திங்கள், 9 பிப்ரவரி, 2015

நவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..? navagraha temple

நவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..?

1.சூரியன்;
 சூரியனார்  கோவில்;
இங்கு வந்து  முதலில்  நவக்கிரகங்களுக்கு அருள்  புரிந்த  திருமங்கலங்குடி  ஸ்ரீ பிராண  நாதேஸ்வரரை  வழிபட்டு   பின்பு  சூரியனார்  கோவில்  சென்று   கருவறையில்  சூரிய  சக்கரம்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.  சூரியனை  வழிபடுவதாலும்  இங்குள்ள  நவக்கிரகங்கள்  வழிபடுவதாலும்  அனைத்து  தோஷங்களும்  நீங்கப்  பெறுவர்.  ஞாயிறு  வழிபாடு  சிறப்பு.
வழித் தடம்;
கும்பகோணம்-  மயிலாடுதுறை  சாலையில்  ஆடுதுறையிலிருந்து  2 கி.மீ.   தூரத்தில் உள்ளது.
திருவலஞ்சுழி;
தஞ்சாவூர்  அருகிலுள்ள  திருவலஞ்சுழியில்   உள்ள  சுபர்தீஸ்வரர்  கோவிலில்   சூரியன்,  சனி  ஆகிய  இரண்டு  கிரகங்களும்  நேருக்கு நேர்  உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.   இங்கு  இருவரும்  நட்பு  நிலையில்  இருப்பதாக  சொல்கிறார்கள்   சூரியன்  மற்றும்  சனி   பகவானால்  ஜாதகத்தில்   தோஷம்  உள்ளவர்கள்  இத்திருக்கோவில்  சென்று  அர்ச்சனை  செய்தால்  தோஷம்   நிவர்த்தியாகும்.
சூரக்குடி;
சூரியனுக்கு  சாபம்  நீக்கி  அருள்  தந்த  சுந்தரேசர்  சன்னதி.  சூரிய,  சனி  தோஷங்களை  நீக்கும்  ஸ்தலம்.
வழித் தடம்;
குன்றக்குடி  கிழக்கே 12 கி.மீ.  தொலைவில்  உள்ளது.

2. சந்திரன்;
திங்களுர்;
தாய்க்குப்பீடை  நோய்,  மன நிலை  பாதிப்பு,  சந்திரன் ஜாதகத்தில்  நீசம்,  மறைவு,  பாப  கிரக  சேர்க்கை  உள்ளவர்  இங்குள்ள   கைலாச  நாதர்  கோவிலில்  உள்ள   சந்திரனை  வழிபடுவதால்  தோச  நிவர்த்தியாகும்.
வழித் தடம்
;    கும்பகோணம்-  திருவையாறு  சாலையில்  உள்ளது.

3.செவ்வாய்;
வைத்தீஸ்வரன்  கோவில்;
ஜாதகத்தில்  செவ்வாய்  பாதிப்பு,   திருமணத்தடை,  தொழில்  சிக்கல்,   வீடு,  மனை  வாங்க,  அடிக்கடி  விபத்து  போன்றவை  ஏற்பட்டாலும்,  செவ்வாய்  தெசை  நடைபெறும்   காலங்களிலும்   இங்கு  தனி  சன்னதியில்   உள்ள   செவ்வாய்க்கு  தீபம்  ஏற்ரி  தரிசனம்  செய்ய   எத்தகைய  கடுமையான  செவ்வாய்   தோசமும்  நீங்கும்
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து  14 கி.மீ.  தூரத்தில்  உள்ளது
பழநி-  திருவாவின்குடி;
செவ்வாய்க்கிழமை  மதியம்  உச்சிகால  பூஜையில் முருகனுக்குப்  பால்   அபிசேகம்  செய்து  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
திண்டுக்கல்லிருந்து   சுமார்  60 கி.மீ.  தூரத்திலுள்ள  பழனியில்  அடிவாரத்திலுள்ள  கோவில்.

4.  புதன்;
திருவெண்காடு;  குழந்தைகளுக்கு  கல்வியில்  ஆர்வமின்மை,  தடங்கல்கள் ஏற்படும் போது  இங்குள்ள   புதன்  வழிபட்ட  ஸ்ரீ  ஸ்வேதா  ரண்யேஸ்வரரையும்   தரிசித்து  பின்பு  அங்கு  எழுந்தருளியுள்ள  புதனையும்  வழிபட்டால்  தோசங்கள்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து    பூம்புகார்  சாலையிலுள்ளது.

