ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜனவரி, 2012

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..? அரசியல் ஜோதிடம்

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..?


astrology;ஜோதிடம் முதலில் மன்னன் தன் எதிர்காலத்தை அறியவே பெரும்பாடுபட்டது.அதன்பின் தான் சாதாரண மக்களுக்கு பயன்பட தொடங்கியது.மன்னன் ஆகுபவர் யார் என்பதை முதலில் அடிப்படையாக கணித்து வைத்திருந்தால்தானே மன்னன் தன் எந்த வாரிசை இளவரசனாக அறிவிக்கலாம் என முடிவெடுக்க முடியும்..? அதை ஜோதிடர்கள்சரியாக கணித்து வைத்திருந்தார்கள்,அரசி கர்ப்பம் தரிக்கும் காலம் முதல் குழந்தை பிறக்கும் காலம் வரை ஜோதிடர்களே நாள் நிர்ணயித்தனர்.அவர்களுக்கு வாரிசு தேவை.அதற்காகவே பல பெண்களை மணந்தனர்.மன்னன் வாரிசை பெற்ரெடுக்கும் ராணியை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் பெரும்பாலும் ஒவ்வொரு அரசனுக்கும்,இரண்டு,மூணு என ராணிகள் அதிகரித்தனர்.அப்போதைய மன்னன் யார் என்ற கணிதம் இன்று எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் யோகம் யாருக்கு என்பதை கண்டறியவும் உதவுகிறது.

மன்னன் ஆகும் ஜாதகம் எது என பார்த்தால் இது சுலபமாக புரிந்துவிடும்.ஆட்சி அதிகாரம் கையில் கிடைக்க வேண்டுமெனில்,எந்தெந்த கிரகம் பலம் பெற வேண்டும்..? எந்த லக்னத்தார் அமைச்சர்,ஆட்சி பொறுப்பேற்கின்றனர் என பார்ப்போம்.

அரசியலில் ஜொலிக்க வைக்கும் லக்னங்கள்;மேசம்,கடகம்,துலாம்,மகரம்.

அரசியல் கிரகங்கள்;குரு,சூரியன்,செவ்வாய்

மேசம்..செவ்வாய் ஆட்சி பெறும் லக்னம்,சூரியன் உச்சம் பெறும் லக்னம்,கடகம் குரு உச்சம் பெறும் லக்னம்,துலாம் ஜனவசியம் தரும்,சனி உச்சம் பெறும் லக்னம்.மகரம் ...முப்படைகளின் தளபதி,எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கச்செய்யும் செவ்வாய் உச்சம் பெறும் லகன்ம்.....ஆகவே தான் மன்னன் ஆகும் தகுதி கிடைக்க இந்த லக்னத்தில் பிறக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்,இந்திராகாந்தி, முதலமைச்சர் ஜெயலலிதா,கருணாநிதி,விஜயகாந்த் ,ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதால் அரசியலில் பிரகசிக்க முடிந்தது.இன்று திடீர் அமைச்சர் ஆகும் யோகம் பெற்றவர்கள் முதல் அன்று தி.மு.க ஆட்சிக்கு எப்போ வந்தாலும் இவர்தான் அமைச்சர் என குத்தகைக்கு எடுத்தவர்கள் வரையிலுமான அனைவர் ஜாதகத்திலும் இந்த அமைப்பு நிச்சயம் இருக்கும்!!

செவ்வாய், 29 நவம்பர், 2011

ஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்

ஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம்,ஆன்மீகம்,எண் கணிதம் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.அரசியல் ரீதியாக கட்சி ரீதியாக ஒவ்வொரு செயல்பாட்டையும்,  ஜோதிட கணித அடிப்படையில் கணக்கிட்டுத் தான் அமைத்துக் கொள்வார்.இது அனைவரும் அறிந்த உண்மைதான்.அவர் நியூமராலஜி நம்பிக்கையும் எப்போதும் கொண்டிருக்கிறார் என்பதையும் தினமலர் அவ்வப்போது சுட்டிக் காட்டும்.

