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். குரு பார்வை ராசிக்கு 4,6,8 ஆம் இடத்தை பார்ப்பதால் பெரிய பிரச்சினை இல்லை..சுக ச்தானத்தை பார்வை செய்வதல் உடல் ஆரோக்கியம் கட்டுக்குள் இருக்கும்...அதே சமயம் அந்த மருத்துவத்துக்காக பெரிய செலவு செய்ய வெண்டிய சூழல் இருக்கிறது...8ஆம் இடத்தை பார்வை செய்வதால் கடன் பிரச்சினை க்ட்டுக்குள் இருக்கும் முழுமையாக அடைக்க இயலாது ஆறம் இடத்தை பார்வை செலுத்துவதால் வட்டி கட்டி விடலாம்...தொழில் மற்றும் பணியில் இருப்பதால் அதில் மாறுதல் செய்யாமல் இருப்பது நல்லது முடிந்தவரை இருப்பதில் தொடரவும்...இடமாறுதல் வேலை பார்க்கும் இடத்தில் கொடுத்து அவதிபட வைத்தாலும் இந்த சமயத்தில் பொறுத்துதான் போக வேண்டியிருக்கிறது எல்லா வேலையையும் என் தலையிலியே சுமத்துறங்க என்றாலும் ஏழரை சனியில் கஷ்டப்பட்டுதான் ஆகனும் என்பதை புரிந்து கொண்டால் நல்லது..அலைச்சலும் அதிகமாகவே இருக்கும்.

திருமணம் கைகூடி வரும், பெண்,தங்கை,அக்கா திருமணம் என சக்திக்கு மீறி கடன் வாங்கும் சூழலும் உண்டாகும்கையிருப்பும் கரையும்.பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்,  

27.3.2020 அன்று குரு அதிசாரம் பெற்று 8.7.2020  வரை உங்கள் ராசியில் ஜென்ம குருவாக அமர போகும். 102 நாட்கள் அதிகமான டென்சன் ஏற்படும். கவனம் தேவைப்படும்.பொறுமை மிக அவசியம்..
             பரிகாரம்
    வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி, கொண்டை கடலை படைத்து, மஞ்சள்  நிற வஸ்திரம் சாற்றி, முல்லை மலரால் வழிபடுங்கள், திருசெந்தூர் சென்று முருகனை  தரிச்சிகவும்.சனிக்கிழமை பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
       
                            

              கும்பத்தான்சம்பத்தான்என்பார்கள்நிலையானபுகழுக்குஉடையவர்கள்கும்பம்ராசியினர் என்று அதன் அர்த்தம்..பல கோயில் கல்வெட்டுகளில்

பிரபலமானவர்களின் பெயர்கள்அவர்கள்பெரும்பாலும்.  கும்பம் ராசியினர்தான்..


ஊருக்குஏதாவதுநல்லதுசெய்யனும் அது நிலையான நன்மை தரும்படி இருக்கனும் என ஆசைப்படுபவர்கள் கும்பம் ராசியினர் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தர்மகாரியத்துக்காக செலவழிப்பார்கள்...குன்றில் இட்ட விளக்கு போல எரிந்து அனைவருக்கும் வழிகாட்டும்ராசிகும்பம்ராசி..



கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து தொழில் மந்தத்தை ஏற்படுத்தி வந்த குருபகவான் இப்போது லாப குருவாக மாறி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்..இது குரு பலம் காலமாகும் ...பன வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்..நீண்ட நாள் தடைகள் விலகும்.ஏழரை சனி வரும் காலத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சனிப்பெயர்ச்சி பற்றி பயம் வேண்டாம்...

கடந்த வருடம்  தொழில் முடக்கம், பங்காளிகள் பிரச்சினைகள், பண விரயம், குடும்பத்தில் குழப்பங்கள் மனைவியுடன் தகராறு,  பிள்ளைகளால் கெட்ட பெயர், கடன் பிரச்சினைகள், வருமானப் பிரச்சினைகள், உடல் உபாதைகள்,  சுபகாரியங்கள் தள்ளிப் போகுதல்,  போன்றவை  பலன்களை சந்த்தீர்கள்.
                 தற்போது குரு பகவான் தன் சொந்த வீட்டிற்கு அமர்கிறார். 11 ம் இடத்திற்கு  வருகிறார்.  தொழில் பெருகும், லாபம் அதிகரிக்கும். புதிய  தொழில் மற்றும்  வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். கடன் குறையும்.

      உடல் உபாதை நீங்கும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் நீங்கும். புது வீடு மனை வாங்கும் யோகம்  அமையும். சகோதரி ,சகோதரகளுடன் நல்லுறவு அமையும். 

உங்கள் ராசிக்கு குரு 3,5,7ஆம் இடங்களை பார்வை செய்வதால் திருமண முயற்சியில் இருப்போருக்கு திருமனம் தடையின்றி நல்லவிதமாக முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் ..கூட்டாளிகளால் லாபம் உண்டாகும்..தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்..

நீண்ட தூர பயணங்கள் வேற்றியை தரும் பூர்வீக வழி ஆதயங்கள் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி அடைவார்கள்...

