சனி, 31 ஜூலை, 2021

செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா? செவ்வாய் தோசம் பற்றிய உண்மையான விளக்கம்

 
செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா?

 லக்னத்துக்கு 2, 4, 8, 12  ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அதனை ஒரு சிலர் செவ்வாய் தோஷ ஜாதகம் என முடிவு செய்கின்றனர்.

1.   கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

2.   செவ்வாய் அமர்ந்துள்ள இரண்டாம் வீடு மிதுனம், கன்னி வீடுகளாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

3.   செவ்வாய் அமர்ந்துள்ள 4 ஆம் இடம் மேஷம், விருச்சிக ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

4.   செவ்வாய் இருக்கும் ஆகிய 7 – ஆம் இடம் கடகம், மகரம் ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

5.   செவ்வாய் இருக்கும் ஆகிய 8 ம் இடம் தனுசு, மீனம் ராசியாக இருந்தால்  செவ்வாய் தோஷம் இல்லை.

 

6.   செவ்வாய் இருக்கும் ஆகிய 12 – ஆம் இடம் ரிஷபம், துலாம் ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

7.   சிம்மம் அல்லது கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

8.   செவ்வாய் குருவுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை.

 

9.   செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை.

 

10.  செவ்வாய் புதனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை. புதன் பார்த்தாலும் தோஷம் இல்லை.

 

11. செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தாலும், சூரியன் பார்த்தாலும் தோஷம் இல்லை.

 

12. செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி (கிரகம்) லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 இவற்றை ஆகிய இடங்களில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

 

13. லக்னத்துக்கு 8, 12 ல் செவ்வாய் உள்ள ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

  14.  செவ்வாய் தனது உச்ச வீடான மகரம், சொந்த வீடான மேஷம்,           விருச்சிகத்தில் இருந்தால் தோஷம் இல்லை.

15. சனி, ராகுகேது இவர்களுடன் கூடியாவது, இந்த கிரகங்களால் பார்க்கப்பட்டாவது  செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

16. செவ்வாய் தன் நண்பர்கள் வீடான சூரியன், சந்திரன், குரு, இவர்கள் வீட்டில்அதாவது சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

பரிகாரம்

ஆண்பெண் இருவருக்கும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியில் திருமணம் செய்ய வேண்டும். அல்லது திருமணம் ஆனவுடன் தம்பதியர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விட்டு, திருச்செந்தூர் அல்லது திருத்தணி சென்று முருகப் பெருமானை தரிசித்து வணங்கி வர வேண்டும். செவ்வாய் தோஷம் விலகும்.

செவ்வாய், 20 ஜூலை, 2021

உங்க ராசிப்படி நீங்க எப்படி..? ஜோதிடம்

 உங்க ராசிப்படி நீங்க எப்படி..?




ஸ்திர ராசிகள் ;
ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள் ....அதில் இருந்து மாறவும் மாட்டார்கள்..தப்பா இருந்தாலும் சரியா இருந்தாலும் அதில் பிடிவாதமாக இருப்பார்கள்...ரெண்டு ஸ்திர ராசிக்காரங்க சண்டையோ வாக்குவாதமோ செய்ய ஆரம்பித்தாலும் விடிய விடிய தொடரும்..
உபய ராசிகள் ;;
மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி விடும் புத்திசாலிகள் ..மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் கில்லி...ஆனா இவங்களுக்கு இவங்களே வெச்சிக்குவாங்க கொள்ளி...எதிலும் இரட்டை நிலைதான்..மரம் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி என்பார்களே அது இவர்களுக்கு பொருந்தும்.மனசு மாறிக்கிட்டே இருக்கும்.ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சர ராசிகள் ;
மேசம்,கடகம்,துலாம்,மகரம் ...உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு போல சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள் ..பாயிண்ட் பாயிண்ட் வரட்டும் என காத்திருந்து நெத்தியடியாக தாக்குவதுதான் இவர்கள் பாணி.எதிலும் வேகம்,விவேகம் .எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள்...ஊர் நாட்டாமை இவர்கள்தான் என்பதால் எல்லா பிரச்சினைக்கும் இவர்கள் நான் சொல்றேன் தீர்ப்பு என முன்னாடி ஏதாவது ஆதாயம், கிடைக்குமான்னு பார்ப்பாங்க...எப்பவும் பெரிய ஆட்களுடன் பழகத்தான் விரும்புவார்கள்..தன்னை பெரிய ஆட்களாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்