எண்கணிதம் பற்றி விஜய் டிவியில் நீயா நானா வில் கிண்டல் அடித்து ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதில் பலர் மன பலவீனர்களாக நியூமராலஜி நம்பிக்கையாளர்களை கிண்டல் செய்தனர்.அப்படி பார்த்தால் தமிழ்க முதல்வர் ஜெயலலிதாவின் நியூமராலஜி நம்பிக்கையை என்னவென்று சொல்வது..?அவர் எந்த நம்பிக்கையில் அதை செய்கிறார்..? கருணாநிதி குடும்பத்தார் திருப்பதி செல்வதும்,சாமியார்களை சந்திப்பதும்,பரிகாரம் செய்வதும்,கனிமொழி விடுதலை ஆக வசந்தி ஸ்டான்லி எனும் தி.மு.க எம்.பி மொட்டை அடித்து கொண்டதும் எதற்காக..? விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நியூமராலஜி நிகழ்ச்சி மூலம் எண்கணித ஜோதிடம் இன்னும் பிரபலமடைகிறது.இதை பற்றி அறியாதவர்களும் அறிந்து கொண்டனர்.என்னை போன்ற நியூமரலஜிஸ்ட் களுக்கு இதில் சந்தோசமே.அதில் நியூமராலஜிக்கு ஆதரவாக வாதிட்டவர்களுக்கு எனது நன்றி.

நியூமராலஜி,ஜோதிடம்,கடவுள் எல்லாம் உண்மையே.நம்பிக்கை உள்ளோருக்கு நன்மை நடந்து கொண்டே இருக்கிறது.கடவுள் மறுப்பாளர்களில் பெரியாரை பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வூட்டிய தலைவர் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அவர் கடவுள் மறுப்பு கொள்கையால் தமிழ்கத்திலும் இந்தியாவிலும் கடவுள் வழிபாட்டை நிறுத்திவிட்டார்களா..? மாறாக பல ஆயிரம் மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பெரியாருக்கு பின் கடவுள் மறுப்பாளர்கள் யாரும் பிரபல முடியவில்லை என்பது வேறு விசயம்.

 15.11.2011 சனி பெயர்ச்சிக்கு பின் பெங்களூர் சென்று முழுமையாக வழக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.காரணம் அவரது ராசியான சிம்மத்திற்கு ஏழரை சனி முழுவதுமாக விலகி இருந்தது.சனி பெயர்ச்சிக்கு பின் தான் பஸ் கட்டணத்தை பால் விலை உயர்வை அறிவித்தார்.காரணம் ஏழரை சனி முடிந்தால் தனக்கு .எதிர்ப்புகள் கடுமையாக இருக்காது என்பதற்காக.

ஜெயலலிதா நினைத்தால் கருணாநிதி போல கட்டணத்தை உயர்த்தாமல் காலம் தள்ள முடியும்.ஆனால் பல முறை டீசல் விலை உயர்வுக்கு பின் எல்லா விலை வாசியும் பொருளாதாரத்துக்கு தகுந்தாற்போல உயர்ந்திருக்கும்போது பஸ் கட்டணம் உயரவில்லை எனில் அது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல.வரும் 1 ஆம் தேதி முதல் பீர் விலை பிராந்தி விலை எல்லாம் 100 ரூபாயாம்.இதுக்கு எதிர்ப்பே இருக்காதே.தமிழக அரசின் நிதி நிலை உயர்ந்தால்தான் இந்த அரசு மக்கள் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும்.

ஜெயலலிதா ராசி எண் 7;

கடந்த 91-96 ஆம் ஆண்டுகளில் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின் 9 ஆம் எண் அவரது ராசி எண்ணாக இருந்தது.தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 160 பேர் இடம்பெற்றனர்.ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற தேதி 16.முதல்வரான பின்,7 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அமைச்சர்வையில் இடம் பெற்றவ்ர்கள் 34 பேர்.இவ்வளவு ஏன் நேற்று அ.தி.மு.க வில் பா.ம.க,தி.மு.க,தே.மு.தி.க வினர் பலர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.மொத்தம் எத்தனை பேர் தெரியுமா.12,130 கூட்டு எண் 7.எம்.ஜி.ஆர் வாழ்வில் பல திருப்பங்களை தந்தது இந்த 7 ஆம் எண் தான்.அதனால் ஜெயலலிதா வும் அதை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கிறேன்.ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் மகம்.அதன் அதிபதி கேது.7 ஆம் எண்ணின் அதிபதி கேது.அதனாலும் இவர் 7 ஆம் எண்ணை பயன்படுத்தலாம்...ராசியான நிறம் பச்சை பயன்படுத்தி வந்தவர் இப்போது மெரூன் கலரும் பயன்படுத்துகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கென சென்னையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இப்பஸ்களின் துவக்க விழா இன்று நடந்தது. விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பஸ்களை துவக்கி வைத்தார். இப்பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென 7 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும், ஹைட்ராலிக் முறையில் அவர்கள் பஸ்சினுள் செல்ல சிறப்பு வழியும் அமைக்கப்பட்டுள்ளது.