27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு, மகர ராசிக்குள், வரும் 102 நாட்களும் விரயமான காலமாக  இருக்கும்.கவனம் தேவை..

         பரிகாரம் :
               வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியும், லட்சுமி நரசிம்மரையும்  தரிசித்து வருவது உத்தமம். சனிபகவானுக்கு சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்லது. 27.3.2020 முதல் 102 நாட்கள்  ஏதாவது குரு ஸ்தலத்துக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

               
             
குருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது.. அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...


உங்கள் ராசியில்தான் உலகிற்கே சுகத்தை கொடுக்கும் சுக்கிரன் உச்சம் அடைகிறார்....குரு ஆட்சி அடைகிறார்...புதன் நீசம் அடையும் ராசி என்பதால் யோசிக்காமல் எதையேனும் செய்துவிட்டு பின்னர் அதற்காக வருந்துவது உங்கள் வாடிக்கை...இருப்பினும் குருவின் அருளாசியில் தவறை சரி செய்து கொள்வீர்கள் 

கடந்த வருடம் குரு பகவான் 9 ம் இடத்தில் அமர்ந்து பல யோகங்களை  கொடுத்தார். சிலருக்கு ஜாதக திசாபுத்தி சரியில்லாததால் குறைவான பலன்களே கொடுத்திருக்கலாம்..

 தொழிலில் மேன்மை, லாபம் அதிகம். வருமானம்  பல வழிகளில் வருதல், உத்யோகத்தில் நன்மை, குடும்பத்தில் திருமணம், போன்ற சுப காரியங்கள் நடைபெறுதல், கடன் வாங்கி வீடு, மனை, வாகனம், ஆபரணம் வாங்குதல் போன்றவை ஏற்பட்டது. சிலருக்கு         பூர்வீக சொத்து விற்பனை, தேவையில்லாத விரயம், மருத்துவச் செலவு ஏற்பட்டது.
          
தற்போது குரு பகவான் தன் சொந்த  வீடான தனுசு ராசிக்கு வருகிறார். கோட்சார ரீதியாக, குரு பகவானுக்கு  பத்தாமிடம் என்பது அத்தனை சிறப்பானதல்ல. பத்திலே குரு பதவியைப் பறிக்கும்.என்று சொல்வார்கள் ஆனால் பத்தில் குரு தொழிலில் மந்தமான நிலையை உண்டாக்கினாலும்,.செய்தொழிலை முற்றிலும் கெடுக்காது...காரணம் தன ஸ்தானத்தை பார்வை செய்யும் குரு வருமானத்தை கெடுப்பதில்லை.உங்கள் ராசிக்கும் சுக ஸ்தானத்தையும் அவர் பார்வை செய்கிறார் இதனால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்...சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்..

        கால் நடை, வாகன யோகம் அமையும். உடல் பாதிப்புகள் நீங்கும். எதிரிகளின் சூழ்ச்சி விலகும், கடன் கட்டுக்கடங்கும். 

          பத்தாமிடத்துக் குரு என்பது தொழில் முடக்கம்,  சகோதரர் உறவு பாதிக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்சினை  உண்டாகும்.  எனவே புதிய முதலீடுகளை யோசித்து செய்வது நலம் தரும்.             
  
    சிலருக்கு சனி, கேதுவும் சேர்ந்ததால் தொழில் மற்றும்  உத்யோக இழப்பு புது வேலை அமைதல் போன்றவை அமையும்.

         கடன் அன்பை முறிக்கும். தொழிலை விட்டு விடலாமா என்றிருக்கும். உறவினர், நண்பர் பகையாவார்கள், நெருங்கிய உறவினர் வகையில் மரணச் செய்தி  கேள்விப்படுவீர்கள்,காரணம் கர்ம குரு என்பதால் வயதான உறவினர்களுக்கு கண்டமான காலமாக இருக்கிறது...வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்பி விடலாமா என யோசிப்பவர்களுக்கும் சொந்த ஊரில் முதலீடு செய்து தொழில் செய்யலாமா என நினைப்பவர்களுக்கும் இது உகந்த காலம் அல்ல/

 குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு திருமனம் ஆகி நல்ல குடும்பம் அமையும். ஜாதகத்தில் நல்ல திசா புத்திகள் நடந்தால் பாதிக்காது. குரு பகவானின் 5,7, 9 ம் பார்வைகளாலும், பாதிப்புகள் குறையும். ஆனால் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். சனி பகவான் 10 இடத்தில் அமந்ர்ந்திருபதாலும். குரு சொந்த வீட்டில் அமர்வதாலும் தான் இடையில் 27.3.2020 முதல் 8.7.2020 வரை குரு மகர ராசியில் பிரவேசிக்கும் 102 நாட்கள் உங்களுக்கு நல்ல காலமாக அமையும்.
         பரிகாரம் :
                  வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு  நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.  கொண்டைக்கடலை படைத்து, மஞ்சள் வஸ்திரம் சாற்றி, முல்லை மலரால் அர்ச்சனை செய்யவும்,   திருசெந்தூர் சென்று தரிசனம் செய்து வந்தால் நலம்.