சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 செப்டம்பர், 2011

சன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்

அரசு கேபிள் எனும் முகமூடி அணிந்து சண்டிவியை துடைத்து எறிந்துவிட்டார் ஜெயலலிதா.அரசு கேபிள் என்பதே சண்டிவியை ஒழிக்கத்தானோ என தோன்றுகிறது.விஜய் டிவி,ராஜ்டிவி,சன் குழுமம் அனைத்தும் பே சேனல் ஆக்கப்பட்டதில்,இப்போது அவை அனைத்தும் அரசு கேபிளில் மிஸ்ஸிங்.ஒரு நாள் நாதஸ்வரம்,அரசி பார்க்கலைன்னா நம்ம வீட்டு பெண்களுக்கு இடி விழுந்தா மாதிரி சோகமா இருப்பாங்க..இதுல இனிமே அது எதுவும் கிடையாதுன்னா சுத்தம்.நேத்தே ரிசல்ட் தெரிஞ்சிருச்சு.டிஷ் இருக்கும் வீடுகளுக்கு சென்று நாதஸ்வரம் பார்த்துவிட்டு வந்தார்கள்..காலையில் வசூலுக்கு வந்த கேபிள் காரனை எப்போ சன் டிவி வரும் என துளைத்து எடுத்தார்கள்.இதைத்தான் சன் டிவி எதிர்பார்க்கிறது...சன் இல்லாமல் கேபிள் இல்லை...அப்படி வேணும்னா இவ்வளவு கொடுன்னு கேட்பார்கள்.


.சரி சன் டிவிக்கு நஷ்டம் வராதா..இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்துதான் டிஷ் ஆண்டனா சிஸ்டத்துக்கு மாறினார்கள்.ஒரு ஊரில் குறைந்த பட்சம் 500 டிஷ்களாகவாது இருக்கும் ஏற்கனவே கேபிள் குறைந்து,டிஷ் அதிகமாகிவிட்ட காலத்தில் அரசு கேபிள் மூலம் முற்றிலும் கேபிள் தொழிலை சன் வசம் ஒப்படைக்கபோகிறார் ஜெ..எப்படி தெரியுமா.ஒரு வாரம் சன் இல்லாமல் புலம்பும் மக்கள் 2000 போனா போகுது.ஒரு சன் டிஷ் வாங்கலாம் என முடிவெடுத்தால் தீர்ந்தது கதை..ஏழை எளிய மக்கள்,சேமிப்பு இந்த ஜல்லியெல்லாம் சன் சீரியல் முன்னால் எடுபடாது..50 ரூபா மிச்சத்துக்கு வருசம் பூரா ஜெயா டிவியே பார்க்க முடியுமா என கொதிப்பார்கள்..

அரசு கேபிள் மூலம் சன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினால்,முன்பு இருந்ததை கட்டணத்தை இரு மடங்காக்குவார்கள்.பேச்சுவார்த்தைக்கே வர மாட்டார்கள்.இனி ஒயர் மூலம் டிவி பார்க்கும் வழக்கம் குறையும்.டிஷ் வேகமாக பரவுகிறது.அரசு கேபிள் எனும் ஓட்டை பஸ்ஸை செட்டில் போட்டுவிட்டு,அரசு டிஷ் கொண்டு வந்தால் இன்னும் நல்லது.கேபிள் காரர்கள் நலனை பார்த்தால் சன் டிவி கொள்ளையை நிறுத்த முடியாது..இதே அரசு கேபிள் இன்னும் ஒரு மாதம் சன் டிவி இல்லாமல் தொடர்ந்தால் கேபிள் காரர்களே போராட்டம் நடத்துவார்கள்.ஆமாம் வாடிக்கையாளர்கள் எல்லாம் டிஷ்க்கு மாறினால்..அவர்கள் என்ன செய்வார்கள்..? டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்தாலும் பரவாயில்லை..விளம்பரம் குறைந்தாலும் பரவாயில்லை..டிஷ் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு கேபிள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் சன் சண்டித்தனம் செய்யும்.சன்..ஜெயா மோதல் சன்னுக்கு லாபமாக போகிறது..

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா

நான் சொல்வதை தமிழர்கள் கேட்கவில்லை என்றார் கருணாநிதி.

அய்யா,உங்க பேச்சை திஹார் சிறையில் இருக்குற,கனி ,ராசாவாவது கேட்குறாங்களா..?...அதான் மூலையில உட்கார வெச்சாச்சே அப்புறம் இன்னும் என்ன முனகல்..?தமிழன் ஓட்டை போட்டுட்டு அவனவன் வேலையை பார்க்க போயிட்டான்..உங்க பேச்சை கேட்க ஒரு பய இல்லை...
-
-----------------------------
                                     இவர்தான் வருங்கால இந்திய பிரதமராம்

ஒரு சட்டம் ஊழலை ஒழித்து விடாது என ராகுல் காந்தி திருவாய் மலர்ந்தார்.
ஏய்யா அன்னா ஹசாரேவை மூணாவது முறையா ஏமாத்த தான் இந்த தத்துவ முத்தா..?பிரதமர் பதவியை லோக்பால் வரம்புல சேர்த்த சொன்னா,உங்க கிட்ட யாரு அறிவுரை கேட்டா..?

இன்னிக்கு எந்த ஏழை வீட்டுக்கும் ரொட்டி தின்ன போகலையா ராகுல்ஜி?
------------------------------
எங்க ஊர் பகுதியில் ஒருவர் மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமான 5 ஏக்கர் பூமியில் விவசாயம் பார்க்குறார்.வருசா வருசா கந்தாயம் ரொம்ப கம்மியான அமவுண்டை அரசுக்கு கட்டிடுறாராம்.நிலத்தை விக்க முடியாது..அனுபவிக்கலாம்...அதுக்கு எப்பவும்,உரிமையாளர் மைசூர் மகர்ராஜாதான்.
------------------------
மு.க.அழகிரி மீது தாசில்தாரை அடித்த வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க..100 பக்க குற்ற பத்திரிக்கை தயார்னு சொல்றாங்க..கிரானைட் சம்பந்தமான வழக்குல அவர் மகனுக்கும் காப்பு ரெடின்னு சொல்றாங்க...நேருவை தொடர்ந்து அழகிரியை பார்த்தும் பூமா தேவி சிரிக்க ஆரம்பிச்சிட்டா.பாளை சிறைக்கு சகாக்களை பார்க்க போனப்ப கம்முனு வந்திருக்கலாம்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,அ.தி.மு.க வினரை அரெஸ்ட் செய்வோம்னு சொன்னாரு...சொல்லி 24 மணி நேரத்துல நேரு கைது,அழகிரிக்கு குற்றப்பத்திரிக்கை...ம்..நடக்கட்டும்...அழகிரிக்கு கலைஞர் செய்த ஒரே நல்ல விசயம்...அவரை எம்.பி..ஆக்குனதுதான்..இல்லைன்னா எப்பவோ விடியக்காலை 3 மணிக்கு மதுரை போலீஸ் தூக்கியிருக்கும்.
கலைஞர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர்தான்னு ஒத்துக்குறேன்..
--------------------------------