உங்க ராசிப்படி நீங்க எப்படி ...
குடும்பம்,வாழ்க்கை துணை
ஸ்திர ராசிகள் ;எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர்கள்..நிலையான எண்ணமும் செயலும் கொண்டவர்கள் இந்த ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ...இவர்களுக்கு வாழ்க்கை துணை எப்படி அமையும்...இது லக்னத்துக்கும் பொருந்தும்.ராசிக்கும் பொருந்தும்...பொதுவான கருத்துக்கள்தான்...ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறலாம்...ஆனால் அடிப்படை மாறாது.முடிந்தவரை இருப்பதை சொல்கிறேன்.
ரிசபம்-இவங்களும் ஸ்திர ராசி...வாழ்க்கை துணையும் ச்திரம் என்பதால் இருவருமே பிடிவாத கரர்கள்தான் சண்டை வந்தால் விடியும் வரை தீராது.ரிசபம் பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம்.வாழ்க்கை துணை அடிக்கடி மருத்துவ செலவை வைக்கும்.எதுவும் இல்லை எனில் புலம்ப ஆரம்பிச்சுருவாங்க..குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்டவர்கள் தான் இருவருமே என்பதால் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவு குடும்பம் நடக்கும்..ஆனால் இருவருக்குள்ள் அடிக்கடி பனிப்போர் நடக்கும்...
சிம்மம்;சிங்கத்து கிட்ட மாட்டிக்கிட்ட புள்ளி மானா தவிக்கிறேன்னு வாழ்க்கை துணை புலம்பல் தினசரி எதிரொலித்தாலும் தன் வால்யூமை குறிச்சுக்கவே மாட்டார்.அடிக்கடி சிங்க அவதாரம் எடுப்பதால் குடும்பம் அடிக்கடி டேஞ்சர் ஜோனுக்கு போய்தான் திரும்பும்.தொழில் மீது நல்ல பக்தி உடையவர்.இருவரில் ஒருவருக்கு அடிக்கடி மருத்துவ செலவு உண்டாக்கும்....
.சிம்ம ராசிக்காரங்க பலாப்பழம் மாதிரி மேலதான் முள்ளு இருக்கும் உள்ளே முழுக்க இனிப்புதான் என்பதால் வாழ்க்கை துணை இவரை சரியா புரிஞ்சு வெச்சிருப்பாங்க..இருப்பினும் இவர்கள் அடிக்கடி மட்டம் தட்டுவதை ரசிக்க மாட்டாங்க..கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.ஆன்மீகம்,கடவுள் பக்தி கொண்டவர்களாக வாழ்க்கை துணை அமையும்.
விருச்சிகம்;இவங்களுக்கு வாழ்க்கை துணை நன்ராக அமையும்..ஆனா இவங்களே அடிக்கடி அதை துன்புறுத்தி பார்ப்பாங்க...நல்ல அழகு,இனிமை,சம்பாதிக்கும் திறன் இருக்கும் துணை அமைந்தாலும் அவங்க சொந்தக்காரங்க கிட்ட அவங்க காட்டும் ஈடுப்பாடு நமக்கு பிடிக்கிறதில்லை.மாமியார் பிரச்சினை அடிக்கடி தலை காட்டும்.
நல்ல சொகுசா வாழுற ,விதவிதமா சாப்பிடுகிற ஆர்வம்,அலங்காரம் செய்வதில் அதி விருப்பம்,பணம் அதிகம் சேர்ப்பதில் ஆசை உடைய வாழ்க்கை துணை அமையும்..அன்பும்,பாசமும் அதிகம்.நாகரீகமா நடந்துக்குவாங்க...அவங்க மாமனார் மாமியாரை மதிப்பாங்க ஆனா இவருக்குதான் அவங்க ஆளுகளை பிடிக்காது எல்லாம் சுயநலம் என்பார்கள்..நீச சந்திரன் இருக்கும் ராசி ஊரையும் உறவையும் அடிக்கடி பிரிய வேண்டி வரும்..சிலர் வெறுப்பால் பிரிந்து இருப்பர்.அடிக்கடி உனர்ச்சி வசப்படுவாங்க..அடிக்கடி தனிமையை விரும்புவாங்க...சந்தோசம் வந்தால் அன்பை அள்ளி இறைப்பாங்க.
கும்பம்;ரொம்ப கரெக்டா நடந்துக்குற வாழ்க்கை துணை அமையும்..கொஞ்சம் ஆணவமா பேசுவாங்க...ஆனா நல்லவங்கதான் ...நேர்மை,நியாயம் விரும்பும் வாழ்க்கை துணையாக இருக்கும்.குடும்ப வாழ்வில் அடிக்கடி ஈகோ பிரச்சினை தலைகாட்டும் இருவருமே சரிக்கு சரி பலமானவர்கள் என்பதால் யாரேனும் விட்டுகொடுத்தால் குடும்பம் கெட்டு போகாது.மாமனார்,மாமியார் பிரச்சினை இருக்கும்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.சமூகத்தில் நல்ல மதிப்பு கொண்டவர்கள் வாழ்க்கை துணையாய் அமையும்.கோபத்தை குறைச்சுக்குங்க உடம்புக்கும்,வீட்டுக்கும் நல்லது என வாழ்க்கை துணையிடம் அடிக்கடி சொல்ல வேண்டி வரும்.