ஊனமுற்றோருக்கு சிறப்பு பஸ் அறிவிப்பை பார்த்தால் இது சனி பகவானுக்கான பரிகாரம் தான்.என்பது புரியும்.மாற்று திறனாளிகளுக்கு நல்லது செய்யும் முதல்வருக்கு நன்றி.


எம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த 7ஆம் எண் பற்றி படிக்க;


செவ்வாய், 22 நவம்பர், 2011

எம்.ஜி.ஆர் பாலிடிக்ஸ்

ரிப்போர்ட்டர் வார இதழ் 27.11.2011

தமிழக அரசு பெரிய நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் மத்திய அரசு எந்த உதவியும் செய்யாதது முதலவரை ரொம்பவே கோபப்படுத்தியதாக சொல்கிறார்கள்.எனவே எம்.ஜி.ஆர் பாணியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறதாம்..

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அரிசி விலையை மத்திய அரசு உயர்த்தியது.இதனை குறைக்க கோரி எம்.ஜி.ஆர் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்.அன்றைய தினம் தமிழ்கம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு இருந்தது.பஸ்,ஆட்டோக்கள் ஓடாத நிலையிலும் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.இதே போல ஒரு போராட்டத்தை நடத்தினால் தமிழ்க அரசை தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருவதை மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறுகிறார்களாம்’’

அதோடு இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் அல்லாத முதல்வர்களை அணி திரட்டவும் முதல்வர் திட்டம் வைத்திருக்கிறாராம்.அவர்களை அழைத்து சென்னையில் மாநாடு நடத்தவும் திட்டம் இருக்கிறதாம்.


வியாழன், 17 நவம்பர், 2011

எம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை

எம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை


எம்.ஜி.ஆர் தி.மு.க வை விட்டு பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கினார்.அவர் பிரிந்து சென்ற பின் எம்.ஜி.ஆர் எனும் மகா சக்திக்கு முன்னால் அரசியல் செய்ய முடியாமல் தவித்த கதையும்,எம்,ஜி,ஆர் மறைவுக்கு பின்னரே அவரால் மறுபடி ஆட்சியை பிடிக்க முடிந்ததும் நாடே அறியும்.எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தபோது கருணாநிதி அவருக்கு எதிராக செய்த அரசியல் சிறிதும் நாகரீகமில்லாதவை.தன் கட்சி பேச்சாளர்கள் எம்.ஜி.ஆரை குழந்தை பெற முடியாதவர்,அட்டைக்கத்தி வீரன்,மலையாளி என கேவலபடுத்திய போதெல்லாம் அதை தடுக்காமல் ரசித்தவர்.இவரே அதைவிட மோசமாக பேசியும் இருக்கிறார்.தன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆர் போல வேசம் அணிய செய்து நடிக்க வைத்தால் எம்.ஜி.ஆர் செல்வாக்கை குலைத்து விடலாம் என்றெல்லாம் நினைத்தார் என்றால் எந்தளவு எம்.ஜி.ஆரை கண்டு நடுங்கியிருப்பார்..?

இந்திய மாநிலங்கள் சட்டசபை களை 90க்கும் மேற்பட்ட முறை பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்டுள்ளது.அவற்றில் 66 முறை இந்திராகாந்தியே கலைத்தார்.எம்.ஜி.ஆர் முதன்முறையாக முதல்வர் பொறுப்பேற்ற 1977 முதல் ஆட்சி செய்த்போது இந்திரா துணையுடன் கருணாநிதி எம்ஜி.ஆர் ஆட்சியை 79ல் கலைத்தார்.சட்டம் ஒழுங்கு காரணம் சொல்லப்பட்டது.பாராளும்னற தேர்தலில் வெற்றி பெற்ற மிதப்பில் கருணாநிதி இந்த தவறை செய்தார்.ஆனால் எம்.ஜி.ஆர் மீது அனுதாப அலை வீசி இரண்டாம் முறையாக அவரே மீண்டும் முதல்வர் ஆனார்.