5.குரு;   ஆலங்குடி;     திருமணத்தடை,  புத்ர  தோஷம்,  குடும்ப ஒற்றுமை  நிம்மதி  குறைவு,  ஜாதகத்தில்  குரு  தோஷம்  உள்ளவர்  வியாழக்கிழமை  இங்குள்ள  குரு  பகவானை  நெய் தீபம்  ஏற்றி,  வழிபடுவது  சிறந்த  பரிகாரமாகும்.
வழித் தடம்;
கும்பகோணம்-  மன்னார்குடி  சாலையில்  உள்ளது.
தென்குடி  திட்டை;   அருள் மிகு  வசிஷ்டேஸ்வரர்  திருக்கோயிலில்  சுவாமிக்கும்,  அம்பாளுக்கும்  இடையில்  ராஜ  குருவாக   நின்ற  கோலத்தில்  தனி  சந்நிதியில்   அருள்  பாலித்து   வருகிறார்.  எனவே,  இத்தலமே   குரு  பரிகாரம்  செய்வதற்கு   சிறந்த   தலம்  என்பது  பெரியோர்  கருத்து.
வழித் தடம்;
தஞ்சாவூர்-  திருக்காவூர்  சாலையில்  பள்ளி   அக்ஹாரம்  வழியாக  மெலட்டூர்  செல்லும்   பாதையில்  உள்ளது.
தாருகாபுரம்;
இங்குள்ள   சிவன்  கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தி  பாதத்தில்   சுற்றிலும்   ஒன்பது  நவகிரகங்கள்   உள்ளன.  இவரை  வழிபட்டால்  குரு   எந்த  ராசிக்கு  மாறினாலும்   நற்பலன்  கிடைக்கும்.
வழித் தடம்;
ராஜபாளையம்  அருகிலுள்ள   வாசுதேவ-  நல்லூரிலிருந்து  பேருந்து வசதி  உண்டு.

6.  சுக்கிரன்;
கஞ்சனூர்;
சுக்கிர  தோஷம்,  பலஹீன,  உள்ளவர்   இங்குள்ள   மூலவர்  சுக்ரீஸ்வரரை   சுக்கிர பகவானாக்  கருதி  வழிபட்டால்  தோஷம்  நீங்கும். 
வழித் தடம்
சூரியனார் கோவிலுக்கு  அருகில்  உள்ளது.
திருநாவலூர்;
இங்குள்ள   பார்கவீஸ்வரரை  வழிபட  சுக்கிர   தோஷம்  நீங்கும். சுக்கிர  தெசை   பாதிப்புக்கும்  உரிய  ஸ்தலம்.
வழித் தடம்;
விழுப்புரம்-  உளுந்தூர்  பேட்டை  சாலையில்  உள்ளது.

7.  சனி
திருநள்ளாறு;
ஜாதகப்படி  7 1\2 சனி, அஷ்டம  சனி,  அர்த்தாஷடம் சனி  ஏற்படும்  காலங்களில்   இங்குள்ள  நள  தீர்த்தத்தில்   நீராடி  தர்ப்பாரண்யேஸ்வரரையும்  போக  மார்த்த  அம்மனையும்  வழிபட்ட   பிறகு   சனீஸ்வரர்  சன்னதி  சென்று  எள்  தீபம்  ஏற்றி  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து  30 கி.மீ.  தூரத்திலுள்ளது.
குச்சனூர்;
7 1\2  சனி,  அஷ்டம சனி,  அர்த்தாஷடம  சனி ,  கண்டச்சனி  ஆரம்பிக்கும் பொழுது  இங்கு  சுயம்புவாய்  எழுந்தருளியுள்ள  சனீஸ்வர  பகவானை  சனிக்கிழமை   எள் தீபம்  ஏற்றி  வழிபட  வேண்டும்.  சனி  பகவானின்  பிரம்ம  ஹாத்தி தோசம்  நீங்கிய  ஸ்தலம்.