திங்கள், 19 ஜூலை, 2021

ஜாதகத்தில் லக்னாதிபதி தரும் பலன்களும் யோகங்களும் ஜோதிடம்

 லக்னாதிபதி   

     முதலில் லக்னாதிபதியை எடுத்துக் கொள்வோம். லக்னாதிபதி பகை_ நீச்சமடைந்து  பலவீனப்பட்டிருந்தாலும், அல்லது லக்னாதிபதி அஸ்தங்க தோஷமடைந்திருந்தாலும், ஜாதகர் எடுப்பார்கைப்பிள்ளையாக இருப்பார் .எல்லோர்க்கும் கீழ்படிந்து யார் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வார் . இவர் உடல் ஆரோக்கியக் குறைவாக இருப்பார் .


ஒல்லியான தோற்றமும் தலை சீவாதமுடியும், பபூன் போன்ற தொளதொள உடையும் அணிவார் . எனவே இவரை எல்லோரும் அலட்சியப் படுத்துவது இயற்கை . இதனால் இவரிடம் எல்லோரும் பக்குவமாகப் பேசிவேலை வாங்கிடுவர் . இருந்தாலும், ஜாதருக்குப் பிறரை கவிழ்க்கும்குணமே அமைந்திருக்கும் . பெருமை,புகழ் முதலியவற்றிக்கு இவர்கள்  ஆசைப்படமாட்டார்கள் .குணத்துக்கு தகுந்த விதமே இவர்களுக்கு யோகம் அமையும். அதாவது, வறுமைதான். நாவம்ஸத்தில், லக்னாதிபதி பனிரெண்டாமிடம் பெற்று விட்டால் ஓரிடத்திலும் நிலையகாத் தங்கமாட்டார்கள். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அதனால் மூளை குழப்பம்டைந்து எதிலும் முரண்படுவார்கள். இவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கலாகாது .