80 முதல் 84 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் பாராளுமன்ற தேர்தல் வருவதால் இரண்டு தேர்தலையும் ஒன்றாக நடத்த முடிவு செய்து,ராஜினாமா செய்தார்.இதனால் பாராளும்னற தேர்தலிலும் சட்ட சபை தேர்தலிலும் அவரே அமோக வெற்றி பெற்றார்.காங்கிரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்து மத்தியில் ஆட்சி அமைக்க உதவி செய்தார்.

84 முதல் 87  வரை பெரும்பாலும் உடல்நலக்குறைவால் அவதிபட்ட எம்.ஜி.ஆர் ஜனவரியில் மறைந்தபோது,ஜா அணி,ஜெ அணி என அ.தி.மு.க பிளவுபட்டு ,சோதனைகளை சந்தித்தது.

இடையில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் கருணாநிதி கட்சியை சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது.அந்தளவு போராட்டம்,ஆர்ப்பாட்டம் என கருணாநிதி எத்தனையோ இடைஞ்சல்களை கொடுத்தார்.எம்.ஜி.ஆர் அவரை சிறையில் அடைத்தும் பார்த்தார்.ஆனாலும் கருணாநிதியை அவர் மரியாதை குறைவாக பேசியதில்லை.அவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்.அதனால்தான் அவர் மக்கள் தலைவராக இன்றளவும் புகழப்படுகிறார்.

பொதுவாக சொல்வார்கள்.இன்றைக்கு ஜெயலலிதா பஸ் கட்டணத்தை உயர்த்தியபின் சொல்ல தோன்றுகிறது.ஜெயலலிதா டாக்டர் மாதிரி.தமிழ்நாடு குடிகாரன் மாதிரி.குடிகாரனை திருத்த ஜெயலலிதா எனும் முதல்வர் கசப்பு மருந்தும்,ஊசியும் போட்டு குணப்படுத்த நினைப்பார்.ஆனால் கருணாநிதி இலவச திட்டம்,சம்பள உயர்வு என குடிகாரனுக்கு சாராயத்தை ஊத்திகொடுத்து அவனை சுய நினைவு இல்லாமலே வைத்திருப்பார்.டாக்டர் நோயாளியை பாதி குணமாக்கி வைத்தால் ,கூடா நட்பு அதை முழுவதுமாக கெடுத்துவிடுகிறது.சென்ற முறை தமிழ்க அரசின் பாதிக்கடனை அடைத்தார்.அடுத்த முறை வந்த கருணாநிதி இன்று பல ஆயிரம் கோடி கடனை தமிழ்க அரசு தலையில் கட்டி விட்டு போயிருக்கிறார்.அதை க்சப்பு மருந்து கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய வேண்டும்.ஜெ.நல்ல நிர்வாகத்தை கொண்டு வர அந்த கசப்பு மருந்தைதான் மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.

புதன், 12 அக்டோபர், 2011

ஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்

ஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்;


உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கணிப்பு என்பதை விட தமிழ்க முதல்வர் ஜெயலலிதா மிக சிறந்த ஜோதிட ஆர்வலர்.அவர் விஜயகாந்தை கழட்டி விடும்போதே புரிந்து போனது..குரு வக்ரத்தில் மரியாதை,கெளரவம்,தயாள குணம் எல்லாம் கெட்டு போகும் காலம் இது .எனவே அ.தி.மு.க தலைவர் இப்படி நடந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.

குரு வகரம்னா என்ன..? குரு வின் கடும்கோபம்.சூரியனின் உக்கிர பார்வையில் இப்போது குரு இருப்பதால் குரு கடும் கோபத்தில் இருக்கிறார்.இது டிசம்பர் 26 வரை காணப்படும்.இதனால் குருவின் இயல்பான குணங்களான தாராளம்,தர்ம சிந்தனை,தெய்வீக பண்பு,ஆகியவை கெட்டு விடுகிறது.உலகில் குரு ஆதிக்கம் செலுத்தும் காரகத்துவங்களும் பாதிக்கப்படும்.

ஜெயலலிதா அவர்களின் சிம்ம ராசிக்கு குரு பாதகமானாலும் (இப்போதைய நிலைபடி) அவருடைய லக்கினமாகிய மிதுனத்திற்கு குரு கெட்டவன் என்பதால் ,கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அடிப்படையில் டிசம்பர் 26 வரை அவர் நினைத்ததை நடத்தி தர வேண்டுமே...? அந்த வகையில் தன் வெற்றி இமாலய வெற்றியாகத்தான் இருக்கும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகராட்சி,பேரூராட்சி,மாநகராட்சியையும் கைப்பற்றியே தீருவோம் என அவர் நம்புகிறார் ....