வழித் தடம்;
தேனி  மாவட்டம்  சின்னமனூர் அருகில் உள்ளது.
சேந்தமங்கலம்;
சனி  நடைபெறும்  காலங்களிலும்சனி  தெசை, சனி புத்தி  நடைபெறும்   காலங்களிலும்  இங்குள்ள  தத்தகிரி  முருகன்  கோவிலில்  உள்ள  சனீஸ்வரரை   சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.
வழித் தடம்;
சேலம்,  நாமக்கல்  அருகில்  கொல்லிமலை  செல்லும்  வழியில்  12 கி.மீ.  தூரத்தில் உள்ளது.
திருவாதவூர்;
சனி  பாதிப்புள்ள்வர்  இங்குள்ள  சனீஸ்வரனை  சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.  சனி, ஈஸ்வரனைப்  பிடிக்க முயன்ரு,  கால்  முடமாகி,  கால்  சரியாக   ஈஸ்வரனை  நோக்கி   தவமிருந்த  இடம்.
வழித் தடம்;
மதுரை  மேலூர்  சாலையில் உள்ளது.
ஸ்ரீ  வை குண்டம்;
மனிதனின்   மன  நிம்மதியை  நிர்ணயிப்பவர்  சனி  பகவான்.  அவரவர்  செய்யும்   வினையைப்  பொறுத்து  நல்லதயும்  கெட்ட்தையும்  தருவார்.  சனிபகவானின்   அம்சத்துடன்  சிவ பெருமான்  இத்தலத்தில்  காட்சி  தருகிறார்.
 இத்தலத்தில்  சனி  திசையால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்   பரிகாரம்  செய்தால்  தடைபட்ட  திருமணங்கள்  நடக்கும்,  இழந்த  சொத்துக்களை  மீண்டும்  பெறலாம்.
திருநல்லாறு  சனீஸ்வரன்  திருக்கோவிலுக்கு  ஈடானது  இக்கோவில்
வழித் தடம்;
திரு நெல்வேலியிலிருந்து  திருச்செந்தூர்  செல்லும்  சாலையில்  1 கி.மீ.  தூரத்தில்   அமைந்துள்ளது.
திருநாரையூர்;
சனீஸ்வரர்  தனது  இரு  மனைவிகள்  மந்தா  தேவி.  ஜேஷ்டா  தேவி  ஆகியோருடன்  இவ்வாலயத்தில்  அருள்   பாலிக்கிறார்.  மூலவருக்கு   இல்லாத   கொடி மரம்  இங்கே  சனீஸ்வரருக்கு  உண்டு.  பலிபீடமும்,   காகவாகனமும்  கொண்ட்து  சனீஸ்வரரின்  தனிச்சிறப்பு.
தம்பதி  சமேதராய்  மட்டுமல்ல,  இவ்வாலயத்தில்  சனீஸ்வரர்  தனது   இரு  மகன்களுடன்  [குளிகன்,  மாந்தி]  குடும்ப   சமேதராய்  அருள்  புரிகிறார்.
வழித் தடம்;
கும்பகோணத்துக்கு  அருகே  நாச்சியார்  கோவிலுக்கு   பக்கத்தில்  திருநாரையூர் உள்ளது.

8. ராகு
திருநாகேஸ்வரம்;
ராகுவினால்  ஏற்படும்  அனைத்து   தோசங்களினால்   திருமணத்தடை,   பத்ர தோசம்,  மாங்கல்ய  தோசம்  ஏற்படும்.   இங்கு  வெள்ளிக்கிழமை   காலை  10.30 மணி  முதல்   12 மணி,  ஞாயிறு   மாலை  4.30  மணி முதல்  6 மணி  வரை   ராகுவிற்கு   பாலாபிசேகம்,  அர்ச்சனை  செய்து  வழிபட  நாக  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து  6 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ பெரும் புதூர்;
ஆதிசேஷன்  அவதாரமான  ஸ்ரீ மத் ராமானுஜர்  எழுந்தருளியுள்ள  இத்தலம்  சென்று   நெய்  தீபம்  ஏற்றி,   ஸ்ரீ மத்  ராமானுஜரையும்,  ஸ்ரீ  ஆதி  கேசவப்  பெருமாள்  ஸ்ரீ  யதிராஜ  நாதவல்லித்  தாயாரையும்  திருவாதிரை  நட்சத்திரம்  வரும்  நாளில்  வழிபட   நாக  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப   தோஷம்  பரிகார  தோசம்.
வழித் தடம்;
செங்கல்பட்டுக்கு  அருகில் உள்ளது.
கதிராமங்கலம்;
இங்குள்ள வன துர்க்கை  முன் பக்கம் பார்ப்பதற்கு  பென்  உருவமாகவும் பின்பக்கம்  பார்ப்பதற்கு  நாகம்  படம்  எடுத்த்து  போன்றும்  தோன்றும்.  கம்பர்  வழிபட்ட  ஸ்தலம்.  ராகு,  கேது  தோசம்,  கால  சர்ப்ப  தோசம்  உள்ளவர்  துர்க்கைக்கு  அபிசேகம்  செய்து  வழிபட  கிரக  தோசம்  நீங்கும்.  இத்துர்க்கை  ல்லித   சகஸ்ர  நாமத்தில்  வரும்  வித்யா   வன  துர்க்கையாகும்.
வழித் தடம்;
கும்பகோணம்- மயிலாடுதுறை  சாலையில்  குத்தாலத்திலிருந்து  3 கி.மீ.  தூரம்