எந்தலக்னாதிபதியும், இரண்டாம் வீட்டில் இரண்டுக்குடையவரோடு சேர்ந்திருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டமுண்டு . விலை உயர்ந்த கற்கள் பதித்த ஆபரணங்களை வாங்குவார்கள். அந்த கற்களின் நிறம் இரண்டாம் வீட்டுக்குடையவனின் நிறமாக அமையும். வெள்ளி, தங்க நகைகள் ஏராளாமாக வாங்குவார் ஜாதகர். ஜாதகர் ஈடுபடும் எல்லா வேலைகளிலும் வெற்றியே பெறுவார் .

ஆரம்பத்தில் சிறிதாக இருந்த குடும்பம் கூட ஜாதகர் வளர வளர பிரமாதமாக  முன்னேறி பெரிய குடும்பமாக படர்ந்திருக்கும். குடும்பத்தில் எல்லோரிடமும் அமைதி தாண்டவமாடும். ஜாதகரின் புன்சிரிப்பும் வாக்கு சாதுரியமும் பிறரை காந்த சக்தி போல் இழுக்கும் வல்லமை பெற்றதாக இருக்கும். 

ராசி சக்கரத்தில் இது போல் லக்னாதிபதி வலுவுடன் காணப்பட்டாலும், நவாம்சசக்கரத்தில் இரண்டிற்குடைய கிரகம் நின்ற இடத்துக்கு 6,8,12 ல் லக்னாதிபதி அமைந்து விட்டால், நாம் மேலே சொல்லிய பலன் அற்பமாகப் பலனளிக்கும் .  

லக்னாதிபதி 3ம் இடத்தில்,3 க்குடையவனுடன்காணப்பட்டால், சகோதரர்கள் அதிகமாகப்பிறப்பார்கள். ஜாதகர் சகோதரர்களின் மேல் பாசமாக இருப்பார்கள். சகோதரர்களும் யோகவான்களாயிருப்பார்கள். பல செளகரியங்களையும் பெறுவராகையால்மன அமைதி ஏற்படும். ஜாதகரை ஆண்களும் பெண்களுமாக விரும்புவார்கள். ஆனால், ராசிக்கட்டத்தில் லக்னாதிபதி மேலே சொன்னது போலிருந்து, அம்ச சக்கரத்தில் 3 ம் அதிபதிக்கு 6,8,12ல் லக்னாதிபதி அமைந்து விட்டால் சகோதரர்களுடன்பகைமை உணர்வு ஏற்படும். சகோதரர்களுக்கு ஜாதகரால் துன்பங்கள் ஏற்படலாம் 


லக்னாதிபதி நாலாமதிபதியோடு நாலாம்வீட்டில் இருந்து வலுவடைந்தால், ஜாதகருக்கு பலஆப்த நண்பர்கள் முன்னின்று காரியத்தை செய்வார்கள் .உறவினர்களால் ஜாதகர் கெளரவிக்கப்படுவார்கள். ஜாதகருக்கு பங்களாவாசம் கிடைக்கும். தாயாரிடம் அன்பு செலுத்துவார். தாயார் சுகம் நல்லபடியிருக்கும் . அதிகம் படித்த மேதாவிகளின் நேசம் கிடைக்கும் .அவர்களுடன் தர்க்கவாதம் செய்து கொண்டும் இருப்பார்  ஜாதகர். அதனால் அவருக்கு நல்லதொரு அனுபவமுதிர்ச்சி ஏற்படும் .

அம்சசக்கரத்தில் நான்காமதிபதி இருந்தஇடத்திற்கு 6, 8,12 ல் லக்னாதிபதி  வீற்றிருந்தால் தாயருடன் பகைமை ஏற்படும் .அல்லது ஜாதகர் துரோகம் செய்வார்.அது மட்டுமல்லாமல் பந்து ஜனங்களிடத்தில் விரோதம் பாரட்டுவார் . எதிர்பாராத விதமாக விபத்துகள் ஜாதகருக்கு ஏற்படும் .மற்றும் தேவையற்ற வழக்கு வியாஜியமும் ஏற்படலாம் .

