வியாழன், 19 டிசம்பர், 2013

கொழுப்பு சம்பந்தமான நோய்களை தீர்ப்பது எப்படி? health

இப்போ எல்லாம் டாக்டர்கள் ,தேங்காய் சட்னி சாப்பிடாதீங்க..தேங்காயை உணவில் சேர்த்துக்காதீங்க..கொழுப்பு என்கிறார்கள்...இது ஒரு செம காமெடி..தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு..கோயில்களில் பிரசாதமாக தேங்காயும் பழமும் கொடுக்கிறார்கள்...கெட்ட கொழுப்பு பொருளை கடவுள் பிரசாதமாக தரும் அளவுக்கு நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல...

தேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து தாது பொருட்களும் இருக்கின்றன....பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் பனங்கருப்பட்டியையும் ,தேங்காய்ப்பாலையும் தான் வைத்தியர்கள் கொடுப்பார்கள்..சுக்கு ,கருப்பட்டி சேர்ந்த அந்த கலவை மற்றும் தேங்காயை பிழிந்து எடுக்கப்பட்ட பாலுக்கு எந்த நோயையும் முறித்து குணமாக்கும் சக்தி உண்டு....அஜீரணம்தான் அனைத்து நோய்களுக்கும்
அடிப்படை...தேங்காய் அதை இல்லாமல் செய்வதால்தான் சமையலில் அது இல்லாமல் எந்த உணவும் தமிழர் உணவில் இல்லை.....

தேங்காய் கெட்ட கொழுப்பு அல்ல..நல்ல கொழுப்பு..மிருகங்களில் இருக்கும் கொழுப்பும் தேங்காயில் இருக்கும் கொழுப்பும் ஒன்றல்ல...உலகில் சுத்தமான நீர் தேங்காயில் இருக்கும் நீர்தான்..முன்பெல்லாம் சாககிடக்கும் தாத்தா,பாட்டிகளுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து பிழைக்க வைப்பார்கள்..இப்போது எல்லாம் மாட்டுப்பால் கொடுத்து சாகடிக்கிறார்கள்....தேங்காய் அதிகம் சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும் என்பதே உண்மை..!!

புதன், 18 டிசம்பர், 2013

கல்யாணம் சீக்கிரம் நடக்க எந்த கோயில் போகலாம்..? ஜோதிட பரிகாரம்

கல்யாணம் ஆகலையா...உடனே திருமனஞ்சேரி போயிட்டு வராங்க..நாக தோசம் இருக்குன்னா காளஹஸ்தி போறாங்க..அதெல்லாம் சரி....ஆனா இன்னும் நுணுக்கமான திருமண தடை நீக்கும் பரிகாரம் இருக்கு...முருகன் மனைவியுடன் இருக்கும் பழைய கோயிலில் வழிபடுங்க...அப்புறம் அகத்தியர் சிவபெருமானை கல்யாண கோலத்தில் தரிசனம் செய்த பழமையான கோயில்கள் மாவட்டம் தோறும் இருக்கு அங்க போயிட்டு வாங்க...குறிப்பா ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர்..ரொம்ப விசேஷம்..காவிரி கரையில் தீர்த்த கிணருகள் சூழ மும்மூர்த்திகளும் அருளும் ஸ்தலம்..அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தர் பாடிய ஸ்தலம்..பல மன்னர்கள் கோயிலை புதுப்பிச்சிருக்காங்க..காசிக்கு நிகரானது...

சனீஸ்வரர் காகம் மேல் உட்கார்ந்திருப்பது இந்தியாவில் இங்கு மட்டும்தான்..!! மகுடேஸ்வரர் என்பதால் இந்த சிவனிடம் நிறைய சூட்சுமங்கல் இருக்கின்றன..வேலை பறிபோனவர்கலும் இங்கு வழிபட்டால் மகுடம் மீண்டும் சூடப்படுவார்கள்...3000 வருடம் பழமையன வன்னி மரத்தின் கீழ் பிரம்மா இருக்கிறார் ரோகிணி நட்சத்திரம் ரிசப ராசியினர் வழிபட எல்லா பிரச்சினையும் தீரும் வெள்ளைத்தாமரை வைத்து 27 நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்...ஸ்ரீரெங்கம் பெருமாள் போல சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட சம்சார வாழ்வின் சோதனைகள் விலகும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..

ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் சனி அல்லது சூரியன் என கடுமையான தோசம் இருப்பவர்கள் பவானி கூடுதுறையில் சிறப்பு பரிகாரம் செய்த பின் கொடுமுடி செல்வதே நல்லது...பரிகாரம் செய்தாலும் செய்பவர் ராசியான அய்யராக இருக்கனும் உங்க நட்சத்திரத்துக்கு தாரபலன் இருக்கும் நாளாக இருக்கனும்...பரிகாரம் செய்தவர் பல கல்யாணங்களை நடத்தி வைத்தவராக இருக்கனும்..உங்க ஜாதகப்படி இப்போ திசாபுத்தி தடையில்லாம இருக்கனும்...அதுக்கு விளக்கமாக தெரிஞ்சிக்க என் மெயிலுக்கு எழுதுங்க..விரிவா சொல்றேன்...பரிகாரம் செய்வதாக இருந்தா மட்டும் எழுதவும் sathishastro77@gmail.com


சனி, 7 டிசம்பர், 2013

ஃபேஸ்புக் ஜோதிடம் facebook astrology

ஃபேஸ்புக்கில் நான் எழுதிய ஜோதிட குறிப்புகள்;

எனது ஃபேஸ்புக் ஐடி...சதீஷ்குமார்ஜோதிடர்

நடப்பு டிசம்பர் கடைசியில் வால் நட்சத்திரம் தோன்ற போகிறது இது 60,70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அதிசயம்...வால் நட்சத்திரம் தோன்றினால் நாட்டின் அரசியல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்ற நம்பிக்கை பல முறை நிஜமாகி இருக்கிறது...லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் வால் நட்சத்திரம் தோன்றிய காலம்தாம்..மூத்த அரசியல் வாதிகளில் தென்னகத்தை சேர்ந்தவர்கள்,மற்றும் தேசிய அரசியல் தலைவர்களில் ஒரு சிலருக்கு இது கண்டமான காலம் என சொல்லலாம்...இன்னும் சில குறிப்புகள் நாளை மற்றும்,திங்கள்கிழமை விரிவாக பார்ப்போம்

 உங்கள் ஜென்ம நட்சத்திரத்துக்கு யோகமான நட்சத்திர காலில் நின்று திசை ஜாதகத்தில் நடப்பவர்கள்தான் வேகமான முன்னேற்றத்தை அடைகிறார்கள்..மிதுன லக்னம்..குரு பாவி ஆச்சே...குரு திசை நடக்குது..உனக்கு மரண கண்டம் வாசல்ல நிற்குது..ன்னு ஒரு ஜோசியர் சொன்னார்..ன்னு ஒருவர் கலக்கமுடன் வந்தார்...பூசத்தில் நின்று குரு திசை நடக்குது..நீங்க வீடு கட்டுவீங்கன்னு சொன்னேன்...கண்டம் இல்லைன்னு சொன்னேன்...ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்னது..இன்னிக்கு பழத்தட்டுகளுடன் வந்து சந்தோசமாக நீங்க சொன்ன மாதிரியே நடந்துச்சி..வீடு கட்டிட்டேன் என்றார்...ஜாதகத்தில் கிரகம் எப்படி இருப்பினும் திசை யோகமாக இருந்தால் சிறப்பு...எம்.ஜி.ஆர்..ரஜினிக்கெல்லாம் யோகமான ஜாதகம்தான்..ஆனா 30 வயது வரை கஷ்டம்தான்..யோகமான திசை வந்தபின் தான் வேகமான முன்னேற்றம் அடைந்தார்கள்...

 கோயிலுக்கு போனால் நட்சத்திரம் பெயர் சொல்லிதான் அர்ச்சனை செய்து கொள்கிறோம் ஒரு ராசிக்கு மூன்று நட்சத்திரங்கள் வருவதால் ஜென்ம நட்சத்திரம் முக்கியம்..மிருகசிரீடமும் ரிசபம் ராசிதான்..ரோகிணியும் ரிசப ராசிதான் ஆனால் இருவருக்கும் வித்தியாசம் உண்டு..ஜென்ம நட்சத்திரம் அடிப்படையில் யோகமான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம்..இதைதான் நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்..ராமாயணத்தில் ராமரே தனது புனர்பூசம் நட்சத்திரத்துக்கு நல்ல நாள் தேர்ந்தெடுத்துதான் போரும் புரிந்திருக்கிறார்....இப்போது எல்லாம் முகூர்த்தம் வளர்பிறையில் அமைந்தால் போதும் என முடிவு செய்கிறார்கள்..ஜென்ம நட்சத்திரத்துக்கு அது உகந்ததாக இல்லாவிட்டால்தான் கஷ்டமும் நஷ்டமும் தான் வந்து சேரும்...!!