9.கேது;
திருக்காளத்தி;
பஞ்ச  லிங்கங்களில்  வாயு  லிங்கம்  உள்ள  இடம்.  கண்ணப்பனுக்கு  காட்சி   தந்த   ஸ்தலம்.  இங்குள்ள   காளத்தீஸ்வரருக்கு  ருத்ரா பிசேகம்  செய்து  அர்ச்சனை  செய்ய  கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப தோச  பரிகார  ஸ்தலம்.
வழித் தடம்;
திருப்பதிக்கும்  சென்னைக்கும்  நடுவில்  உள்ளது.
கீழ்ப்பெரும் பள்ளம்;
இங்குள்ள  நாகநாத சாமி   கோவிலில்  தனி   சன்னதியில் உள்ள  கேதுவை  வழிபட   கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறை- பூம்புகார்  சாலையில்   பூம்புகாரிலிருந்து  3 கி.மீ.  தூரத்திலுள்ளது.

தொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோயில்கள்

தொழில்  உயர்வு
திருமோகூர்;

இங்கே  சக்கரத்தாழ்வார்தான்  விசேச  அம்சம்.  இவர் 16  கைகள்   கொண்டவராக  16  ஆயுதங்களுடன்  திகழ்கிறார்.  விக்ரகத்தின்  மீது  மந்திர  எழுத்துக்கள்  எழுதப்பட்டுள்ளன.  சக்கரத்தாழ்வார்   மந்திர  எழுத்துக்களோடு  காணப்படுவது  இங்கு  மட்டுமே.  சக்கரத்தாழ்வார்  பின்புறம்  யோக  நரசிம்மர்  உள்ளார்.  இதை  ‘நரசிம்ம  சுதர்சனம்”  என்று  சொல்வார்கள்.  இவரை  வணங்கினால்,  வியாபார  விருத்தி,  தொழில் உயர்வு, வேலை வாய்ப்பு  ஆகியவை  கிடைக்கும்.
வழித் தடம்;  மதுரை- மேலூர்  சாலையில் உள்ளது.


அறம், பொருள், இன்பம், மோட்சம்  ஒரே  இடத்தில்  கிடைக்ககூடிய ஸ்தலம்

பர்வத  மலை;
உமாதேவி  தன்  பதியான  சிவனிடம்  அறம், பொருள்,  இன்பம்,  மோட்சம்  ஆகியவை  ஒரே இட்த்தில்  கிடைக்ககூடிய  சிவ ஸ்தலம்  ஒன்றைக்  கூற  வேண்டும்  என்று  கேட்டுக்  கொண்டதற்கு  சிவ பெருமான்  சுட்டிக் காட்டிய  ஸ்தலம்.  இங்கு  பிரம்மராம்பிகை  உடனுறை  மல்லிகார்ஜூனர்  எழுந்தருளி  அருள் செய்கிறார்.  மகா லட்சுமி  தவம்  செய்த   இடம்.  பதிணெண்  சித்தர்கள்  தினமும்  வந்து   வணங்கும்  மலை.  மூலிகைக்காற்று  எப்போது  வீசி  நோய்  தீர்க்கும்  மலை.
வழித் தடம்
திருவண்ணாமலையிலிருந்து  35 கி.மீ.  தூரத்தில் உள்ளது.

.  குழந்தைகளுக்குப் பேச்சு,  கையெழுத்து  சரியாக  வராத  நிலை

இன்னம்பூர்;
இக்கோவிலில்  உள்ள  எழுத்தறி  நாதருக்கு  அர்ச்சனை  செய்தால் பேச்சு  சரியாக  வராத  குழந்தைகளுக்குப்  பேச்சு  வரும்.   கையெழுத்து  சரி வர  வராத  குழந்தைகளுக்கு  கையெழுத்து  சரியாக  வரும்.  குழந்தைகளின்  நாக்கில்  புஷ்பத்தால்  எழுதுகிறார்கள்.
வழித் தடம்;
கும்பகோணம்- சுவாமி மலை  சாலையில்  உள்ளது.