லக்னாதிபதி ஐந்தாமிடத்ததிபதியோடு சேர்ந்து ஐந்தாமிடத்திலிருந்து விட்டால் அரசாங்கசலுகைகள் பெறுவார். அரசாங்கத்தால் பாராட்டப்படுவார். நல்ல மனஅமைதி ஏற்படும். மதத்தலைவராகவோ அல்லது சமூகத்தில் ஒரு முக்கிய

புள்ளியாகவோ ஜாதகர் திகழ்வார். அயல் நாட்டு தூதராகும் வாய்ப்பும் கிட்டும்.ஆண் சந்ததிகள் பிறக்கும் .அரசியலில் தீவிரமாக இறங்குவார்கள். மந்திரி, எம்.எல்.ஏ, எம்.பி யாகும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும் .

அம்சசக்கரத்தில் ஐந்தாமதிபதி நின்ற இடத்துக்கு 6,8,12 ல் லக்னாதிபதி நின்று விட்டால், மேலே சொல்லிய பலன்கள் தலை கீழாக மாறும்.

ஆறாமதிபதியோடு லக்னாதிபதி சேர்ந்து ஆறாமிடத்திலேயே நின்று விட்டால் எல்லாவிதமாநோய்களும் ஜாதகரை ஆட்டிப்படைக்கும். ஆறாமதிபதி சுக்கிரனாக இருந்துவிட்டால் பெண்கள் வியாதி நிச்சியமாக உண்டு. உடலில் வெட்டுக்காயம் ஏற்படும்.சர்க்காரின் அதிருப்திக்கு ஆளாவர் .அடிக்கடி சர்க்காரால் வழக்கு ஏற்படும் .கிரிமினல், சிவில் வழக்குகள் ஏற்படலாம். தாயாதிபங்காளிகளால் தொந்தரவுகள் ஏற்படும். கோர்ட்டும் கையுமாக திரிவார். வறுமையும் வாட்டிப் படைக்கும்.

இவர்களையாராவது முன்னுக்கு கொண்டு வர முயற்சித்தாலும் அவர்களுக்கே ஆயினும் அம்சத்தில் ஆறுக்குடையவர் நீச்சமடைந்து லக்னாதிபதி உச்சமடைந்து விட்டால் சொல்லிய கெடுபலன்கள் நடக்காது. ஜாதகர் மிலிடெரி ,போலீஸ் இலாகாவில் தலைமைப்பதவிபெறுவார். ஆறாமதிபதி இருந்தவீட்டிற்கு 6,8,12 ல் அம்சசக்கரத்தில் லக்னாதிபதி வீற்றிருந்தால் ஏற்படவிருக்கும்.நண்பர்கள் குறையலாமே தவிர தீயதில்லை .

லக்னாதிபதி ஏழாமிடத்ததிபயுடன் சேர்ந்துஏழிலேயே இருந்தால்,ஜாதகர்யாத்திரை செல்லுவார்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். ஏழாமிடம் சர ராசியானால் ஜாதகர் பல நாட்டிற்கு விஜயம் செய்வார். ஸ்திர ராசியானாலும் உள் நாட்டிலேயே கூட சுற்றி வருவார். உபய ராசியானால் அயல் நாடுகளுக்குப் போய் வருவார். ஆயினும் இங்கே எந்த கிரகம் வலுவுள்ளது என்று பார்க்க வேண்டும். ஏழாமதிபதியை விட லக்னாதிபதி வலுக்குன்றியிருந்தால் பிராயாணத்தில் லாபமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அம்சசக்கரத்தில் ஏழாமிடத்துக்கதிபதி இருந்த இடத்துக்கு 6, 8.12 ல் லக்னாதிபதி நின்றுவிட்டால் கணவன் மனைவி உறவுசரிப்பட்டுவராது. எந்தநேரமும்ஏதாவது பிரச்சனகள் தோன்றிக் கொண்டே இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். நண்பர்களால் கெடுதல்கள் ஏற்படும். பிரயாணத்தால் சிக்கல்கள் தோன்றும்