சனி, 3 செப்டம்பர், 2011

சன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்

அரசு கேபிள் எனும் முகமூடி அணிந்து சண்டிவியை துடைத்து எறிந்துவிட்டார் ஜெயலலிதா.அரசு கேபிள் என்பதே சண்டிவியை ஒழிக்கத்தானோ என தோன்றுகிறது.விஜய் டிவி,ராஜ்டிவி,சன் குழுமம் அனைத்தும் பே சேனல் ஆக்கப்பட்டதில்,இப்போது அவை அனைத்தும் அரசு கேபிளில் மிஸ்ஸிங்.ஒரு நாள் நாதஸ்வரம்,அரசி பார்க்கலைன்னா நம்ம வீட்டு பெண்களுக்கு இடி விழுந்தா மாதிரி சோகமா இருப்பாங்க..இதுல இனிமே அது எதுவும் கிடையாதுன்னா சுத்தம்.நேத்தே ரிசல்ட் தெரிஞ்சிருச்சு.டிஷ் இருக்கும் வீடுகளுக்கு சென்று நாதஸ்வரம் பார்த்துவிட்டு வந்தார்கள்..காலையில் வசூலுக்கு வந்த கேபிள் காரனை எப்போ சன் டிவி வரும் என துளைத்து எடுத்தார்கள்.இதைத்தான் சன் டிவி எதிர்பார்க்கிறது...சன் இல்லாமல் கேபிள் இல்லை...அப்படி வேணும்னா இவ்வளவு கொடுன்னு கேட்பார்கள்.


.சரி சன் டிவிக்கு நஷ்டம் வராதா..இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்துதான் டிஷ் ஆண்டனா சிஸ்டத்துக்கு மாறினார்கள்.ஒரு ஊரில் குறைந்த பட்சம் 500 டிஷ்களாகவாது இருக்கும் ஏற்கனவே கேபிள் குறைந்து,டிஷ் அதிகமாகிவிட்ட காலத்தில் அரசு கேபிள் மூலம் முற்றிலும் கேபிள் தொழிலை சன் வசம் ஒப்படைக்கபோகிறார் ஜெ..எப்படி தெரியுமா.ஒரு வாரம் சன் இல்லாமல் புலம்பும் மக்கள் 2000 போனா போகுது.ஒரு சன் டிஷ் வாங்கலாம் என முடிவெடுத்தால் தீர்ந்தது கதை..ஏழை எளிய மக்கள்,சேமிப்பு இந்த ஜல்லியெல்லாம் சன் சீரியல் முன்னால் எடுபடாது..50 ரூபா மிச்சத்துக்கு வருசம் பூரா ஜெயா டிவியே பார்க்க முடியுமா என கொதிப்பார்கள்..

அரசு கேபிள் மூலம் சன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினால்,முன்பு இருந்ததை கட்டணத்தை இரு மடங்காக்குவார்கள்.பேச்சுவார்த்தைக்கே வர மாட்டார்கள்.இனி ஒயர் மூலம் டிவி பார்க்கும் வழக்கம் குறையும்.டிஷ் வேகமாக பரவுகிறது.அரசு கேபிள் எனும் ஓட்டை பஸ்ஸை செட்டில் போட்டுவிட்டு,அரசு டிஷ் கொண்டு வந்தால் இன்னும் நல்லது.கேபிள் காரர்கள் நலனை பார்த்தால் சன் டிவி கொள்ளையை நிறுத்த முடியாது..இதே அரசு கேபிள் இன்னும் ஒரு மாதம் சன் டிவி இல்லாமல் தொடர்ந்தால் கேபிள் காரர்களே போராட்டம் நடத்துவார்கள்.ஆமாம் வாடிக்கையாளர்கள் எல்லாம் டிஷ்க்கு மாறினால்..அவர்கள் என்ன செய்வார்கள்..? டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்தாலும் பரவாயில்லை..விளம்பரம் குறைந்தாலும் பரவாயில்லை..டிஷ் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு கேபிள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் சன் சண்டித்தனம் செய்யும்.சன்..ஜெயா மோதல் சன்னுக்கு லாபமாக போகிறது..

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..?



ஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..?