  வரும்  ஆபத்துக்களை  முன் கூட்டியே  அறிய
திருப்பழனம்;
இறைவன்  ஆபத்சகாயேஸ்வரர்.  இறைவி  பெரிய நாயகி.  எவர்  ஒருவர்  இத்தலத்திற்கு  வந்து  இவ்விருவருரையும்  வணங்கிறார்களோ,  அவர்களுக்கு  வரும்  ஆபத்துக்கள் முன்கூட்டியே  தெரிய  வரும்.  அதன் படி  வரும்  ஆபத்துக்கலிருது  மீண்டு  கொள்ளலாம்.
வழித் தடம்;
தஞ்சை  மாவட்டம்  திருவையாற்றுக்கு  அருகில்,  திருவையாற்றுக்கு  அருகில்,  திருவையாறு-  கணபதி  அக்ரஹாரம்  சாலையில்  உள்ளது.
.  உடல்  ஊனமுற்றோர்  குறை  நீங்க
கூனஞ்சேரி;
மூலவர்  கைலாய  நாதர்,  கருவிலிருந்து  பிறக்கும்  போதே  எட்டு  கோணலுடன்  பிறந்த  அஷ்டாவக்கிரன்  புது  உருக்கொண்ட  ஸ்தலம்.  பிறரைப்  போல்  கோணல்  நீங்கி  அழகு  பொருளாகியவனாக  மாறிய ஸ்தலம்.  இங்குள்ள  கைலாய  நாதரை  வழிபட  உடல்  ஊனமுற்றவர்  குறை  நீங்கி  இறை  அருள் பெறலாம்.
வழித் தடம்;
சுவாமி மலையிலிருந்து  திருவைகாவூர்  செல்லும்  சாலையில்  உள்ளது.
.  தங்க  நகைத் தொழிலில்  ஈடுபடுபவர்  மேன்மையடைய;
செதலபதி;
இங்குள்ள   முக்தீஸ்வரர்   கோவிலில்  சுவர்ணவல்லி  தாயார்  காட்சி  தருகிறார்.  சுவர்ணம்   என்றால்  தங்கம்.  தங்கத்தை  வாங்கி  குவிக்க  வேண்டும்  என  விரும்புபவ,  தங்க நகைத்  தொழிலில்   ஈடுபட்டிருப்பவர்  இந்த  அம்பிகையை  வழிபட  செல்வம்  செழிக்கும்.
வழித் தடம்;
திருவாரூர்-  மயிலாடுதுறை  சாலையில்  உள்ள  கூத்தனூரிலிருந்து 2 கி.மீ.  தூரத்திலுள்ளது.
 மாதவிடாய்  சிக்கல்  தீர;   மாதவிடாய்  கோளாறு   காரணமாக  கர்ப்பம்  தரிக்காதவர்கள்  முப்பந்தல்   இசக்கியம்மனையும்,  குழந்தை  பெற்ற   தாய்மார்கள்  மாதவிடாய்   அடிக்கடி  வருவது,  அதிக   ரத்தப்போக்கு   ஆகியவற்றுடன்  போராடினால்   திருநெல்வேலி  இசக்கியம்மனையும்  வழிபட  வேண்டும்.
வழித் தடம்;
திருநெல்வேலியிலிருந்து  நாகர் கோவில்  செல்லும்  ரோட்டில்  50 கி.மீ.  தூரத்தில்   காவல்  கிணறு  எனற   இடத்தில்   தாண்டிச் சென்றால்  முப்பந்தல்   இசக்கியம்மனைத்  தரிசிக்கலாம்.
 திருநெல்வேலி  குறுக்குத் துறை  இசக்கியம்மனைத்  தரிசிக்க  பழைய  பஸ்  ஸ்டாண்டிலிருந்து  [ஜங்சன்]   தடம்  எண்  10 ல்  சென்றால்  இத்தலத்தை  அடையலாம்.
ஆண்டாங்கோவில்;
இது,  ருது  பரிகார   தலம்  ஆகும்.  அம்பிகை   சிறப்புமிக்கவள்,   வரப்பிரசாதி.  சோம  வாரத்தில்    இத்தலத்தில்  உள்ள  புஷ்கறணியில்  நீராடி,  ஏழு  சோம வாரம்  அம்பிகையை  தரிசித்தால்,  உரிய   வயது  வந்ததும்   ருதுவாகாத  பெண்கள்  ருதுவாவார்கள்.
வழித் தடம்;
குடந்தையில்  இருந்து   வலங்கைமான்   வழியாக  குடவாசல்  செல்லும்  வழித்தடத்தில்   2 கி. மீ. தொலைவில் உள்ளது.