.ஜாதகருக்கு அபகீர்த்திகள் உண்டாகும். வறுமை தொற்றிக் கொள்ளும்.சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையாக இருக்கும். பிரயாணத்தால் சிக்கல்கள் தொற்றிக் கொள்ளும். சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையா இருக்கும். உடல் நலம் கெடும் செய்யும் தொழிலே நிம்மதி இல்லாதது மட்டுமல்ல. தொழிலில் மந்தநிலை அடையும். வியாபாரம் செய்தாலும் நஷ்டம்தான் காணும் எடுக்கும் முயற்சிகள் வீண் பிரயாசையாகத்தான் முடியும்.

லக்கனாதிபதி எட்டாமிடத்ததிபதியோடு எட்டாமிடத்திலிருந்தால், ஜாதகர் அதிக துன்பத்தையும், வறுமையையும் அனுபவிப்பார். ஏகப்பட்ட கடன் ஏற்படும் பல பாபகாரியங்களை செய்து வருவார் .கெட்ட நண்பர்கள் சேர்க்கை எப்போதும் பிறர்க்கு கெடுதலை உண்டாக்கும் எண்ணம் குடி கொண்டவராக இருப்பார். எட்டுக்குடைய கிரகம் அம்சத்தில் நீச்சமடைந்து, லக்னாதிபதி வலுப்பெற்றிருந்தால் இவ்வளவு கெடுதல்கள் இல்லையென்றாலும். ஜாதகருடைய எண்ணம் நல்லதாக இருக்காது. இதனால்தான் நான் பொதுவாகவே லக்னாதிபதியை விட ஆறு, எட்டுக்குடையவர் , வலுப்பெற்றிக்கக்கூடாது என்று சொல்லி வருகிறேன் .  

லக்னாதிபதி 9 க்குடையவனோடு ஒன்பதாமிடத்தி லிருந்தால் லக்னாதிபதியின் திசையில் தகப்பனார் மிக மிக சந்தோஷமாக வாழ்ந்து வருவார்.ஜாதகர், தகப்பனாருக்கும் மற்ற குடும்ப பெரியவர்களுக்கும் அடங்கி நடந்து,அவர்கள் அன்புக்கு நன்றாகவே இருக்கும். எப்போதும் பிறர் போற்றக்கூடிய நல்ல செயல்களையே ஜாதகர் செய்து வருவார். அம்சசக்கரத்தில் லக்னாதிபதி 9 க்குடையவனுக்கு 6,8,12ல் மறைந்திருந்தால் மேலே சொல்லியவற்றிக்கு நேர் lஎதிரிடையான பலன்களாகவே நடந்து வரும். பெரியவர்களுடைய சொத்து விஷயமாக வழக்கு விஜியங்கள் நடக்கும். நவாம்சசக்கரத்தில் 9க்குடையவனோ அல்லது லக்னாதிபதியோ உச்சமடைந்திருந்தால், ஜாதகர் சுய சம்பத்தியமாக பல லட்சக்கணக்கில் பொருள் சேர்ப்பார். செலவினங்கள் மிக நியமானதாக இருக்கும். எவ்வளவு செலவு செய்தாலும் ஒரு பக்கம் வரவு இருந்து கொண்டே இருக்கும்.