ஜெயலலிதா ஜாதகப்படி அவர் எதிர்காலம் எப்படி இருக்கும்..?அவர் ராசி நிலை எப்படி..?என்பது பற்றி அறிய விரும்பினேன்...ஒரு நண்பர் மூலமாக அவரது ஜாதக குறிப்பு கிடைத்தது.
 

ஜெயலலிதா பிறந்ததேதி;24.2.1948


பிறந்த நேரம்;1.30 மாலை.
இவரது நட்சத்திரம் ;மகம்
ராசி;சிம்மம்
 

மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவார் என்ற ஜோதிட பழமொழி..இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவருக்கு நன்றாகவே
பொருந்துகிறது....இரண்டு முறை தமிழக முதல்வராக இருந்தவர் அல்லவா..?
மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பில்லை.
ஆனால் பொது வாழ்வு,மக்கள் தொண்டு மிக சிறப்பாக அமைந்துவிடுகிறது.
 

இவர்களது பலவீனம்;முன்கோபம்,பிடிவாதம்.
 

அறிவாற்றலை பொறுத்தவறை நிறைய உலக ஞானம் உண்டு.
 

மகம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் வாழ்வில் போராட்டம் நிகழ்த்தி,கசப்பானஅனுபவங்களை தந்து,வாழ்க்கை பற்றிய புரிதல்களை தரும் கிரகம் கேது.
 

சிம்மம் ராசி அதிபதி சூரியன்..நெருப்பு போல சுட்டெரிக்கும் கோபத்துக்கு இவரே காரணம்.
 

சிம்மம் என்றால் சிங்கம்..அதனால் யாரும் இவர்களை நெருங்க முடியாது..துணிச்சலும்,தன்னம்பிக்கையும் மிக அதிகம்...
சிறை சென்றாலும்,முகத்தில் ஒரு கம்பீரம் இருக்கும்..’’அய்யோ’’ என அலற மாட்டார்கள்.
மகம் நட்சத்திரம்,சிம்மம் ராசிக்கும் இதுவரை ஏழரை சனி நடந்து வந்தது..சாதராண மனிதர்கள் சிம்ம ராசியாக இருந்தால்,கடந்த 5 ஆண்டுகளில் பட்ட துன்பத்திற்கு மரணமே தேவலாம் என்ற நிலைக்கு வந்திருப்பார்கள்.அந்தளவு துன்பத்தை சிம்ம ராசிக்கு ஏழரை சனி கொடுத்து இருக்கிறார்.
 

என் வாடிக்கையாளர்கள் சிம்ம ராசிக்காரர்கள் ,இந்த காலகட்டத்தில்,பலர் தொழில் இழந்து,வருமானம் இழந்து,குடும்பத்தில் நிம்மதி இழந்து தவித்து,கண்ணீர் விட்டதை நான் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறேன்..அந்த வகையில் ஜெயலலிதா ஆட்சியை இழந்து,தன் சொந்த கட்சிக்காரர்கள் அணி மாறுவதை கண்டு,உடல் நலம் ஆரோக்கியம் குன்றியும்,செல்வாக்கு குறைந்தும் துன்பப்பட்டதை ..பார்த்தோம்,கேள்விப்பட்டோம்.
ஆனால் இந்த நிலை,வரும் மே8 ஆம் தேதியுடன் மாறுகிறது..ஆம் குருப்பெயர்ச்சி சிறப்புடன் இவர் ராசிக்கு சாதகமாக உள்ளது...சிம்ம ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் மாறும் குரு,சகல பாக்கியங்களையும் அள்ளித்தருவார் என்பதில் சந்தேகமில்லை.
பாக்கியஸ்தானம் என்றாலே அது தெய்வஸ்தானம் மற்றும் பித்ருக்களின் ஆசி என்றுதான் பொருள்...தன் முயற்சிக்கு தெய்வம்,முன்னோர்கள்
துணை நிற்பார்கள்..இதனால் வெற்றி இவர்களுக்கு சுலபம்.
இதுவரை எண்ணி வந்த காரியங்கள் இவருக்கு கைகூடும் நாள் நெருங்கி விட்டது.
இதுவரை துன்பப்படுத்திய ஏழரை சனியும் வரும் ஐப்பசி மாதத்துடன் முடிகிறது..சனிபகவான் செல்லும்போது ஏதாவது நன்மையை செய்வார் என்ற முறையில்,
பெரிய அளவில் இவருக்கு நன்மைகள் கிடைக்கும்.
இதுவரை இவரை சூழ்ந்த எதிரிகளின் சூழ்ச்சி வலையில்,அவர்களே மாட்டிக்கொள்வார்கள்.
 