செவ்வாய், 26 நவம்பர், 2013

ஆவி,பேய் உண்மையா..? அதை கண்டறிவது எப்படி..? ghost story

அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டதி,ரேவதி இந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் ஒருவர் இறந்துவிட்டால் 6 மாதம் வரை பேயாக அலைவார்கள்...என் உறவினர் ..அவிட்டத்தில் இறந்தார்..அவர் இறந்து 6மாதத்தில் அந்த ஊரில் 10 பேரை 6 மாதத்தில் பயமுறுத்தி உயிரிழக்க செய்தார்..தன் பேரனையும் விட்டுவைக்கவில்லை..தாத்தா வர்றார் என்னைகூப்பிடுறார் என 8 வயது குழந்தை சொல்லிக்கொண்டே இறந்தது...அவர்கள் வீட்டு வேலைக்கார பெண்,இவர் ஆவி ரூபத்தில் வந்து பயமுறுத்துவதை தாங்க முடியாமல் தூக்கிலிட்டு கொண்டாள்..அவரது நெருங்கிய நண்பருக்கு அடிக்கடி காட்சி கொடுத்ததால் அவரும் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார்..தன் அப்பாவின் ஜிப்பாவை ஆசையாக அணிந்துகொண்ட மகனை விரட்டி விரட்டி மேலே ஏறி அமர்ந்து மூச்சுதிணறலை உண்டாக்கினார்..

தினமும் ஆவி ரூபத்தில் வீட்டுக்கு வந்து விடுவார் இவர் வருவதை சோதனை செய்ய வீட்டில் வாயிலில் மணல் பரப்பி வைத்தனர் அதில் லேசாக பாதமும் தெரிந்தது...சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் காலையில் அது குறைந்திருக்கும் .பூனைகள்,நாய்கள் தினமும் வீட்டை சுற்றி சுற்றி ஊளையிட்டன..அழுதன...

மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அக்காலத்தில் மீண்டும் இறந்தவர் வரக்கூடாது எனவும் மேலோகம் சென்றுவிடவேண்டும் எனவும் வீட்டு கூரையை பிரித்து அதன் வழியாக பிணத்தை வெளியேற்றி சுடுகாட்டுக்கு கொண்டு போவார்களாம்..சிலர் வீட்டுக்கு வரும் வாசல் மறக்கனும்னு சொல்லி வீட்டு பின்பக்க சுவரை உடைத்து அதன் வழியே கொண்டு செல்வார்களாம்..இப்போது 16ஆம் நாள் காரியம் மந்திரம் சொல்லி கெட்ட சக்தியை அடங்க்யிருக்கும்படி செய்வதால் பெரிய பாதிப்பு வருவதில்லை..எனினும் மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டிவிடுவது முடிந்தவரைக்கும் நல்லது!!

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி,6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். 
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். இதில் அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

உங்கள் ராசியும் அதற்க்குண்டான கோயிலும்;

உங்கள் ராசியும் அதற்க்குண்டான கோயிலும்;

மேசம்;ராமேஸ்வரம்
ரிசபம்;திருப்பதி
மிதுனம்;பழனி
கடகம்;ராமேஸ்வரம்
சிம்மம்;ஸ்ரீவாஞ்சியம்
கன்னி;திருக்கழுகுன்றம்
துலாம்;திருத்தணி
விருச்சிகம்;காஞ்சிபுரம்
தனுசு;மாயவரம்
மகரம்;சிதம்பரம்
கும்பம்;தேவிபட்டினம்
மீனம்;வைத்தீஸ்வரன் கோயில்

நீங்க பிறந்த நட்சத்திரம் வரும்போது இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க...நல்லது நடக்கும்!!