லக்னாதிபதி 10 க்குடையவனோடு சேர்ந்து பத்தாம்மிடத்திலேயே இருந்தால் ஜாதகர் பல நல்ல காரியங்களைச் செய்வார். ஹோமம், யகஞம் முதலியவற்றைச் செய்வார். மதசம்பந்தமான எந்த காரியத்திலும் தீவிர சிரத்தையுடையவராக இருப்பார். தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டிய எல்லா கர்மங்களையும் செய்வார். யாரவது சாந்தி பரிகாரம் சொன்னால் தவறாமல் செய்யக் கூடியவர். ஜாதகர் சர்க்காரில் நல்ல உயர்ந்த பதவியை பெறுவார். நீதிபதி, மேஜிஸ்ரேட், செகரட்டரி முதலிய பல பதவிகளைப் பெற்றிடுவார்


பெரிய புள்ளிகளினன் ஆதரவு நிச்சயமாக இவருக்கு உண்டு. அம்ச சக்கரத்தில் பத்துக்குடையவனிருந்த வீட்டுக்கு 6,8,12 ல் லக்னாதிபதி இருந்து விட்டால் சொல்லிய நற்பலன்கள் அனைத்தும் தலை கீழாக மாறும். அவர் மூலமாக ஜாதகரும் நன்மை பெறுவார். எந்த வித வியாபாரம் ஒருக்கால் நவாம்சத்தில் 11 க்குடையவனின் நிலையும், லக்கனாதிபதிநிலையும் கெட்டிருந்தால் இதற்கு பாதகமில்லை. லாபம் குறைந்திருக்கும் அவ்வளவுதான். மூத்த சகோதரனுடன் பகைமை உணர்வு தலை தூக்கும். 11 க்குடையவன் லக்னாதிபதி முதலியவர்களின் தாரமம்மியத்தை சரியாக எடை போட்ட பின்தான் பலன்களைச் சொல்ல வேண்டும்


லக்னாதிபதி 12க்குடையவனுடன் சேர்ந்து, பனிரெண்டமிடத்திலிருந்தால் எவ்வளவுதான் பெரியவர்களின் சொத்து இருந்தாலும் ஜாதகர் அழித்து விடுவார். வறுமையால் வாடுவார். காரணமின்றி ஊர்சு ற்றி வருவார். எல்லாவிதமான பொருளாதாரத் தொந்தரவுகளும் சமாளிக்க வேண்டி வரும்.நவாம்சத்தி லக்னாதிபதி      வலுப்பெற்றிருந்தால், அயல்நாடுகளில் பெருத்த லாபம் பெறுவார்.

சுய சம்பாத்தியத்தில் ஸ்திர சொத்து முதலியவைகளை சேர்ப்பார். நவாம்சத்தில் லக்னாதிபதி இருந்த வீட்டுக்குடையவன் உச்சம் பெற்று விட்டால் பிரமாதம்

இந்த விதமாக லக்னாதிபதியின் திசையில் மற்றும் லக்னாதிபதியுடன் சேர்ந்த பார்த்த கிரகத்தின் தன்மையையும் கருத்தில் கொண்டுதான் ஜோதிடர் சொல்ல வேண்டும் .லக்கனத்திலிருக்கும் கிரகங்களுக்குச் சொல்ல வேண்டும். லக்னத்திலிருக்கும் கிரகங்களுக்குச் சொல்லியபடியே மற்ற பாவங்களில் நின்ற கிரகங்களுக்கும் ஆட்சி, உச்சம், பகை, நீச்சம் முதலியவகளைக் கொண்டு அந்தந்த திசை புத்தி அந்தரக்காலங்களை கொண்டு ஜோதிடர் சாமர்த்தியமாக பலன்களை சீர்தூக்கி, சமதட்டில் பார்த்து பலன்களைச் சொல்ல வேண்டும். அப்படி கிரக பலன் சொல்லும் போது நவாம்சத்திலும் அந்த கிரகங்களின் தன்மைகளைப் பார்த்த பின்புதான் தீர்மானிக்க வேண்டும்.