   நவமாருதி

திண்டுக்கல்;   தமிழ்நாட்டில்   மிகவும்   அரிதாக   விள்ங்கும்  நவமாருதி   [ஒன்பது   வடிவங்கள்]   திண்டுக்கல்,  ரவுண்டு   ரோடு,  ராம்  நகரில்  அமைந்துள்ளது.

கிழமை   வாரியாக   வழிப்பட்டால்  கிடைக்கும்  பலன்;
1.      பால மாருதி- ஞாயிறு;  ராகு  தோஷம்  நீங்கி,  திருமணத்தடை  நீங்கும்,  கண் பார்வை  நிவர்த்தியாகும்.   சூரிய  உதயத்தில்   வழிபட  வேண்டும்.
2.      யோக  மாருதி- திங்கள்;   மன  அமைதி,  குடும்பத்தில்  குழப்பங்கள்  நீங்கும்.
3.      தீர  மாருதி-செவ்வாய்;  வெற்றிலை  மாலை  அணிவித்து,  செந்தூர  அர்ச்சனையால்  வழிபட்டால்  எதிரிகள்  தொல்லை  நீங்கும்.
4.      பஜனை மாருதி-புதன்;   முற்பிறவியில்  செய்த  பாப  தோஷங்கள்  விலகும்.
5.      வீர  மாருதி- வியாழன்;  எலுமிச்சை  மாலை அணிவித்து வழிபட்டால்   குறைவற்ற  செல்வமும்,  கைவிட்டுப்  போன  பொருள்  கிடைக்கும்.
6.      தியான  மாருதி- வெள்ளி;  பெண்கள்  வழிபட  கணவரின்  எதிரிகள்  நீங்கி,  குழந்தைகளுக்கு   கல்வி  மேம்பாடு  கிட்டும்.
7.      பக்த  மாருதி- சனி;   நல்லெண்ணெய்  தீபம்  ஏற்றி  வழிபட  சனியினால் ஏற்படும்  ஆபத்து  நீங்கி  நீண்ட  ஆயுள்  கிடைக்கும்.
8.      பவ்ய மாருதி-  பிறந்த  கிழமைகளில்  வழிபட்டால்  ராகு,  கேது  தெசை  பாதிப்பு  நீங்கும்.  செய்தொழிலில்  வெற்றி  கிடைக்கும்.   குழப்பங்கள்  நீங்கி  மன  அமைதி  கிட்டும்.
9.      சஞ்சீவி  மாருதி;  பிரதோச  காலங்களில்  வடை  மாலை  சாற்றி  வழிபட்டால்  தீராத  நோய்கள்  தீரும்.
வழித் தடம்;
திண்டுக்கல்  பேருந்து நிலையத்திலிருந்து  சிலுவத்தூர்  சாலையில்  ரவுண்டு  ரோடு,  ராம்   நகர்  ஸ்டாப்பில்  இறங்க  வேண்டும்

திங்கள், 2 பிப்ரவரி, 2015

எண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு

நாளை தைப்பூசம்.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்..நாளை காலை 3 மணிமுதல் ஆரம்பித்துவிடுகிறது உங்கள் இஷ்டதெய்வ கோயிலுக்கு செல்ல இதை விட நல்ல நாள் இருக்க முடியாது...! தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.இதன் உள் அர்த்தம் நம்மை தாழ்த்தும் கெட்ட சக்திகள் அழியும் நாள் ஆகும்..

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் ...


நம் முன்னோர் தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.சித்தர்கள் கூடும் திருவண்ணாமல்,சதுரகிரி போன்ற ஆலயங்கள் மிக சக்தி நிரம்பி வெளிப்படும்

கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்....
குலதெய்வம் கோயில் வழிபாடு,முருகன் வழிபாடு,சிவ வழிபாடு செய்ய அருமையான நாள்..தவற விடாதீர்கள்..நாளை இரவு பெளர்ணமியில் குடும்பத்தாருடன் நிலவொளியில் உணவு அருந்துங்கள் ..குடும்ப ஒற்றுமை மேம்படும்!! ‪#‎தைப்பூசம்‬ ‪#‎temple‬ ‪#‎thaipoosam‬