இழந்த செல்வாக்கு ,புகழ் மென்மேலும் வளரும்.
 

இவரது ஜாதகத்தில் குருச்சந்திர யோகம் உண்டு..குரு ஒன்பதாம் பார்வையாக சந்திரனைபார்வையிடுகிறார்..தற்சமயம் சந்திர புக்தி நடக்கிறது..அரசியல் கிரகம் செவ்வாயுடன் இணைந்திருக்கும்,சந்திரனை குரு பார்க்கிறார்..குரு,சந்திரன்,செவ்வாய்..மூன்று தெய்வீக கிரகங்களும் இணையும் ஸ்தானத்தில் ,அக்கிரகங்களில் ஒன்றின் திசா புக்தியில் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பது விதி.
ராகுதிசை நடக்கிறது.ராகுவைப்போல கொடுப்பார் இல்லை என்பார்கள்.அதன் அடிப்படையிலும்,ராகுவையும் குரு பார்க்கிறார்
என்ற அடிப்படையிலும் இவர் நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலகட்டம் இது.
ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் குரு தனித்து நின்றதாலும் ராசிக்கு ஏழாம் வீடு சனி வீடு என்பதாலும் குடும்பம் இவருக்கு அமையவில்லை..இவரே தோழியராக சசிகலாவை,தன்னுடன் தங்க வைத்து அவர் குடும்பத்துக்கு ஆதரவு அளித்தாலும் அவர்கள் மூலம் இவருக்கு பிரச்சனை வரும் என்பதும் இவர்ஜாதகம் சொல்கிறது...இவருக்கு சுக்கிரன் உச்சம் என்பதால்தான் சினிமாத்துறையில் புகழ் பெற்று இருந்தார்..முக ராசியால் மக்களை கவர்ந்தார்...ஆடம்பரமாக வாழ்கிறார்...ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓட்டு கேட்கிறார் என்றால் உச்சம் பெற்ற சுக்கிரனே காரணம் ஆகும்...
வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் உறுதியான பேச்சு..எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய ,நடுங்க செய்யும் குரல்,இரண்டில் உள்ள சனி தருகிறது..ஆனால் அதுவே இவரது பலவீனத்துக்கும் காரணமாகிறது...சனி சந்திரன் வீட்டில் இருப்பதால் அலட்சியம் மிக அதிகம்..மனக்குழப்பத்தால் முக்கிய நேரங்களில் பெரிய வாய்ப்புகளை இழந்து விடும் ஆபத்தும் உண்டு.


சூரியன்,புதன் இணைந்து நின்று...நிபுணத்துவ யோகம் தருகிறார்கள்..எதிலும் ஆய்வு செய்தே இறங்குவார்....இவர் என்ன செய்யப்போகிறாரோ என எதிரிகளை தினசரி தூங்க விடாமல் அச்சம் கொள்ள செய்வார்.

பத்தில் சுக்கிரன்..இவரது லக்கினத்துக்கு யோகாதிபதி சுக்கிரன் பத்தில் நின்றதால் உச்சம் பெற்றதால் ,இவர் ஆட்சி புரியும் காலம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்..கலைத்துறைக்கு முன்னேற்றம்,வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

எட்டு,ஒன்பதாம் அதிபதி சனி இரண்டில் நின்று..இரண்டுக்கு உடையவன் மூன்றில் நிற்பதால் தான் கோடிக்கணக்கான தன் கட்சித்தொண்டர்களை தைரியமுடன்,உற்சாகத்துடன் வைத்திருக்க முடிகிறது...மக்கள் இவர் குரல் கேட்டதும் புத்துணர்ச்சி அடைகின்றனர்...ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாலும்,தலைக்கனம் பிடித்தவர் என்றேண்ணி இருப்பவர்களும் ஓடி வந்து இவர் பேச்சை கேட்கின்றனர்.இதற்கு சனி புதன் சாரம் பெற்றதும் ஒரு காரணம்.

ராகு திசை முடிந்து குரு திசை வரும் காலம்...இவர் இன்னும் பக்குவப்படுவார்.....


ஜெயலலிதா ஜாதகப்படி குரு ராசிக்கு ஒன்பதாம் இடத்தை அடையும் நாள்;மே-8